Wednesday, December 21, 2011

கோதுமைப் புல்லின் மகிமை

முந்தய பதிவின் தொடர்ச்சி ........


முந்தய பதிவு படிக்காதவர்கள் இங்கே சென்று படித்துக்
கொள்ளவும்.


கோதுமைப் புல்லில் எல்லா தாதுப் பொருள்களும் இருக்கின்-
-றதாம். இதிலிருக்கும் மக்னீசியம் ஏறத்தால செரிமானத்திற்கு
உதவும் 30 என்சைம்களை உசுப்பி விடுகிறதாம்



இதிலிருக்கும் வைட்டமின்கள் ஈ , ஏ , சி செல்கள் கிழடு தட்டி
போவதை தடுக்கிறதாம் .


இதிலிருக்கும் குளோரொஃபில்லில் இருக்கும் உயிறுள்ள 
என்சைம்கள் உடலில் புற்று நோய் செல்களை அழிக்க 
வல்லவையாம்


இதிலுள்ள வைட்டமின் E  இருதயம் ரத்தக் குழாய்கள் ஆகிய
வற்றிற்கு மிக நன்மை உண்டாக்கும்


இதில் உள்ள வைட்டமின் B17 (laetriel) புற்று நோயைக்
குணப்படுத்தும் ஒரே வைட்டமினாம்.


ஏறத்தால 23 கிலோ பச்சைக் காய்கறிகளில் கிடைக்கக்
கூடிய சத்துக்களை ஒரு கிலோ கோதுமைப் புல்லில் 
பெற்று விடலாமாம்


சரி இப்பிடி முக்கியத்துவம் வாய்ந்த கோதுமைப் புல்லை
எப்பிடி நாம் பெறுவது, இதனை நாமே வளர்க்கலாம்






கோதுமைப் புல் வளர்ப்பு மற்றும் உபயோகம்


தேவையானவை


செடிகளை நடும் தொட்டி 7
நாள் ஒன்றுக்கு 100 கிராம் வீதம் 7 நாளைக்கு தேவையான 
நல்ல கோதுமை 700 கிராம் + பொறுமை


தொட்டியானது ஒரு சதுர அடித்தொட்டி 3 அங்குலம் ஆழம் 
உடையதாய் ஒருந்தால் போதும்,


இந்த ஏழு தொட்டிகளில் முக்கால் பங்கு மண்ணை நிரப்பி
சற்று நீர் தெளித்து நேரடியாக சூரிய வெளிச்சம் படாத
இடத்தில் வைக்கவும்


முதலில் 100 கிராம் கோதுமையை நல்ல சுத்தமான தண்ணீரில்
ஊறப் போட்டு ,பின்பு அதை எடுத்து ஒரு ஈரத் துணியில் இறுக 
முடிந்து தொங்க விட்டு விடுங்கள் .


இந்த நிலையில் மேலும் 12 மணி நேரம் இருக்க வேண்டும்.
அப்பிடி இருந்தால் கோதுமை முளை கட்டி இருக்கும்.


முதல் தொட்டியில் இந்த முளை கட்டிய கோதுமையை
லேசாக விதைத்து மேலே மண்ணால் மூடி விடவும்.


இதே போல் அடுத்தடுத்த நாட்களில் ஒவ்வொரு தொட்டியாக
விதைக்க வேண்டும்.


தினமும் எல்லாத் தொட்டிகளுக்கும் காலை , மாலை இரு
வேளைகளிலும் சிறிதளவு தண்ணீர் தெளித்து வரவும்


எட்டாவது நாள் பார்த்தால் முதல் தொட்டியில் கோதுமைப்
புல் 5 அங்குலம் உயரம் வளர்ந்திருக்கும் .


புல்லை ஒரேடியாகப் பிடிங்கி விடாமல் சிறிது விட்டு
மீதிப் புல்லை ஒரு கத்திரிக் கோலால் வெட்டி எடுக்கவும்


100 கிராம் கோதுமை விதைத்துக் கிடைக்கும் புல்லில் 4
அல்லது 6 அவுன்ஸ் சாறு கிடைக்கும்.


ஒருவருக்கு ஒரு நாளைக்கு இந்த அளவு சாறு போது
மானது


கோதுமைப் புல்லை 5 அங்குலத்திற்கு மேல் வளரவிட்டால்
அதன் பின் நீளமாக வளரும் புல்லில் அதன் குளோரொஃபில்லின்
தரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும்


சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் போட்டு அரைத்தெடுத்து
வடிகட்டி எடுத்தால் பசுமையான வீட்கிராஸ் ஜூஸ் மணக்கும்


லேசாய் சர்க்கரை கலந்தோ அல்லது வேறு பழச்சாறுகளில்
கலந்தோ இதைக் குடிக்கலாம்


காலை , மாலை இரு வேளையும் பகிர்ந்து இதனை குடிக்கலாம்


மறுநாள் அடுத்த தொட்டி ,அதற்கு மறுநாள் அடுத்த தொட்டி என
ஏழு தொட்டியும் முடிந்து எட்டாவது நாள் முதல் தொட்டியில் 
இருந்து ஆரம்பிக்கவும்


கொஞ்ச நாளைக்கு அப்புறம் புல்லின் வளர்ச்சி குறையும் பொழுது 
தொட்டியில் உள்ளதை வேறோடு பிடுங்கி எடுத்து விட்டு முன் போல்
கோதுமை முளை கட்டிப் பயிர் செய்யலாம்


எடுத்த உடனே அதிகளவு ஜூஸ் குடிக்க கூடாது ,சிலருக்கு அது 
சேராமல் பேதி ஆகலாம், வாந்தி வரலாம், சளி பிடிக்கலாம்
ஜுரம் வரலாம், இதனால் பீதி ஆகாமல் சாப்பிடுவதை சிலநாள்
நிறுத்தி விட்டு அந்த உபாதைகள் அடங்கியதும் மீண்டும் 
ஆரம்பிக்கலாம்

10 அல்லது 15 நாட்கள் 50 மி.லி குடித்துப் பழக்கப்படுத்திக் 
கொண்ட பிறகு 100, 150 மி.லி என்று டோசோஜைக் 
கூட்டிக் கொள்ளவும்.

முக்கிய விசயங்கள் :


ஒன்று - ஜூஸ் குடித்த அரை மணி நேரத்திற்கு வேறு எதையும்
பருகக் கூடாது.
இரண்டு - முளை கட்டிய கோதுமை விதைக்கும் பொழுது 
மண்ணிற்கு கெமிக்கல் உரம் எதையும் பயன்படுத்தக் கூடாது
பசுஞ்சாணி உரமே சிறந்தது.



நன்றி



நன்றி :


படம் இணையத்திலிருந்து
தகவல் "" ஆரோக்கியத்தின் திறவுகோல் "" எனும் புத்தகத்திலிருந்து

35 comments:

  1. நல்ல பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. Rathnavel said...
    நல்ல பதிவு.
    வாழ்த்துகள்.//

    உடன் வரவிற்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா

    ReplyDelete
  3. பயனுள்ள தகவல்.
    பகிர்வுக்கு நன்றி .
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. மாப்ள..பயனுள்ள தகவல்..வளர்ப்பும் சேர்த்து சொன்னது அழகு!

    ReplyDelete
  5. விஞ்ஞானப் பூர்வமாக அதன் பலன் குறித்துச் சொன்னதோடு அல்லாமல்
    அதை பியிரிடும் முறை குறித்தும் பதிவிட்டிருந்தது
    மிகவும் பயனுள்ளதாக உள்ளது
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம3

    ReplyDelete
  6. பயனுள்ள தகவல்கள் பாஸ்

    ReplyDelete
  7. பயன் பற்றிய விளக்கமும்
    செய்முறைவிளக்கமும்
    நன்று!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  8. பதிவு பயனுள்ளது.செய்முறை விளக்கம் அருமை...செய்து பார்ப்போம்

    ReplyDelete
  9. அற்புத தகவலுக்கு நன்றிகள் அண்ணே ..
    தொடருங்க ...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. நண்டு @நொரண்டு -ஈரோடு said...
    பயனுள்ள தகவல்.
    பகிர்வுக்கு நன்றி .
    வாழ்த்துக்கள்.//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  11. விக்கியுலகம் said...
    மாப்ள..பயனுள்ள தகவல்..வளர்ப்பும் சேர்த்து சொன்னது அழகு!//

    நன்றி மாம்ஸ்

    ReplyDelete
  12. Ramani said...
    விஞ்ஞானப் பூர்வமாக அதன் பலன் குறித்துச் சொன்னதோடு அல்லாமல்
    அதை பியிரிடும் முறை குறித்தும் பதிவிட்டிருந்தது
    மிகவும் பயனுள்ளதாக உள்ளது
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம3//

    அன்பான கருத்திற்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  13. K.s.s.Rajh said...
    பயனுள்ள தகவல்கள் பாஸ்//


    நன்றி நண்பா

    ReplyDelete
  14. புலவர் சா இராமாநுசம் said...
    பயன் பற்றிய விளக்கமும்
    செய்முறைவிளக்கமும்
    நன்று!//

    நன்றி ஐயா

    ReplyDelete
  15. கோவை நேரம் said...
    பதிவு பயனுள்ளது.செய்முறை விளக்கம் அருமை...செய்து பார்ப்போம்//


    நன்றி நண்பரே

    ReplyDelete
  16. அரசன் said...
    அற்புத தகவலுக்கு நன்றிகள் அண்ணே ..
    தொடருங்க ...வாழ்த்துக்கள்//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  17. பயனுள்ள தகவல் நன்றி நண்பா

    ReplyDelete
  18. r.v.saravanan said...
    பயனுள்ள தகவல் நன்றி நண்பா//


    நன்றி நண்பரே

    ReplyDelete
  19. கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி, விவசாயி நீங்க அருமை அருமை மக்கா...!!!

    ReplyDelete
  20. கொதுமைப்புல் கேள்விப்பட்டிருக்கேன். இன்னைக்கு தான் அதன் பயன்களை அறிந்து கொண்டேன்...


    வாசிக்க:
    ஈரோடு பதிவர் சங்கமம்: பதிவர்களின் அட்டகாச அலப்பரை...

    ReplyDelete
  21. நல்ல பதிவு.

    நான் கொலு வைக்கும் போது பார்க்கில் புல் தேவைக்கு இப்படிதான் கோதுமையை முளைகட்டி பயன் படுத்துவேன்.

    ReplyDelete
  22. பயனுள்ள தகவல்.
    பகிர்வுக்கு நன்றி .

    ReplyDelete
  23. MANO நாஞ்சில் மனோ said...
    கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி, விவசாயி நீங்க அருமை அருமை மக்கா..//


    ஹா ஹா தங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  24. தமிழ்வாசி பிரகாஷ் said...
    கொதுமைப்புல் கேள்விப்பட்டிருக்கேன். இன்னைக்கு தான் அதன் பயன்களை அறிந்து கொண்டேன்...


    நன்றி நண்பரே

    ReplyDelete
  25. கோமதி அரசு said...
    நல்ல பதிவு.

    நான் கொலு வைக்கும் போது பார்க்கில் புல் தேவைக்கு இப்படிதான் கோதுமையை முளைகட்டி பயன் படுத்துவேன்.//

    நன்றி சகோ

    ReplyDelete
  26. மாலதி said...
    பயனுள்ள தகவல்.
    பகிர்வுக்கு நன்றி .//

    நன்றி சகோதரி

    ReplyDelete
  27. பயனுள்ள தகவல்.நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  28. த.ம.8
    பயனுள்ள பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  29. RAMVI said...
    பயனுள்ள தகவல்.நன்றி பகிர்வுக்கு.//

    நன்றி சகோதரி

    ReplyDelete
  30. சென்னை பித்தன் said...
    த.ம.8
    பயனுள்ள பகிர்வுக்கு நன்றி.

    நன்றி ஐயா

    ReplyDelete
  31. பயனுள்ளதும் புதுமையான தகவல்களும்.நன்றி !

    ReplyDelete
  32. ஹேமா said...
    பயனுள்ளதும் புதுமையான தகவல்களும்.நன்றி //

    நன்றி சகோதரி

    ReplyDelete
  33. கோதுமையை முளைகட்டுதல் எவ்வாறு

    ReplyDelete
  34. கோதுமை புல் சாறு எத்தனை நாள் வைத்திருக்கலாம்

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே