Sunday, December 18, 2011

அருகம்புல் அருமை தெரியும் கோதுமைப் புல் அருமை தெரியுமா ?

கோதுமைப் புல்லால் பயன்






இருதயம் , ரத்த சம்பந்தமான நோய்கள் , மூச்சுத் தொடர்பான
நோய்கள் , ஜீரண உறுப்புகள் , பற்கள் , மூட்டுகள் , மூளை ,நரம்பு
தோல், காது , ஜனன உறுப்புகள், சிறுநீரகங்கள் இவை தொடர்பான
நோய்கள் மற்றும் குறைபாடுகள் ஆகியவற்றை
குணப்படுத்துகிறதாம்.



அதாவது இது ஒரு சர்வரோக நிவாரணியாம்


எல்லாப் பசுமையான செடி கொடிகளிலும் குளோரோஃபில் 
இருக்கிறது என்றாலும் கோதுமைப் புல்லில் இருப்பது தனி 
ஸ்பெசல் 


அதாவது மனித ரத்தத்தின் ரத்த சிவப்பனுக்களில் இருக்கும் 
' ஹெமின் ' என்ற பொருளும் கோதுமைப் புல்லின் குளோரோ -
ஃபிலும் ஏறத்தாழ ஒரே அனுத்திறன்மை கட்டமைப்பில் 
இருக்கிறதாம் .


அதாவது வேதியியல் ஆக்க அமைப்பில் இரண்டும் பெருமளவு 
ஒத்தே இருக்கிறதாம் .


நமது ரத்தத்தின் காரத்தன்மை ,கோதுமைப் புல்லின் காரத்
தன்மையும் ஒன்றாம் . அதாவது ரத்தத்தின் ஹைட்ரஜன் 
மூலக்கூறு எண்ணும்(PH) கோதுமைப் புல் சாறின் எண்ணும் 
7.4 தானாம் .


ஆகையால் இதனை குடித்த உடன் நம் ரத்தத்தில் சடக் 
என்று சேர்ந்து விடுகிறதாம் .


மிக வேகமாக ,எளிதாக அதிலுள்ள வைட்டமின்கள் ,
தாதுப்பொருட்கள் உட்கிரகிக்கப் பட்டு விடுகிறதாம் .


இதில் உள்ள உயர் அளவு குலோரோஃபில் ரத்தத்தில் 
உள்ள நோய் நுண்மங்களை எளிதில் அழிக்க வல்லதாம் 


மேலும் ரத்தத்திலுள்ள அசுத்தங்களை அகற்றி வெளியே 
தள்ளுகிறது .


தினமும் இந்த சாறை அருந்தி வந்தால் உண்ணும உணவு 
எளிதில் ஜீரணம் ஆகிறது.


உடலில் உள் உருப்புகளில் இருக்கும் அனைத்து கசடுகளையும் 
இது உருட்டி திரட்டி வெளியே அனுப்பி உடலை 
புத்துணர்ச்சியாக வைக்கிரதாம் .


இதன் தொடர்ச்சி நாளை .........


நன்றி 


17 comments:

  1. கோதுமைப் புல்லுக்கும் மகிமை உண்டென தெரியவைத்ததற்கு நன்றி..வாழ்த்துகள்..

    ReplyDelete
  2. கோதுமை புல்லில் கூட இவ்வளவு விசயங்களா நண்பா ஒவ்வொரு பதிவிலும் பட்டையை கிளப்பறீங்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. ஆஹா! அருமை!
    பகிர்விற்கு நன்றி நண்பரே!
    என் வலையில்:
    "நீங்க மரமாக போறீங்க..."

    ReplyDelete
  4. அடடடடா கோதுமை புல்லில் மருந்தா ஆச்சர்யமா இருக்கேய்யா, ம்ம்ம் இன்னும் சொல்லுங்க சொல்லுங்க...!!!

    ReplyDelete
  5. மதுமதி said...
    கோதுமைப் புல்லுக்கும் மகிமை உண்டென தெரியவைத்ததற்கு நன்றி..வாழ்த்துகள்..//


    தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  6. r.v.saravanan said...
    கோதுமை புல்லில் கூட இவ்வளவு விசயங்களா நண்பா ஒவ்வொரு பதிவிலும் பட்டையை கிளப்பறீங்க வாழ்த்துக்கள்//


    தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  7. திண்டுக்கல் தனபாலன் said...
    ஆஹா! அருமை!
    பகிர்விற்கு நன்றி நண்பரே!

    நன்றி நண்பரே

    ReplyDelete
  8. MANO நாஞ்சில் மனோ said...
    அடடடடா கோதுமை புல்லில் மருந்தா ஆச்சர்யமா இருக்கேய்யா, ம்ம்ம் இன்னும் சொல்லுங்க சொல்லுங்க..//


    தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  9. நன்றி மாப்ளே!

    ReplyDelete
  10. ஊரிலிருக்கும்போது தாத்தா அறுகம்புல் சாறு குடித்ததைக் கண்டிருக்க்கிறேன் !

    ReplyDelete
  11. அருமையான தகவல் சகோ.
    பகிர்வுக்கு நன்றி .
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. புது செய்தி கோதுமை புல்லின் பயன்.

    நன்றி.

    ReplyDelete
  13. இதுவரை கேள்விப்படாத அரிய தகவல்.நன்றி ரமேஷ்.

    ReplyDelete
  14. கோதுமை புல் இப்பொழுதுதான் கேள்விப் படுகிறேன்.நல்ல தகவல்.நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  15. கோதுமை புல் ஹ்ம் நடத்துங்க..

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே