Sunday, September 25, 2011

விண்டோஸ் மீடியா பிளேயர் மூலம் டேட்டா சிடி அல்லது டிவிடி தயாரிக்க

How to Burn a Data CD or Data DVD in Windows 7 Using Media player ?


உங்களால் ஒரு டேட்டா சிடி அல்லது டேட்டா டிவிடி விண்டோஸ்
செவனில் மீடியா பிளேயர் மூலம் தயாரிக்க முடியும்.



சாதாரணமாக பாடல்களோ ,அல்லது புகைப்படமோ காப்பி
செய்வது காட்டிலும் டேட்டா முறையில் காப்பி செய்தால்
சிறிது அதிகமாக காப்பிசெய்யலாம் . இது உங்களுக்கு தெரியும் .

அதாவது இதனை வேறு பார்மெட்டில் மாற்றி அமைக்காது .
அப்பிடியே கம்ப்ரஸ் மெத்தடில் பதிவாகும்.அதன் தரம்
அப்பிடியே இருக்கும்.

நீங்கள் விண்டோஸ் செவனில் மீடியா பிளேயர் மூலம்
டேட்டா சிடி அல்லது டேட்டா டிவிடி தயாரிக்க பின்வரும்
வழிமுறைகளை பின்பற்றுங்கள்.

முதலில் START பட்டனை கிளிக் செய்து கொள்ளவும் .

அதில் ALL PROGRAMES கிளிக் செய்து விண்டோஸ் மீடியா
பிளேயர் (செலக்ட் )தேர்ந்தெடுக்கவும் .

பிளேயர் லைப்ரரியில் வலது புறம் BURN என்பதை கிளிக்
செய்யவும் .கீழே உள்ள படத்தை பாருங்கள் .



வரும் பக்கத்தில் வலது புறம் BURN ஆப்சனை கிளிக் செய்யவும்.



Burn Option கிளிக் செய்தபின் அதில் டேட்டா சிடி அல்லது டேட்டா
டிவிடி என்பதை கிளிக் செய்யவும் .
கீழ் உள்ள படத்தில் உள்ளது போல .



காலி (empty)சிடி அல்லது டிவிடி கேட்கும்.   கணினி டிரைவரில்
செருகவும்

ஆட்டோ பிளே என்று வந்தால் (குளோஸ் ) அதனை மூடி விடவும்.


உங்ககளுக்கு தேவையான பாடல்கள் அல்லது புகைப்படங்கள்
எதனை காப்பி செய்ய விருப்பமோ அதனை மீடியா பிளேயரில்
இடது பக்கம் செலெக்ட் செய்யவும்.

மேலுள்ள படத்தை பாருங்கள் எண் 1-ல் உள்ள இடத்தில் பாடல்
தேர்வு செய்யவும்

இரண்டில் உள்ளது போல் Add to என்று வரும் .கிளிக் செய்தால் வரும்
ஆப்ஷனில் burn கிளிக் செய்யவும்

நீங்கள் செலெக்ட் செய்த பாடல்கள் வலது புறம் Burn list -ல் சேர்ந்து விடும்.

Burn செய்வதற்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களோ அல்லது புகைப்படமோ அதனை மாற்றம் செய்ய விரும்பினால்
மாறிக்கொள்ளலாம் .



உங்கள் லிஸ்ட்டில் இருந்து பாடல்களை நீக்க அந்த பாடல் மீது
வலது கிளிக் செய்து (பார்க்க படம் எண் 1 )வரும் ஆப்ஷனில்
ரிமூவ் ஃப்ரம் லிஸ்ட் என்பதை கிளிக் செய்து ரிமூவ் செய்யலாம் .

தேர்ந்தெடுத்தவைகளை மொத்தமாக அழிக்க கிளியர் லிஸ்ட்
(படத்தில் எண் 2) என்பதை கிளிக் செய்யவும் .

தேர்ந்தேடுத்தபின் START Burn என்பதை கிளிக் செய்யவும்.

தேர்ந்தேடுத்தவைகள் ஒரு தட்டில் பதிய வைக்க முடியவில்லை
எனில் மேலும் கூடுதலான தட்டில் பதிக்கலாம் .

என்ன நண்பர்களே புரிகிறதா !

நன்றி




டிஸ்கி :-

அப்புறம் இந்த இன்ட்லிய நேத்துலேர்ந்து காணல.யாராச்சும்
பாத்திங்கன்னா நான் தேடுனதா சொல்லுங்க !

34 comments:

  1. இவ்வளவு நாள் Windows Media Player Use பன்னிருக்கேன் இது தெரியாம போயுடுச்சே

    ReplyDelete
  2. நானும் இந்த முறையில் சில பாடல்களை காப்பி பண்ணியிருக்கேன்.
    சிறப்பான விளக்கப் பதிவாகத் தந்திருக்கிறீங்க.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  3. நல்லா விளக்கமா பகிர்ந்திருக்கிறிங்க!நன்றி!

    இன்ட்லியை நானும் தேடிப்பாத்தேன் காணோம்!நானும் கேட்டேன்னு சொல்லுங்க!

    ReplyDelete
  4. தகவலுக்கு மிக்க நன்றி சகோ..

    ReplyDelete
  5. சிறப்பான விளக்கப் பதிவாகபகிர்ந்திருக்கிறிங்க!நன்றி!

    ReplyDelete
  6. எல்லோருக்கும் பயனுள்ள பதிவு, மிக்க நன்றீ

    ReplyDelete
  7. தொழில் நுட்பம் தெரியாத எனக்கே விளங்குகிறது. மிக தெளிவான விளக்கம் நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  8. நானும்தான்யா இன்ட்லியை தேடிட்டு இருக்கேன் பார்த்தால், நானும் தேடினதா சொல்லிருங்க அந்த பாவிகிட்டே...

    ReplyDelete
  9. சூப்பர் தகவல்

    ReplyDelete
  10. விண்டோஸ் மீடியா ப்ளேயர்லேயே இந்த ஆப்சன் இருக்கா...... நல்லதாப்போச்சு....

    ReplyDelete
  11. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    Hi . . Me first
    Very useful information//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  12. வைரை சதிஷ் said...
    இவ்வளவு நாள் Windows Media Player Use பன்னிருக்கேன் இது தெரியாம போயுடுச்சே

    இனி உபயோகித்து பாருங்கள் நண்பரே

    ReplyDelete
  13. நிரூபன் said...
    நானும் இந்த முறையில் சில பாடல்களை காப்பி பண்ணியிருக்கேன்.
    சிறப்பான விளக்கப் பதிவாகத் தந்திருக்கிறீங்க.

    மிக்க நன்றி.//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  14. கோகுல் said...
    நல்லா விளக்கமா பகிர்ந்திருக்கிறிங்க!நன்றி!//

    நன்றி நண்பரே

    இன்ட்லியை நானும் தேடிப்பாத்தேன் காணோம்!நானும் கேட்டேன்னு சொல்லுங்க!

    ஹா ஹா

    ReplyDelete
  15. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    தகவலுக்கு மிக்க நன்றி சகோ..

    நன்றி சகோ

    ReplyDelete
  16. மாலதி said...
    சிறப்பான விளக்கப் பதிவாகபகிர்ந்திருக்கிறிங்க!நன்றி!

    நன்றி சகோதரி

    ReplyDelete
  17. Jaleela Kamal said...
    எல்லோருக்கும் பயனுள்ள பதிவு, மிக்க நன்றீ

    நன்றி சகோ

    ReplyDelete
  18. கார்த்தி கேயனி said...
    தகவலுக்கு நன்றி

    நன்றி சகோ

    ReplyDelete
  19. kavithai (kovaikkavi) said...
    தொழில் நுட்பம் தெரியாத எனக்கே விளங்குகிறது. மிக தெளிவான விளக்கம் நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    நன்றி சகோதரி

    ReplyDelete
  20. MANO நாஞ்சில் மனோ said...
    நானும்தான்யா இன்ட்லியை தேடிட்டு இருக்கேன் பார்த்தால், நானும் தேடினதா சொல்லிருங்க அந்த பாவிகிட்டே...

    ஹா ஹா ஹா

    ReplyDelete
  21. K.s.s.Rajh said...
    சூப்பர் தகவல்

    நன்றி நண்பரே

    ReplyDelete
  22. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    விண்டோஸ் மீடியா ப்ளேயர்லேயே இந்த ஆப்சன் இருக்கா...... நல்லதாப்போச்சு....

    கருத்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  23. அழகா சொல்லியிருக்கீங்க..! வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  24. தங்கம்பழனி said...
    அழகா சொல்லியிருக்கீங்க..! வாழ்த்துக்கள்..!

    நன்றி நண்பரே

    ReplyDelete
  25. athira said...
    மிக நல்ல தகவல்ல்ல்ல்ல்.

    நன்றி அதிரா சகோ

    ReplyDelete
  26. அழகா விளக்கி இருக்கீங்க நன்றி மாப்ள!..TM Voted!

    ReplyDelete
  27. விக்கியுலகம் said...
    அழகா விளக்கி இருக்கீங்க நன்றி மாப்ள!..TM Voted!
    TM 7!//

    நன்றி மாம்ஸ்

    ReplyDelete
  28. பயனுள்ள கணினி தகவல்... நன்றி சகோ!

    ReplyDelete
  29. எல்லோருக்கும் பயனுள்ள பதிவு...நன்றி நண்பரே...

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே