Friday, October 7, 2011

வித விதமாக படுக்கை கோடுகளை வோர்ட் 2007 -ல் இணைக்க குறுக்கு வழி

HOW TO ADD HORIZONTAL LINES IN WORD 2007 DOCUMENT QUICKLY ?

நாம் வோர்டில் டாக்குமென்ட் டைப் பண்ணும் பொழுது அல்லது

நமக்கு தேவையானது டைப் பண்ணும் பொழுது இரண்டு பேராவிற்கு

இடையில் அல்லது முடிந்து அடுத்த டாப்பிக் (தலைப்பில் ) ஆரம்பிக்க

முந்தைய முடிவில் படுக்கை கோடுகள் போடுவோம் .

அதற்கு மேலே போய் தேடிகிட்டு இருக்காம ,விசைப் பலகை
அதாங்க கீபோர்ட் மூலமாக சுலபமாக கோடு போடலாம்



அது எப்பிடின்னு தெரிஞ்சிக்குங்க !

படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்






எண் 1-ல் உள்ளது போல் கோடு இணைக்க 

கீ போர்டில் மூன்று டேஸ் --- டைப் பண்ணி எண்டர் கொடுக்கவும் 





எண் 2-ல் உள்ளது போல் ஸ்டைலாக கோடு இணைக்க 

மூன்று ஸ்டார் ***  டைப் பண்ணி என்டர் குடுக்கவும் 




எண் 3 -ல் உள்ளது போல் தடிமனாக கோடு இணைக்க
மூன்று அண்டர் ஸ்கோர் ( _ _ _ ) டைப் அடித்து என்டர் (enter )கொடுக்கவும்





எண் 4-ல் உள்ளது போல் டபுள் கோடு இணைக்க  

மூன்று சமக்குறி (equal) === டைப் அடித்து என்டர் குடுக்கவும் 


எண் 5-ல் உள்ளது போல் தடிமனாக இரட்டைக் கோடுகள் 
இணைக்க மூன்று பவுண்ட்(pound signs) ### சிம்பலை டைப் 
அடித்து என்டர் குடுக்கவும் 




எண் 6-ல் உள்ளது போல் பட்டை ஒற்றை வரி இணைக்க
மூன்று டைல்டஸ்(tildes) ~ ~ ~ டைப் பண்ணி என்டர் குடுக்கவும்

என்ன நண்பர்களே உபயோகமாக இருக்குமா உங்களுக்கு
வோர்டில் பதிவெழுதும் பொழுதோ அல்லது டாக்குமென்ட்
தயாரிக்கும் பொழுதோ படுக்கை கோடு இணைக்க
நினைத்தால் இது உபயோகப்படும் நண்பர்களே .
நேரமும் மிச்சப்படும் .


நன்றி






32 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. பயனுள்ள விசயம்... நன்றி சகோ!

    ReplyDelete
  3. பயனுள்ள தகவல்
    த.ம 3

    ReplyDelete
  4. என் பின்னூட்டம் எதுவும் வருகுதில்லையே...

    ReplyDelete
  5. கிடைத்த நேரத்தில் கஸ்டப்பட்டு 2 பின்னூட்டம் போட்டேன் காணாமல் போயிடுத்தூஊஊஊஊஊ:)).

    Horizontal line = படுக்கைக்கோடு.... இது நல்லாயிருக்கே...
    நாங்கள் கிடைக்கோடு எனப் படித்த நினைவு...

    ReplyDelete
  6. நல்ல தகவல்.
    இட்ப்பூடியே பூஸ்குட்டி, பப்பி எல்லாம் கீறலாம்போல இருக்கே:)))

    ReplyDelete
  7. இன்னைக்கு கம்பியூட்டர் மாஸ்டர்!
    இனி நீங்கள் இனி மாஸ்டர்களுக்கேல்லாம் மாஸ்டர் என அன்போடு அழைக்கப்படுவீர்!

    ReplyDelete
  8. உடல்நலம் டாக்டர் இன்னைக்கு கம்பியூட்டர் மெக்கானிக்கா ஆகிட்டாரு...!!! நன்றி...

    ReplyDelete
  9. நண்பா! இன்னிக்கு மெடிக்கல்ல இருந்து எஞ்சினீயரிங்குக்கு மாறியாச்சா???

    அருமையான தகவல்!

    ReplyDelete
  10. சூப்பர்யா...இது தெரியாம என்னென்னமோ சர்க்கஸ் வேலைல்லாம் பண்ணிக்கிட்டிருந்தேன்..

    ReplyDelete
  11. பயனுள்ள தகவல் ரமேஷ்,பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  12. மாய உலகம் said...
    பயனுள்ள விசயம்... நன்றி சகோ!

    நன்றி சகோ

    Ramani said...
    பயனுள்ள தகவல்
    த.ம 3

    நன்றி நண்பரே

    ReplyDelete
  13. athira said...
    என் பின்னூட்டம் எதுவும் வருகுதில்லையே...

    வருதே


    கிடைத்த நேரத்தில் கஸ்டப்பட்டு 2 பின்னூட்டம் போட்டேன் காணாமல் போயிடுத்தூஊஊஊஊஊ:)).//

    அப்பிடியா !

    Horizontal line = படுக்கைக்கோடு.... இது நல்லாயிருக்கே...
    நாங்கள் கிடைக்கோடு எனப் படித்த நினைவு...

    இப்பிடியும் சொல்லலாம்
    .
    நல்ல தகவல்.
    இட்ப்பூடியே பூஸ்குட்டி, பப்பி எல்லாம் கீறலாம்போல இருக்கே:)))

    ஹா ஹா ஹா

    ReplyDelete
  14. கோகுல் said...
    இன்னைக்கு கம்பியூட்டர் மாஸ்டர்!
    இனி நீங்கள் இனி மாஸ்டர்களுக்கேல்லாம் மாஸ்டர் என அன்போடு அழைக்கப்படுவீர்!

    நன்றி நண்பா

    ReplyDelete
  15. MANO நாஞ்சில் மனோ said...
    உடல்நலம் டாக்டர் இன்னைக்கு கம்பியூட்டர் மெக்கானிக்கா ஆகிட்டாரு...!!! நன்றி...

    நன்றி நண்பரே

    ReplyDelete
  16. Powder Star - Dr. ஐடியாமணி said...
    நண்பா! இன்னிக்கு மெடிக்கல்ல இருந்து எஞ்சினீயரிங்குக்கு மாறியாச்சா???//

    அப்பப்ப

    அருமையான தகவல்!//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  17. நண்டு @நொரண்டு -ஈரோடு said...
    பயனுள்ள தகவல் .
    தகவலுக்கு நன்றி.

    நன்றி நண்பரே


    செங்கோவி said...
    சூப்பர்யா...இது தெரியாம என்னென்னமோ சர்க்கஸ் வேலைல்லாம் பண்ணிக்கிட்டிருந்தேன்..

    ஹா ஹா தங்கள் அன்புக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  18. RAMVI said...
    பயனுள்ள தகவல் ரமேஷ்,பகிர்வுக்கு நன்றி.

    நன்றி சகோதரி

    ReplyDelete
  19. நல்ல அருமையான தகவல் நண்பா

    ReplyDelete
  20. யோகா மாஸ்டர் லீவா...?
    இதுவும் நல்லது தான் நண்பரே...

    ReplyDelete
  21. நல்ல தகவல் பாஸ் நன்றி

    ReplyDelete
  22. அந்த கோடு வேணாம்ணா எப்படி டெலிட் பன்றது

    ReplyDelete
  23. உமாபதி said...
    அந்த கோடு வேணாம்ணா எப்படி டெலிட் பன்றது

    backpace அழுத்துங்க கோடு போயிடும்

    ReplyDelete
  24. வைரை சதிஷ் said...
    நல்ல அருமையான தகவல் நண்பா

    நன்றி நண்பரே

    ReplyDelete
  25. ரெவெரி said...
    யோகா மாஸ்டர் லீவா...?
    இதுவும் நல்லது தான் நண்பரே...

    ஹா ஹா இன்று மருத்துவர் விடுமுறை

    ReplyDelete
  26. K.s.s.Rajh said...
    நல்ல தகவல் பாஸ் நன்றி

    நன்றி நண்பரே

    ReplyDelete
  27. த.ம.11
    இதெல்லாம் எனக்குப் புதுசு! நன்றி.

    ReplyDelete
  28. அடடா இதுவரைக்கும் தெரியாம போச்சே..... ரொம்பவே உபயோகமாகும் தகவலுங்கோ.......!

    ReplyDelete
  29. சென்னை பித்தன் said...
    த.ம.11
    இதெல்லாம் எனக்குப் புதுசு! நன்றி.

    நன்றி ஐயா

    ReplyDelete
  30. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    அடடா இதுவரைக்கும் தெரியாம போச்சே..... ரொம்பவே உபயோகமாகும் தகவலுங்கோ.......!

    நன்றி நண்பரே

    ReplyDelete
  31. உபயோகமான தகவல், பகிர்வுக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  32. அருமையான விளக்கப் பகிர்வு நண்பா.
    வேர்ட் இல் இப்படியான ஈஸி வழிகளைப் பின்பற்றலாம் என்பதனை இன்று தான் அறிந்து கொண்டேன்,

    மிக்க நன்றி பாஸ்.

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே