Monday, October 3, 2011

இது வந்தா அடக்காதீங்க


நமது உடலில் சாதாரணமாக சில செயல்கள் உண்டாகும்
இவை இயற்கையானவை .


இவற்றை மருத்துவ மொழியில் வேகங்கள் என்று அழைப்பர்.

இப்பிடி சாதாரணமாக தோன்றும் நிகழ்வுகளை அடக்க 
அல்லது தடுக்க கூடாது .

இந்த வேகங்கள் நமது உடல் நோய்வாய் படும்போழுது
அதிகம் பாதிக்கப்படும் .

இந்த வேகங்களின் வகைகள் :-

வாதம் (அபான வாயு)

தும்மல்

சிறுநீர்

மலம்

கொட்டாவி

பசி

நீர் வேட்கை (தாகம் )

இருமல்

இளைப்பு (மூச்சு வாங்குதல் )

தூக்கம்

வாந்தி

கண்ணீர்

சுக்கிலம்

சுவாசம் (மூச்சு )

இவைகள் சாதாரணமாக உடலில் தோன்றும் வேகங்கள் ஆகும் .

இதனை தடுத்தாலோ அல்லது அடக்கினாலோ
உண்டாகும் நோய்கள் உண்டாகும்.

அந்த நோய்கள் என்ன ?

வாதம் :-(வாயு ) சாதாரணமாக இது இயல்பாக பிரிய வேண்டும்.
இதனை அடக்கினால் மார்பு நோய் ,வாயு குன்மம், குடல் வாதம்,
உடல் குத்தல் ,குடைச்சல் மலக்கட்டு,நீர்க்கட்டு ,செரிமானக் 
குறைவு போன்றவை உண்டாகும்.
அதனால் வாயுவை அடைக்காதீர்கள் .

தும்மல் :-


அட தும்மல் என்ன நம்மளை கேட்டுட்டா வருது ,அது வந்தா 
தும்மிடுங்க . அடுத்தவங்க என்ன நினைப்பாங்க என்று அதனை 
அடக்காதீங்க. அவர்களிடமிருந்து சிறிது தள்ளி பொய் தும்மிடுங்க.
இதனை அடக்கினால் தலை முழுதும் நோவும்,அனைத்து 
புலன்களும் (மெய்,வாய்,கண்,காது,மூக்கு) தெறித்து விடுவது 
போல் தோன்றும். முகம் இழுத்துக் கொள்ளும் .
அதனால தும்மல் வந்தால் தும்மிடுங்க ,அடக்காதீங்க .

சிறுநீர் :-

அட இதனையும் அடக்காதீங்க ,இடம் இல்லை என்றோ 
நேரம் இல்லை என்றோ, சங்கோஜப் பட்டோ இதனை அடக்கி வைக்காதீங்க .

மீறி அடக்கினா நீரடைப்பு,நீரிறங்கும் துளை புன்னாதல் ,
ஆண்குறியில் குத்தல்,கல் உருவாகுதல்,அபான வாயு 
வயிற்றில் உருவாகுதல் ,நீர் எரிச்சல் போன்றவை உருவாகும்.

மேலும் நாளைப் பார்ப்போம் 

தொடரும்.......


நன்றி :-

படங்கள் உதவி இணையம்


இன்று பங்கு மார்கெட் தளத்தில் 


பங்குசந்தை கற்றுக்கொள் பாகம் -7


40 comments:

  1. நான் தான் முதலாவதா

    ReplyDelete
  2. அசத்தலான தகவல் பாஸ்

    ReplyDelete
  3. மதுரன் said...
    நான் தான் முதலாவதா

    ஆமாம் நண்பரே வணக்கம்

    மதுரன் said...
    அசத்தலான தகவல் பாஸ்

    நன்றி நண்பா

    ReplyDelete
  4. இனி வேகத்தை அடக்க மாட்டோம்.. நன்றி சகோ!

    ReplyDelete
  5. மாய உலகம் said...
    இனி வேகத்தை அடக்க மாட்டோம்.. நன்றி சகோ!//

    நன்றி சகோ

    ReplyDelete
  6. உண்மைதாங்க இயற்க்கையோடு ஒத்துப்போவது போல் இவைகளோடு நாமும் ஒத்துழைத்து ஒத்துப்போக ுவேண்டும்..



    இல்லையென்றால் பின் விளைவுகள் மோசமாகத்தான் இருக்கும்...

    தொடரட்டும்...

    ReplyDelete
  7. அடக்கக் கூடாதவைகளை அழகாக அடுக்கி
    விளக்கிப் போகிறீர்கள்
    தொடர்ந்து வருகிறோம்
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 4

    ReplyDelete
  8. பயனுள்ள., அசத்தலான தகவல்கள்..

    ReplyDelete
  9. கலக்குங்க பாஸ்! நல்ல தகவல்கள்!

    ReplyDelete
  10. நல்ல பதிவு..ஆனாலும் தலைப்பு இப்படி வைக்கத் தேவையில்லையே..இன்னுமா இது-அது ஜூரம் தீரலை?

    ReplyDelete
  11. இனிய மதிய வணக்கம் பாஸ்,,

    இனிமேல் அடக்க்க மாட்டோம்.

    நல்லதோர் விழிப்புணர்வு பதிவு பாஸ்.

    ReplyDelete
  12. அருமையான விழிப்புணர்வுத் தகவல் மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு ............

    ReplyDelete
  13. இன்று என் வலையில்
    நாஞ்சில் மனோ Vs கருண் Vs சி.பி – யார் அதுல பெரிய ஆள்?

    ReplyDelete
  14. கவிதை வீதி... // சௌந்தர் // said...
    உண்மைதாங்க இயற்க்கையோடு ஒத்துப்போவது போல் இவைகளோடு நாமும் ஒத்துழைத்து ஒத்துப்போக ுவேண்டும்..



    இல்லையென்றால் பின் விளைவுகள் மோசமாகத்தான் இருக்கும்...

    தொடரட்டும்...//


    அன்பான கருத்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  15. Ramani said...
    அடக்கக் கூடாதவைகளை அழகாக அடுக்கி
    விளக்கிப் போகிறீர்கள்
    தொடர்ந்து வருகிறோம்
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 4

    அன்பான கருத்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  16. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    பயனுள்ள., அசத்தலான தகவல்கள்..

    நன்றி நண்பரே

    ReplyDelete
  17. ஜீ... said...
    கலக்குங்க பாஸ்! நல்ல தகவல்கள்!

    நன்றி நண்பரே

    ReplyDelete
  18. செங்கோவி said...
    நல்ல பதிவு..ஆனாலும் தலைப்பு இப்படி வைக்கத் தேவையில்லையே..இன்னுமா இது-அது ஜூரம் தீரலை?

    மன்னிக்கணும் நண்பரே ,இந்த தலைப்பு விளம்பரத்துக்கோ ,கவர்ந்திழுக்கவோ அல்ல நண்பரே ,

    மேற்கண்ட காரணிகள் அஃகிரினையாகத்தான் விளிக்க முடியும் அதானால் தான் அதற்கு அப்பெயர் .

    ReplyDelete
  19. நிரூபன் said...
    இனிய மதிய வணக்கம் பாஸ்,,

    இனிமேல் அடக்க்க மாட்டோம்.

    நல்லதோர் விழிப்புணர்வு பதிவு பாஸ்.//

    மாலை வணக்கம் நண்பரே


    நன்றி நண்பரே கருத்துக்கு

    ReplyDelete
  20. அம்பாளடியாள் said...
    அருமையான விழிப்புணர்வுத் தகவல் மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு ............

    நன்றி சகோதரி

    ReplyDelete
  21. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    பயனுள்ள பதிவு

    நன்றி நண்பரே

    ReplyDelete
  22. நண்பா உங்க பதிவு சூப்பர்! சொல்லப்பட்ட விஷயங்களும் அருமை!

    வலையுலகின் பெரிய உணவு ஆஃபீசர் - அண்ணன் ராசலிங்கம்!

    சின்ன உணவு ஆஃபீசர் - நீங்க!

    ReplyDelete
  23. தகவல்களுக்கு நன்றி மாப்ள!

    ReplyDelete
  24. Powder Star - Dr. ஐடியாமணி said...
    நண்பா உங்க பதிவு சூப்பர்! சொல்லப்பட்ட விஷயங்களும் அருமை!

    வலையுலகின் பெரிய உணவு ஆஃபீசர் - அண்ணன் ராசலிங்கம்!

    சின்ன உணவு ஆஃபீசர் - நீங்க!

    தங்களின் அன்பு கருத்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  25. விக்கியுலகம் said...
    தகவல்களுக்கு நன்றி மாப்ள!

    நன்றி மாம்ஸ்

    ReplyDelete
  26. பயனுள்ள தகவல் நன்றி டாக்டர்...!!!

    ReplyDelete
  27. MANO நாஞ்சில் மனோ said...
    பயனுள்ள தகவல் நன்றி டாக்டர்...!!!//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  28. அடக்கக்கூடாதவைகள் என பட்டியலிட்ட அனைத்தும்
    அருமை...

    ReplyDelete
  29. டாக்டரே சூப்பர்

    ReplyDelete
  30. இனி அடக்க மாட்டோம்,பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  31. இனி இது அது எது வந்தாலும் அடக்க மாட்டோம் நண்பரே...

    ReplyDelete
  32. நல்ல தகவல்.நன்றி.த.ம.18

    ReplyDelete
  33. மகேந்திரன் said...
    அடக்கக்கூடாதவைகள் என பட்டியலிட்ட அனைத்தும்
    அருமை...

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  34. வைரை சதிஷ் said...
    டாக்டரே சூப்பர்//

    நன்றி சதீஷ்

    ==============================
    கோகுல் said...
    இனி அடக்க மாட்டோம்,பகிர்வுக்கு நன்றி!//

    ஆமா ,அடக்கிடாதீங்க

    ReplyDelete
  35. ரெவெரி said...
    இனி இது அது எது வந்தாலும் அடக்க மாட்டோம் நண்பரே...//

    ஹா ஹா சந்தோசம் நண்பரே

    ReplyDelete
  36. சென்னை பித்தன் said...
    நல்ல தகவல்.நன்றி.த.ம.18


    நன்றி ஐயா

    ReplyDelete
  37. சிறப்பான பதிவு..

    ReplyDelete
  38. ஆஆஆஆஆஆஆஆச்சூஊஊஊஊஊம்ம்ம்ம்:)))) வெரி சொறி ரமேஸ்.... நீங்கதானே தும்மலை அடக்கப்புடா என்றிட்டீங்க:)) அதுதான் தும்மிட்டேன்:)))... நல்ல தகவல்கள்...

    அடக்கக்கூடாதுதான் ஆனா தும்மலை மட்டும் கொஞ்சம் அடக்கித் தும்மலாமே:)).. சிலர் தும்மினால் திடுக்கிட்டுப் போயிடுவோம்... அப்பூடி இருக்கும் சத்தம்:))).

    மிகுதிக்கு நாளைக்கு வாறேன்.

    ReplyDelete
  39. நல்ல தகவல்கள்

    ReplyDelete
  40. மிகவும் தேவையான விடயங்கள்

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே