Tuesday, November 22, 2011

உடல் வலிமை பெற வயிற்றுப் புண் ஆற தேன் மருத்துவம்

முந்தய பதிவில் தேன் மருத்துவம் அறிந்து கொள்ளுங்கள் 
என்ற தலைப்பில் சில குறிப்புகள் அறிந்து கொண்டோம் ,
அதன் தொடர்ச்சியாக ...




உடல் வலிமை பெற 



உடல் வலிமை பெற்று நோய் எதிர்ப்பு ஆற்றல் பெற தேன் 
சேர்ந்த லேகியம் தயார் செய்து உட்கொள்ளலாம் .




லேகியம் தயாரிப்பு முறை 




வில்வப்பூக்கள் 500 கிராம் 


கற்கண்டுத் தூள் 250 கிராம் 


தேன் 100 கிராம் 


ஏலக்காய் 20 கிராம் 


சுக்கு 10 கிராம் 






ஏலக்காயையும் சுக்கையும் பொடித்துப் போட்டு 
கற்கண்டைப் பாகாக்கிக் கிளற வேண்டும்.


பிறகு வில்வப் பூக்களை கலந்து நன்றாகக் கிளறி 
விட வேண்டும்.


பூக்கள் நன்றாக வெந்ததும் இறக்கி வைத்து தேனைச் 
சேர்த்து நன்கு கிளறி விட்டுக் கொள்ள வேண்டும்.


இந்த லேகியத்தை தினமும் நெல்லிக்காய் அளவு 
காலை மாலை என இருவேளை 40 நாட்கள் 
உட்கொண்டு வர உடல் நன்கு வலிமை பெறும்.


நரம்பு மண்டலம் நன்கு உறுதி பெற்று சிறப்பாக இயங்கும் 


ஜீரண சக்தி வளரும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்.


நியாபக சக்தி அதிகரிக்கும்.






வயிற்றுப் புண் ஆற 














வில்வக் காய்களைப் பிஞ்சாக சேகரித்து சதைப் பகுதியை 
எடுத்துக் காயவைக்க வேண்டும்.


நன்கு காய்ந்த பிறகு தூளாக்க வேண்டும் .


இந்தத் தூளில் 500 கிராம் எடுத்து ஒரு பாத்திரத்திலிட்டு 
இரண்டு லிட்டர் நீர் விட்டு அடுப்பில் வைக்க வேண்டும்.


நீர் கால் லிட்டராகச் சுண்டக் காய்ந்ததும் இறக்கி 
ஆறவைக்க வேண்டும்.


காய் சதையை நன்றாகப் பிசைந்து சக்கைகளை 
அகற்றி விட வேண்டும்.


இந்த கசாயத்தில் 200 கிராம் தேன் சேர்த்து மறுபடியும் 
இலேசாகக் காய்ச்சி இறக்கி வைத்துக் கொள்ள 
வேண்டும்.


இந்த திரவத்தில் ஒரு வேளைக்கு இரண்டு தேக்கரண்டி 
என ஒரு நாளைக்கு மூன்று வேளை உட்கொள்ள வேண்டும்.


இரைப்பை புண் ,குடல் புண் அகலும் .


இதனையே வேறு விதமாக பக்குவம் செய்தும் சாப்பிடலாம் 












வில்வப் பிஞ்சின் சதையை 500 கிராம் அளவு எடுத்து நன்றாக 
வெண்ணெய் போல அரைக்க வேண்டும்.


அரைத்த விழுதுடன் அரை லிட்டர் பசுவின் பால்விட்டு 
அடுப்பிலிட வேண்டும்.


சதை நன்கு வெந்ததும் 250 கிராம் சர்க்கரை சேர்த்து 
கிளற வேண்டும் .


லேகிய பதத்திற்கு வந்ததும் கால் லிட்டர் பசுவின் நெய்யும் 
கால் லிட்டர் தேனும் சேர்த்து நன்கு கிளறி ஆறவைத்து 
பத்திரப் படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.


இந்த லேகியத்தில் நெல்லிக்காய் அளவு எடுத்து காலை 
மாலை என இருவேளை உட்கொண்டு பசுவின் பாலை 
அருந்த வேண்டும்.


இரைப்பை புண் ,குடல் புண் ,நீண்ட கால வயிற்று வலி 
நீங்கும்.




தேனின் சுவை தொடரும் ......




நன்றி



நன்றி : படங்கள் உபயம் இணையம் 

37 comments:

  1. படங்களுடன் விளக்கிச் செல்லும் விதம் அருமை
    பயனுள்ள பதிவு
    தேன் பதிவு தொடர வாழ்த்துக்கள்
    த.ம 2

    ReplyDelete
  2. இனிப்பா இருந்தும் மருந்தா பயன்படுவது தேன் மட்டும் தான்னு நினைக்கிறேன்...

    ReplyDelete
  3. //நன்கு காய்ந்த பிறகு தூளாக்க வேண்டாம்//

    வேண்டாமா..வேண்டுமா?

    ReplyDelete
  4. நல்ல உபயோகமான பல தகவல்கள்
    உங்கள் பதிவுகளினால் கிடைக்கிறது நண்பரே...
    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  5. உபயோகமான தகவல் பாஸ் நன்றி

    ReplyDelete
  6. லேகியமா லேகியமா?அவ்வவ்

    ReplyDelete
  7. உங்களின் ஒவ்வொரு பதிவும் பயனுள்ள மருத்துவ குறிப்புகள் அடங்கி வருகிறது.. நன்றி சார்...

    ReplyDelete
  8. ஆரோக்கியமான பதிவு, சுத்தமான தேன் வாங்கத்தான் தாவு தீர்ந்து விடுகிறது...!!!

    ReplyDelete
  9. உங்கள் சேவை தொடரட்டும் நண்பரே!வாழ்த்துக்கள்.நன்றி!

    உங்கள் குறிப்புக்களை காப்பி செய்யமுடிவதில்லை.பதிவுகளை அடிக்கடி மென்நூலாக வெளியிட்டால் மகிழ்ச்சி!

    ReplyDelete
  10. எங்கள் காலனியில் வில்வ மரம் இருக்கிறது.தினம் சிவபூஜைக்கு இலை எடுத்துகொள்கிறேன்.மற்ற பயன்கள் இப்போது அறிந்து கொண்டேன்.மிக்க நன்றி.

    ReplyDelete
  11. அசத்தலான தகவல் பாஸ்

    ReplyDelete
  12. Ramani said...
    படங்களுடன் விளக்கிச் செல்லும் விதம் அருமை
    பயனுள்ள பதிவு
    தேன் பதிவு தொடர வாழ்த்துக்கள்
    த.ம 2//


    அன்பான கருத்திற்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  13. செங்கோவி said...
    இனிப்பா இருந்தும் மருந்தா பயன்படுவது தேன் மட்டும் தான்னு நினைக்கிறேன்...

    ஆமாம் நண்பரே
    (மற்றபடி பழங்கள் இனிப்பாக இருந்து பலன் தருகிறது )

    ReplyDelete
  14. செங்கோவி said...
    //நன்கு காய்ந்த பிறகு தூளாக்க வேண்டாம்//

    வேண்டாமா..வேண்டுமா?//

    திருத்தி விட்டேன் நண்பரே
    சுட்டியதற்கு நன்றி

    ReplyDelete
  15. Robin said...
    Good Post!//

    நன்றி

    ReplyDelete
  16. மகேந்திரன் said...
    நல்ல உபயோகமான பல தகவல்கள்
    உங்கள் பதிவுகளினால் கிடைக்கிறது நண்பரே...
    பகிர்வுக்கு மிக்க நன்றி..//


    தங்களின் அன்பான கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  17. K.s.s.Rajh said...
    உபயோகமான தகவல் பாஸ் நன்றி//

    நன்றி நண்பா

    ReplyDelete
  18. மைந்தன் சிவா said...
    லேகியமா லேகியமா?அவ்வவ்//

    ஆம் நண்பரே ,சுவையாக இருக்கும்

    ReplyDelete
  19. சசிகுமார் said...
    உங்களின் ஒவ்வொரு பதிவும் பயனுள்ள மருத்துவ குறிப்புகள் அடங்கி வருகிறது.. நன்றி சார்...//


    தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  20. MANO நாஞ்சில் மனோ said...
    ஆரோக்கியமான பதிவு, சுத்தமான தேன் வாங்கத்தான் தாவு தீர்ந்து விடுகிறது...!!!


    ஆமாம் நண்பரே ,கலப்படம் தான் அதிகம் உள்ளது

    ReplyDelete
  21. கோகுல் said...
    உங்கள் சேவை தொடரட்டும் நண்பரே!வாழ்த்துக்கள்.நன்றி!

    உங்கள் குறிப்புக்களை காப்பி செய்யமுடிவதில்லை.பதிவுகளை அடிக்கடி மென்நூலாக வெளியிட்டால் மகிழ்ச்சி!//


    வாழ்த்துக்கு நன்றி நண்பரே

    ஒவ்வொரு வார இறுதியிலும் தர முயல்கிறேன் நண்பா

    ReplyDelete
  22. சென்னை பித்தன் said...
    த.ம.9

    எங்கள் காலனியில் வில்வ மரம் இருக்கிறது.தினம் சிவபூஜைக்கு இலை எடுத்துகொள்கிறேன்.மற்ற பயன்கள் இப்போது அறிந்து கொண்டேன்.மிக்க நன்றி.//


    கருத்திற்கு நன்றி ஐயா

    ReplyDelete
  23. மதுரன் said...
    அசத்தலான தகவல் பாஸ்//

    நன்றி நண்பா

    ReplyDelete
  24. தேன் மருத்துவம் பற்றி தெரியாத சில மருத்துவக்குறிப்புக்களை தந்தமைக்கு நன்றி. தேனின் சுவையை மேலும் ருசிக்கக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  25. வே.நடனசபாபதி said...
    தேன் மருத்துவம் பற்றி தெரியாத சில மருத்துவக்குறிப்புக்களை தந்தமைக்கு நன்றி. தேனின் சுவையை மேலும் ருசிக்கக் காத்திருக்கிறேன்.//


    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  26. பயனுள்ள தேன் பதிவு ...வாழ்த்துக்கள்...

    தேன் தயாரித்த விதம் அறியாமல் இருக்க பாலன்களை நீக்கி மோசடி செய்கிறார்கள்...

    ReplyDelete
  27. பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி
    சகோ ......

    ReplyDelete
  28. ரெவெரி said...
    பயனுள்ள தேன் பதிவு ...வாழ்த்துக்கள்...

    தேன் தயாரித்த விதம் அறியாமல் இருக்க பாலன்களை நீக்கி மோசடி செய்கிறார்கள்...//

    ஆமாம் நண்பரே

    ReplyDelete
  29. அம்பாளடியாள் said...
    பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி
    சகோ ......//

    கருத்திற்கு நன்றி சகோ

    ReplyDelete
  30. தேனுக்கு இவ்வளவு சக்தி இருக்கிறதா.நோய் எதிர்ப்புச் சக்தியென்று மட்டும்தான் நினைத்திருந்தேன் !

    ReplyDelete
  31. தேன் மருத்துவம் அருமை. சிலது நானும் அறிந்திருக்கிறேன்.

    எலியாருக்கே இவ்ளோ சக்தி கிடைச்சிட்டுது, இனி விட்டிடுவமா நாங்க.. எலி இறைச்சிதான் நமக்கினி தேன் மருத்துவ்வம்... ஹா..ஹா..ஹா...:)).

    ReplyDelete
  32. நீங்கள் சொன்ன மருத்துக் குறிப்புகளை செய்து பார்க்கப் போகிறேன்..

    ReplyDelete
  33. ஹேமா said...
    தேனுக்கு இவ்வளவு சக்தி இருக்கிறதா.நோய் எதிர்ப்புச் சக்தியென்று மட்டும்தான் நினைத்திருந்தேன் !//


    இருக்கிறது சகோதரி ,வருகைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  34. athira said...
    தேன் மருத்துவம் அருமை. சிலது நானும் அறிந்திருக்கிறேன்.

    எலியாருக்கே இவ்ளோ சக்தி கிடைச்சிட்டுது, இனி விட்டிடுவமா நாங்க.. எலி இறைச்சிதான் நமக்கினி தேன் மருத்துவ்வம்... ஹா..ஹா..ஹா...:)).//


    ஹாஸ்யமான கருத்திற்கு மிக்க நன்றி
    தோழி

    ReplyDelete
  35. மதுமதி said...
    நீங்கள் சொன்ன மருத்துக் குறிப்புகளை செய்து பார்க்கப் போகிறேன்..//

    செய்து பாருங்கள் சகோ

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே