வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Tuesday, November 1, 2011

உடற்பயிற்சி செய்யலாம் வாங்க -பாகம் -7



உபகரணங்கள் இல்லாமல் உடற்பயிற்சி செய்வது
பற்றி முந்தைய ஆறு பதிவுகளில் பதிவிட்டிருந்தோம் .



படிக்காதவர்கள் பாகம் ஆறைப் படிக்க
இங்கு கிளிக் செய்யவும்



பயிற்சி - 6

மார்பு அளவிற்கு இரண்டு உள்ளங்கைகளையும் 
புஜங்களுக்கெதிரில் தரையில் ஊன்றி ,கால்களை 
ஒன்று சேர்த்து பின்னுக்கு நீட்டிக் கொள்ளவும் .


கால் விரல்களை பூமியில் படிய வைத்து தலை 
நிமிர்ந்து உடலை விறைப்பாக வைத்துக் கொண்டு 
சுவாசத்தை நெகிழ்த்தவும்.


அதாவது உடல் தரையில் படாமல் உள்ளங்கைகளும் 
கால் விரல்களும் மட்டுமே தரையில் பட வேண்டும்.


பிறகு சுவாசத்தை நெகிழ்த்திய பின் உடலை தரை 
மட்டத்திற்கு கொண்டு வர வேண்டும் .
அனால் தரையில் உடல் படக்கூடாது .


இந்நிலையில் சுவாசத்தை உள்ளுக்கு இழுத்துக் 
கொண்டே முன்போல உடலை மேலே நோக்கி 
கிளப்பி கைகளை நேரே உயர்த்தி தலையை 
நிமிர்த்தவும்.


உடலைத் தணிக்கும் பொழுது உள்ளங்கைகளும் 
கால் விரல்களும் தவிர மற்ற பாகங்கள் தரையில் 
படுத்தல் கூடாது .


இதுமாதிரி ஆரம்பத்தில் பத்து தடவைகள் செய்யலாம் 


சில நாட்கள் பயின்று திறமை வந்த பின் சுவாசத்தை 
அடக்கிய வண்ணமே ஒரே மூச்சில் (தம்மில்) எத்தனை 
தடவைகள் சுலபமாக செய்ய முடிகிறதோ அத்தனை 
தடவைகள் சுறுசுறுப்பாக செய்து பழக வேண்டும்.


சற்று சிரமம் ஏற்படும் பொழுதும் அப்பிடியே கை ,
கால்களை நகர்த்தாமல் உடலைத் தரையில் படிய 
வைத்து சுவாசத்தை நெகிழ்த்தி சில வினாடிகள் 
ஒய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் முன்போல் 
செய்யலாம் .


இதனால் மார்பு நன்கு விரிந்து கைகள் வலிமையடைகிறது 



நன்றி
 

27 comments:

சார்வாகன் said...

நன்றி

M.R said...

சார்வாகன் said...
நன்றி//

வாங்க நண்பரே வரவேற்கிறேன்
தொடர்ந்து வாருங்கள்

K.s.s.Rajh said...

காலை வணக்கம் பாஸ் நீண்ட நாட்களின் பின் இந்த தொடர் வருகின்றது...

இன்று சொல்லியிருக்கும் பயிற்சி உண்மையில் சிறப்பானது

M.R said...

K.s.s.Rajh said...
காலை வணக்கம் பாஸ் நீண்ட நாட்களின் பின் இந்த தொடர் வருகின்றது...

இன்று சொல்லியிருக்கும் பயிற்சி உண்மையில் சிறப்பானது//

காலை வணக்கம் நண்பரே

ஆமாம் இடைவெளி வந்து விட்டது

கருத்துக்கு நன்றி நண்பா

செங்கோவி said...

மீண்டும் தொடர்வதற்கு நன்றி..

சம்பத்குமார் said...

அருமையான விளக்கங்களுடன் பகிர்வு..

நன்றி நண்பரே..

நட்புடன்
சம்பத்குமார்

கூடல் பாலா said...

பயனுள்ள தொடர் ..நன்றி!

RAMA RAVI (RAMVI) said...

பயனுள்ள பதிவு. நன்றி பகிர்வுக்கு.

சக்தி கல்வி மையம் said...

எளிய விளக்கங்களுடன் ஒரு பயனுள்ள பதிவு..

நன்றி சகோ..

M.R said...

செங்கோவி said...
மீண்டும் தொடர்வதற்கு நன்றி..//

வாங்க நண்பரே

M.R said...

சம்பத் குமார் said...
அருமையான விளக்கங்களுடன் பகிர்வு..

நன்றி நண்பரே..//

அன்பு கருத்துக்கு நன்றி நண்பரே

M.R said...

koodal bala said...
பயனுள்ள தொடர் ..நன்றி!//

நன்றி நண்பரே

M.R said...

RAMVI said...
பயனுள்ள பதிவு. நன்றி பகிர்வுக்கு.//

நன்றி சகோதரி

M.R said...

வேடந்தாங்கல் - கருன் *! said...
எளிய விளக்கங்களுடன் ஒரு பயனுள்ள பதிவு..

நன்றி சகோ..//

அன்பு கருத்துக்கு நன்றி சகோ

rajamelaiyur said...

நல்ல தகவல் .. தினமும் செய்யலாம்

rajamelaiyur said...

இன்று என் வலையில்

உங்களுக்கு மிகவும் பயனுள்ள இனையதளங்கள் பகுதி - 1

MANO நாஞ்சில் மனோ said...

இதுக்கு பேர்தான் தண்டால்.......!!!

MANO நாஞ்சில் மனோ said...

ரொம்ப நன்றி இனி தொடங்கிற வேண்டியதுதான் தன்டாலை...

M.R said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...
நல்ல தகவல் .. தினமும் செய்யலாம்

செய்யுங்கள் நண்பரே

M.R said...

MANO நாஞ்சில் மனோ said...
இதுக்கு பேர்தான் தண்டால்.......!!!

ஆமாம் நண்பரே

M.R said...

MANO நாஞ்சில் மனோ said...
ரொம்ப நன்றி இனி தொடங்கிற வேண்டியதுதான் தன்டாலை...//


சரிங்க நண்பரே

Anonymous said...

அதுக்கு முன்னாடி மெலிஞ்சு ட்டீங்களே நண்பரே..-:)

பயனுள்ள பதிவு... நன்றி நண்பரே பகிர்வுக்கு...

r.v.saravanan said...

உடற்பயிற்சி தகவல்களுக்கு நன்றி நண்பா

மகேந்திரன் said...

பொதுவாக அனைவருக்கும் தெரிந்த உடற்பயிற்சி என்றாலும்
தங்களின் விளக்கம் அருமை.
அருமையான தொடர் பகிர்வுகளுக்கு
நன்றிகள் பல நண்பரே.

Unknown said...

எளிதாக சொல்லிப்போகும் பாங்கு அருமை மாப்ளே...பகிர்வுக்கு நன்றி!

நிரூபன் said...

எமது சுவாசத்தை விரிவாக்குவதற்கேற்ற அருமையனா குறிப்பு பாஸ்...

VANJOOR said...

அடியிற்க‌ண்ட‌ சுட்டியை சொடுக்கி ஸ்தம்பிக்க செய்யும் விடியோக்கள் காணுங்கள். விவரிக்க வார்த்தைகள் இல்லை.ஸ்தம்பிக்க செய்யும் விடியோக்கள் காணுங்கள். விவரிக்க வார்த்தைகள் இல்லை.

//// ** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். எங்கேயும்! ஒவ்வொரு விநாடியும் !! எச்சூழ்நிலையிலும்!!! அகிலம் முழுவதிலும்!!!! “ மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… /////


.

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out