சம்பா அரிசிக் கஞ்சி
தன்மை : குளிர்ச்சியும் , சிலிர்ப்பும் ஆகும்
நன்மை : குடலிலும் , தீனிப்பையிலும் சூட்டை அகற்றும்
நோய் : நீரை அதிகமாக விளைவிக்கும் , மூத்திரப் பெருக்கு
உண்டாக்கும் , குளிர்ந்த உடலுக்கு காற்று அதிகரிக்கும்
மாற்று : குல்கந்து , புதினா இலை
நாட்டுக் கோதுமை அரிசியின் கஞ்சி
தன்மை : குளிர்ச்சியும் , வறட்சியும் ஆகும்
நன்மை : சூட்டை அகற்றும், குடலுக்கு பலம் கொடுக்கும்
எலும்புருக்கிக் காய்ச்சலுக்கும் , ஈளை இருமலுக்கும்
ஈரல் சம்பந்தம்மான சூட்டுக்கும் பயன்படும்,பத்தியத்திற்கு
உதவும்,
நோய் : வயிறு உப்பும் , மந்திக்கும் , காற்றை உண்டு பண்ணும்
மாற்று : குல்கந்து , பனி நீர்
பச்சை பயறு அல்லது உளுத்தம் பயறு கஞ்சி
தன்மை : குளிர்ச்சியும் , சிலிர்ப்பும் ஆகும்
நன்மை : சூட்டை அகற்றும் , பலஹீனருக்கும் ,சூட்டு உடலுக்கும்
சுரத்துக்கும் , ஆகும். இதில் மாமிசம் சேர்த்துக் கொண்டால் அதிக
புஷ்டி கொடுக்கும்
நோய் : குளிர்ச்சி சம்பந்தமான உடல் உடையவர்களுக்குப்
பயன்படாது
மாற்று : சுக்கு , சீரகம் , வெள்ளுள்ளி (வெண் பூண்டு)
பால் கஞ்சி
தன்மை : குளிர்ச்சியும் , சிலிர்ப்பும் ஆகும்
நன்மை : உடலில் உள்ள சூட்டை மாற்றும் , பலம் உண்டாக்கும்
உடலில் உள்ள உள் புண்களை ஆற்றும் . நீர்ச்சுருக்கை மாற்றும்
நோய் : தீனிப் பைக்கும் ஈரலுக்கும் ஆகாது ,நீர் பெருகும்
மாற்று : கற்கண்டு , வெள்ளைச் சர்க்கரை
கொள்ளுக் கஞ்சி
தன்மை : சூடும் , வறட்சியும் ஆகும்
நன்மை : களைப்பு தீரும் , உடல் வலிப்பைத் தீர்க்கும் ,உடல்
ஸ்தூலத்தை மாற்றும் . நீர்த்தாரையில் விளையும் கற்களைப்
பொடியாக்கி விடும் , நீர்ப்பெருக்கை மாற்றும்
நோய் : சூடு அதிகரிக்கும்
மாற்று : நெய் ,பால் , வெண்ணெய்
பச்சை அரிசிக் கஞ்சி
தன்மை : குளிர்ச்சியும் , சிலிர்ப்பும் ஆகும்
நன்மை : உடல் தழைக்கும் , சூட்டை அகற்றும் , வலிமை
உண்டாகும், பசியை அடக்கும் ,அழகு உண்டாகும்
நோய் : மந்திக்கும் , நீரைப் பெருக்கும் , வயிறு வலிக்கும்
மாற்று : நெய் , பால் , சர்க்கரை
தொடரும் ....................
வணக்கம் பாஸ் இனிய காலை வணக்கம்
ReplyDeleteஎனக்கும் கஞ்சி ஒரு பிடித்தமான உணவு
அருமையான பகிர்வு
இன்று ...
ReplyDeleteசிறந்த தொழில்நுட்ப வலைத்தளம் விருது .
கஞ்சிகளின் பலன்கள் அறிந்து கொண்டேன், நன்றி.
ReplyDeleteயாருக்குத்தான் கஞ்சி பிடிக்காது என்று நான் கூறுகிறேன். எனக்கு மிகப் பிடிக்கும். ம்..ம்.ம்...
ReplyDeleteமிக்க நன்றி...புத்தாண்டு வாழ்த்தகளுடன்.இடுகைக்கும் வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
மிக அருமை நண்பா...
ReplyDeleteநான் இன்றைக்கு பச்சரிசி கஞ்சியும், நார்த்தங்காய் ஊறுகாயும் சாப்பிட்டேன், உங்கள் தகவல் படித்து அதன் நன்மைகள் அறிந்து கொண்டேன் நன்றி...!!!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅண்ணே வணக்கம் ..
ReplyDeleteபல தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது ...
நன்றிங்க அண்ணே
அருமையான தகவல் நன்றிங்க
ReplyDeleteபயனுள்ள பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteத.ம.5
இவ்வளவு கஞ்சி வகைகளா?? அருமையான பயனுள்ள தகவல்கள்.நன்றி பகிர்வுக்கு.
ReplyDeleteகஞ்சிகளின் பலனும் மாற்றும் சூப்பர்! மற்ற கஞ்சிகளுக்காக வெயிட்டிங்!
ReplyDeleteவகை வகையான பயனுள்ள தகவல்கள்... மிக்க நன்றிகள்.
ReplyDeleteசிவப்பு அரிசிக் கஞ்சி மிகவும் பிடிக்கும் எனக்கும் !
ReplyDeleteகருத்திட்ட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
ReplyDelete