வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Monday, September 26, 2011

யோகா கற்றுக்கொள்ளுங்கள்
நண்பர்களே இதையும் தெரிந்து கொள்ளுங்கள் என்ற பதிவில்
இயற்கை சிகிச்சை முறைகளையும் ,யோகா வகைகளையும்
குறிப்பிட்டு ஓரு பதிவிட்டிருந்தேன் .அதில் நண்பர்கள் ரமணியும் ,செங்கோவியும் அதற்கான விரிவான
செயல்முறைகளையும் தந்தால் நன்றாக இருக்கும் என்று
சொல்லியிருந்தார்கள் .

என்னால் முடிந்த அளவுக்கு தர முயற்சிக்கிறேன் ,ஏனென்றால்
ஒரு சில பயிற்சிகள் ஆசிரியர் முன்பு பயின்றால் நன்று.

மேலும் இதற்கான படங்கள் சேகரிக்க இயலவில்லை ,அதனால்
ஒரு சில பயிற்சி முறைகளை எழுத்து வடிவில் (தியரி)தருகிறேன் .

புரிந்து கொள்ள முடிந்தால் மற்றதையும் தருகிறேன் நண்பரே .
தாடாசனம்செய்முறை :-

பாதங்களை சேர்த்தோ அல்லது சிறிது இடைவெளி வைத்தோ
நேராக நிற்கவும் .கைகளை பக்கத்தில் வைக்கவும்.

மெதுவாக மூச்சை உள்ளே இழுத்தவாறு கைகளையும் ,
குதிகால்களையும் தூக்கவும்.

பின்னர் நிதானமாக மூச்சை வெளியேற்றியவாறு கைகளையும்,குதிகால்களையும் கீழே பழைய நிலைக்கு
கொண்டு வரவும்.

இவ்வாறு எட்டு முதல் ,12 முறை செய்யவும்.

ஆசனம் செய்வதற்கு கடினமாக இருந்தால் ஜன்னல்
கம்பிகளை பிடித்தபடி (ஆரம்பத்தில் ) குதி கால்களை
உயர்த்தவும்.

பயன்கள் :-

தசைகளை ,மூட்டுகளை வலுப்படுத்தும். உடம்பை வளர்க்கும்.

எச்சரிக்கை :-

குதிகால் வலி, முடக்கு வாதம் உள்ளவர்கள் கவனமாக செய்யவும்.


வீரபத்ராசனம்

செய்முறை :-

இடது காலை முன் வைத்து நேராக நிற்கவும்.

முன்காலுக்கும்,பின்காலுக்கும் சுமார் 2 முதல் 3 அடி 
வரை இடைவெளி இருக்கலாம் .

கைகள் பக்கத்தில் இருக்கவேண்டும்.

மூச்சை மெதுவாக உள்ளே இழுத்தவாறு கைகளைத் 
தூக்கியபடி முன் முட்டியை மடிக்கவும்.

பின்னர் மூச்சை நிதானமாக வெளியேற்றியவாறு 
கைகளை கீழேயும்,முன் முட்டியை நேராக பழைய
நிலைக்கு கொண்டு வரவும்.

இவ்வாறு 6 முதல் 8 முறை செய்யவும்.பின்னர் வலது 
காலை முன் வைத்து இதே போல் செய்யவும்.

பயன்கள் :-

இடுப்பு வலி ,கழுத்து வலி இவைகளுக்குப் பயனளிக்கும்.

எச்சரிக்கை :-

மூட்டு வலி இருப்பவர்கள் தவிர்க்கவும்.

 நன்றி 


படங்கள் இல்லாமல் இந்த ஆசனங்கள் செய்வதற்கு புரிந்து
கொள்ள முடிகிறதா நண்பர்களே .

தங்கள் கருத்தினை சொல்லுங்கள் 

28 comments:

புதுகை.அப்துல்லா said...

udanz திரட்டி மூலம் உங்கள் தளத்தை அறிய வந்தேன். இதுதான் என் முதல் வருகை. உங்கள் வலைப்பூ முழுவதும் பயனுள்ள தகவல்கள். வாழ்த்துகள்.

Sahajamozhi said...

please visit http://www.tnmeditation.org/

சகஜ யோகா தியானப் பயிற்சி

மதுரன் said...

அசத்தலான யோகா தகவல்கள் பகிர்வுக்கு நன்றி

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

படம் இல்லாம யோகா கத்துக்கிறது கோசம் சிரமம் பொசிடிஒன் மாறி விட்டால் பலன் கிடைக்காது..

கடைசியா போட்டு இருக்குற படத்தைப்பார்த்தா யோகா செய்யவே மனசு வராதே!!

செங்கோவி said...

நன்றி ரமேஷ்.

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ரமேஷ்

ஆசனங்களின் விளக்கம் நன்று
புரிந்துகொள்ள முடிந்தது.
ஆனாலும் படவிளக்கம் இன்னும்
புரிதலுக்கு வசதியாக இருக்கும்.

நீங்கள் கொடுத்திருக்கும் எச்சரிக்கை
செய்தியை கொஞ்சம் பெரிய எழுத்தில்
போட்டுவிடுங்கள்.

நன்றி.

MANO நாஞ்சில் மனோ said...

யோகா கற்றுக்கொள்ளுங்கள் உடல் ஆரோக்கியம் பெறுங்கள் நன்றி ரமேஷ்...!!!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

படங்கள் இல்லாமலே புரிகிறது..படங்கள் இருந்தான் இன்னும் சிறப்பாக இருக்கும்..

நன்றி..

K.s.s.Rajh said...

வழக்கம் போல் உங்களிடம் இருந்து வரும் ஒரு நல்ல பதிவு...

M.R said...

புதுகை.அப்துல்லா said...
udanz திரட்டி மூலம் உங்கள் தளத்தை அறிய வந்தேன். இதுதான் என் முதல் வருகை. உங்கள் வலைப்பூ முழுவதும் பயனுள்ள தகவல்கள். வாழ்த்துகள்.

தங்களை வரவேற்கிறேன் நண்பரே

வாழ்த்துக்கு நன்றி நண்பரே

M.R said...

மதுரன் said...
அசத்தலான யோகா தகவல்கள் பகிர்வுக்கு நன்றி//

நன்றி நண்பரே

M.R said...

ஜ.ரா.ரமேஷ் பாபு said...
படம் இல்லாம யோகா கத்துக்கிறது கோசம் சிரமம் பொசிடிஒன் மாறி விட்டால் பலன் கிடைக்காது..

ஆமாம் நண்பரே

M.R said...

செங்கோவி said...
நன்றி ரமேஷ்.

நன்றி நண்பரே

M.R said...

மகேந்திரன் said...
அன்பு நண்பர் ரமேஷ்

ஆசனங்களின் விளக்கம் நன்று
புரிந்துகொள்ள முடிந்தது.
ஆனாலும் படவிளக்கம் இன்னும்
புரிதலுக்கு வசதியாக இருக்கும்.

நீங்கள் கொடுத்திருக்கும் எச்சரிக்கை
செய்தியை கொஞ்சம் பெரிய எழுத்தில்
போட்டுவிடுங்கள்.

நன்றி.

தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே

M.R said...

MANO நாஞ்சில் மனோ said...
யோகா கற்றுக்கொள்ளுங்கள் உடல் ஆரோக்கியம் பெறுங்கள் நன்றி ரமேஷ்...!!!

நன்றி நண்பரே

M.R said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...
படங்கள் இல்லாமலே புரிகிறது..படங்கள் இருந்தான் இன்னும் சிறப்பாக இருக்கும்..

நன்றி..

நன்றி நண்பரே படங்கள் தர முயற்சிக்கிறேன்

M.R said...

K.s.s.Rajh said...
வழக்கம் போல் உங்களிடம் இருந்து வரும் ஒரு நல்ல பதிவு...

நன்றி நண்பரே

சென்னை பித்தன் said...

தமிழ்மணம் 7.

நல்ல முயற்சி.

கார்த்தி கேயனி said...

யோகப்பயிற்சிக்கு நன்றி

M.R said...

சென்னை பித்தன் said...
தமிழ்மணம் 7.

நல்ல முயற்சி.

நன்றி ஐயா

M.R said...

கார்த்தி கேயனி said...
யோகப்பயிற்சிக்கு நன்றி

நன்றி சகோ

ரெவெரி said...

யோகப்பயிற்சிக்கு நன்றி...படம் சேருங்கள் நண்பரே...

கோகுல் said...

எனக்கொரு சந்தேகம் இருக்கு சகோ!
உடற்பயிற்சியும் யோகாவும் மாற்றி மாற்றி செய்யலாமா?
அதாவது ஒரு நாள் உடற்பயிற்சி மறுநாள் யோகா?

M.R said...

ரெவெரி said...
யோகப்பயிற்சிக்கு நன்றி...படம் சேருங்கள் நண்பரே..//

சரி நண்பரே முயற்சிக்கிறேன் ,கருத்துக்கு நன்றி

M.R said...

கோகுல் said...
எனக்கொரு சந்தேகம் இருக்கு சகோ!
உடற்பயிற்சியும் யோகாவும் மாற்றி மாற்றி செய்யலாமா?
அதாவது ஒரு நாள் உடற்பயிற்சி மறுநாள் யோகா?

எந்த பயிற்சியுமே தொடர்ந்து செய்தால் தான் முழுமையான பலன் கிடைக்கும் .

வேண்டுமானால் காலையில் யோகாவும் ,
மாலைப்பொழுது உடற்பயிற்சியும் செய்யுங்கள் ,

இல்லையென்றால் ஏதேனும் ஒன்றை செய்யுங்கள் .

ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்ய வேண்டாம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

படமும் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து......!

மாய உலகம் said...

யோகாசனம் பற்றி யோகமான ஒரு வாய்ப்பு நன்றி சகோ!

நிரூபன் said...

யோகாப் பிரியர்களுக்கு மேலும் விருந்து வைக்கும் அருமையான விளக்கப் பகிர்வு நண்பா.

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out