Monday, September 26, 2011

யோகா கற்றுக்கொள்ளுங்கள்




நண்பர்களே இதையும் தெரிந்து கொள்ளுங்கள் என்ற பதிவில்
இயற்கை சிகிச்சை முறைகளையும் ,யோகா வகைகளையும்
குறிப்பிட்டு ஓரு பதிவிட்டிருந்தேன் .



அதில் நண்பர்கள் ரமணியும் ,செங்கோவியும் அதற்கான விரிவான
செயல்முறைகளையும் தந்தால் நன்றாக இருக்கும் என்று
சொல்லியிருந்தார்கள் .

என்னால் முடிந்த அளவுக்கு தர முயற்சிக்கிறேன் ,ஏனென்றால்
ஒரு சில பயிற்சிகள் ஆசிரியர் முன்பு பயின்றால் நன்று.

மேலும் இதற்கான படங்கள் சேகரிக்க இயலவில்லை ,அதனால்
ஒரு சில பயிற்சி முறைகளை எழுத்து வடிவில் (தியரி)தருகிறேன் .

புரிந்து கொள்ள முடிந்தால் மற்றதையும் தருகிறேன் நண்பரே .




தாடாசனம்



செய்முறை :-

பாதங்களை சேர்த்தோ அல்லது சிறிது இடைவெளி வைத்தோ
நேராக நிற்கவும் .கைகளை பக்கத்தில் வைக்கவும்.

மெதுவாக மூச்சை உள்ளே இழுத்தவாறு கைகளையும் ,
குதிகால்களையும் தூக்கவும்.

பின்னர் நிதானமாக மூச்சை வெளியேற்றியவாறு கைகளையும்,குதிகால்களையும் கீழே பழைய நிலைக்கு
கொண்டு வரவும்.

இவ்வாறு எட்டு முதல் ,12 முறை செய்யவும்.

ஆசனம் செய்வதற்கு கடினமாக இருந்தால் ஜன்னல்
கம்பிகளை பிடித்தபடி (ஆரம்பத்தில் ) குதி கால்களை
உயர்த்தவும்.

பயன்கள் :-

தசைகளை ,மூட்டுகளை வலுப்படுத்தும். உடம்பை வளர்க்கும்.

எச்சரிக்கை :-

குதிகால் வலி, முடக்கு வாதம் உள்ளவர்கள் கவனமாக செய்யவும்.


வீரபத்ராசனம்

செய்முறை :-

இடது காலை முன் வைத்து நேராக நிற்கவும்.

முன்காலுக்கும்,பின்காலுக்கும் சுமார் 2 முதல் 3 அடி 
வரை இடைவெளி இருக்கலாம் .

கைகள் பக்கத்தில் இருக்கவேண்டும்.

மூச்சை மெதுவாக உள்ளே இழுத்தவாறு கைகளைத் 
தூக்கியபடி முன் முட்டியை மடிக்கவும்.

பின்னர் மூச்சை நிதானமாக வெளியேற்றியவாறு 
கைகளை கீழேயும்,முன் முட்டியை நேராக பழைய
நிலைக்கு கொண்டு வரவும்.

இவ்வாறு 6 முதல் 8 முறை செய்யவும்.பின்னர் வலது 
காலை முன் வைத்து இதே போல் செய்யவும்.

பயன்கள் :-

இடுப்பு வலி ,கழுத்து வலி இவைகளுக்குப் பயனளிக்கும்.

எச்சரிக்கை :-

மூட்டு வலி இருப்பவர்கள் தவிர்க்கவும்.

 நன்றி 






படங்கள் இல்லாமல் இந்த ஆசனங்கள் செய்வதற்கு புரிந்து
கொள்ள முடிகிறதா நண்பர்களே .

தங்கள் கருத்தினை சொல்லுங்கள் 

28 comments:

  1. udanz திரட்டி மூலம் உங்கள் தளத்தை அறிய வந்தேன். இதுதான் என் முதல் வருகை. உங்கள் வலைப்பூ முழுவதும் பயனுள்ள தகவல்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. please visit http://www.tnmeditation.org/

    சகஜ யோகா தியானப் பயிற்சி

    ReplyDelete
  3. அசத்தலான யோகா தகவல்கள் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  4. படம் இல்லாம யோகா கத்துக்கிறது கோசம் சிரமம் பொசிடிஒன் மாறி விட்டால் பலன் கிடைக்காது..

    கடைசியா போட்டு இருக்குற படத்தைப்பார்த்தா யோகா செய்யவே மனசு வராதே!!

    ReplyDelete
  5. அன்பு நண்பர் ரமேஷ்

    ஆசனங்களின் விளக்கம் நன்று
    புரிந்துகொள்ள முடிந்தது.
    ஆனாலும் படவிளக்கம் இன்னும்
    புரிதலுக்கு வசதியாக இருக்கும்.

    நீங்கள் கொடுத்திருக்கும் எச்சரிக்கை
    செய்தியை கொஞ்சம் பெரிய எழுத்தில்
    போட்டுவிடுங்கள்.

    நன்றி.

    ReplyDelete
  6. யோகா கற்றுக்கொள்ளுங்கள் உடல் ஆரோக்கியம் பெறுங்கள் நன்றி ரமேஷ்...!!!

    ReplyDelete
  7. படங்கள் இல்லாமலே புரிகிறது..படங்கள் இருந்தான் இன்னும் சிறப்பாக இருக்கும்..

    நன்றி..

    ReplyDelete
  8. வழக்கம் போல் உங்களிடம் இருந்து வரும் ஒரு நல்ல பதிவு...

    ReplyDelete
  9. புதுகை.அப்துல்லா said...
    udanz திரட்டி மூலம் உங்கள் தளத்தை அறிய வந்தேன். இதுதான் என் முதல் வருகை. உங்கள் வலைப்பூ முழுவதும் பயனுள்ள தகவல்கள். வாழ்த்துகள்.

    தங்களை வரவேற்கிறேன் நண்பரே

    வாழ்த்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  10. மதுரன் said...
    அசத்தலான யோகா தகவல்கள் பகிர்வுக்கு நன்றி//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  11. ஜ.ரா.ரமேஷ் பாபு said...
    படம் இல்லாம யோகா கத்துக்கிறது கோசம் சிரமம் பொசிடிஒன் மாறி விட்டால் பலன் கிடைக்காது..

    ஆமாம் நண்பரே

    ReplyDelete
  12. செங்கோவி said...
    நன்றி ரமேஷ்.

    நன்றி நண்பரே

    ReplyDelete
  13. மகேந்திரன் said...
    அன்பு நண்பர் ரமேஷ்

    ஆசனங்களின் விளக்கம் நன்று
    புரிந்துகொள்ள முடிந்தது.
    ஆனாலும் படவிளக்கம் இன்னும்
    புரிதலுக்கு வசதியாக இருக்கும்.

    நீங்கள் கொடுத்திருக்கும் எச்சரிக்கை
    செய்தியை கொஞ்சம் பெரிய எழுத்தில்
    போட்டுவிடுங்கள்.

    நன்றி.

    தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  14. MANO நாஞ்சில் மனோ said...
    யோகா கற்றுக்கொள்ளுங்கள் உடல் ஆரோக்கியம் பெறுங்கள் நன்றி ரமேஷ்...!!!

    நன்றி நண்பரே

    ReplyDelete
  15. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    படங்கள் இல்லாமலே புரிகிறது..படங்கள் இருந்தான் இன்னும் சிறப்பாக இருக்கும்..

    நன்றி..

    நன்றி நண்பரே படங்கள் தர முயற்சிக்கிறேன்

    ReplyDelete
  16. K.s.s.Rajh said...
    வழக்கம் போல் உங்களிடம் இருந்து வரும் ஒரு நல்ல பதிவு...

    நன்றி நண்பரே

    ReplyDelete
  17. தமிழ்மணம் 7.

    நல்ல முயற்சி.

    ReplyDelete
  18. யோகப்பயிற்சிக்கு நன்றி

    ReplyDelete
  19. சென்னை பித்தன் said...
    தமிழ்மணம் 7.

    நல்ல முயற்சி.

    நன்றி ஐயா

    ReplyDelete
  20. கார்த்தி கேயனி said...
    யோகப்பயிற்சிக்கு நன்றி

    நன்றி சகோ

    ReplyDelete
  21. யோகப்பயிற்சிக்கு நன்றி...படம் சேருங்கள் நண்பரே...

    ReplyDelete
  22. எனக்கொரு சந்தேகம் இருக்கு சகோ!
    உடற்பயிற்சியும் யோகாவும் மாற்றி மாற்றி செய்யலாமா?
    அதாவது ஒரு நாள் உடற்பயிற்சி மறுநாள் யோகா?

    ReplyDelete
  23. ரெவெரி said...
    யோகப்பயிற்சிக்கு நன்றி...படம் சேருங்கள் நண்பரே..//

    சரி நண்பரே முயற்சிக்கிறேன் ,கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  24. கோகுல் said...
    எனக்கொரு சந்தேகம் இருக்கு சகோ!
    உடற்பயிற்சியும் யோகாவும் மாற்றி மாற்றி செய்யலாமா?
    அதாவது ஒரு நாள் உடற்பயிற்சி மறுநாள் யோகா?

    எந்த பயிற்சியுமே தொடர்ந்து செய்தால் தான் முழுமையான பலன் கிடைக்கும் .

    வேண்டுமானால் காலையில் யோகாவும் ,
    மாலைப்பொழுது உடற்பயிற்சியும் செய்யுங்கள் ,

    இல்லையென்றால் ஏதேனும் ஒன்றை செய்யுங்கள் .

    ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்ய வேண்டாம்

    ReplyDelete
  25. படமும் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து......!

    ReplyDelete
  26. யோகாசனம் பற்றி யோகமான ஒரு வாய்ப்பு நன்றி சகோ!

    ReplyDelete
  27. யோகாப் பிரியர்களுக்கு மேலும் விருந்து வைக்கும் அருமையான விளக்கப் பகிர்வு நண்பா.

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே