வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Friday, September 16, 2011

கூடங்குளம் போராட்டம் ஜெயம் பெறட்டும்

கூடங்குளத்தில் அணுமின் நிலையம் செயல் பட
வேண்டாம் என்று நமது உறவுகள் போராடிக்
கொண்டிருக்கின்றனர் .


அவர்கள் போராட்டம் வெற்றி பெற அனைவரும்
குரல் கொடுப்போம் .சம்மந்தப் பட்டவர்களின் செவிகளை எட்டி அவர்கள்
சிந்தையில் நல்ல தொரு முடிவு ஏற்படும் வரை
குரல் கொடுப்போம் .

உயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த ஒரு திட்டமும்
வேண்டாமே .

இதனால் பாதிப்பு இல்லை என்று கூறுபவர்களே பாதிப்பு
ஏற்பட்ட பின் வரும் சமாதனத்தால் போன உயிர் திரும்புமா .
ஏற்படும் உடல் சிதைவுகள் தடுக்க முடியுமா !

சிந்தியுங்கள் ,பின்னால் வருத்தப் படத்தான் முடியும் ,இழந்ததை
பெற்றுத்தர முடியாது .

நண்பர் கூடல் பாலா முதற்கொண்டு நமது மனித உறவுகள்
அவர்களது சந்ததியினர் காப்பாற்ற குரல் கொடுப்போம் .

போராட்டம் பற்றிய செய்திகள் பதிவிட்டிருக்கும் நண்பர்கள்நண்பர் கூடல் பாலா தனது பதிவில்


நண்பர் மனோ தன்பதிவில்நண்பர் சூர்யா ஜீவா தன் வலைபதிவில்

மேற்கண்ட லிங்கில் சென்றால் இதைப்பற்றி
பதிவிட்ட மற்ற பதிவர்களின் லிங்க் கிடைக்கும்நண்பர் மகேந்திரன் தன் வலைப்பதிவில் நண்பர் முனைவர் குணசீலன் தன் வலையில்நண்பர் வைரை சதீஷ் தன் வலையில் நண்பர் கோகுல் தன் பதிவில்நண்பர் பிரகாஷ் தன் வலைப்பதிவில் நண்பர் வேடந்தாங்கல் கருன் தன்வலைபதிவில்


முக்கியமாக நண்பர்ரெவரி தன் வலைப்பதிவில் 

அணுமின நிலைய கதிர் வீச்சால் ஏற்படும்
பாதிப்பை படங்களுடன் பதிவிட்டுள்ளார்இன்னும் நிறைய நண்பர்கள் தன் பதிவில்
இதைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்கள்
அவர்கள் போராட்டம் வெற்றி பெறட்டும்


27 comments:

Ramani said...

கூடங்குளம் குறித்த அனைத்து பதிவைகளையும்
படித்துத் தெரிந்து கொள்ள ஏதுவாக அது தொடர்பான
பதிவுகள் அனைத்தையும் இணைப்பாக்கிப்
பதிவு தந்தமைக்கு நன்றி

சம்பத்குமார் said...

நண்பர்களே எழுப்பும் குரல் தூங்கிக்கொண்டிருக்கும் அரசை தட்டி எழுப்பட்டும்

கூடங்குளத்தை மூடும் வரை ஓயாது குரல் கொடுப்போம்

போரட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என் ஆதரவும் கூட

ஆதரவுடன்
சம்பத்குமார்

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பர் ரமேஷ்
இதுவரை பதிவுலகின் கூடங்குல
பதிவதனை தொகுத்தமைக்கு
கோடானுகோடி நன்றிகள்.....

தொடர்ந்து எழுத்தாணி பிடிப்போம்
எண்ணுவதை ஈடேற்றிக்கொள்ளும் வரை.....

ரெவெரி said...

தீயை அணைய விடாமல் காப்பதற்கு நன்றி நண்பரே...

மறுபடியும் ....

(மறக்காமல் கீழ்க்கண்ட இணைப்புகளின் மூலம் பிரதமருக்கும் முதல்வருக்கும் உங்கள் எதிர்ப்பை உரக்க சொல்லுங்கள்.நன்றி.)

பிரதமருக்கு


http://pmindia.gov.in/feedback.htmமுதல்வருக்கு


cmcell@tn.gov.in

வைரை சதிஷ் said...

பதிவை எழுதி போராட்டத்தில் கலந்து கொண்டதற்க்கு நன்றி போராட்டம் வெல்லும்.

இந்த Post-ல் என்னுடைய பதிவின் link சாரியாக இல்லை நண்பரே

கிராமத்து காக்கை said...

போரட்டங்களை நடத்தி கொண்டு உடனுக்குடன் செய்திகளை அளித்திடும்
நமது பதிவர் அனைவருக்கும் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

M.R said...

வைரை சதிஷ் said...

இந்த Post-ல் என்னுடைய பதிவின் link சாரியாக இல்லை நண்பரே


சரி செய்து விட்டேன் நண்பரே

RAMVI said...

தகவல் தந்தமைக்கு நன்றி.

சம்பத்குமார் said...

நண்பரே இந்த பதிவின் லின்க் எனது பதிவில் இணைத்துள்ளேன்.

ஒன்றிணைவோம் வெற்றி பெறுவோம்.

வெற்றி நமதே..வெற்றி நமதே..வெற்றி நமதே..

நன்றியுடன்
சம்பத்குமார்

suryajeeva said...

ரெவெரி இன் ஆலோசனையை நான் வழி மொழிகிறேன்..

MANO நாஞ்சில் மனோ said...

நண்பா அந்த போட்டோ கூடல்பாலா'வுடையது அல்ல, அது ஒரு கலெக்டரோட போட்டோ, நானும் இதை தெரியாமல் ஒரு பதிவில் போட்டதும் கூடல்பாலா சுட்டிக்காட்டினார் உடனே அகற்றி விட்டேன்....

M.R said...

MANO நாஞ்சில் மனோ said...
நண்பா அந்த போட்டோ கூடல்பாலா'வுடையது அல்ல, அது ஒரு கலெக்டரோட போட்டோ, நானும் இதை தெரியாமல் ஒரு பதிவில் போட்டதும் கூடல்பாலா சுட்டிக்காட்டினார் உடனே அகற்றி விட்டேன்....

நன்றி நண்பரே நானும் அகற்றி விடுகிறேன்

MANO நாஞ்சில் மனோ said...

இன்குலாப் ஜிந்தாபாத் அணுமின் நிலையம் முர்தாபாத்...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

போராட்டம் வெற்றியை நோக்கி ...

கோகுல் said...

சிரத்தை எடுத்து தொகுத்துத்தந்தமைக்கு நன்றி!
நமது கரங்கள் வலுப்படுவது மகிழ்வைத் தருகிறது!நன்றி நண்பரே!

முனைவர்.இரா.குணசீலன் said...

உயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த ஒரு திட்டமும்
வேண்டாமே !!

நல்லதொரு பதிவு நண்பரே..

வைரை சதிஷ் said...

போராட்டம் வெற்றி பெறும்

நேரடி ரிப்போர்ட்

இடிந்தகரை உண்ணாவிரத போராட்டம் நாள் 6

செங்கோவி said...

தொகுப்பிற்கு நன்றி ரமேஷ்.

kobiraj said...

இந்த போராட்டம் அனைவரையும் சென்றடைய வேண்டும் .வலைபதிவர்கள் அனைவரும் பங்களிப்பு செய்வோம்

புலவர் சா இராமாநுசம் said...

நல்லபதிவு, நல்ல தொண்டு
நண்பரே!

நானும் கவிதை ஒன்று
எழுதியுள்ளேன்
நன்றி!

புலவர் சா இராமாநுசம்

K.s.s.Rajh said...

இந்தப்போராட்டம் வெற்றி பெறவேண்டும்...

இராஜராஜேஸ்வரி said...

தீயை அணைய விடாமல் காப்பதற்கு நன்றி

r.v.saravanan said...

போராட்டம் வெற்றி பெறவேண்டும்

தமிழ்வாசி - Prakash said...

போராட்டம் வெற்றி பெறட்டும்

என் வலையில்:

சென்னைக்கு இளப்பமா கூடங்குளம்? ஜே அறிக்கை: ஒரு பார்வை

alavoudine said...

என்ன மேன் கரண்ட் இல்லை என்று ஆர்பாட்டம் செய்கின்றீர்கள் அப்படி கரண்ட் உற்பத்தி பண்ண மின் நிலையம் வைத்தல் அதற்கும் வேண்டாம் என்று போராட்டம் செய்கின்றீர்கள், verry very bad,

நிரூபன் said...

மக்களிற்கு விழிப்புணர்வு வேண்டிய பதிவுகளைத் தொகுத்திருக்கிறீங்க.

நிச்சயம் கூடங்குளம் போராட்டம் வெற்றி பெறும்.

வியபதி said...

அந்தப் பகுதியில் வாழும் மக்கள் பலரும் கூடி இவ்வளவு ஒற்றுமையாக போராட்டம் நடத்துகிறார்கள். இதனை அரசு அலட்சியம் செய்யாமல் மத்திய அரசிடம் வற்புறுத்தி மேலும் காலம் தாழ்த்தாமல்ஒரு நல்ல முடிவினை எடுக்கவேண்டும்.

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out