Thursday, December 22, 2011

தூக்கம் வராதவர்களுக்கு பதினைந்து வழிகள்





ஒவ்வொரு மனிதனும் தினமும் ஆறு முதல் எட்டு
மணி நேரம் வரை ஆழ்ந்து சுகமாக தூங்க வேண்டும்.


இப்பிடி நன்கு தூங்கி எழுந்தால் தான் விழித்திருக்கும்
16 மணி நேரத்தில் மனமும் உடலும் திறமையுடன்
செயல்படும்.



எனவே இரவில் தூங்க முடியவில்லை என்பவர்கள்
கீழ்கண்ட எளிய வழிகளைப் பின்பற்றுவது நல்லது


இரவு எத்தனை மணிக்கு படுக்கைக்குச் செல்ல 
வேண்டும் என்பதை உறுதியாகத் தீர்மானியுங்கள்


இரவு தூங்கும் அறை நிசப்தமாகவும் , இருட்டாகவும் 
இருப்பதும் நல்லது ,இருட்டு பிடிக்க வில்லை எனில்
நீல நிற இரவு விளக்கைப் பயன்படுத்தவும்






தூங்கும் அறை காற்றோட்டம் நிறைந்ததாக இருக்க 
வேண்டும்


பஞ்சுத்தலையணைகள், பஞ்சு மெத்தை ,போர்வை சுகமான
தூக்கத்தை வரவழைக்கும் . தரையிலோ , கட்டிலிலோ 
படுத்தாலும் பஞ்சு மெத்தைகளையோ உபயோகிக்கலாம்


தூங்குவதற்கு அரை மணி நேரம் முன்பாக பசும்பால் 
அருந்துவது நல்லது.இது டிரைப்டோபன் அமிலத்தை
மூளைக்கு வழங்குவதால் உடனடியாக நரம்பு மண்டலம்
அமைதியாகி உங்களை தூங்க வைக்கும்


மாலை 4 மணிக்கு காஃபைன் உள்ள காபி மற்றும் மது 
புகையிலை போடுவதை தவிர்க்கவும்.இவை நரம்பு
மண்டலத்தை தூண்டி விடுவதால் இரவு தூங்க 
நெடுநேரம் ஆகிவிடும்.






மசாஜ் ,யோகாசனம் மற்றும் தியானம் போன்றவை 
மனதையும் உடலையும் ஓய்வு நிலைக்குக் கொண்டு
வந்து புதுப்பிக்கும்.உங்களுக்கு இதில் எது பிடித்ததோ
அதைச் செய்து வாருங்கள்


இரவு உணவை தூங்கச் செல்வதற்கு இரண்டு அல்லது 
மூன்று மணி நேரத்திற்கு முன்பே முடித்துக் கொள்ளவும்
சாதம் நல்லது ,ஏனென்றால் அதிகம் சாப்பிட்டாலும் 
எளிதில் ஜீரணம் ஆகும்.


நெஞ்செரிச்சல் ஏற்படாமல் இருக்க இடக்கைப் பக்கமாகவே 
படுக்கவும்.மல்லாந்தோ ,வலகைப்பக்கமோ படுத்தால் 
நெஞ்செரிச்சல் ஏற்பட்டு தூக்கம் கலையும் எப்போதும் 
குப்புறப்படுக்காதீர்கள் 


தினமும் உடற்பயிற்சி துரித நடைப்பயிர்ச்சி , ஏரோபிக் 
உடற்பயிற்சி இவற்றில் ஏதேனும் ஒன்றைப் பின் 
பற்றவும். அருகில் உள்ள இடங்களுக்கு துரித நடைப்
பயிற்ச்சியாக சென்று வருவது நல்லது


கனமான தலையணைகளை தவிர்க்கவும்.


உள்ளங்கால்களை நாமே அமுக்கிவிட்டுக் கொண்டாலும் 
நரம்பு மண்டலம் அமைதியாகி உடனடியாகத் தூக்கம் 
வரும்.


படுத்ததும் கவலைகளை நினைவிற்குக் கொண்டு வராதீர்கள்
கண்களை மூடிக்கொண்டு நீங்கள் வசிக்கும் சாலையை 
கற்பனையில் பாருங்கள்.அந்த சாலை முழுதும் மூடுபனி
படர்ந்துள்ளது போலவும் , அந்த வெண்புகைக்குள் நீங்கள் 
நுழைந்து சாலையில் செல்வதாக கற்பனை செய்யுங்கள்.
தூக்கம் வரும்


பகலில் உங்கள் சௌகரியத்தைப் பொறுத்து இருபது அல்லது
முப்பது நிமிடங்கள் தூங்களாம்.இதனால் மதியம் மிகுந்த 
விழிப்புடன் உங்கள் பணிகளைச் செய்வீர்கள்


பல ஆண்டுகளாகத் தூக்கமின்மையால் அவதிப் படுபவர்கள்
மதியமும் , இரவும் கெட்டித் தயிர் சிறிது உப்பு சேர்த்து சாப்பிட்டு
வந்தால் போதும்.தூக்கமின்மை குணமாகும்.


நன்றி

51 comments:

  1. இன்றைய நிலையில் தூக்கமில்லாதோர் சங்கம் ஒன்று
    ஆரம்பித்தால் அதிக உறுப்பினர்களைச் சேர்க்கலாம்
    அந்த அளவு தூக்கமின்மை பெருத்துப் போய்விட்டது
    அனைவருக்கும் பயன்படும் அசத்தலான பதிவு
    த.ம 2

    ReplyDelete
  2. இனி நல்லா தூங்குவோம்ல

    ReplyDelete
  3. சரக்கு அடிச்சா நல்லா தூக்கம் வருதே பாஸ் ..

    ReplyDelete
  4. Ramani said...
    இன்றைய நிலையில் தூக்கமில்லாதோர் சங்கம் ஒன்று
    ஆரம்பித்தால் அதிக உறுப்பினர்களைச் சேர்க்கலாம்
    அந்த அளவு தூக்கமின்மை பெருத்துப் போய்விட்டது
    அனைவருக்கும் பயன்படும் அசத்தலான பதிவு
    த.ம 2//

    தங்கள் வரவிற்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  5. கோவை நேரம் said...
    இனி நல்லா தூங்குவோம்ல//

    மிக்க சந்தோசம் நண்பரே

    ReplyDelete
  6. கோவை நேரம் said...
    சரக்கு அடிச்சா நல்லா தூக்கம் வருதே பாஸ் ..//

    ஹா ஹா ஹா

    ReplyDelete
  7. கோவை நேரம் said...
    சரக்கு அடிச்சா நல்லா தூக்கம் வருதே பாஸ் ..//


    அது போதை தூக்கம் நண்பா
    சரக்கு சேரலன்னா தூங்கி எழுந்த உடன் தலைவலிக்குமே ? அப்புறம் சுகம் !!

    ReplyDelete
  8. உண்மையில் தூக்கம் வருவது சிரமமாக இருக்கிறது..கடை பிடிக்கிறேன்..நன்றி..


    அன்போடு அழைக்கிறேன்..

    இறப்பதை எதிர்பார்க்கிறோம்

    ReplyDelete
  9. பல பாயிண்ட்டுகள் நன்று

    மல்லாக்கவும் படுக்க கூடாது. குப்புறவும் படுக்க கூடாதுன்னு எழுதிருக்கீங்க. ஆனா நூத்துக்கு தொண்ணூறு பேரு இந்த ரெண்டில் ஒரு விதமா தான் படுக்குறாங்க. வலக்கை பக்கம் ஒருக்களித்தும் கூட படுக்க கூடாதா? தூங்குன மாதிரி தான் :))

    ReplyDelete
  10. வழக்கம் போல அசத்தலான குறிப்புகள் பாஸ்

    ReplyDelete
  11. ஹாவ்வ்வ்வ்வ்., ஒண்ணுமில்ல நண்பரே ,இப்பவே தூக்கம் வந்துடுச்சு!

    ReplyDelete
  12. இப்போ நைட் டூட்டி பார்த்துட்டு வந்திருக்கேன்... அதனால தூக்கம்ம்ம்ம்ம்ம்ம்...ஹவ்..ஹவ்... தூங்கிட்டேன்.


    வாசிக்க:
    முல்லைப்பெரியாருக்கு ஆதரவாக மதுரையில் கடைகள் முழுஅடைப்பு, ஆட்டோக்கள் ஓடவில்லை.

    ReplyDelete
  13. பயனுள்ள தகவல்.
    பகிர்வுக்கு நன்றி .
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. நிம்மதியான தூக்கத்தை தொலைத்து பல காலம் ஆகிவிட்டது பாஸ்

    உங்கள் குறிப்புக்கள் அருமை

    ReplyDelete
  15. நிம்மதியாக தூங்க நல்ல குறிப்புகள்.நன்றி ரமேஷ், பகிர்வுக்கு.

    ReplyDelete
  16. தூக்கமில்லாமல் கஷ்ட்டப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிவரும் நேரத்தில் சிறப்பான பதிவை தந்து நிம்மதியாக தூங்க வைத்துவிட்டீர்கள்...!!!!

    ReplyDelete
  17. நல்லதொரு அருமையான பதிவு...

    தூக்கம் சரியான இருந்துவிட்டால் மனிதனுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது...

    ReplyDelete
  18. தூக்கம் வர இத்தனை வழிகளா நன்றி நண்பா

    என் தளத்திற்கும் நேரமிருப்பின் வருகை தாருங்கள்

    ReplyDelete
  19. நல்ல பதிவு.

    தூக்கம் மனிதனுக்கு மிகவும் அவசியம்.
    அது இல்லையென்றால் எல்லா நோய்களும் தொற்றிக் கொள்ளும்.

    படுத்தவுடன் தூங்கும் பழக்கம் உள்ளவர்களை கொடுத்து வைத்தவர்கள் என்பார்கள்.

    நீங்கள் சொன்னதை கடைபிடித்து நிம்மதியாக தூங்கலாம்.
    நன்றி.

    ReplyDelete
  20. மதுமதி said...
    உண்மையில் தூக்கம் வருவது சிரமமாக இருக்கிறது..கடை பிடிக்கிறேன்..நன்றி..


    நன்றி நண்பரே

    ReplyDelete
  21. மோகன் குமார் said...
    பல பாயிண்ட்டுகள் நன்று

    நன்றி நண்பரே

    ReplyDelete
  22. Mahan.Thamesh said...
    Good post fri. Useful tips//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  23. மதுரன் said...
    வழக்கம் போல அசத்தலான குறிப்புகள் பாஸ்//

    நன்றி நண்பா

    ReplyDelete
  24. கோகுல் said...
    ஹாவ்வ்வ்வ்வ்., ஒண்ணுமில்ல நண்பரே ,இப்பவே தூக்கம் வந்துடுச்சு!//

    நன்றி நண்பா

    ReplyDelete
  25. தமிழ்வாசி பிரகாஷ் said...
    இப்போ நைட் டூட்டி பார்த்துட்டு வந்திருக்கேன்... அதனால தூக்கம்ம்ம்ம்ம்ம்ம்...ஹவ்..ஹவ்... தூங்கிட்டேன்.


    தூங்குங்க தூங்குங்க

    ReplyDelete
  26. நண்டு @நொரண்டு -ஈரோடு said...
    பயனுள்ள தகவல்.
    பகிர்வுக்கு நன்றி .
    வாழ்த்துக்கள்.//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  27. K.s.s.Rajh said...
    நிம்மதியான தூக்கத்தை தொலைத்து பல காலம் ஆகிவிட்டது பாஸ்

    உங்கள் குறிப்புக்கள் அருமை//

    நன்றி நண்பா

    ReplyDelete
  28. RAMVI said...
    நிம்மதியாக தூங்க நல்ல குறிப்புகள்.நன்றி ரமேஷ், பகிர்வுக்கு.//

    நன்றி சகோதரி

    ReplyDelete
  29. MANO நாஞ்சில் மனோ said...
    தூக்கமில்லாமல் கஷ்ட்டப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிவரும் நேரத்தில் சிறப்பான பதிவை தந்து நிம்மதியாக தூங்க வைத்துவிட்டீர்கள்...//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  30. கவிதை வீதி... // சௌந்தர் // said...
    நல்லதொரு அருமையான பதிவு...

    தூக்கம் சரியான இருந்துவிட்டால் மனிதனுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது...//


    நன்றி நண்பரே

    ReplyDelete
  31. r.v.saravanan said...
    தூக்கம் வர இத்தனை வழிகளா நன்றி நண்பா //


    நன்றி நண்பரே

    ReplyDelete
  32. சென்னை பித்தன் said...
    நன்று;நன்றி.
    த.ம.9//

    நன்றி ஐயா

    ReplyDelete
  33. கோமதி அரசு said...
    நல்ல பதிவு.

    தூக்கம் மனிதனுக்கு மிகவும் அவசியம்.
    அது இல்லையென்றால் எல்லா நோய்களும் தொற்றிக் கொள்ளும்.

    படுத்தவுடன் தூங்கும் பழக்கம் உள்ளவர்களை கொடுத்து வைத்தவர்கள் என்பார்கள்.

    நீங்கள் சொன்னதை கடைபிடித்து நிம்மதியாக தூங்கலாம்.
    நன்றி.//

    விரிவான விளக்க கருத்திற்கு நன்றி சகோ

    ReplyDelete
  34. Arumaiyana Alosanaigal. Nanri Sago.
    Tamilmanathil vote poda muyanren. Mudiya villai. Konja Neram kalithu pottu paarkiren.

    ReplyDelete
  35. துரைடேனியல் said...
    Arumaiyana Alosanaigal. Nanri Sago.
    Tamilmanathil vote poda muyanren. Mudiya villai. Konja Neram kalithu pottu paarkiren.


    நன்றி நண்பரே

    ReplyDelete
  36. நல்ல பதிவு.. ஆனா இந்த மறுமொழி போடுறப்போ மணி 1.27 am.
    ரொம்ப வருசமா ராத்திரி 2 மணிக்கு படுத்து காலை 7 மணிக்கு எழுந்திருப்பது வழக்கமாய்டிச்சு .
    பொழப்பு அப்படி இருக்கு. முதல்லே எல்லா கேசையும் எடுத்துகிறதை குறைக்கணும். போதும், கிளைண்டுக்காக வாழ்ந்தது..!

    ReplyDelete
  37. Advocate P.R.Jayarajan said...
    நல்ல பதிவு.. ஆனா இந்த மறுமொழி போடுறப்போ மணி 1.27 am.
    ரொம்ப வருசமா ராத்திரி 2 மணிக்கு படுத்து காலை 7 மணிக்கு எழுந்திருப்பது வழக்கமாய்டிச்சு .
    பொழப்பு அப்படி இருக்கு. முதல்லே எல்லா கேசையும் எடுத்துகிறதை குறைக்கணும். போதும், கிளைண்டுக்காக வாழ்ந்தது..!//

    வாருங்கள் நண்பரே தங்களின் வருகைக்கு மிக்க நன்றி ,தொடர்ந்து வாருங்கள் நண்பரே

    ReplyDelete
  38. வணக்கம் நண்பரே,
    இன்றைய அவசர உலகத்தில் எல்லாமே சீக்கிரம் கிடைக்குது
    தூக்கத்தை தவிர,
    அதன் பொருட்டு, நிம்மதியான தூக்கம் வருவதற்கு
    அழகான பதிவொன்றை அளித்தமைக்கு
    நன்றிகள் பல.

    ReplyDelete
  39. ரென்சன் நிறைந்த அவசர உலகில் தூக்கமின்மை இன்று பலருக்கும் பெரும் பிரச்சனையாக உள்ளது. பயனுள்ள தகவல்களிற்கு நன்றி..

    ReplyDelete
  40. உடல் நலத்துக்கு அவசியமான குறிப்புகள் சொல்லியிருக்கீங்க. வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  41. அருமை! வாழ்த்துக்கள்!
    பல நாட்கள் கழித்து பதிவுகளைப் படிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது...
    பகிர்விற்கு நன்றி!
    படிக்க! சிந்திக்க! :
    "உங்களின் மந்திரச் சொல் என்ன?"

    ReplyDelete
  42. எனக்கு மிகவும் தேவையான பதிவு.நன்றி அன்பு !

    ReplyDelete
  43. நல்ல பதிவு...

    இரவு தூங்கும் போது திடீரென நெஞ்சு எரிச்சல் ஏற்பட காரணம் என்ன என்று யோசிப்பது உண்டு.. புரிய வைத்து விட்டீர்கள்!!
    நன்றி!

    ReplyDelete
  44. நண்பரே,
    தங்களின் இந்த பதிவிற்காக "லிப்ஸ்டர் பிளாக் (Liebster Blog)"விருதினை அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    எனது அவிழ்மடல் பெறும் முதல் விருது - லிபெஸ்டர் பிளாக் (Liebester Blog) - நண்பர்களுக்கு நன்றி! பதிவிற்கு வருகை புரிந்து விருதினைப் பெற்றுக் கொள்ளும் படி அன்புடன் அழைக்கிறேன்!

    ReplyDelete
  45. எனக்கு தூக்கம் நன்றாக வருது ஆனா ஆழ்ந்த தூக்கம் இல்லை காலைல எழுந்தா தூங்கன மாரியே இல்ல என்ன செய்ய

    ReplyDelete
  46. நான் தூக்கத்தை இழந்து மரண வேதனை படுகிறேன் உங்களுடைய பதிவு என்னை தூங்க வைத்தால் உங்களுக்கு கேடான கோடி நன்றிகள்

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே