Tuesday, November 29, 2011

வெந்தயத்தின் மூலம் வைத்தியம்

சீதபேதி குணமாக வெந்தய வைத்தியம் 






சீதபேதி ஏற்பட்டால் அது குணமாக வெந்தயத்தின் மூலம் 
வைத்தியம் செய்து சாப்பிடுங்கள் .குணமாகும் .



செய்முறை :






ஒரு புதிய மண் சட்டியில் வெந்தயம் 20 கிராம் எடுத்து கழுவி 
போடவும்.


அதனுடன் நூறு மி.லி மோரை ஊற்றவும் . மூடவும் .


ஒன்பது மணி நேரம் மூடி வைத்து பின் எடுத்து அரைக்கவும் .


புதிய மோரில் அதனைக் கலக்கவும் .சிறிது உப்பு சேர்க்கவும் .


அதனை இரண்டாக பிரித்து சீதபேதி உள்ளவர்களுக்கு காலை 
மாலை என இரண்டு வேளை கொடுக்கவும்.


சிலருக்கு இரண்டு வேளை மருந்திலும் ,ஒரு சிலருக்கு நான்கு 
வேளை மருந்திலும் சீத பேதி குணமாகும்.




மற்றொரு முறை :








20 கிராம் வெந்தயத்தை பிசைந்து கழுவிக் கொள்ளவும் .ஒரு
புதிய மண் சட்டியில் வெந்தயத்தை போட்டு அதனுடன் நூறு 
மி.லி தயிரை ஊற்றவும்.


ஒன்பது மணி நேரம் மூடி வைத்து ஊறிய பின் எடுக்கவும்.


அதிலிருந்து தயிரை பிரித்து விட்டு புதிய தயிர் சேர்த்து அரைக்கவும்


அரைத்த வெந்தயத்தை நூறு மி.லி தயிரில் கலந்து கொள்ளவும்.


இந்த மருந்தை இரண்டாக பிரித்து ஒரு பங்கை காலை ஆறு 
மணிக்கும் மற்றொரு பங்கை மாலை ஆறு மணிக்கும் 
கொடுக்க வேண்டும்.







மற்றொரு முறை :



20 கிராம் வெந்தயத்தை கழுவி எடுத்துக் கொள்ளவும் .ஒரு 
மண் சட்டியில் போடவும் .

இளம் வருவளாக வறுத்து எடுக்கவும் .ஆறவிடவும் .

ஆறியதும் நன்றாக இடித்துக் கொள்ளவும் .இடித்ததை 
ஐம்பது கிராம் வெல்லத்தில் பிசைந்து கொள்ளவும் .

பிசைந்ததை நான்கு பங்காக்கி கொள்ளவும் .

காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணிக்குள் 
நான்கு முறைகள் இந்த மருந்தை கொடுக்கவும் 

சிலருக்கு ஒரு நாளில் குணமாகும் .மற்றவர்க்கு 
இரண்டு நாளில் குணமாகும் .

ஒவ்வொரு நாளும் மருந்தை புதிதாக செய்து சாப்பிட 
வேண்டும்.


மற்றொரு முறை :



வெந்தயம் - 50 கிராம் 
பனங்கற்கண்டு - 200 கிராம் 

வெந்தயத்தை ஒரு மண் சட்டியில் போடவும் .தூய நீர் 
விட்டு கழுவவும் .கழுவிய வெந்தயத்தை நிழலில் 
உலர்த்தவும் .

உலர்ந்த வெந்தயத்தை ஒரு மண் சட்டியில் போடவும் .

விறகடுப்பில் வைத்து இளம் வருவளாக வறுத்து எடுத்து 
ஆறவிடவும்.

ஆறியதும் நன்றாக இடித்துக் கொள்ளவும் .

பனங்கற்கண்டையும் இடித்துக் கொள்ளவும் ,இரண்டையும் 
கலந்து கொள்ளவும்.

காலை ஆறு மணிக்கு ஒரு தேக்கரண்டி மருந்துடன் 
சிறிது தண்ணீரில் அருந்தவும் .

காலை ஒன்பது மணிக்கு ஒரு தேக்கரண்டி பகல் மூன்று 
மணிக்கு ஒரு தேக்கரண்டி முறையாக இரண்டு நாட்கள் 
உட்கொள்ள சீத பேதி தீரும்.





 









பின் குறிப்பு : மருந்துன்னும் சமயத்தில் தயிர் சோறு மட்டும் 
கொடுக்கவும்.


சீத பேதி குணமான பின்பும் இரண்டு மூன்று நாட்கள் தயிர்
சோறு அல்லது மோர் சோறு உண்பது நல்லது .



இன்னும் இருக்கு ......


நன்றி




நன்றி :படங்கள் உபயம் இணையம் 

35 comments:

  1. பயனுள்ள தகவல் .
    தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  2. இப்படி நீங்களே எல்லாத்தையும் சொல்லிபுட்டா...லட்ச கணக்குல செலவு பண்ணி டாக்டருக்கு படிச்சவங்க எப்படி சம்பாதிக்கிறது.... ஹா ஹா ..வழக்கம் போல நல்ல பதிவு நண்பா.. நானும் வழக்கம் போல ஓட்டு போட்டுட்டேன்...

    ReplyDelete
  3. பயனுள்ள தகவல்.நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  4. நண்டு @நொரண்டு -ஈரோடு said...
    பயனுள்ள தகவல் .
    தகவலுக்கு நன்றி.//

    கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  5. சசிகுமார் said...
    இப்படி நீங்களே எல்லாத்தையும் சொல்லிபுட்டா...லட்ச கணக்குல செலவு பண்ணி டாக்டருக்கு படிச்சவங்க எப்படி சம்பாதிக்கிறது.... ஹா ஹா ..வழக்கம் போல நல்ல பதிவு நண்பா.. நானும் வழக்கம் போல ஓட்டு போட்டுட்டேன்...//


    ஹா ஹா ஹா அன்பு கருத்திற்கு மிக்க நன்றி நண்பா

    ReplyDelete
  6. RAMVI said...
    பயனுள்ள தகவல்.நன்றி பகிர்வுக்கு.


    நன்றி சகோதரி

    ReplyDelete
  7. மாப்ள உங்க ஒவ்வொரு மருத்துவ பதிவும் டாக்டர் பீச குறைக்குது ஹிஹி...பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  8. அறிந்துகொண்டேன் அன்பரே..

    ReplyDelete
  9. வெந்தயம் பற்றி அறிவோமென்றாலும் அதைப் பயன்படுத்தும் முறைகள் பற்றி விரிவாகச் சொன்ந்தற்கு நன்றி.

    ReplyDelete
  10. இத்தனூண்டு வெந்தயம் எவ்வளவு பெரிய வேலை எல்லாம் செய்யுது !!? ஆச்சரியம் தான்

    ReplyDelete
  11. விக்கியுலகம் said...
    மாப்ள உங்க ஒவ்வொரு மருத்துவ பதிவும் டாக்டர் பீச குறைக்குது ஹிஹி...பகிர்வுக்கு நன்றி!//


    ஹி ஹி நன்றி மாம்ஸ்

    ReplyDelete
  12. முனைவர்.இரா.குணசீலன் said...
    அறிந்துகொண்டேன் அன்பரே..//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  13. சென்னை பித்தன் said...
    வெந்தயம் பற்றி அறிவோமென்றாலும் அதைப் பயன்படுத்தும் முறைகள் பற்றி விரிவாகச் சொன்ந்தற்கு நன்றி.//

    கருத்திற்கு நன்றி ஐயா

    ReplyDelete
  14. ஜ.ரா.ரமேஷ் பாபு said...
    இத்தனூண்டு வெந்தயம் எவ்வளவு பெரிய வேலை எல்லாம் செய்யுது !!? ஆச்சரியம் தான்//

    ஆமாம் நண்பரே

    ReplyDelete
  15. வெந்தயம் பயனுள்ள குறிப்புகளுக்கு நன்றி..... இந்த வெந்தயத்துல இன்னும் என்னென்ன இருக்கு?


    நம்ம தளத்தில்:
    அரசே, ஒரு பாக்கெட் அல்வா வேணாம்? ஒரு சொட்டு நெய்யாவது கிடைக்குமா?

    ReplyDelete
  16. இவ்வளவு இருக்கா ?

    ReplyDelete
  17. நீங்க அடிக்கடி எங்க பாட்டியை ஞாபகப்படுத்துறீங்க..

    நல்லதொரு தகவல்கள்..

    ReplyDelete
  18. பயனுள்ள தகவல்..

    தகவலுக்கு நன்றி நண்பா..

    ReplyDelete
  19. தமிழ்வாசி பிரகாஷ் said...
    வெந்தயம் பயனுள்ள குறிப்புகளுக்கு நன்றி..... இந்த வெந்தயத்துல இன்னும் என்னென்ன இருக்கு?


    நிறைய இருக்கு நண்பரே

    ReplyDelete
  20. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    இவ்வளவு இருக்கா ?//

    ஆமாம் நண்பரே

    ReplyDelete
  21. said...
    நீங்க அடிக்கடி எங்க பாட்டியை ஞாபகப்படுத்துறீங்க..

    நல்லதொரு தகவல்கள்..//


    அன்பான கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  22. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    பயனுள்ள தகவல்..

    தகவலுக்கு நன்றி நண்பா..//


    நன்றி நண்பரே

    ReplyDelete
  23. அருமை அருமை நன்றி நன்றி டாக்டர்...!!!

    ReplyDelete
  24. MANO நாஞ்சில் மனோ said...
    அருமை அருமை நன்றி நன்றி டாக்டர்...//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  25. வாழ்த்துக்கள் சகோ அருமையான பயனுள்ள தகவலை
    வழங்கும் உங்கள் சேவையை அனைவரும் பெறவேண்டி
    அடுத்து என் தளத்தில் ஓர் கவிதை வெளியிட உள்ளேன் .
    மென்மேலும் எமது கைவையித்தியக் குறிப்பினை வழங்குமாறு
    அன்போடு கேட்டுக்கொள்கின்றேன் .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .

    ReplyDelete
  26. வெந்தயத்தோட குணங்களுக்கு ஈடா ஆங்கில மருத்துவதுல மருந்து இருக்கான்னு பந்தயம் வைக்கலாம் போல.

    ReplyDelete
  27. அம்பாளடியாள் said...
    வாழ்த்துக்கள் சகோ அருமையான பயனுள்ள தகவலை
    வழங்கும் உங்கள் சேவையை அனைவரும் பெறவேண்டி
    அடுத்து என் தளத்தில் ஓர் கவிதை வெளியிட உள்ளேன் .
    மென்மேலும் எமது கைவையித்தியக் குறிப்பினை வழங்குமாறு
    அன்போடு கேட்டுக்கொள்கின்றேன் .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .//


    அன்பு கருத்திற்கு மிக்க நன்றி சகோ

    தங்கள் அன்பிற்கும் மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  28. கோகுல் said...
    வெந்தயத்தோட குணங்களுக்கு ஈடா ஆங்கில மருத்துவதுல மருந்து இருக்கான்னு பந்தயம் வைக்கலாம் போல.//


    கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  29. பயனுள்ள தகவல்...நன்றி நண்பரே பகிர்வுக்கு...

    ReplyDelete
  30. ரெவெரி said...
    பயனுள்ள தகவல்...நன்றி நண்பரே பகிர்வுக்கு...//


    நன்றி நண்பரே

    ReplyDelete
  31. If you take 9 hours to prepare this medicine what will happen to dysentry patient?

    ReplyDelete
  32. மிகமிகப் பயனுள்ள தகவல்கள்.தொடரட்டும் உங்கள் பணி !

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே