Saturday, November 26, 2011

வாயில் அதிக நீர் சுரந்தால் தேன் மருத்துவம்





வாயில் அதிக நீர் சுரந்தால் நிற்க 







நன்னாரி செடிகளை வேருடன் கொண்டு வந்து கழுவி 
பொடியாக நறுக்கி வெய்யிலில் நன்றாக காய விட 
வேண்டும்.


பிறகு உரலில் இட்டு நான்கு இடித்து தூளாக்கி சலித்து 
வாயகன்ற கண்ணாடிப் புட்டியில் பத்திரப் படுத்தி வைத்துக் 
கொள்ள வேண்டும்.


வேளைக்கு ஒரு தேக்கரண்டி தூளைஎடுத்து அதே அளவு 
தேன் கலந்து உட்கொள்ள வேண்டும்.


ஒரு நாளைக்கு இரண்டு வேளை உட்கொள்ள வேண்டும்.


வாயில் அதிக நீர் சுரப்பது நின்று விடும்.




சிறு நீர் சரியாக இறங்கா விட்டால் 




பனை மரத்தின் பூவைக் கொண்டு வந்து அதை அடுப்புத் 
தணலில் போட்டுக் கரியாக்கி அம்மியில் வைத்து மைபோல 
அரைத்து தூளாக்கி கொண்டு கண்ணாடி பாத்திரத்தில் 
பத்திரப் படுத்திக் கொள்ள வேண்டும்.


ஒரு தேக்கரண்டி தூளை எடுத்து அதே அளவு தேன் சேர்த்து 
குழப்பி உட்கொள்ள வேண்டும்.


காலை ,மதியம் ,மாலை என மூன்று வேளை உட்கொள்ள 
வேண்டும்.


மூன்று நாட்கள் இவ்வாறு உட்கொள்ள சிறுநீர் வெளியேறு
வதில் உள்ள சங்கடம் அகன்று நீர் அளவாக இறங்கும்.




கண் எரிச்சல் நீங்க 






பாதிரி மரத்தின் வேரைக் கொண்டு வந்து அதை வெய்யிலில் 
காயவைத்து உரலில் போட்டு இடித்து மாச் சல்லடையால் 
சலித்து ஒரு வாயகன்ற கண்ணாடிப் பாத்திரத்தில் இட்டு 
வைத்து கொள்ள வேண்டும்.


குவளைக்கு ஒரு தேக்கரண்டி தூளுடன் ஒரு தேக்கரண்டி 
தேன் சேர்த்து உட்கொள்ள வேண்டும்.


இவ்வாறு ஒரு நாளைக்கு இரண்டு வேளை உட்கொள்ள 
வேண்டும்.


மூன்று நாட்கள் இவ்வாறு உட்கொள்ள கண் எரிச்சல் 
நீங்கும்.


கண் தொடர்பான பிற கோளாறுகளும் அகலும்.






 

31 comments:

  1. எளிய முறையில் தேவையான தெரிந்துக் கொள்ள வேண்டிய டிப்ஸ்...

    ReplyDelete
  2. தேனின் மருத்துவ குணங்கள் பற்றிய தகவல் அருமை.நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  3. பயனுள்ள தகவல் பாஸ் நன்றி

    ReplyDelete
  4. மாப்ள பனை மரத்துல பூ வருமா...Tm-3

    ReplyDelete
  5. பிகர்கள பார்த்தாலும் இப்படி வருதே... அதுக்கும் இந்த டிப்ஸ் சரி வருமா...ஹா ஹா

    ReplyDelete
  6. கவிதை வீதி... // சௌந்தர் // said...
    எளிய முறையில் தேவையான தெரிந்துக் கொள்ள வேண்டிய டிப்ஸ்...//


    அழகிய கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  7. RAMVI said...
    தேனின் மருத்துவ குணங்கள் பற்றிய தகவல் அருமை.நன்றி பகிர்வுக்கு.//

    அன்பான கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி

    ReplyDelete
  8. சசிகுமார் said...
    மாப்ள பனை மரத்துல பூ வருமா...Tm-3

    பிகர்கள பார்த்தாலும் இப்படி வருதே... அதுக்கும் இந்த டிப்ஸ் சரி வருமா...ஹா ஹா//


    ஹா ஹா ஹா
    ஃபிகர்களை பார்த்தால் வருவது ஜொள்

    நான் சொல்வது உமிழ்நீர் .

    ReplyDelete
  9. நன்றி நண்பரே குறித்து வைத்து கொள்ள வேண்டிய தகவல்கள்

    ReplyDelete
  10. மதுரன் said...
    பயனுள்ள தகவல் பாஸ் நன்றி//

    கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  11. r.v.saravanan said...
    நன்றி நண்பரே குறித்து வைத்து கொள்ள வேண்டிய தகவல்கள்//


    தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  12. அருமையான மருத்துவ குறிப்புகளை தந்து கொண்டிருக்கிறீர்கள் நண்பரே மிக்க நன்றி....!!!

    ReplyDelete
  13. மற்றுமொரு தேன்மருத்துவத்திற்கு
    நன்றி நண்பரே...

    ReplyDelete
  14. நல்ல குறிப்புகள் .. எளிமையான செய்முறைகள் .. பகிர்வுக்கு நன்றிங்க சார்

    ReplyDelete
  15. MANO நாஞ்சில் மனோ said...
    அருமையான மருத்துவ குறிப்புகளை தந்து கொண்டிருக்கிறீர்கள் நண்பரே மிக்க நன்றி...///


    நன்றி நண்பரே

    ReplyDelete
  16. மகேந்திரன் said...
    மற்றுமொரு தேன்மருத்துவத்திற்கு
    நன்றி நண்பரே...///


    நன்றி நண்பரே

    ReplyDelete
  17. அரசன் said...
    நல்ல குறிப்புகள் .. எளிமையான செய்முறைகள் .. பகிர்வுக்கு நன்றிங்க சார்//


    கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  18. இயற்கை மருந்துகளை அறியத் தருகிறீர்கள்.இங்கு கிடைக்காது.கிடைக்குமிடங்களில் பயன்படுத்துவார்களா.பயன்படுத்தினால் எவ்வளவு நல்லது !

    ReplyDelete
  19. பயனுள்ள தகவல்கள்.
    பகிர்வுக்கு நன்றி .
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. பயனுள்ள தகவல்கள் பாஸ்

    ReplyDelete
  21. ஹேமா said...
    இயற்கை மருந்துகளை அறியத் தருகிறீர்கள்.இங்கு கிடைக்காது.கிடைக்குமிடங்களில் பயன்படுத்துவார்களா.பயன்படுத்தினால் எவ்வளவு நல்லது !//

    ஆமாம் சகோதரி பயன்படுத்தினால் நல்லது தான் .

    கருத்திற்கு மிக்க நன்றி

    ReplyDelete
  22. நண்டு @நொரண்டு -ஈரோடு said...
    பயனுள்ள தகவல்கள்.
    பகிர்வுக்கு நன்றி .
    வாழ்த்துக்கள்.//


    அன்பான கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  23. K.s.s.Rajh said...
    பயனுள்ள தகவல்கள் பாஸ்//


    நன்றி நண்பா

    ReplyDelete
  24. ஒரு பெரிய புட்டியா வாங்கி வச்சுக்க வேண்டியதுதான் போல!
    நன்று.

    ReplyDelete
  25. சென்னை பித்தன் said...
    ஒரு பெரிய புட்டியா வாங்கி வச்சுக்க வேண்டியதுதான் போல!
    நன்று.//

    நன்றி ஐயா

    ReplyDelete
  26. மாப்ள பல பயனுள்ள தகவல்களை பகிர்ந்து வருவதுக்கு நன்றிய்யா!

    ReplyDelete
  27. தாங்கள் பதிவுடிகிற மருத்துவக் குறிப்புகள்
    அனைத்தும் எளிமையானவைகளாகவும்
    அவசியத் தேவை உள்ளவனவாகவும் உள்ளன
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 10

    ReplyDelete
  28. விக்கியுலகம் said...
    மாப்ள பல பயனுள்ள தகவல்களை பகிர்ந்து வருவதுக்கு நன்றிய்யா!//

    கருத்திற்கு மிக்க நன்றி மாம்ஸ்

    ReplyDelete
  29. Ramani said...
    தாங்கள் பதிவுடிகிற மருத்துவக் குறிப்புகள்
    அனைத்தும் எளிமையானவைகளாகவும்
    அவசியத் தேவை உள்ளவனவாகவும் உள்ளன
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 10//


    அன்பான கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  30. பகிர்வுக்கு நன்றி...புதிய பதிவர் நான். உங்களின் பல பதிவுகள் நல்ல பதிவுகள். வாழ்த்துக்கள். நன்றி.

    ReplyDelete
  31. திண்டுக்கல் தனபாலன் said...
    பகிர்வுக்கு நன்றி...புதிய பதிவர் நான். உங்களின் பல பதிவுகள் நல்ல பதிவுகள். வாழ்த்துக்கள். நன்றி.//

    கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே

    தொடர்ந்து வாருங்கள்

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே