பதிவுலகம் காலடிவைத்து ஒன்பதாவது மாதம் நடக்கிறது
இந்த ஒன்பது மாதத்தில் அருமையான அன்பான
உறவுகள் பல பெற்றேன் ,அவர்களின் அன்பு
மழையில் நனைந்தேன்
200 பதிவுகளுக்கு மேல் பதிவு வெளிவந்து
2 லட்சத்திற்கு மேல் ஹிட்சும் பெற்று
2 வது இடம் தமிழ்மணம் தொட்டு
தடங்களின்றி அருமையாக பயணம் செய்தது
இந்த அன்பு உலகம்
அதற்கு தங்களின் அன்பான ஒத்துழைப்பும்
ஆதரவும் தான் நட்புக்களே
அதற்கு எனது மனப்பூர்வமான
நன்றி நன்றி நன்றி
தற்காலிகமாக தங்களிடமிருந்து விடைபெறுகிறேன்
என்னை பின்தொடரும் நட்புக்களுக்கும் ,மற்றும் எமது
அன்பு உலகம் வந்து பதிவுகளை படித்து சென்ற
அனைவருக்கும் எமது நன்றிகள்
அனைவரும் எல்லா வளமும் பெற்று மகிழ்வோடு வாழ
இறைவனை வேண்டிக்கொண்டு..
வாய்ப்பிருந்தால் திரும்ப வருகிறேன் எனக் கூறிக்கொண்டு
உங்களை பிரிய மனமில்லாமல் பிரிந்து செல்லும்
உங்கள் நண்பன்
மு . ரமேஷ்
வாழ்க வளமுடன்
பதிவு படித்து வருத்தமாக உள்ளது
ReplyDeleteஎன்ன காரணம் என்றே சொல்ல வில்லை நண்பரே. எழுத துவங்கியவர்களால் அதை முழுவதும் விடுவது சிரமம். மீண்டும் வந்து எழுதுவீர்கள் என நம்புகிறேன்
நண்பரே! தாங்கள் மீண்டும் வந்து எழுதுவீர்கள் என நம்புகிறேன்.
ReplyDeleteபயனுள்ள பதிவுகள் மட்டுமே
ReplyDeleteதந்து கொண்டுஇருக்கும் தாங்கள்
விடைபெருவது பதிவுலகிற்கு
குறிப்பாக என்போன்ற தங்கள் தீவீர ரசிகருக்கு
கொஞ்சம் பாதிப்பாகத்தான் இருக்கும்
மற்றபடி தங்கள் சூழல் குறித்து முடிவு செய்து
முடிகிற போது பதிவுகள் தரவும்
அன்புடன்
என்னாச்சு நண்பரே!
ReplyDeleteஉங்கள் பல பதிவுகள்,ஏன் கிட்ட தட்ட எல்லா பதிவுகளும் படிக்கும் ஒருவருக்காவது பயன் தரக்கூடியவை.
நிச்சயம் தொடர்ந்து எழுதுங்க........
யோவ் மாப்ள என்னய்யா ஆச்சு... நேரமின்மையா இருந்தா டெய்லி போடுவதற்கு பதில் வாரத்துக்கு ஒண்ணாவது போடுய்யா.... மிகவும் பயனுள்ள மருத்துவக்குறிப்புகள்....
ReplyDeleteநண்பா, நாங்கல்லாம் எழுதுறது யாருக்குமே அவ்வளவு உபயோகமா இருக்காது ஆனால் உங்கள் பதிவுகள் மனிதனுக்கு உருப்படியாக உபயோகமாகும் மருத்துவ குறிப்புகளாகும், இதை ஒரு சேவையாக நினைத்து தொடர விரும்புகிறேன்...!!!
ReplyDeleteமன்னிக்கவும், நான் இந்த பதிவுக்கு ஓட்டும், லைக்கும் போட இயலாத நிலை மன்னிக்கவும்.
ReplyDeleteமீண்டும் நேரம் கிடைக்கிம் போது அருமையான மருத்துவக் குறிப்புக்களைத் தொடர்ந்து தாருங்கள்!
ReplyDeleteநிறைய பயனுள்ள தகவல்களை கொடுத்தீர்களே? ஏன் திடீரென்று இப்படி ஒரு முடிவு?ஓய்வு கிடைக்கும் பொழுது எழுதம் முயற்சி செய்யுங்கள்.நன்றி.
ReplyDeleteஉங்கள் பதிவுகள் பயனுள்ளவையாக இருந்தன. எப்படியும் மீண்டும் வருவீர்கள் என நம்புகிறேன்.
ReplyDeleteபுத்தாண்டில் இதென்ன சோதனை...உங்க பதிவு கள் அனைத்தும் அருமை...இப்போ ஏன் விடை பெறுகிறீர்கள் ..?
ReplyDeleteஇறைவன் உங்களை மீண்டு வந்து நல்ல பதிவுக்ளை தர வைப்பார்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
பயனுள்ள குறிப்புகள் இனி கிடைக்காதா?
ReplyDeleteநண்பா.....
வாரம் ஒரு முறை எழுதலாமே....
மீண்டும் வருவீர்களென்ற நம்பிக்கையோடு தற்காலிக விடைபெறுதல் மட்டுமே !
ReplyDeleteவணக்கம் பாஸ் திடீர் என்று நீங்கள் பதிவுலகை விட்டு போவது மிகவும் கஸ்டமாக இருக்கு மனோ அண்ணன் சொன்னமாதிரி எங்கள் பதிவுகள் பெரும்பாலும் பிரயோசனம் இல்லாதவை பொழுது போக்கிற்காக மட்டுமே.
ReplyDeleteஆனால் உங்கள் பதிவுகள் அப்படி இல்லை ஓவ்வொன்றும் பலருக்கு பயன் படும் பதிவுகள் மீண்டும் வருவீர்கள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றேன் மீண்டும் வந்து பதிவுலகில் கலக்க வாழ்த்துக்கள்
’தற்காலிகமாக’ என்று சொன்னது ஆறுதலாக இருக்கிறது.நிச்சயம் திரும்பி வருவீர்கள்,ரமேஷ்.வாழ்த்துகள்.
ReplyDeletecome back sooooooooooooon..........
ReplyDeleteWeekly oru pathivavathu podunga pls. Ithu en anbu kattalai Sago.
ReplyDeleteஎன்ன ரமேஸ் திடீரென இப்படி ஒரு முடிவு, இப்போதான் மாயா விடைபெறுகிறேன் என்றார், இப்போ நீங்க? பழகியவர்கள் காணாமல் போகும்போது மனம் எம்மையறிமாமல் கனக்கிறது...
ReplyDeleteவணக்கம் ரமேஷ்!உங்கள் பதிவுகள் காலத்தால் அழிக்க முடியாதவை!மீண்டு(ம்)வருவீர்கள் என எதிர்பார்த்து.............................
ReplyDeleteவணக்கம் நண்பரே, தொடர்ந்து நல்ல பதிவுகள் தந்த உங்களின் இந்த திடீர் முடிவு சற்று கவலை தருகிறது. ஆயினும் பிறக்கும் புதுவருடத்தில் உங்கள் எண்ணங்கள் யாவும் ஈடேறி இனிதே வாழ வாழ்த்துகிறேன். நேரம் கிடைக்கும்போது இடியிடையே பதிவிட முயலுங்கள்.
ReplyDeleteஎன்ன காரணமோ
ReplyDeleteஎதுவோ விளங்கவில்லை...
தங்களின் பணி நிமித்தமோ
இல்லையேல் சொந்தக் காரணங்கள்
எதுவாயிருந்தாலும்
விரைவில் வர முயற்சி செய்யுங்கள் நண்பரே..
பயனுள்ள பதிவுகளை அள்ளி அள்ளி தருபவர்கள் நீங்கள்...
நீண்ட காலம் ஒதுங்கி விடவேண்டாம்.
அதுவரை எங்கள் அன்பு உங்கள் நெஞ்சில் நிலைத்திருக்கட்டும்...
கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துகிட்டு திரும்ப வாங்க :-)
ReplyDeleteமீண்டும் வந்து எழுதுவீர்கள் என நம்புகிறேன்
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...மறுபடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் சந்தோசம்..
ReplyDeleteComeback soon Ramesh!
இன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.முடிந்தால் பாருங்கள்.
ReplyDeleteஅன்பின் ரமேஷ் - பயனுள்ள பல தகவல்கள் - பகிர்வினிற்கு நன்றி. இரண்டு இலட்சம் ஹிட்ஸ் - 200 பதிவுகள் - தமிழ் மனத்தில் இரண்டாவது இடம் - சற்றே சிந்திக்கவும் - நேரம் கிடைக்கும் போது எழுதுக - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteவணக்கம்.... உங்களுக்கும் உறவினர் நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஏனோ...?
ReplyDeleteநேரமின்மை காரணமோ..?
மீண்டும் வருக..
அன்புடன்.
மீண்டும் வருவீர்களென்ற நம்பிக்கையோடு தற்காலிக விடைபெறுதல் மட்டுமே !
ReplyDelete