வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Saturday, June 18, 2011

ஜோக்ஸ்

     '' என்ன உங்க கைக்குட்டையில் முடிச்சு போட்டு இருக்கு ''
  
   '' என் மனைவி தான் முடிச்சு போட்டாள்''

    ''ஏன்? ''

    '' அவள் என்னிடம் கொடுக்கிற கடிதத்தை மறக்காம போஸ்ட் செய்யணும் என்று நினைவூட்டுவதற்காக ''

    '' நீங்க அந்த கடிதத்தை மறக்காம போஸ்ட் பண்ணிட்டீங்களா ? ''

    '' எப்படி முடியும் ? என் மனைவி என்னிடம் கடிதத்தை கொடுக்கவே மறந்து விட்டாள் . ''

-----------------------------------------------------------------------------------------------------------------   
  
     பத்திரிக்கை நிருபர் :  நீங்கள் எப்படி குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய பணக்காரராக ஆனீர்கள் ?

      செல்வர் :    அது பெரிய கதை . சொல்லிமுடிக்க நீண்ட நேரம் ஆகும் . இந்த விளக்கு ஏன் அது வரை வீணாக எரிந்து கொண்டிருக்க வேண்டும் . அனைத்து விடுகிறேன் .

  பத்திரிக்கை நிருபர் :  நீங்கள் சொல்ல வேண்டாம் . நானே புரிந்து கொண்டேன் .

-------------------------------------------------------------------------------------------------------------

 மாணவர்கள் சோதனை செய்து கொண்டிருந்த பரிசோதனை சாலைக்கு கிராமத்தான் ஒருவன் வந்தான் .

  அங்கிருந்த மாணவர்களை பார்த்து ,  '' நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ? '' , என்று கேட்டான் .

  '' எந்த பொருளாக இருந்தாலும் அதைக் கரைக்கக் கூடிய திரவம் ஒன்றைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடு பட்டுள்ளோம் '' என்று பெருமையாகச் சொன்னான் ஒரு மாணவன் .

    '' எல்லாவற்றையும் கரைக்கக் கூடிய திரவத்தை எதில் போட்டு வைப்பீர்கள் ? '' என்று கேட்டான் கிராமத்தான் .

------------------------------------------------------------------------------------------------------------

                                             தெரிஞ்சிக்கோங்க 

     
நமது நாடு சுதந்திரம் அடைந்த 1947ஆகஸ்ட் 15-ந் தேதி என்ன கிழமை  

 தெரியுமா ?

        வெள்ளிக்கிழமை 

உலகில் முதன்முதலாக தோன்றிய தாவரம் எது ?

      நீலப் பசும்பாசிகள் 

நயாகரா நீர்வீழ்ச்சி அமெரிக்காவின் எந்த மாகாணத்தில் இருக்கிறது ?

      நியுயார்க் 

ஒரு கண்ணை மட்டும் திறந்து வைத்துக் கொண்டு தூங்கும் பிராணி எது ?

        டால்பின் 

'' மாபியா '' என்ற சர்வதேச சமூக விரோத கும்பல் எந்த நாட்டில் முதன்முதலாக தோன்றியது ?

          சிலி 

------------------------------------------------------------------------------------------------------------------------------

                                         பாட்டி வைத்தியம்
    வாய்வு தொல்லையா கவலை வேண்டாம் . இருக்கவே இருக்கு பாட்டி வைத்தியம் . எதற்கு எடுத்தாலும் ஆங்கில வைத்தியம் என்று இருக்கும் இக்காலத்தில் நாட்டு வைத்தியம் , பாட்டி வைத்தியம் என்று பழங்காலம் முறையா என்று நினைக்க வேண்டாம் . 

   கத்தி போய் வாள் வந்த கதையாக ஆக கூடாது அல்லவா . பக்க விளைவுகள் தராத வைத்தியம் நல்லது அல்லவா ? . அவசரத்திற்க்கும் , அத்தியாவசத்திர்க்கும் மட்டுமே ஆங்கில வைத்தியம் .மற்ற நேரங்களில் பழமை வாய்ந்த சுலபமான பக்க விளைவுகள் இல்லாத வைத்தியம் சிறந்தது அல்லவா .சரி இனி வாரம் வாரம் சிறிது சிறிதாக நாட்டு வைத்தியம் பார்ப்போம் .

   ஒரு கரண்டி துளசிச்சாருடன் ஒரு கரண்டி இஞ்சிச்சாறு கலந்து காலை , மாலை இருவேளையாக எழு நாட்கள் அருந்த சகல வித வாயுக் கோளாறுகளும் தீரும்.

   
   இஞ்சிச்சாருடன் கருப்பட்டி (பனைவெல்லம் ) சேர்த்துக் காய்ச்சி ஏலம் , கிராம்பு, ஜாதிக்காய் சேர்த்து கிளறி வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டி 
அளவு உண்டுவர வாயுத்தொல்லை அறவே நீங்கும் .


     திடீரென்று வயிற்றில் வாயு உருண்டு கொண்டு வந்தால் ஒரு கரண்டி சுக்குப்போடியை வடித்த சுடுநீரில் கலக்கிக் குடித்தால் உடனே வாயு கலைந்து விடும்.

-------------------------------------------------------------------------------------------------------------

ஹி... ஹி.. தமாசு .Photobucket வாடா வா .. எவ்வளவு தூரம் தொரத்திட்டு வரேன்னு

 பார்க்கிரேண்டா......நாயே ..வா வா ...

( ஹ்ம்ம்.... நானும் எவ்வளவு நேரம் தான் தாக்குபிடிக்கிறது ,

பயபுள்ள உடாம தொரத்திரானே .....

நான் என்ன பண்ணுவேன் ......)

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out