வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Sunday, June 26, 2011

ஜோக்ஸ் .2

" என் மனைவி பணம் பணம் என்று கேட்டு என் உயிரையே எடுக்கிறாள் "

 " ஏன் அப்படி சொல்றே ? "

 " மூன்று மாதத்திற்கு முன்னால் 10000 ருபாய் கேட்டாள். அடுத்த மாதம் 20000 ரூபாய் கேட்டாள் . போன மாதம் 30000 ரூபாய் கேட்டாள் . இன்னைக்குக் காலையில் புறப்படும் போது 50000 ரூபாய் வேண்டும் என்று கேட்கிறாள் "

 " பைத்தியக்காரத்தனமாக  இருக்கே . அவ இந்த பணத்தை எல்லாம் என்ன செய்யறான்னு தெரியுமா ?"

 எனக்கு எப்படித் தெரியும் . நான்தான் இதுவரை அவளுக்கு பணம் ஏதும் கொடுத்தது இல்லையே " .
  ============================================
முப்பது வயதான ஒருவன் தன் நண்பனிடம் சொன்னான் . " எனக்கு திருமணமே நடக்காது என்று நினைக்கிறேன் '
 " ஏன் "

 " எந்த பெண்ணோட படத்தைக் காட்டினாலும் எங்கம்மாவுக்கு அவளை பிடிக்கவில்லை "
  " உங்கம்மா மாதிரியே இருக்கின்ற ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து அவள் படத்தை உங்கம்மாவிடம் காட்ட வேண்டியதுதானே "

 " அப்படியும் செய்து பார்த்தேன் . அதனால் பயன் ஏதும் இல்லை "

 "ஏன் ?"

 " எங்கப்பா அந்த பெண் வேண்டவே வேண்டாம் என்கிறார் . என்ன செய்வது ? "
======================================================

                                       பாட்டி வைத்தியம் -2

       வயிற்று வலி , வயிற்று புண் குணமாக 

        ஒரு வாயகன்ற பாத்திரத்தை எடுத்து , அதில் ஒரு டம்ளர் அளவு கற்றாளை துண்டுகளைப் போட்டு , அத்துடன் சாம்பார் வெங்காயம் , நறுக்கிப் போட்டு ௩௦௦
 கிராம் சிற்றாமணக்கு எண்ணெய் , ௩௦௦ கிராம் பனங் கற்கண்டு இவைகளையும் சேர்த்து அடுப்பில் வைத்து காய்ச்சினால் எல்லாம் ஒன்றாக சேர்ந்து லேகியம் போல இறுகி வரும் . இந்த சமயம் பாத்திரத்தை இறக்கி வைத்து , .ஆறிய பின் வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு காலை மாலை ஒரு தேக்கரண்டி வீதம் கொடுத்து வந்தால் , வயிற்றுப் புண் , வயிற்று வலி குணமாகும்.

===================================================

  அதிமூத்திரம் அடங்க 

       வாலைப் பூவை ஆய்ந்து தினசரி பருப்புடன் சேர்த்துக் கூட்டு வைத்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் அதிக அளவில் நீர் இறங்குவது கட்டுப்பட்டு இயற்கை அளவில் வெளியேறும் .

    வாலைப் பூவை தினசரி சாப்பிட்டு வந்தால் நீரிழிவுக் காரரின் நீரில் இறங்கும் சர்க்கரையை முறித்து விடும் .
==============================================================

 ஹைய்யா ஜாலி , இன்னிக்கு ஞாயிற்று கிழமை . பள்ளிக்கூடம் இல்லை , பாடம் இல்லை , ஹோம்வொர்க் இல்லை , ஹைய்யா ஜாலி ஜாலி
Photobucket

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out