Friday, November 4, 2011

மழலையின் புத்தி -

மழலையின் புத்தி


தாத்தாவின் அனுபவம் 


ஒரு தாத்தா யு கே ஜி படிக்கும் பேத்தியை பள்ளிக்கு 
அழைத்து சென்றார் .

உங்களுக்கு தான் தெரியுமே இப்பொழுதெல்லாம் பள்ளிக்கு
செல்லும் பொழுதெல்லாம் பிள்ளைகளின் எடையை விட 
இரண்டு மடங்கு வெயிட் எடுத்துக் கொண்டு தூக்க முடியாமல்
செல்லும் குழந்தைகள்.

இந்த குழந்தையும் தோளில் புத்தகப் பை(சாரி மூட்டை ) ,
ஒரு கையில் லஞ்ச் பை ,மற்றொரு கையில் மாடல் 
வாட்டர் பாட்டிலும் எடுத்து கொண்டு நடக்க முடியாமல் 
நடந்து வருகிறது.


தாத்தாவும் பேத்தியிடம் “ அம்மாடி அந்த லஞ்ச் பை என்னிடம்
குடும்மா நான் எடுத்து வருகிறேன் என்கிறார்.

பேத்தியும் வேண்டாம் தாத்தா நீங்க கீழே போட்டுடுவீங்க 
நானே எடுத்து வருகிறேன் என்கிறாள்.

சரிம்மா அந்த பாட மூட்டையாவது தாம்மா எடுத்து 
வருகிறேன் என்கிறார்.

வேண்டாம் தாத்தா நீங்க பாவம் ...உங்களால தூக்க முடியாது,
நானே எடுத்து வருகிறேன் என்கிறாள் பேத்தி.

தத்தா இதை எல்லாத்தையும் நானே எடுத்துக் கொண்டு 
வருகிறேன் நீங்க வேணா என்னை மட்டும் தூக்கிக்கிங்க
தாத்தா என்றாள் தன் மழலைக் குரலில்.

அதைக்கேட்ட தாத்தா மனதில் பேத்தியின் வார்த்தைக் 
கேட்டு மனதினுள் சிரித்து மகிழ்ந்தார் .


நன்றி





ஒருவர்:


நான் மூட்டை தூக்கி சம்பாதிச்சு , என் பையனைக் கான்வெண்ட்ல
படிக்க வைக்கிறேன்


மற்றவர் :

அவனையும் மூட்டை தூக்க வைச்சுட்டீங்கன்னு சொல்லுங்க



29 comments:

  1. குழந்தைகளின் சாமர்த்தியமான பேச்சுக்கள்
    பல நேரங்களில் நகைப்பூட்டுவதாய் இருந்தாலும்
    சில நேரங்களில் சிந்திக்கவும் வைக்கும்...

    அதுவும் தாத்தா பாட்டியுடன் அவர்கள் உரையாடல்
    மிகவும் ரசிக்க கூடியவையாக இருக்கும்..

    அருமையா எழுதி இருக்கீங்க நண்பரே.

    ரசித்து படித்தேன்.

    ReplyDelete
  2. மகேந்திரன் said...
    குழந்தைகளின் சாமர்த்தியமான பேச்சுக்கள்
    பல நேரங்களில் நகைப்பூட்டுவதாய் இருந்தாலும்
    சில நேரங்களில் சிந்திக்கவும் வைக்கும்...

    அதுவும் தாத்தா பாட்டியுடன் அவர்கள் உரையாடல்
    மிகவும் ரசிக்க கூடியவையாக இருக்கும்..

    அருமையா எழுதி இருக்கீங்க நண்பரே.

    ரசித்து படித்தேன்.//


    தங்களின் விரைவு வரவிற்கும் அழகான கருத்திற்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  3. “அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா.
    இதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்...
    கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் தாயே...” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
    வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாரு அன்போடு அழைக்கிறேன்.

    ReplyDelete
  4. இனிய காலை வணக்கம் பாஸ்,

    நலமாக இருக்கிறீங்களா?

    பிள்ளையின் எடையை விடப் பாடப் புத்தகங்களின் எடை அதிகம் என்பதனை தாத்தா பேத்தி உரையாடல் மூலம் நகைச்சுவை கூட்டிச் சொல்லியிருக்கிறீங்க.

    ரசித்தேன்,

    ReplyDelete
  5. உண்மைதான் நண்பரே..

    இந்த கால குழந்தைகள் நம்மைவிட ஒருபடி மேல்தான் சிந்திக்கிறார்கள்

    பகிர்விற்க்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  6. வணக்கம் நண்பரே!நலமா!
    கடந்த சில நாட்களாக வெளியூர்ப்பயணம் காரணமாக வலைப்பக்கம் வர முடிய வில்லை.

    நல்ல அனுபவசிந்தனையை பகிர்ந்திருக்கிரீர்கள்!

    ReplyDelete
  7. தாத்தாவுக்கு பல்பு !

    ReplyDelete
  8. படிக்கும் குழந்தைகளின் வேதனையை காமெடியா சொல்லி இருக்கீங்க....

    ReplyDelete
  9. குழந்தைகள் ரொம்ப புத்திசாலிகள்...!! :) நீங்கள் பகிர்ந்த விதம் மிக அருமையாக இருக்கிறது...

    புத்தகம் தூக்கும் குழந்தைகள் ! பாவம் நம் குழந்தைகள் !!

    ReplyDelete
  10. நிதர்சனப்பகிர்வு.
    பாராட்டுக்கள்..

    ReplyDelete
  11. குழந்தைகளின் சாமர்த்தியமான பேச்சுக்கள்
    பல நேரங்களில் நகைப்பூட்டுவதாய் இருந்தாலும்
    சில நேரங்களில் சிந்திக்கவும் வைக்கும்... பாராட்டுகள்+நன்றி

    ReplyDelete
  12. அந்த தாத்தாவைப்போல நாங்களும் சிரித்து ம்கிழ்ந்தோம் ரமேஷ்.

    நீங்கள் சொல்லியிருப்பதுபோல் குழந்தைகள் புத்தகமூட்டை சுமப்பதை பார்க்கும் போது கஷ்டமாகத்தான் இருக்கு.

    ReplyDelete
  13. இது குழந்தையின் சாமர்த்தியப் பேச்சில்லை
    தாத்தா மீதுள்ள பாசம்தான்
    தான் தூக்கிக் கொண்டால் சாமானக்ளின் சுமை
    தாத்தாவுக்குப் போகாது என நினைத்து
    சொல்லிய வார்த்தை இது எனத்தான் நினைக்கிறேன்
    த.ம 7

    ReplyDelete
  14. படித்து ரசித்தேன்.

    ReplyDelete
  15. ஹா ஹா ஹா ஹா சூப்பர் பேத்தி, கலக்கல் ரசிச்சி சிரிச்சேன், அதேபோல குழைந்தைகளின் வேதனையும் புரிகிறது பாடபுஸ்தகமா அல்லது மூட்டையா...?? கல்வித்துறை கவனிக்க வேண்டும்...

    ReplyDelete
  16. சுட்டிப் பேத்தி.......

    ReplyDelete
  17. குழந்தையின் பதிலை நீண்ட நேரம் இரசித்தேன்..


    ஒரு ஞானி இப்பத்தான் ஒரு குழந்தையிடம் விளக்கை ஏற்றிவைத்து இதில் தீ எங்கிருந்து வந்தது என்று...

    குழந்தை அதை ஊதி அனைத்துவிட்டு சொன்னதாம் இப்போது தீ எங்கு சென்றதோ அங்கிருந்து என்று...

    இந்த சிந்தனை நினைவுக்கு வந்தது ந்ண்பரே..

    ReplyDelete
  18. குட்டீசுக்கு கிட்னி அதிகம்தன்... சூப்பர் ரசித்துப் படித்தேன்.

    ReplyDelete
  19. அருமையான கருத்து நண்பா சரியா சொன்னிங்க
    அதுக்குத்தான் அடுத்த வருடம் அரசு செமஸ்டர் பட்டன் கொண்டு வரபோவதாக செய்தி

    ReplyDelete
  20. இன்றைய நிலையை கொஞ்சம் நகைச்சுவையுடன் கூறிய விதம் மிகச்சிறப்பு ..
    இன்றைய குழந்தைகள் புத்தகம் சுமக்கவே அதிகம் சாப்பிட வேண்டி உள்ளது ..

    ReplyDelete
  21. அருமையா எழுதி இருக்கீங்க நண்பரே...

    ReplyDelete
  22. உண்மை தான் கான்வெண்ட்டில் படிக்கும் மழலைகள் புத்தக மூட்டையை தூக்கிக்கொண்டு போகும் நிலமையை குறைக்க பள்ளி நிர்வாகம்... திட்டம் சரியாக வகுத்து சுமையை குறைக்கலாம்... பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  23. த.ம.10
    குழந்தைகள் புத்தகச் சுமை சுமந்து சோர்ந்திருக்கும் நிலை பற்றி அழகிய பதிவு.

    ReplyDelete
  24. கடைசி இரு படங்களில் தத்துவம் சொல்றின்களே...


    நம்ம தளத்தில்:

    இந்த அதிசியத்தை நம்ப முடியுதா? படங்கள் பார்க்க...

    ReplyDelete
  25. ரசிக்கும்படி ஒரு பதிவு..

    ReplyDelete
  26. குழந்தைகள் ஒரு வகையில் ஞானிகள் போன்றவர் .அவர்களுடைய
    பேச்சு குழந்தைப் பிள்ளைத் தனம் என்றாலும் சில சமயங்களில் அவர்களிடம் இருந்து அற்புதமான கருத்துகளும் வெளிப்படும் .ஒரு உதாரணம் என் மகன் அவனுக்கு அப்போது ஒரு நாலு வயது இருக்கும் .நான் மகளுக்கு அலங்காரம்
    செய்து முடித்துவிட்டு அவள் நெற்றியில் ஒரு பொட்டு ,கன்னத்தில் ஒரு பொட்டென
    வைத்தேன் .அதைப் பார்த்துக்கொண்டிருந்த என் மகன் இதற்கு விளக்கம் கேட்டான் .
    நானும் சொன்னேன் .அவன் இறுதியில் என்னக்கு சொன்ன விசயம் என்னால் என்றுமே மறக்க முடியாது .அதாவது நெற்றியில் ,கன்னத்தில் வைத்ததோடு நிறுத்திவிடாமல் மற்றக் கன்னத்திலும் ஒரு பொட்டு வைத்துவிட்டால் பின் தங்கச்சியை அகேனம் என்று கூப்புடலாமா என்றான் .உங்கள் இந்த சிறப்பான ஆக்கம் என் கடந்த காலத்தை நினைவூட்டியது சகோ .அருமை !.....வாழ்த்துக்கள்
    மிக்க நன்றி பகிர்வுக்கு ........

    ReplyDelete
  27. படித்தேன் ரசித்தேன் பகிர்வுக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  28. பேத்தியின் பேச்சு தாத்தாவுக்கு நகைச்சுவை தான்!

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே