Saturday, October 22, 2011

வாயுப் பிரச்சனை எதனால் ,அதன் வகைகள் என்னென்ன தெரிந்து கொள்ளுங்கள்







நல்லா தாம்பா இருந்தேன் ,திடீர்னு வாயு பிடிச்சுக்கிச்சு .
அசைய கூட முடியல .



இப்பிடி நிறைய பேர் சொல்வதை கேட்டிருப்பீர்கள் ,அவர்கள்
படும் அவஸ்தையும் பார்த்திருப்பீர்கள்.


உடலின் உட்புறத்தில் பல்வேறு இடங்களில் தோன்றும் ஒரு 
வகையான காற்றையே வாயு என்று சொல்கிறோம்.






தலையில் வாயு சேர்ந்தால் அதனைக் கபால வாயு என்றும்,


இதயத்தில் வாயு சேர்ந்தால் அதனை இதய(தமரக)வாயு என்றும்,


குடலில் வாயு சேர்ந்தால் குடல் வாயு என்றும்


உடலில் ஏதாவது ஒரு உருப்பை செயலிலக்க செய்தால் 
பாரிச வாயு அல்லது பக்கவாதம் என்றும் ,


கை,கால் மூட்டுகளில் ஏற்பட்டால் கீழ்வாயு என்றும் ,


கர்ப்பினிகளுக்கு ஏற்பட்டால் கர்ப்ப வாயு என்றும் ,


அதிக உஷ்ணம் காரணமாக தோன்றினால் உஷ்ண வாயு 
என்றும் வாயுக்கு பல பெயர்கள் உண்டு.


உடம்பில் ஓர் உறுப்பில் தோன்றும் வாயு, மற்ற உறுப்புகளுக்கு
தாவிச் செல்லும். இதற்கு ஓடு வாயு என்பர்.


இதனால் வலி ஒவ்வொரு உறுப்பிற்கும் மாறிக்கொண்டே இருக்கும்.


இரத்ததினால் தோன்றும் வாயு உதிர வாயு என்பர்.








வாயுத்தொல்லைக்கு மருந்து சாப்பிடும் முன் ,அது ஏற்படுவதற்கு 
மூல காரணத்தை கண்டு பிடித்து அதனை சரி செய்யனும்.
அது தான் நல்லது.


வாயு உண்டு பண்ணும் உணவுப் பொருட்களை தவிர்ப்பது 
மிகவும் நல்லது.


சில கிழங்கு வகைகள், பருப்பு வகைகள் ,மொச்சைக்கொட்டை,
பலாக்கொட்டை ,போன்ற வாயு உண்டாக்கும் பொருட்களை 
தவிர்த்து விட வேண்டும்.


முருங்கைக்காய் , தக்காளி போன்றவை கூட அளவிற்கு 
மீறினால் வாயு தானாம்.


எருமைப் பால் குடல் வாயுவை உண்டு பண்ணும்.


குடலில் கிருமிகள் சேர்ந்தாலும் ,அவசர அவசர மாக 
உண்டாலும்மென்று தின்னாமல் அப்பிடியே விழுங்கினாலும்
குடலில் வாயு சேரும்.

வாயு பதார்த்தங்களை உண்டு விட்டால் ,உடனே வெந்நீர் 
அருந்தினால் அப்பதார்த்தங்களின் வாயுத்தன்மை செயலிலக்கும் 
என்று சிலர் சொல்வதுண்டு.


வாயுப்பிரச்சனை தீர்க்க வீட்டு வைத்தியம் நாளைய பதிவில் ..


நன்றி 




டிஸ்கி :-

உடற்பயிற்சி பாடங்கள் திங்கள் கிழமை வரும் நண்பர்களே

நன்றி :-

புகைப்படங்கள் இணையத்தின் உதவி .

36 comments:

  1. அருமையானதும் அவசியமானதுமான மருத்துவக் குறிப்புக்கள்!

    ReplyDelete
  2. நல்ல தகவல்கள் பாஸ்

    ReplyDelete
  3. பகிர்வுக்கு நன்றி மாப்ள...நல்லா சொல்லி இருக்கீங்க

    ReplyDelete
  4. பயனுள்ள மருத்துவக் குறிப்புகளை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா! அடுத்த பதிவை எதிர்பார்க்கின்றேன்.

    ReplyDelete
  5. வாயுல இத்தன வகையா ?

    ReplyDelete
  6. வாயுவில் இத்தனை விதமா?தகவலுக்கு நன்றி.
    த.ம.3

    ReplyDelete
  7. அருமையான பயனுள்ள பகிர்வு நாளைய தொடரையும் அவசியம்
    பார்க்க வேண்டும் .மிக்க நன்றி சகோ தங்கள் பகிர்வுக்கு ................

    ReplyDelete
  8. வாயுத் தொல்லைப் பற்றி விரிவாக எழுதியிருக்கீங்க. வாழ்த்துக்கள்..!1

    ReplyDelete
  9. நல்ல தகவல் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பகிர்வு ..
    எளிமையான விளக்கங்களுடன் நல்ல தகவலுக்கு நன்றிங்க அன்பரே

    ReplyDelete
  10. மிக பயனுள்ள தகவல் ரமேஷ்.நன்றி.

    ReplyDelete
  11. அடிக்கடி சாதாரணமாக எல்லோருக்கும் உண்டாகும் ஒரு பிரச்ச்னையை விபரித்திருக்கிறீர்கள் நல்ல மருத்துவகுறிப்பு.

    ReplyDelete
  12. அப்பப்பா ...
    எத்தனை வாயுப் பிரச்சனைகள்
    அத்தனைக்கும் தீர்வு
    மிக அருமை நண்பரே.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  13. ஒரு மனுஷனுக்குள்ளே இம்புட்டு வாயு'க்களா...???

    இனி உஷாரா இருக்கவேண்டியதுதான்...!!!

    ReplyDelete
  14. சிறி-லங்கா கவர்மெண்டுக்கும் இப்ப ஒரு வாயுப் பிரச்சினை!

    ReplyDelete
  15. மிக முக்கிய எல்லோருக்கும் உரிய பிரச்சனை தொடப்பட்டுள்ளது. வாழ்த்துகள் சகோதரா.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www,kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  16. அருமையான தகவல்கள் நன்றி

    ReplyDelete
  17. அருமையான பயனுள்ள தெரியாத தகவல்
    படத்துடன் விளக்கியுள்ளது
    அருமையிலும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 7

    ReplyDelete
  18. படங்களுடன் விளக்கம் தெளிவாக இருந்தது!

    ReplyDelete
  19. Powder Star - Dr. ஐடியாமணி said...
    அருமையானதும் அவசியமானதுமான மருத்துவக் குறிப்புக்கள்!//

    நன்றி நண்பரே

    ------------------------------------


    K.s.s.Rajh said...
    நல்ல தகவல்கள் பாஸ்

    நன்றி நண்பரே

    --------------------------------
    middleclassmadhavi said...
    thanks!//

    நன்றி சகோதரி

    -----------------------------

    விக்கியுலகம் said...
    பகிர்வுக்கு நன்றி மாப்ள...நல்லா சொல்லி இருக்கீங்க//

    நன்றி மாம்ஸ்

    ReplyDelete
  20. Abdul Basith said...
    பயனுள்ள மருத்துவக் குறிப்புகளை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா! அடுத்த பதிவை எதிர்பார்க்கின்றேன்.

    கருத்துக்கு நன்றி நண்பரே

    -----------------------------


    "என் ராஜபாட்டை"- ராஜா said...
    வாயுல இத்தன வகையா ?

    ஆமாம் நண்பரே

    ------------------------------


    சென்னை பித்தன் said...
    வாயுவில் இத்தனை விதமா?தகவலுக்கு நன்றி.
    த.ம.3//

    நன்றி ஐயா

    ReplyDelete
  21. thendralsaravanan said...
    தேவையான தகவல்!//

    நன்றி சகோதரி

    ---------------------------------

    சி.பி.செந்தில்குமார் said...
    நல்ல தகவல்கள்//

    நன்றி நண்பரே

    -----------------------------
    அம்பாளடியாள் said...
    அருமையான பயனுள்ள பகிர்வு நாளைய தொடரையும் அவசியம்
    பார்க்க வேண்டும் .மிக்க நன்றி சகோ தங்கள் பகிர்வுக்கு //

    கருத்துக்கு நன்றி சகோதரி

    ReplyDelete
  22. தங்கம்பழனி said...
    வாயுத் தொல்லைப் பற்றி விரிவாக எழுதியிருக்கீங்க. வாழ்த்துக்கள்..!1

    நன்றி நண்பா

    ---------------------------
    அரசன் said...
    நல்ல தகவல் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பகிர்வு ..
    எளிமையான விளக்கங்களுடன் நல்ல தகவலுக்கு நன்றிங்க அன்பரே

    அன்பு கருத்துக்கு நன்றி நண்பரெ

    -----------------------------
    RAMVI said...
    மிக பயனுள்ள தகவல் ரமேஷ்.நன்றி.//

    நன்றி சகோதரி

    ReplyDelete
  23. அம்பலத்தார் said...
    அடிக்கடி சாதாரணமாக எல்லோருக்கும் உண்டாகும் ஒரு பிரச்ச்னையை விபரித்திருக்கிறீர்கள் நல்ல மருத்துவகுறிப்பு.//

    கருத்துக்கு நன்றி நண்பரே

    -------------------------------

    மகேந்திரன் said...
    அப்பப்பா ...
    எத்தனை வாயுப் பிரச்சனைகள்
    அத்தனைக்கும் தீர்வு
    மிக அருமை நண்பரே.
    மிக்க நன்றி.//

    கருத்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  24. தமிழ்வாசி - Prakash said...
    நல்லதோர் பகிர்வு...//

    நன்றி நண்பரே

    ---------------------------

    MANO நாஞ்சில் மனோ said...
    ஒரு மனுஷனுக்குள்ளே இம்புட்டு வாயு'க்களா...???

    இனி உஷாரா இருக்கவேண்டியதுதான்..//

    ஆமாம் நண்பரே எச்சரிக்கையாக இருப்போம்

    ReplyDelete
  25. Yoga.S.FR said...
    சிறி-லங்கா கவர்மெண்டுக்கும் இப்ப ஒரு வாயுப் பிரச்சினை!//

    அப்டிங்களா !

    --------------------------

    kavithai (kovaikkavi) said...
    மிக முக்கிய எல்லோருக்கும் உரிய பிரச்சனை தொடப்பட்டுள்ளது. வாழ்த்துகள் சகோதரா.//

    கருத்துக்கு நன்றி சகோதரி

    ReplyDelete
  26. Riyas said...
    அருமையான தகவல்கள் நன்றி

    நன்றி நண்பரே

    --------------------------
    Ramani said...
    அருமையான பயனுள்ள தெரியாத தகவல்
    படத்துடன் விளக்கியுள்ளது
    அருமையிலும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 7//

    அன்பு கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

    -----------------------------

    கோகுல் said...
    படங்களுடன் விளக்கம் தெளிவாக இருந்தது!//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  27. வாயுவை பற்றி இவ்வளவு தகவல்களா நன்றி நண்பரே

    ReplyDelete
  28. அருமையான மருத்துவக் குறிப்புக்கள்!நன்றி

    ReplyDelete
  29. r.v.saravanan said...
    வாயுவை பற்றி இவ்வளவு தகவல்களா நன்றி நண்பரே//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  30. இராஜராஜேஸ்வரி said...
    அருமையான மருத்துவக் குறிப்புக்கள்!நன்றி//

    நன்றி மேடம்

    ReplyDelete
  31. வாய்வில இம்புட்டு வகை இருக்கா மாப்பு,

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே