வயிற்றுப் பொருமல் மற்றும் அஜீரண வயிற்று வலி
அடிக்கடி ஏற்படக் கூடிய அஜீரணம் ,பொருமல் வலி
ஆகியவற்றை ஒரு லேகியம் தயாரித்து உட்கொள்வதன்
மூலம் குணப்படுத்திக் கொள்ளலாம் .
இஞ்சிச்சாறு ,கண்டங்கத்திரிச்சாறு ,நெருஞ்சிச்சாறு ,
முள்ளங்கிச்சாறு ,எலுமிச்சம்பழச்சாறு ,வகைக்கு 500
மில்லி சேகரித்துக் கொள்ள வேண்டும்.
பசுவின் பால் ஒரு லிட்டர் ,பனை வெல்லம் 150 கிராம்
தேவைப்படும்.
சுக்கு ,மிளகு,திப்பிலி, சீரகம்,ஏலம,வாய்விடங்கம்,லவங்கம்
தாளிசம் வகைக்கு 10 கிராம்.
பசுவின் நெய் 50 கிராம் , தேன் 50 கிராம் .
கடைச்சரக்குகளை இடித்துப் பொடித்து சலித்து
வைத்துக் கொள்ள வேண்டும்.
பாலையும் எல்லாச் சாருகளையும் ஒன்றாக கலந்து பனை
வெல்லத்தைச் சேர்த்து கரைத்து கொள்ள வேண்டும்.
கடைச் சரக்கு பொடியை அதில் கொட்டி நன்றாகக்
கிளறி விட வேண்டும்.
பின்னர் ,நெய்,தேன் இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக
சேர்த்து நன்றாக கிளறிக் கொள்ள வேண்டும்.
இந்த லேகியத்தை கலர்ச்சிக்காய் அளவு காலை,மாலை
என இரண்டு வேளை உட்கொள்ள குணம் தெரியும்.
நல்ல குணம் தெரிய மூன்று நாட்கள் லேகியத்தை
உட்கொள்ள வேண்டும்.
அஜீரண வாயுக் கோளாறுகள் அகல
ஒரு பாத்திரத்தில் ஒரு எலுமிச்சம்பழம் சாறு பிழிந்து
விதைகளை அகற்றிவிட வேண்டும்.
100 கிராம் இஞ்சியை தோல் நீக்கி பட்டாணி அளவு துண்டுகளாக
அரிந்து எலுமிச்சை சாற்றில் போட வேண்டும்.
10 கிராம் அளவு சீரகத்தை எடுத்து சுத்தம் பார்த்து அதில்
சேர்த்துக் கொள்ள வேண்டும்.
எல்லாவற்றையும் நன்றாகக் கிளறி வெய்யிலில் காயவைக்க
வேண்டும்.
மறுநாள் 10 கிராம் இந்துப்பைத் தூள் செய்து போட்டுக்
கிளறிக் கொள்ள வேண்டும்.
சாற்றிலுள்ள இந்தத் துண்டுகளை எடுத்து ஒரு தட்டில்
பரப்பி வைத்து வெய்யிலில் காய விட வேண்டும்.
சருகு போல இஞ்சித் துண்டுகள் காய்ந்ததும் எடுத்து
உரலில் இட்டு நன்றாக இடித்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கண்ணாடி ஜாடியில் தாராளமாக தேன் விட்டு
இஞ்சித் துண்டுகளை அதில் போட்டு ஊறவிட வேண்டும்.
இஞ்சித் துண்டுகளை தேனில் பிசறிய விதத்தில் இருக்க
வேண்டும்.
இஞ்சித் துண்டு கலவையை இரண்டு தேன் கரண்டி ஒரு
வேளைக்கு என இரண்டு வேளை உட்கொள்ள வேண்டும்
அஜீரணம் தொடர்பாக ஏற்படுகிற வாயுக் கோளாறுகள்
நீங்க பொதுவான அஜீரணத்திற்கு இதனைப்
பயன் படுத்தலாம் .
நல்ல பசியுண்டாக
சம்பங்கிப் பூவைச் சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில்
கைப்பிடி அளவு போட்டு அதில் கொதிக்கும் நீரை விட்டு
சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும்.
பிறகு இருத்து தேவையான அளவுக்கு தேன் சேர்த்து
காலை,மாலை ஒரு டம்ளர் உட்கொண்டு வந்தால்
நல்ல பசி ஏற்படும் .
இரத்த சோகை மாற
இரும்புச் சத்து குறைவு காரணமாகத்தான் பொதுவாக
இரத்த சோகை ஏற்படுகிறது .
இது சரியாக
குப்பைமேனி இல்லை ,கரிசலாங்கண்ணி ,சிறு செருப்படி
இந்த மூலிகைகளை சம அளவாகச் சேகரித்து சுத்தம்
படுத்தி வெய்யிலில் காய விட வேண்டும்.
சருகு போலக் காய்ந்ததும் உரலில் இட்டு இடித்து
தூளாக்கி சலித்து எடுத்து பத்திரப் படுத்தி வைத்துக்
கொள்ள வேண்டும்.
வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம் எடுத்து வெற்றிலையில்
வைத்து தேனை சேர்த்து குழப்பி உட்கொள்ள வேண்டும்.
இம்மாதிரி காலை ,மாலை என இரண்டு வேளை
உட்கொள்ள வேண்டும்.
முழுக் குணம் தெரிய வேண்டும் என்றாலும் 40 நாட்கள்
உட்கொள்ள வேண்டியது முக்கியம் .
தேனின் சுவை தொடரும் .....
நன்றி
Good information . . Thanks
ReplyDeleteதகவலுக்கு நன்றி. தினம் கொஞ்சம் தேன் சாப்பிடலாமா? தினம் தேன் சாப்பிட்டால் உடலின் எடை குறையும் என்பது உண்மையா? தாயை செய்து விளக்கவும்.
ReplyDeleteமாப்ள மருத்துவ விஷயங்கள் அறிந்து கொண்டேன் நன்றி!
ReplyDeleteஅரிய பயனுள்ள பயன்படுத்தத்தக்க
ReplyDeleteதேனின் மருத்துவ குணங்களைச் சொல்லிச் செல்லும்
பதிவு அருமையிலும் அருமை
தொடர வாழ்த்துக்கள்
த.ம 2
தேனின் மருத்துவ குணங்களை
ReplyDeleteமிகத் தெளிவாச சொல்லி வருகிறீர்
கள்!
சுத்தமான தேன் என்பதை எப்படி அறிவது?
விளக்கம் தேவை சகோ!
த ம ஓ 3
புலவர் சா இராமாநுசம்
அருமையான செய்தி... பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteநன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு....
ReplyDeleteமிகவும் பயனுள்ள தகவல்கள் ரமேஷ், நன்றி பகிர்வுக்கு.
ReplyDeleteதேன் போன்ற பதிவுகளை இனிக்க இனிக்க
ReplyDeleteஅள்ளித்தருகிறீர்கள்..
பயனுள்ள மருத்துவ பதிவுகளுக்கு
நன்றிகள் பல நண்பரே...
அருமருந்து தேன் மருந்து, பகிர்வுக்கு மிக்க நன்றி மக்கா...!!!
ReplyDeleteமாப்ள உங்களின் ஒவ்வொரு பதிவும் பல பயனுள்ள குறிப்புகள்....
ReplyDeleteவழமைபோல அருமையான பயனுள்ள குறிப்பு
ReplyDeleteபயனுள்ள தகவல்கள் ரமேஷ்...நன்றி பகிர்வுக்கு...
ReplyDeleteதகவலுக்கு நன்றி
ReplyDeleteஅன்புடன் :
ராஜா
அடுத்தவர் மொபைல் நம்பரில் நீங்கள் SMS அனுப்பலாம்
த.ம.7.
ReplyDeleteதேனாகத் தொடர்கிறீர்கள்.இனிக்கும் மருந்து!
நண்பா... தேனை பற்றிய தொடரும் பதிவுகளா? அம்புட்டு நல்ல பயனுள்ள விஷயங்கள் இருக்கு போல... தொடருங்கள்.
ReplyDeleteநம்ம தளத்தில்:
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை; Windows version 1.0 to 8.0
அருமையான பயனுள்ள பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ .
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள் ......
தேனாய் தித்திக்கும் அருமையான பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
ReplyDelete