Monday, November 7, 2011

இது எப்பிடி இருக்கு





சென்னையில ரயில்வே ஸ்டேசனில் ரயிலில் ஒருவர் ஏறி 
உட்கார்ந்தார்



அவர் விழுப்புரம் ஸ்டேசன் இறங்க வேண்டும் , ஏறியவுடன் சில
பேர் பக்கத்தில் அரட்டை அடிக்க ஆரம்பித்தால் பக்கத்தில் என்ன நடக்கிறது யார் இருக்கிறார்கள் ,என்ற கவனம் ஒன்றும் இருக்காது 


இவரும் ஏறி உட்கார்ந்த உடன் பக்கத்து நபரிடம் பேச ஆரம்பித்ததில் 
விழுப்புரம் ஸ்டேசன் வந்தது கூட தெரியாமல் அரட்டையில் ஈடு
பட்டிருந்தார்.


வண்டி சிறிது நேரம் நின்ற பின் புறப்பட்டது , அவரும் எதேச்சையாக
வெளியே பார்க்க வண்டி விழுப்புரத்திலிருந்து புறப்படுவது கண்டு
பதட்டத்துடன் பக்கத்தில் இருந்தவரிடம் ஐய்யய்யோ நான் இறங்க
வேண்டிய இடமே இது தானே என்று பதட்டத்துடன் கத்தினார்


பக்கத்தில் இருந்தவரும் சரி பதட்டப்படாதீங்க நான் உங்களை 
இறக்கி விடுகிறேன் .நான் சொல்வதை போல் செய்யுங்கள்


ரயில் போகும் திசை நோக்கி இறங்கி சிறிது தூரம் ரயிலோடு 
ஓடி பிறகு சிறிது சிறிதாக வேகம் குறைத்துக் கொண்டு 
நின்று விடுங்கள் என்றார் 


அவரும் சரி என்றார்.


பக்கத்து சீட் காரரும் அவரது கை பிடித்து மெதுவாக இறக்கி 
விட்டார்.


இவரும் இறங்கிய உடன் ரயிலோடு கூடவே ஓட ஆரம்பித்தார்


ரயில் சிறிது சிறிதாக வேகம் பிடித்தது ,இவர் சிறிது சிறிதாக 
வேகம் குறைத்து ஓடிக்கொண்டிருந்தார் 


ரயிலின் ஒவ்வொரு பெட்டியாக இவரை கடக்க ஆரம்பித்தது


கடைசிப் பெட்டியில் ஒருத்தர் வெளியில் வேடிக்கை பார்த்து
கொண்டு வந்தார் ,


இவர் ரொம்ப நேரமாக ஓடுவதை பார்த்து பாவம் இவரால் 
எந்த பெட்டியிலும் ஏற முடியவில்லை போழும் என்று 
நினைத்து பட்டென்று அவரை இழுத்து உள்ளே போட்டார்


உள்ள வந்தவர் பக் என்றானது ,அடப்பாவி இப்பொழுதுதான்
கஷ்டப் பட்டு இறங்கினேன் , நீ உள்ளே ஏற்றி விட்டுட்டீயே
என்று கலங்கி நின்றார்.


டிஸ்கி : முதலில் செய்ததும் உதவி தான் ,இரண்டாவதாக 
செய்ததும் உதவி தான் ஆனால் இரண்டுக்கும் 
வித்தியாசமும் உண்டு , 
வித்தியாசமான பலனும் உண்டு 


டிஸ்கி : சூல்நிலை அறிந்து உதவி செய்




நன்றி





மூன்று நாட்களாக வெளியூர் பயணம் என்பதால் பதிவும்
இடவில்லை ,யாருக்கும் செல்ல இயலவில்லை
இப்பொழுதுதான் வந்தேன் , அவசரத்திற்கு ஒரு சின்ன
பதிவு ,இனி நண்பர்களின் பதிவை படிக்க செல்கிறேன்

தங்கள் கருத்து பதித்து விட்டு செல்லுங்கள் நட்புக்களே

39 comments:

  1. சூப்பர் கான்செப்ட்.......

    ReplyDelete
  2. துரைடேனியல் said...
    Ha.,ha..ha..//


    வருகைக்கு நன்றி நண்பரே

    தொடர்ந்து வாருங்கள் நண்பரே

    ReplyDelete
  3. சண்முகம் said...
    சூப்பர் கான்செப்ட்.......//

    கருத்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  4. நாம் செய்யும் உபத்திரமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்...


    நல்ல நகைச்சுவை கதை..


    பகிர்தலுக்கு நன்றி..

    ReplyDelete
  5. நாம் செய்யும் உதவி சூழ்நிலைகளுக்கேற்ப எப்படி வேறுபடுகிறது என்பதை நகைச்சுவையான கதை மூலம் விளக்கியுள்ளீர்கள்.

    அருமை

    ReplyDelete
  6. இது எப்படி இருக்குன்னு தானே கேட்டீங்க சூப்பர்,,

    இதுல யாரு செஞ்ச உதவி பேஸ்ட்?


    ஹா;;ஹா;;;;

    ReplyDelete
  7. அவசரப் பதிவே அசத்தலான பதிவாக
    அமைந்துவிட்டது ஆச்சரியம்
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 5

    ReplyDelete
  8. பாத்திரம் அறிந்து பிச்சை போடு மாதிரி
    சூழல் அறிந்து உதவனும்.சரிதான்!

    ReplyDelete
  9. நல்ல காமெடிய்யா.

    ReplyDelete
  10. படித்த எனக்கு சிரிப்பு அடங்கவே சிறிது நேரம் ஆனது..

    நன்றி

    ReplyDelete
  11. சின்னப் பதிவல்ல சகோ!
    நல்ல சிந்தனைப் பதிவு
    பாராட்டுக்கள்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. நகைசுவையில் ஒரு தத்துவம் .. கலக்கிடிங்க

    ReplyDelete
  13. சூப்பர் நண்பா

    ReplyDelete
  14. சிந்திக்கவைக்கும் அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  15. சிந்தனை + நகைசுவை + தத்துவம் = -:)

    ReplyDelete
  16. சூழ்நிலை அறியாது உபத்திரவம்!

    பாத்திரமறிந்து பிச்சையிடு ....

    ReplyDelete
  17. நகைச்சுவையாகச் சொல்லப்பட்ட நல்ல கருத்து!
    த.ம.10

    ReplyDelete
  18. அவசரமா போட்ட பதிவா இது?!!!
    அருமையா இருக்குது நண்பரே...

    ReplyDelete
  19. கவிதை வீதி... // சௌந்தர் // said...
    நாம் செய்யும் உபத்திரமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்...


    நல்ல நகைச்சுவை கதை..


    பகிர்தலுக்கு நன்றி..//

    அன்பான கருத்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  20. மதுரன் said...
    நாம் செய்யும் உதவி சூழ்நிலைகளுக்கேற்ப எப்படி வேறுபடுகிறது என்பதை நகைச்சுவையான கதை மூலம் விளக்கியுள்ளீர்கள்.

    அருமை//

    அழகான கருத்துக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  21. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    இது எப்படி இருக்குன்னு தானே கேட்டீங்க சூப்பர்,,

    இதுல யாரு செஞ்ச உதவி பேஸ்ட்?


    ஹா;;ஹா;;;;//

    அதாங்க நானும் கேட்கிறேன் ,ஹி ஹி

    ReplyDelete
  22. கும்மாச்சி said...
    சூப்பர்.

    நன்றி

    ReplyDelete
  23. Ramani said...
    அவசரப் பதிவே அசத்தலான பதிவாக
    அமைந்துவிட்டது ஆச்சரியம்
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 5//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நணபரே

    ReplyDelete
  24. middleclassmadhavi said...
    :-)))//

    நன்றி

    ReplyDelete
  25. கோகுல் said...
    பாத்திரம் அறிந்து பிச்சை போடு மாதிரி
    சூழல் அறிந்து உதவனும்.சரிதான்!

    ஆமாம் நண்பரே

    ReplyDelete
  26. செங்கோவி said...
    நல்ல காமெடிய்யா.//

    சரிங்க நண்பரே

    ReplyDelete
  27. ஆளுங்க (AALUNGA) said...
    படித்த எனக்கு சிரிப்பு அடங்கவே சிறிது நேரம் ஆனது..

    நன்றி//


    தங்கள் சந்தோசத்திற்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  28. புலவர் சா இராமாநுசம் said...
    சின்னப் பதிவல்ல சகோ!
    நல்ல சிந்தனைப் பதிவு
    பாராட்டுக்கள்!

    புலவர் சா இராமாநுசம்//


    நன்றி ஐயா

    ReplyDelete
  29. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    நகைசுவையில் ஒரு தத்துவம் .. கலக்கிடிங்க//


    நன்றி நண்பரே தங்கள் கருத்திற்கு

    ReplyDelete
  30. r.v.saravanan said...
    சூப்பர் நண்பா//


    நன்றீ நண்பா

    ReplyDelete
  31. இராஜராஜேஸ்வரி said...
    சிந்திக்கவைக்கும் அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்.

    பாராட்டுக்கு நன்றி மேடம்



    சூழ்நிலை அறியாது உபத்திரவம்!

    பாத்திரமறிந்து பிச்சையிடு ....

    ஆமாம் மேடம்

    ReplyDelete
  32. ரெவெரி said...
    சிந்தனை + நகைசுவை + தத்துவம் = -:)

    நன்றி நண்பரே

    ReplyDelete
  33. சென்னை பித்தன் said...
    நகைச்சுவையாகச் சொல்லப்பட்ட நல்ல கருத்து!
    த.ம.10//


    நன்றி ஐயா

    ReplyDelete
  34. மகேந்திரன் said...
    அவசரமா போட்ட பதிவா இது?!!!
    அருமையா இருக்குது நண்பரே...//


    அன்பிற்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  35. ஹா.ஹா.ஹா.ஹா..

    சூழ்நிலை அறிந்து உதவிசெய்யவேண்டும் நல்ல கருத்து பாஸ்

    ReplyDelete
  36. இனிய காலை வணக்கம் பாஸ்,

    நலமாக இருக்கிறீங்களா?


    பாத்திரம் அறிந்து பிச்சை போடு என்பது போல...
    ஒருவனின் நிலையினை அறியாது உதவி செய்யப் போய் அவனின் காரியத்தினைக் கெடுத்தோர் பற்றி அருமையாகச் சொல்லியிருக்கிறீங்க்.

    ஹா...ஹா...

    ReplyDelete
  37. நன்றாகத்தான் இருக்கிறது. அது சரி.. விழுப்புரத்தில் ரயில்வே ஸ்டேஷன் இருக்கிறதா.. என்ன..?

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே