Thursday, November 3, 2011

அனுபவம் பேசுது

இது ஒரு அனுபவம் 

நாம் எங்காவது இந்த மாதிரி காதில் வாங்குவோம் ,சில 
நகைச்சுவையாக இருக்கும் ,சில வேதனையாக இருக்கும்


உதாரணத்துக்கு அப்பா மகனிடம் ...டேய் அந்த காலத்துல 
உன் வயசுல நானெல்லாம் .....என்று ஆரம்பிக்கும் பொழுதே
பையன் அம்மா இங்க வா ஆல் இண்டியா ரேடியோ ஓபன்
ஆகிடுச்சி ,அது நிக்க அரைமணி நேரம் ஆகும்,
வந்து கேளு ,எனக்கு வேளை இருக்கு என்று நழுவி
விடுவான் ,

பேச ஆரம்பித்த அப்பா வாயடைத்து நிறுத்திக் கொள்வார்

இப்பிடித்தான் ஒரு நிகழ்வு



ஒரு இருபத்தாறு வயது இளைஞன் ஒருவன் சிகரட் 
புகைத்து வளையம் வளையமாக புகை விட்டான் .

அது பக்கத்தில் நின்ற ஒரு ஐம்பது வயது பெரியவர் 
ஒருவர் முகத்தில் பட்டு கலைந்தது .

அவருக்கு அந்த இளைஞனிடம் கேட்க பயம் ,ஏம்பா சிகரட்
குடித்து உடம்பை கெடுத்துக் கொள்கிறாய் என்று கேட்டால்

நீயா காசு கொடுத்து வாங்கி கொடுத்த என்று கேட்பானோ
என்று பயம் .

அதனால நயமாக தம்பி சிகரட் காசு குடுத்து வாங்கினது நீ
எனக்கு ஏம்பா பாதி புகை தருகிறாய் ? என்று கேட்டார்

அவனும் அதைக் கேட்ட உடனே சாரி சார் என வேறு 
பக்கம் திரும்பிக் கொண்டான் ,

பெரியவரும் பரவாயில்லையே பையன் நல்லவனாக 
இருக்கிறானே என நினைத்து

தம்பி ஒருநாளைக்கு எத்தனை சிகரட் பிடிப்ப என்று கேட்டார்

அவனும் அவரை குழப்பத்துடனே இரண்டு  பாக்கட் 
சிகரட் என்றான் .

எத்தனை வருசமா பிடிக்கிற என்று கேட்டார் பெரியவர்

பையனும் சிறிது எரிச்சலுடன் எட்டு வருசமா பி
டிக்கிறேன் என்று சொன்னான்

பெரியவரும் விடாமல் “ அப்பிடி என்றால் ஒரு பாக்கட்
ஐம்பது ரூபாய் என்றால் இரண்டு பாக்கட் நுறு ரூபாய்
ஆகிறது ,

மாதம் மூவாயிரம் ரூபாய் ஆகிறது ,வருடம்
முப்பத்தி ஆறாயிரம் ஆகிறது ,எட்டு வருடத்திற்கும்
மொத்தம் வட்டியோட நாலு லட்சம் ஆகிறது ,

அடேயப்பா நாலு லட்சம் வீணாக்கி விட்டாயே 
என்று ஆதங்கத்துடன் சொன்னார்

இதைக் கேட்ட இளைஞன் பெரியவரிடம் உங்கள் 
வயசு என்ன என்று கேட்டான்

ஐம்பது வயது என்று குழப்பத்துடன் என்று  
பெரியவர் சொன்னார் .

என்னை விட இரண்டு மடங்கு வயது உங்களுக்கு 
அப்படின்னா உங்களிடம் எட்டு லட்சம் இருக்கனுமே
இருக்கா ?என்று கேட்டான்

பெரியவரும் இல்லைப்பா என்றார்

அட்லீஸ்ட் நாலு லட்சம் ?

இல்லைப்பா !
Photobucket

சிகரட் பிடிக்காத உன்னிடமும் நாலு லட்சம் இல்லை 
சிகரட் பிடிக்கிற என்னிடமும் நாலு லட்சம் இல்லை

அதுக்கு எதுக்கு மூச்ச பிடிச்சிக்கிட்டு அட்வைஸ் பண்ற 
பெருசு ? என்றானே பார்க்கலாம்

பெரியவர் வாயடைத்துப் போனார் .


அனுபவம் தொடரும் ......
 நன்றி



புகைப் பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு


புகைப்பவருக்கும் ,நுகர்வோருக்கும்









57 comments:

  1. இனிய காலை வணக்கம் பாஸ்,

    பணம் எந்த வழியிலாவது விரயமாகிக் கொண்டே போகும் என்பதனை நல்லதோர் உதாரணக் கதை மூலம் சொல்லியிருக்கிறீங்க.

    ReplyDelete
  2. நல்ல வேடிக்கை போங்க..

    சிகரெட் பிடிப்பது வேதனையான விஷயம்.பணச்செலவு மட்டுமல்ல உடல்நலம் கெடும் என்றும் உணரவேண்டும்.

    ReplyDelete
  3. நிரூபன் said...
    இனிய காலை வணக்கம் பாஸ்,

    பணம் எந்த வழியிலாவது விரயமாகிக் கொண்டே போகும் என்பதனை நல்லதோர் உதாரணக் கதை மூலம் சொல்லியிருக்கிறீங்க.//


    இனிய காலை வணக்கம் நண்பா

    அன்பு கருத்துக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  4. RAMVI said...
    நல்ல வேடிக்கை போங்க..

    சிகரெட் பிடிப்பது வேதனையான விஷயம்.பணச்செலவு மட்டுமல்ல உடல்நலம் கெடும் என்றும் உணரவேண்டும்.//

    நல்ல கருத்து சகோதரி ,நன்றி

    ReplyDelete
  5. ஜீ... said...
    சூப்பர்! :-)//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  6. அடியிற்க‌ண்ட‌ சுட்டியை சொடுக்கி ஸ்தம்பிக்க செய்யும் விடியோக்கள் காணுங்கள். விவரிக்க வார்த்தைகள் இல்லை.


    //// ** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். எங்கேயும்! ஒவ்வொரு விநாடியும் !! எச்சூழ்நிலையிலும்!!! அகிலம் முழுவதிலும்!!!! “ மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… /////

    ReplyDelete
  7. அழகிய வடிவி்ல் விழிப்புணர்வு பதிவு...

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  8. ஒரு புதிய தகவல்...

    தினமும் ஆயிரம் பேர் சிகரேட் குடிப்பதை விட்டு விடுகிறார்கள் என்று ஒரு அறிக்கை சொல்கிறது...

    அந்த ஆயிரம் பேர் யாரும் இல்லை
    சிகரேட் பழக்கத்தால் இறப்பவர்கள் தான்...


    இது ரா-1 படத்தில் வரும் அழகிய வசனம்...

    ReplyDelete
  9. பெரியவர் வாயடைத்துப் போனார்//

    நானும்தான்.நல்ல பகிர்வு எம் ஆர்.

    ReplyDelete
  10. கவிதை வீதி... // சௌந்தர் // said...
    ஒரு புதிய தகவல்...

    தினமும் ஆயிரம் பேர் சிகரேட் குடிப்பதை விட்டு விடுகிறார்கள் என்று ஒரு அறிக்கை சொல்கிறது...

    அந்த ஆயிரம் பேர் யாரும் இல்லை
    சிகரேட் பழக்கத்தால் இறப்பவர்கள் தான்...


    இது ரா-1 படத்தில் வரும் அழகிய வசனம்..//


    ஆமாம் நண்பரே நேத்துதான் அந்த படம் பார்த்தேன் ,அந்த வசனம் என்மனதையும் தொட்டு சென்றது

    ReplyDelete
  11. கவிதை வீதி... // சௌந்தர் // said...
    அழகிய வடிவி்ல் விழிப்புணர்வு பதிவு...

    வாழ்த்துக்கள்..//

    நன்றி நண்பா ,வருகைக்கும் ,வாழ்த்துக்கும் .

    ReplyDelete
  12. ஸாதிகா said...
    பெரியவர் வாயடைத்துப் போனார்//

    நானும்தான்.நல்ல பகிர்வு எம் ஆர்.//

    நன்றி சகோதரி

    ReplyDelete
  13. இது.. இதுதான் இன்றைய இளைய தலைமுறைகள்..
    அவர்களிடம் பேசமுடிவதில்லை என்று பலர் கூறுவதற்கு
    சரியான உதாரணம் சொல்லியிருக்கிறீர்கள்..
    மொத்தத்தில் யாருக்கும் அறிவுரை சொல்லி மூஞ்சை தொங்கப்போடுவதற்கு பதிலாக..
    பட்டுத் தெரியட்டும் என விட்டுவிடுவதுதான் நல்லது போல....

    ReplyDelete
  14. த.ம.6
    இவர்களிடம் பேசி வெல்ல முடியுமா?வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டியதுதான்!

    ReplyDelete
  15. நல்ல அனுபவம் தொடரட்டும்

    ReplyDelete
  16. ரமேஸ்ஸ்... இரு கதைகளுமே மிகவும் இன்றஸ்ரிங்காக இருக்கு.

    முதலாவது கதை சினிமாவில்தானே காட்டுகிறார்கள்? உண்மையாகவே நடக்குதோ?!!!

    ReplyDelete
  17. ஹா...ஹா..ஹா... பெரிசுகளுக்கு பொல்லுக்கொடுத்து அடிவாங்குவதே வேலையாப்போச்சு...

    இருப்பினும் இக்கதைகள் நகைச்சுவையாக இருக்கு, சிலது மன வேதனையை ஏற்படுத்திவிடும்.

    ReplyDelete
  18. athira said...
    ரமேஸ்ஸ்... இரு கதைகளுமே மிகவும் இன்றஸ்ரிங்காக இருக்கு.

    முதலாவது கதை சினிமாவில்தானே காட்டுகிறார்கள்? உண்மையாகவே நடக்குதோ?!!!

    சில இடங்களில் மட்டும்

    ReplyDelete
  19. ஒருநாள் எங்கள் பெண்கள் ஸ்கூல் பஸ் இருக்கவில்லை. பொது பஸ்ஸில் ஏறினோம். குறைந்த அளவு மக்களே அதில் இருந்தார்கள்.

    எதிர்ப்பக்கத்திலே ஒரு 25 வயது மதிக்கதக்க ஒரு boy, அவர் பின் சீற்றிலே 70 வயதிருக்கும் ஒரு வயதானவர். அந்த வயதானவர்... பெரீய சத்தமாக ஆச்சூம் எனத் தும்பினார்... உடனே அந்த boy.... அட சீ... இதேன் நாய் இப்படிக் குலைக்குது என்றார்.... அவர் நினைத்துச் சொன்னது, அது நகைச்சுவை என.

    ஆனால் அதை தூர இருந்து பார்த்த எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது.

    காவோலை விழக் குருத்தோலை சிரித்த கதைதான்.

    ReplyDelete
  20. athira said...
    ஒருநாள் எங்கள் பெண்கள் ஸ்கூல் பஸ் இருக்கவில்லை. பொது பஸ்ஸில் ஏறினோம். குறைந்த அளவு மக்களே அதில் இருந்தார்கள்.

    எதிர்ப்பக்கத்திலே ஒரு 25 வயது மதிக்கதக்க ஒரு boy, அவர் பின் சீற்றிலே 70 வயதிருக்கும் ஒரு வயதானவர். அந்த வயதானவர்... பெரீய சத்தமாக ஆச்சூம் எனத் தும்பினார்... உடனே அந்த boy.... அட சீ... இதேன் நாய் இப்படிக் குலைக்குது என்றார்.... அவர் நினைத்துச் சொன்னது, அது நகைச்சுவை என.

    ஆனால் அதை தூர இருந்து பார்த்த எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது.

    காவோலை விழக் குருத்தோலை சிரித்த கதைதான்.//


    ஆமாம் தோழி , இது மனதை புண் படுத்தும் வார்த்தைதான்

    ReplyDelete
  21. ஆனா எனக்குப் பிடிக்காத விஷயம், வயதானோர் ஆரைப்பார்த்தாலும் விடவே மாட்டார்கள்... ஓவர் அட்வைஸ்... அதிலும் என்ன செய்வதென பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டால், தம் கதை பிடிச்சிருக்காக்கும் என இன்னும் அட்வைஸ் தொடரும்...

    நம் பரம்பரையாவது இந்த விஷயத்தில் இனிமேல் திருந்துவோம்.

    சில அட்வைஸ் நிட்சயம் வளரும் பிள்ளைகளுக்குத் தேவைதான்.. ஆனா அளவோடு சொல்லலாமே.

    ReplyDelete
  22. athira said...
    ஆனா எனக்குப் பிடிக்காத விஷயம், வயதானோர் ஆரைப்பார்த்தாலும் விடவே மாட்டார்கள்... ஓவர் அட்வைஸ்... அதிலும் என்ன செய்வதென பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டால், தம் கதை பிடிச்சிருக்காக்கும் என இன்னும் அட்வைஸ் தொடரும்...

    நம் பரம்பரையாவது இந்த விஷயத்தில் இனிமேல் திருந்துவோம்.

    சில அட்வைஸ் நிட்சயம் வளரும் பிள்ளைகளுக்குத் தேவைதான்.. ஆனா அளவோடு சொல்லலாமே//


    உண்மை தான் தோழி ,அளவோடு மட்டுமல்ல ,அத்தியாவசமானது மட்டும் சொன்னால் போதும் ,வழவழ என்றும் ,தேவையில்லாததற்கு எல்லாம் சம்பந்தமில்லாததும் கருத்தாக சொல்ல கூடாது

    ReplyDelete
  23. அதே போல வயதில் சிறியவர்கள் செய்யும் செயல் சரியானதாக இருந்தால் தன் கவுருவத்திற்காக மட்டம் தட்டும் " ஒரு சில "பெரிசும் இருக்க தான் செய்கிறார்கள்

    ReplyDelete
  24. மகேந்திரன் said...
    இது.. இதுதான் இன்றைய இளைய தலைமுறைகள்..
    அவர்களிடம் பேசமுடிவதில்லை என்று பலர் கூறுவதற்கு
    சரியான உதாரணம் சொல்லியிருக்கிறீர்கள்..
    மொத்தத்தில் யாருக்கும் அறிவுரை சொல்லி மூஞ்சை தொங்கப்போடுவதற்கு பதிலாக..
    பட்டுத் தெரியட்டும் என விட்டுவிடுவதுதான் நல்லது போல....//

    தங்களின் கருத்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  25. சென்னை பித்தன் said...
    த.ம.6
    இவர்களிடம் பேசி வெல்ல முடியுமா?வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டியதுதான்!//


    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா

    ReplyDelete
  26. என் ராஜபாட்டை"- ராஜா said...
    நல்ல அனுபவம் தொடரட்டும்//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  27. koodal bala said...
    1000 வாட்ஸ் பல்பு//

    ஆம் நண்பரெ

    ReplyDelete
  28. வாயடைத்துப் போகும் பதில். பேசாமல் மௌனமாக இருப்பது சிறப்பு போலத் தெரிகிறது.ம்...ம்....உலகம் போற போக்கைப் பாரு தங்கமே ஜில்லாலே.....
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  29. no comments ஏன்னா நான் கூட புகை பிடிக்கிறேனே!!? :-((

    ReplyDelete
  30. இப்படியொரு பதிலை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை நண்பரே..

    வாயக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்ளுதல் என்பது இதுதானோ...

    ReplyDelete
  31. கதை மூலம் விழிப்புணர்வு..
    ஹாட்ஸ் ஆப்..

    ReplyDelete
  32. பாவம் பெரியவர் வாங்கி கட்டிகிட்டாரா பாவம்தான்.....!!!

    ReplyDelete
  33. சிகரட்டை கட்டி பிடிச்சுட்டு விடமுடியாமல் தவிப்பவர்கள் பலர் இன்னும் இருக்கிறார்கள்...!!!

    ReplyDelete
  34. இது வித்தியாச ரமேஸ்..அனுபவம் தொடரட்டும்...

    ReplyDelete
  35. அருமையான அனுபவ பகிர்விற்க்கு நன்றி நண்பரே..

    அனுபவங்கள் தொடரட்டும்..

    ReplyDelete
  36. kavithai (kovaikkavi) said...
    வாயடைத்துப் போகும் பதில். பேசாமல் மௌனமாக இருப்பது சிறப்பு போலத் தெரிகிறது.ம்...ம்....உலகம் போற போக்கைப் பாரு தங்கமே ஜில்லாலே.....
    வேதா. இலங்காதிலகம்.//

    அன்பு கருத்துக்கு நன்றி சகோதரி

    ReplyDelete
  37. ஜ.ரா.ரமேஷ் பாபு said...
    no comments ஏன்னா நான் கூட புகை பிடிக்கிறேனே!!? :-((//

    ஹா ஹா ஹா

    ReplyDelete
  38. முனைவர்.இரா.குணசீலன் said...
    இப்படியொரு பதிலை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை நண்பரே..

    வாயக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்ளுதல் என்பது இதுதானோ...//


    ஆமாம் நண்பரே

    ReplyDelete
  39. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    கதை மூலம் விழிப்புணர்வு..
    ஹாட்ஸ் ஆப்..//


    நன்றி நண்பரே

    ReplyDelete
  40. MANO நாஞ்சில் மனோ said...
    பாவம் பெரியவர் வாங்கி கட்டிகிட்டாரா பாவம்தான்.....!!!

    ஆமாம் நண்பரே



    சிகரட்டை கட்டி பிடிச்சுட்டு விடமுடியாமல் தவிப்பவர்கள் பலர் இன்னும் இருக்கிறார்கள்...!!!//

    உண்மைதான்

    ReplyDelete
  41. ரெவெரி said...
    இது வித்தியாச ரமேஸ்..அனுபவம் தொடரட்டும்...//


    நன்றி நண்பரே

    ReplyDelete
  42. தமிழ்வாசி - Prakash said...
    அட.... அனுபவம் புதுமை... தொடரும்னு போட்டு இருக்கிங்களே? ஐயோ...



    பயப்படாதீங்க அப்பிடி ஒன்னும் பயங்கரமா இருக்காது

    ReplyDelete
  43. சம்பத்குமார் said...
    அருமையான அனுபவ பகிர்விற்க்கு நன்றி நண்பரே..

    அனுபவங்கள் தொடரட்டும்..

    கருத்துக்கு நன்றி நண்பரெ

    ReplyDelete
  44. ராக்கெட் ராஜா said...
    nalla sirichen good msg//

    நன்றி நண்பா

    ReplyDelete
  45. உண்மைலயே சூப்பரோ சூப்பர் பாஸ்....

    ReplyDelete
  46. K.s.s.Rajh has left a new comment on your post "அனுபவம் பேசுது":

    சாரி பாஸ் கொஞ்சம் லேட்டாகிடுச்சி நல்லாத்தான் அனுபவம் பேசுகின்றது //


    நன்றி நண்பரே

    ReplyDelete
  47. சண்முகம் said...
    உண்மைலயே சூப்பரோ சூப்பர் பாஸ்....//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  48. ஆகா இப்படிக்கூட யோசிப்பீங்களோ .அருமையான உரையாடல் .
    ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்தது .வாழ்த்துக்கள் மிக்க நன்றி
    பகிர்வுக்கு ......

    ReplyDelete
  49. “அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
    வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  50. பிரேமானந்த் அனிமேசன் பொருத்தமாக அமைந்திருக்கிறது.. ஹா ஹா

    ReplyDelete
  51. நல்ல அனுபவ பகிவு

    ReplyDelete
  52. அந்த பையன் மன்னிப்பு கேட்டுட்டு திரும்பியவுடனேயே அந்த பெரியவர் அமைதியா இருந்திருக்கணும்..

    "திருத்துறேன் பேர்வழி" என்று அறிவுரை சொன்னால் இப்படித் தான்!

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே