Saturday, September 24, 2011

தினம் ஒரு சூப் சாப்பிடுங்கள்





உடல் ஆரோக்கியத்தைப் பெற தினம் ஒரு சூப் சாப்பிடுங்கள்

கூல்ட்ரிங்க் என்ற பெயரில் கெமிக்கலை குடிப்பதை விட 
தினம் ஒரு சூப் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் கிட்டும்.


ஞாயிறு :-

ஞாயிற்று கிழமை மணத்தக்காளி சூப் சாப்பிடுங்கள்
இந்த சூப் சாப்பிட்டால் வாய்ப்புண் ,வயிற்றுப் புண் ,வயிற்று வலி குணமாகும்.

திங்கள்:-

திங்கள் கிழமை முடக்கத்தான் சூப் சாப்பிடுங்கள்
இந்த சூப் சாப்பிட்டால் வாத நோய்கள்,கை,கால், மூட்டுவலி,நாள்பட்ட
இருமல்,மார்பு நோய் ,வீக்கம்,ஆஸ்துமா,காசநோய் ,தலைவலி,காமாலை,
கழுத்து வலி ஆகியவை குணமாகும்.

செவ்வாய்:-

செவ்வாய் கிழமை வெள்ளை முள்ளங்கி சூப் சாப்பிடுங்கள்
இந்த சூப் சாப்பிட்டால் வயிற்றுப் புண், வயிற்று எரிச்சல், சிறுநீரக கோளாறுகள்,,இருமல் ,கல்லடைப்பு,ஆகியவை குணமாகும்.ஆண்மை
பெருகும்.

புதன் :-

புதன்கிழமை சிறு கீரை சூப் சாப்பிடுங்கள்
இந்த சூப் சாப்பிட்டால் கண் நோய்கள,புண்கள்,சிறுநீர் எரிச்சல்,வீக்கம்,பித்தநோய் ஆகியவை தீரும். குரல் வளமையடையும்.
உடல் வலிமை பெறும்.

வியாழன்:-

வியாழன் கிழமை அகத்தி கீரை சூப் சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.
பித்தம் குறையும், சைனஸ் நீங்கும், பீடி,சிகரெட்டினால் உள்ள நஞ்சு நீங்கும்.

வெள்ளி :-

வெள்ளிக்கிழமை முட்டைகோஸ் சூப் சாப்பிடுங்கள்
இந்த சூப் சாப்பிட்டால் வயிற்றுப் புண்,வயிற்று வலி தீரும்.
இரும்பு சத்து நிறைந்தது.

சனி:-

சனிக்கிழமை வாழைத்தண்டு சூப் சாப்பிடுங்கள்
இந்த சூப் சாப்பிட்டால் சிறுநீர் கோளாறுகளை போக்கும்.சிறுநீரக
கற்களைக் கரைக்கும்.உடல் வெப்பத்தைக் குறைக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.

குறிப்பு:-

சூப் போடும்பொழுது உள்ளி ,பூண்டு,சீரகம்,பெருஞ்சீரகம்,நல்ல மிளகு,
வெந்தயம்,கறிவேப்பிலை,மல்லிக்கீரை,சிறிது உப்பு இவைகளை போட
வேண்டும்.

உள்ளி ,பூண்டு,இவைகளை லேசாக நசுக்கிப் போட வேண்டும்.
மற்றவைகளை ஒரு கரண்டி வீதம் போடவும்.
ஐந்து கரண்டி மல்லியை லேசாக வறுத்து போடவும்.ருசிக்கு
தகுந்த உப்பு போடவும்.

பிற்சேர்க்கை :-

தினசரி இஞ்சி ,பூண்டு இவைகளை உணவில் சேர்த்துக் கொள்வது
நல்லது.
இவைகள் இரத்த குழாயில் ஏற்படும் அடைப்பை நீக்கும்.
மாரடைப்பை தடுக்கும்.
இரத்த நாள செயல் பாட்டை சரி செய்யும்.

டிஸ்கி:-

சூடாக்கி பின் ஆறிப்போன வெந்நீர்,காப்பி,டீ,பழைய குழம்பு வகைகள்
இவற்றை திரும்பவும் சூடாக்குதல் கூடாது.
ஏனென்றால் ,அதன் தன்மை கேட்டு,நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

என்ன நண்பர்களே எங்க கிளம்பிட்டீங்க சூப் சாப்பிடவா
நல்லது ,ஆனால் அதற்க்கு முன்பாக இந்த விஷயம் மற்றவர்களுக்கும்
போய் சேர வோட்டு போட்டீங்கன்னா நல்லது .
மற்றவர்களுக்கும் பயன் பெறட்டுமே இந்த குறிப்புகள் .

இன்ட்லி,தமிழ் மணம் இவற்றில் மறக்காமல் வாக்களியுங்கள்

முக்கிய குறிப்பு :-

எனது பதிவுகளை மற்றவர்களுக்கும் சென்றடைய வழிவகுக்கும்
(வாக்கிடும்)அனைவருக்கும் கண்டிப்பாக எனது வாக்குகள் உண்டு.

தெரிஞ்சிக்கோங்க :-

யாரு ஒட்டு போட்டாங்க அப்பிடின்னு தெரிஞ்சிக்க 

தமிழ் மணத்தில் வாக்கு போட்டவர்களின் விபரம் அறிய

கீழே படத்தில் காட்டியுள்ளபடி செய்யுங்கள் 
கிளிக் செய்தால் வரும் பக்கத்தில் செய்ய வேண்டியது 
(படம் பெரிதாக தெரிய படத்தை கிளிக் செய்யுங்கள்)


இந்த முகவரியில் prostrating என்பதை நீக்கிவிட்டு  whovoted என டைப் செய்து
S=p&I என்பதை நீக்கி விட்டு id என டைப் செய்து என்டர் குடுத்தால்
யார் வோட்டு போட்டார்கள் என தெரிந்து கொள்ளாலாம் .




57 comments:

  1. அன்புடன் டொக்ரர் நலமா?
    நீண்ட நாட்களின் பின் இணைவதில் மகிழ்ச்சி.
    என்ன கிழமையில் இருக்கிற ஏழு நாளையும் சூப்போட விடணுமா?hahahha
    நீங்க சொன்னால் நாங்க செய்யத்தானே வேணும்.
    நல்ல தகவல்.
    பகிர்வுக்கு நன்றி சகோ..

    ReplyDelete
  2. இனிய காலை வணக்கம் நண்பா,

    ஆரோக்கிய வாழ்விற்கேற்றாற் போல, அசத்தலான சூப் பற்றிய வகைப்படுத்தல்களைத் தந்திருக்கிறீங்க

    தமிழ் மணம் ஐடியாவும் சூப்பர்.

    ReplyDelete
  3. vidivelli said...
    அன்புடன் டொக்ரர் நலமா?
    நீண்ட நாட்களின் பின் இணைவதில் மகிழ்ச்சி.
    என்ன கிழமையில் இருக்கிற ஏழு நாளையும் சூப்போட விடணுமா?hahahha
    நீங்க சொன்னால் நாங்க செய்யத்தானே வேணும்.
    நல்ல தகவல்.
    பகிர்வுக்கு நன்றி சகோ..

    வாங்க சகோ சீக்கிரம் திரும்பியதற்கு நன்றி சகோ..
    தொடர்ந்து வாருங்கள்

    ReplyDelete
  4. நிரூபன் said...
    இனிய காலை வணக்கம் நண்பா,//

    காலை வணக்கம் நண்பரே

    ஆரோக்கிய வாழ்விற்கேற்றாற் போல, அசத்தலான சூப் பற்றிய வகைப்படுத்தல்களைத் தந்திருக்கிறீங்க//

    நன்றி நண்பரே

    தமிழ் மணம் ஐடியாவும் சூப்பர்.//

    இது உங்கள் ஐடியா தானே நண்பரே

    ReplyDelete
  5. காலைவணக்கம் நண்பரே!!! உபயோகமான தகவல்களுக்கு நன்றிகள் பல !!!!

    ReplyDelete
  6. » мσнαη « • said...
    காலைவணக்கம் நண்பரே!!! உபயோகமான தகவல்களுக்கு நன்றிகள் பல !!!!

    காலை வணக்கம் நண்பரே

    வாழ்த்துக்கு நன்றி

    ReplyDelete
  7. தமிழ் மண தகவலுக்கு நன்றி பாஸ்!

    ReplyDelete
  8. அதிக நாட்களுக்கு அப்புறம் வந்திருக்கேன்...வந்து பார்க்கிறது!

    ReplyDelete
  9. 'சூப்' பர் பதிவுபா!!!

    ReplyDelete
  10. தமிழ்மணம் ஐடியா சூப்பர்

    ReplyDelete
  11. சூப் சிறப்புப் பதிவு வாசித்தேன் மிக நல்ல பதிவு. வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  12. சூப்பு சூப்பர் சார் ....

    பகிர்வுக்கு நன்றி
    நண்பா ..

    கூகுளில் பேசி தேடலாம்

    ReplyDelete
  13. அட, இனி தினமும் சூப் குடிக்கிறேன்! ஓகே வா?

    ReplyDelete
  14. ஒரு பயனுள்ள அருமையான தகவல் நண்பரே..
    நன்றி..

    ReplyDelete
  15. சூப்பரான சூப் பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  16. கிழமை வாரியா சூப் செய்து
    சும்மா அசத்திடீங்க...
    உடலுக்கு நல்லதுன்னா
    உடனே செஞ்சிடுவோம்.
    பதிவுக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  17. ஊர்ல இருக்கிரவிங்களுக்கு ஓகே எங்களை மாதிரி வெளிநாட்டுல இருக்கிறவங்க எங்கே போயி கீரையை தேட.....ம்ம்ம்ம் அருமையான தகவல்...

    ReplyDelete
  18. ஓட்டு போடாதவங்களுக்கு மிரட்டல் வேறயா அவ்வ்வ்வ்....

    ReplyDelete
  19. மைந்தன் சிவா said...
    தமிழ் மண தகவலுக்கு நன்றி பாஸ்!

    நன்றி நண்பா

    அதிக நாட்களுக்கு அப்புறம் வந்திருக்கேன்...வந்து பார்க்கிறது!

    கண்டிப்பாக வருகிறேன் நண்பா

    ReplyDelete
  20. ஷீ-நிசி said...
    'சூப்' பர் பதிவுபா!!!

    நன்றி நண்பா

    ReplyDelete
  21. மதுரன் said...
    தமிழ்மணம் ஐடியா சூப்பர்

    நன்றி நண்பா

    ReplyDelete
  22. kovaikkavi said...
    சூப் சிறப்புப் பதிவு வாசித்தேன் மிக நல்ல பதிவு. வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    நன்றி சகோதரி

    ReplyDelete
  23. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    Very useful . . .

    நன்றி நண்பரே

    ReplyDelete
  24. stalin said...
    சூப்பு சூப்பர் சார் ....

    பகிர்வுக்கு நன்றி
    நண்பா ..//

    நன்றி நண்பா

    ReplyDelete
  25. Powder Star - Dr. ஐடியாமணி said...
    அட, இனி தினமும் சூப் குடிக்கிறேன்! ஓகே வா?//

    கண்டிப்பாக குடிங்க !

    ReplyDelete
  26. வேடந்தாங்கல் - கருன் *! said...
    ஒரு பயனுள்ள அருமையான தகவல் நண்பரே..
    நன்றி..

    கருத்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  27. இராஜராஜேஸ்வரி said...
    சூப்பரான சூப் பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

    நன்றி மேடம்

    ReplyDelete
  28. மகேந்திரன் said...
    கிழமை வாரியா சூப் செய்து
    சும்மா அசத்திடீங்க...
    உடலுக்கு நல்லதுன்னா
    உடனே செஞ்சிடுவோம்.
    பதிவுக்கு நன்றி நண்பரே.

    தங்கள் அன்புக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  29. MANO நாஞ்சில் மனோ said...
    ஊர்ல இருக்கிரவிங்களுக்கு ஓகே எங்களை மாதிரி வெளிநாட்டுல இருக்கிறவங்க எங்கே போயி கீரையை தேட.....ம்ம்ம்ம் அருமையான தகவல்...

    மேலே குறிப்பிட்டுள்ள ஒரு பொருள் கூட கிடைக்காதா !

    அட கொடுமையே ! ரெடிமேடாக கூட கிடைக்காதா ,அட்லீஸ்ட் அருகம்புல் ஜூஸ் கிடைத்தால் குடிங்க அது மிகவும் உடலுக்கு நல்லது

    ReplyDelete
  30. MANO நாஞ்சில் மனோ said...
    ஓட்டு போடாதவங்களுக்கு மிரட்டல் வேறயா அவ்வ்வ்வ்....

    ஹையோ அப்பிடியெல்லாம் கிடையாது நண்பரே ,எனது பதிப்புகளை மற்றவர்களுக்கு கொண்டு செல்லும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி தெரிவிப்பேன் என்றேன்

    ReplyDelete
  31. பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன் மாப்ள நன்றி!

    ReplyDelete
  32. சூப் எல்லாம் சூப்பர்.
    நல்ல பயனுள்ள குறிப்புகள்.தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  33. நல்ல பயனுள்ள பதிவு
    கூடுமானவரையில் ரசமாக மாற்றி மாற்றி
    சமைத்து விடுகிறோம்
    விடுபடுகிற நாளில் இந்தப் பதிவு
    நிச்சயம் உதவும்
    த.ம 10

    ReplyDelete
  34. சூப்பை பற்றிய சூப்பரான பகிர்வுக்கு நன்றி சகோ

    ReplyDelete
  35. சூப் பதிவில் ஒரு தொழில்நுட்பம் பதிவையும் சொல்லிடிங்களே... தனி பதிவா போட்டிருக்கலாமே

    ReplyDelete
  36. This comment has been removed by the author.

    ReplyDelete
  37. ஆஹா!மாஸ்டர் இன்னைக்கு டாக்டர் ஆகிட்டாரு!கலக்குங்க!

    "சூப்"பரப்பு!!!

    ReplyDelete
  38. இந்த சூப்பெல்லாம் எப்படி செய்வது என்றும் ஒரு பதிவு போடுங்க!

    ReplyDelete
  39. நான் சொல்வது தனித்தனி செய்முறை!

    ReplyDelete
  40. ஏழுநாளும் ஏழுவகை சூப்பா..?
    படிக்கவே சுவையா இருக்கு
    வசதி இருந்தாலும் செய்ய ஆள்
    வேணுமே
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  41. அருமை அருமை, கண்ட கண்ட செயற்கை பானங்களை குடிப்பதற்கு இது எவ்வளவோ மேல்.....

    ReplyDelete
  42. ரமேஸ்ஸ்ஸ்ஸ்... தாமதமான வருகைக்கு கோபித்திடப்புடா:)), வேணுமென்றில்லை, சில நேரங்களில் முடிவதேயில்லை...

    ReplyDelete
  43. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சூப்.... படிக்கவே ஆசையாக இருக்கு, ஆனா செய்யவேண்டுமே...

    மிக நல்ல பகிர்வு.. அதுசரி நீங்க என்னமாதிரி? இவற்றையெல்லாம் பின்பற்றுறீங்களோ?:))).

    ReplyDelete
  44. தமிழ்மணம், இண்ட்ஸ்லி.. இதிலெல்லாம் வோட்டுப் போடுவதாயின், நாமும் அதில் மெம்பராக இணையவேண்டுமோ? எல்லோருக்கும் போடுறேன் ஆனா அக்‌ஷெப்ட் பண்ணுதில்லை:((((.

    ReplyDelete
  45. இந்த சூப் வகைகளில் முக்கியமான தக்காளி சூப்பை ஏன் விட்டுட்டீங்க? எங்க பக்கம் சில கீரை வகைகள் கிடைக்காது. தக்காளி, பூண்டு வெங்காயம், காரட் எல்லாம் வெந்து அரைச்சு மிளகு ஜீரகம் பொடி உப்பு சேர்த்து சாப்பிடுவோம்.

    ReplyDelete
  46. விக்கியுலகம் said...
    பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன் மாப்ள நன்றி!//

    நன்றி மாம்ஸ்

    ReplyDelete
  47. RAMVI said...
    சூப் எல்லாம் சூப்பர்.
    நல்ல பயனுள்ள குறிப்புகள்.தகவலுக்கு நன்றி.//

    நன்றி சகோதரி

    ReplyDelete
  48. Ramani said...
    நல்ல பயனுள்ள பதிவு
    கூடுமானவரையில் ரசமாக மாற்றி மாற்றி
    சமைத்து விடுகிறோம்
    விடுபடுகிற நாளில் இந்தப் பதிவு
    நிச்சயம் உதவும்
    த.ம 10//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  49. மாய உலகம் said...
    சூப்பை பற்றிய சூப்பரான பகிர்வுக்கு நன்றி சகோ

    நன்றி சகோ

    ReplyDelete
  50. தமிழ்வாசி - Prakash said...
    சூப் பதிவில் ஒரு தொழில்நுட்பம் பதிவையும் சொல்லிடிங்களே... தனி பதிவா போட்டிருக்கலாமே

    சின்னது என்பதால் இதுலேயே போட்டுட்டேன் நண்பரே

    ReplyDelete
  51. கோகுல் said...
    ஆஹா!மாஸ்டர் இன்னைக்கு டாக்டர் ஆகிட்டாரு!கலக்குங்க!

    "சூப்"பரப்பு!!!//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  52. சென்னை பித்தன் said...
    இந்த சூப்பெல்லாம் எப்படி செய்வது என்றும் ஒரு பதிவு போடுங்க!
    நான் சொல்வது தனித்தனி செய்முறை!

    முயற்சி செய்கிறேன் ஐயா நன்றி

    ===========================

    புலவர் சா இராமாநுசம் said...
    ஏழுநாளும் ஏழுவகை சூப்பா..?
    படிக்கவே சுவையா இருக்கு
    வசதி இருந்தாலும் செய்ய ஆள்
    வேணுமே//

    கருத்துக்கு நன்றி ஐயா
    =================================

    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    அருமை அருமை, கண்ட கண்ட செயற்கை பானங்களை குடிப்பதற்கு இது எவ்வளவோ மேல்.....

    ஆமாம் நண்பரே

    ReplyDelete
  53. athira said...
    ரமேஸ்ஸ்ஸ்ஸ்... தாமதமான வருகைக்கு கோபித்திடப்புடா:)), வேணுமென்றில்லை, சில நேரங்களில் முடிவதேயில்லை...

    பரவாயில்லை சகோதரி நேரம் கிடைக்கும்பொழுது வாருங்கள்


    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சூப்.... படிக்கவே ஆசையாக இருக்கு, ஆனா செய்யவேண்டுமே...//

    ஆமாம்

    மிக நல்ல பகிர்வு.. அதுசரி நீங்க என்னமாதிரி? இவற்றையெல்லாம் பின்பற்றுறீங்களோ?:))).//

    அது வந்து.......

    தமிழ்மணம், இண்ட்ஸ்லி.. இதிலெல்லாம் வோட்டுப் போடுவதாயின், நாமும் அதில் மெம்பராக இணையவேண்டுமோ? எல்லோருக்கும் போடுறேன் ஆனா அக்‌ஷெப்ட் பண்ணுதில்லை://

    ஆமாம் சகோதரி

    ReplyDelete
  54. Lakshmi said...
    இந்த சூப் வகைகளில் முக்கியமான தக்காளி சூப்பை ஏன் விட்டுட்டீங்க? எங்க பக்கம் சில கீரை வகைகள் கிடைக்காது. தக்காளி, பூண்டு வெங்காயம், காரட் எல்லாம் வெந்து அரைச்சு மிளகு ஜீரகம் பொடி உப்பு சேர்த்து சாப்பிடுவோம்.

    ஆமாம் அம்மா தக்காளி சூப்பும் நல்லதுதான்

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே