Wednesday, November 2, 2011

உடற்பயிற்சி செய்யலாம் வாங்க -பாகம் -8

உடற்பயிற்சி கருவிகள் துணையின்றி உடற்பயிற்சி
செய்ய பயிற்சி முறைகள் என்ற தலைப்பில் முந்தய
ஏழு பாகம் வந்தது .

அதைப் படிக்காதவர்கள்,பார்க்காதவர்கள் படிக்க

பயிற்சி - 1

பயிற்சி - 2

பயிற்சி - 3

பயிற்சி - 4

பயிற்சி - 5

பயிற்சி - 6





 பயிற்சி - 7

சுமார் ஆறு அங்குலம் உயரமுள்ள சதுரமான ஒரு
பலகையில் மேல் இரு கால்களின் முன் பாதங்களை
ஊன்றி ,குதிகால்களைத் தரையில் படிய வைத்துக்
கொள்ளுங்கள் .

முழங்கால்களை மடக்காமல் விறைப்பாக வைத்துக்
கொள்ளுங்கள் .

கைகளை உயரே தூக்கி ஏதாவது ஒன்றை ஆதரவாகப்
பற்றிக் கொண்டு (பிடித்துக்கொண்டு ) கால்களை
விறைப்பாக வைத்துக் கொண்டு (மடக்காமல் )
குதிகால்களை மட்டும் பலகைக்கு மேல் வருமாறு
கூடுமானவரை உயர்த்த வேண்டும்.



பிறகு முன்போல் குதிகாலை தரைமட்டத்திற்கு
தாழ்த்த வேண்டும்.

குதிகால்களை உயர்த்தும் பொழுது சுவாசத்தை
உள்ளுக்குள் இழுக்க வேண்டும்

தாழ்த்தும் பொழுது சுவாசத்தை வெளியே விட்டும்
கெண்டைத் தசைகள் சிறிது களைப்பு அடையும்
வரை செய்தல் வேண்டும்.

இந்த பயிற்சி முடிந்ததும்

ஒருகாலை மட்டும் முன்பு சொன்னது போல் பலகையில்
நுனிகாலை (முன்பாகம் )ஊன்றிக் கொண்டு மற்றொரு
காலை தரையில் படாமல் உயர்த்திக் கொள்ள வேண்டும் .

பலகையில் ஊன்றிய காலை மட்டும் குதிகாலை உயர்த்தி
பின்பு தரை மட்டத்திற்கு தாழ்த்த வேண்டும்.

பிறகு கால் மாத்தி செய்ய வேண்டும் .

இந்த இரண்டு பயிற்சியாலும் கெண்டைக் கால்கள்
உருண்டு திரண்டு அழகாக மாறும் .
கால்கள் பலமும் பெறும் .


நன்றி

32 comments:

  1. இனிய காலை வணக்கம் அண்ணே,
    நலமா இருக்கிறீங்களா?
    தீபாவளிக் கொண்டாட்டம் எல்லாம் எப்பூடி?
    எனக்கு உடல் நலக் குறைவு,
    அதான் வர முடியலை...

    ReplyDelete
  2. எமது கால்களை பாதுகாப்பாக வைப்பதற்கேற்ற சூப்பரான டிப்ஸ் பாஸ்...

    ReplyDelete
  3. பகிர்வு அருமை மாப்ள நன்றி!

    ReplyDelete
  4. கால்கள் பலம் பெற அருமையான பயிற்சி.பயனுள்ள பதிவு.நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  5. பயனுள்ள தொடர் .. வாழ்த்துகள்

    ReplyDelete
  6. அருமையான தகவல் நன்றி பாஸ்

    ReplyDelete
  7. உடல்நலத் தகவல்கள் தொடரட்டும் நண்பா.

    ReplyDelete
  8. பகிர்வுக்கு நன்றி மாப்ள..

    ReplyDelete
  9. கால்களுக்கு வலுவூட்டும் நல்ல பயிற்சி பதிவுக்கு நன்றி
    த.ம 6

    ReplyDelete
  10. காலுக்கு வலுவூட்டும் நல்ல பகிர்வு நன்றிகள்.

    ReplyDelete
  11. நிரூபன் said...
    இனிய காலை வணக்கம் அண்ணே,
    நலமா இருக்கிறீங்களா?
    தீபாவளிக் கொண்டாட்டம் எல்லாம் எப்பூடி?
    எனக்கு உடல் நலக் குறைவு,
    அதான் வர முடியலை...

    வணக்கம் சகோதரா ,இப்பொழுது உடல் நலமா?

    ReplyDelete
  12. நிரூபன் said...
    எமது கால்களை பாதுகாப்பாக வைப்பதற்கேற்ற சூப்பரான டிப்ஸ் பாஸ்...//

    கருத்துக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  13. விக்கியுலகம் said...
    பகிர்வு அருமை மாப்ள நன்றி!//

    நன்றி மாம்ஸ்

    ReplyDelete
  14. RAMVI said...
    கால்கள் பலம் பெற அருமையான பயிற்சி.பயனுள்ள பதிவு.நன்றி பகிர்வுக்கு.

    கருத்துக்கு நன்றி சகோதரி

    ReplyDelete
  15. என் ராஜபாட்டை"- ராஜா said...
    பயனுள்ள தொடர் .. வாழ்த்துகள்//

    நன்றி நண்பா

    ReplyDelete
  16. K.s.s.Rajh said...
    அருமையான தகவல் நன்றி பாஸ்//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  17. முனைவர்.இரா.குணசீலன் said...
    உடல்நலத் தகவல்கள் தொடரட்டும் நண்பா.//


    தொடர்கிறேன் நண்பரே

    ReplyDelete
  18. * வேடந்தாங்கல் - கருன் *! said...
    பகிர்வுக்கு நன்றி மாப்ள..//


    நன்றி நண்பா

    ReplyDelete
  19. சென்னை பித்தன் said...
    த.ம.5
    நன்று;நன்றி.//


    நன்றி ஐயா

    ReplyDelete
  20. Ramani said...
    கால்களுக்கு வலுவூட்டும் நல்ல பயிற்சி பதிவுக்கு நன்றி
    த.ம 6//


    கருத்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  21. மாய உலகம் said...
    காலுக்கு வலுவூட்டும் நல்ல பகிர்வு நன்றிகள்.//

    கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  22. வயிற்றைக் குறைக்க ஒரு வழி சொல்லுங்கள் ?

    ReplyDelete
  23. பயனுள்ள பதிவு...நன்றி நண்பரே பகிர்வுக்கு...

    ReplyDelete
  24. அன்பு said...
    வயிற்றைக் குறைக்க ஒரு வழி சொல்லுங்கள் ?//

    வாங்க நண்பரே நேரம் கிடைக்கும் பொழுது எல்லா பயிற்சியும் படித்துப் பாருங்கள் நண்பா ,வயிறு குறைய பயிற்சி பதிவாக போட்டுள்ளேன்

    ReplyDelete
  25. ரெவெரி said...
    பயனுள்ள பதிவு...நன்றி நண்பரே பகிர்வுக்கு...

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  26. என்றும் பயனுள்ள இப் பகிர்வுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் ........

    ReplyDelete
  27. பயனுள்ள பதிவு...
    பகிர்வுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  28. .ஒரு சின்ன வேண்டுகோள் சகோ என்
    ஆரம்பகாலக் கவிதைகளை தமிழ் 10ல் இன்று தொடர்ந்து வெளிடிட்டுள்ளேன் .பாடல் பிரிவில் காத்திருக்கும் பகுதியில் உள்ள இக் கவிதைகள் என் கனவுக்களும்கூட .தாங்கள் முடிந்தவரை இக் கவிதைகளைப் படித்து இக் கவிதைகள் உங்களுக்கும்
    பிடித்திருந்தால் இது அனைவரையும் சென்றடைய உதவுமாறு மிக பணிவன்போடு கேட்டுக்கொள்கின்றேன் .மிக்க நன்றி சகோ தங்கள் ஒத்துளைப்புகளிற்கு ........

    ReplyDelete
  29. ரமேஷ்,தங்களின் பதிவுகளைப்பற்றி வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.

    ReplyDelete
  30. உங்கள் வலைப்பூவை வலைசரத்தில் அறிமுக படுத்தி இருக்கிறேன், பார்வைஇட்டு கருத்துக்களை பகிரவும்.
    http://blogintamil.blogspot.com/2011/12/blog-post_16.html

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே