Friday, February 3, 2012

மாய உலகம் ராஜேஷ் கண்ணீர் அஞ்சலி


கண்ணீர் அஞ்சலி


நண்பர்களே !


              நம்மோடு பதிவுலகில் சிலகாலம் வலம் வந்து நமது 
நெஞ்சில் நிரந்தரமாக குடி கொண்ட மாய உலகம் ராஜேஷ் ,
சிறிது நேரம் பழகினாலும் மனதில் நிற்கும்படி செய்யும் 
நல்ல குணம் கொண்ட நமது ராஜேஷ் பற்றி நமது 
அனைவருக்கும் தெரியும்


ராஜேஷ் நம்மை விட்டு கடந்த செவ்வாய் கிழமை அதிகாலை 3.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த மன
வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.




ராஜேஷ் உன் ஆத்மா சாந்தி அடையட்டும் 


வருத்தத்துடன்

79 comments:

  1. மனம் நொறுங்கிப் போனது
    திடீரெனப் பதிவைப் படித்ததும்
    அதிர்ந்து போனேன்
    அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்

    ReplyDelete
  2. என்னவாயிற்று? ஆழ்ந்த இரங்கல்

    ReplyDelete
  3. நம்ப முடியவில்லை...என்ன ஆச்சு...?

    கஷ்டமானாலும் இந்த செய்தியை பகிர்ந்ததுக்கு நன்றி நண்பரே...

    அவருடைய ஆன்ம சாந்திக்காக அனைவரும் வேண்டிக்கொள்வோம்...

    ReplyDelete
  4. அதிர்ச்சியடைந்தேன்.
    ஆழ்ந்த இரங்கல்.
    அவர் ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  5. அச்சோ என்ன ஆச்சு ?!! திடீர்னு இப்படி ஒரு செய்தி...மிகவும் வருத்தமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது...

    ராஜேஷ் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

    ஆழ்ந்த இரங்கல்கள்.

    ReplyDelete
  6. நம்பமுடியவில்லையே!

    ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள்...

    ReplyDelete
  7. மிக வருத்தமாக உள்ளது ;
    ஆழ்ந்த இரங்கல்
    அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் ;

    ReplyDelete
  8. மாயாஉலக ராஜேஷ் அவர்கள் ஆனமா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்.

    அவரை பிரிந்து வாடும் அவர் குடும்பத்தவர்களுக்கு மன ஆறுதலை அந்த இறைவன் வழங்க வேண்டும்.

    அவருக்கு என்ன உடம்புக்கு?

    ReplyDelete
  9. என்னால நம்பவே முடியல !!!!!!!!!!! :-( .

    அவருக்காகவும் , அவரை பிரிந்து வாடும் அவர் குடும்பத்துக்கும் எனது பிராத்தனைகள் .

    :-(

    ReplyDelete
  10. ??

    Unbelivabe.... :(

    May his soul rest in peace.

    ReplyDelete
  11. மிகவும் அதிர்ச்சியாக இருக்கு.
    என்னாச்சு??

    அவருடைய குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்..

    ReplyDelete
  12. மனம் விக்கித்துப் போனேன் நண்பரே..
    சிறிதுகாலம் நம்மோடு இருந்தாலும் தவறாது வந்து
    கருத்துக்களால் நம்மை மகிழ்வித்தவர்.
    எனக்கு வலைத்தளம் பற்றிய நிறைய
    சந்தேகங்களை தீர்த்து வைத்தவர் நண்பர் ராஜேஷ்...

    என் வாழ்நாள் உளமட்டும் நண்பர் ராஜேஷின் நினைவுகள் வாழும்..
    நண்பரின் ஆத்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறட்டும்..

    ReplyDelete
  13. என்னால் முடியவில்லை ரமேஸ்ஸ்.... நான் அவரிடமே சொன்னேன்... எனக்குக் கிடைத்த உடன்பிறவா தம்பி நீங்க மாயா என.

    மிகவும் சந்தோசப்பட்டு பதில் போட்டார்... அனைத்து மெயில்களும் பத்திரமாக வைத்திருக்கிறேன்... அவரின் குடும்பத்தில் எதுவித பிரச்சனையுமில்லை, நன்றாகத்தானே இருந்தார்.. சபரிமலைகூட போய் வந்தாரே....

    எப்படி காலமானார்? ஏதும் சுகயீனமானாரோ திடீரென? முடிந்தால் சொல்லுங்கள் இல்லாவிட்டால் வேண்டாம், இப்ப அதுவெல்லாம் முக்கியமல்ல... முடியவில்லை.. மனதை தேற்ற முடியவில்லை..

    ReplyDelete
  14. உண்மையாகவா?அதிர்ந்து போனேன்!சும்மா கலாய்ப்புத் தான் என நினைத்தேன்.இடியையல்லவோ இறக்கி விட்டீர்கள்????அன்னார் குடும்பத்துக்கு எனது அனுதாபங்கள்.ஆத்மா சாந்திபெற இறைவனை இறைஞ்சுகிறேன்!

    ReplyDelete
  15. உண்மையாகவா என்னால் நம்ப முடியவில்லை.. மேலதிக விபரங்கள் தரலாமே?

    தம்பிக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்..!!

    ReplyDelete
  16. என்னாச்சு பாஸ் என்னால் நம்ப முடியவில்லை
    அவரின் ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கின்றேன்

    காட்டான் மாமா கேட்டது போல என்ன நடந்தது என்று மேலதிக விபரங்கள் தரலாமே?

    ReplyDelete
  17. வணக்கம் ரமேஷ்,

    என்னால் நம்பவே முடியவில்லை.

    நான் ராஜேஷ் உடன் போனில் கூட பேசியிருக்கிறேன்.

    பதிவுலகினை விட்டு போகிறேன் என்று அவர் சொல்லியதும், சினிமாவில் வாய்ப்பு பெற்று போய்விட்டார் என நினைத்தேன்.

    இப்படி ஓர் இடியை இறைவன் கொடுத்திருக்கிறானே!

    வேதனையாக இருக்கிறது.

    குறும்பிற்குப் பேர் போனவர்.
    அதே போல பல நடிகர்களின் மொழி நடையில் அவர் அதிரா அக்காவின் ப்ளாக்கில் கமெண்ட் போட்டது இன்றும் மனதில் நிற்கிறது.

    அண்ணர் என்ன காரணம்?
    என் பேஸ்புக்கிற்கு ஒரு மெசேஜ் போடுங்க ப்ளீஸ்..


    https://www.facebook.com/nirupan1

    இதோ என் பேஸ்புக் முகவரி

    ReplyDelete
  18. மிகுந்த அதிர்ச்சி. அவரது ப்ளாக் இப்போது தான் வாசிக்கிறேன். டிசம்பர் இறுதி வரை எழுதி உள்ளார்.

    நண்பரே என்ன ஆனது என்று சொல்லாமல் இப்படி வெறுமனே செய்தி சொல்லி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிரீர்களே. பின்னூடதிலாவது அவருக்கு என்ன ஆயிற்று; எதனால் இயற்கை எய்தினார் என பதில் சொல்லுங்கள்

    ReplyDelete
  19. அன்பு ரமேஷ்,

    என்ன ஆயிற்று ராஜேஷிற்கு? திடீரென இப்படி ஒரு அதிர்ச்சியான செய்தியைப் படித்ததும், மனது கனக்கிறது..


    நண்பர் மாயா ராஜேஷின் ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்...அன்னாரின் குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரியப்படுத்தவும்..

    ReplyDelete
  20. என்ன ஆயிற்று, நம்பவே முடியல

    ReplyDelete
  21. ரமேஷ், என்னாச்சு ராஜெஷ்க்கு?

    வருத்தமான செய்தி....

    எனது ஆழ்ந்த இரங்கலை அவரது குடும்பத்தார்க்கு தெரிவிக்கிறேன்...

    அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்...

    ReplyDelete
  22. தகவல் கொடுத்ததற்கு மிகவும் நன்றி. நம்பவே முடியவில்லை . திடீர்ன்னு வந்து கமெண்ட் போடுவாருன்னு தான் நெனைக்க தோணுது. நண்பரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம்

    ReplyDelete
  23. அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்..என்னய்யா ஆச்சி...விளக்கமா சொல்லுங்க!

    ReplyDelete
  24. எனது ஆழ்ந்த அனுதாபங்கள்..
    அவரின் ஆத்மா சாந்தியடைய கடவுளை பிராத்திக்கின்றேன்.

    ReplyDelete
  25. என்ன ஆயிற்று நண்பா.... ராஜேஷ் நன்றாக தானே இருந்தார் காலையிலேயே மனம் பதைக்குது.... என்ன மேட்டர் தற்கொலையா....அவரின் ஆத்மா சாந்தி அடைய வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  26. Very very sad news. Enathu aazhntha irankalkalum kanneer anjaliyum.

    ReplyDelete
  27. என்னாச்சு பாஸ்? ஆழ்ந்த இரங்கல்கள் அவரது குடும்பத்தினருக்கு..மனம் கனக்கிறது..

    ReplyDelete
  28. எனது கண்ணீர் அஞ்சலிகள்..!!

    ReplyDelete
  29. நம்பவே இயலவில்லையே:(

    பிரிவில்வாடும் அவரின் குடும்பத்தினருக்கு இறைவன் நற் பொறுமையை கொடுப்பானாக!அவரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.

    ReplyDelete
  30. அதிரா ப்ளாக் மூலம் விஷயம் தெரிந்தது,மனசு மிகவும் கனக்கிறது.அவருடைய ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  31. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

    ReplyDelete
  32. அதிர்ச்சியான செய்தி, ஆழ்ந்த இரங்கல்கள்.

    ReplyDelete
  33. அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன், அனைத்து நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் எதாவது ஒரு நாளை தேர்ந்தெடுத்து அன்று அனைத்து பதிவர்களும் பதிவிடாமல் துக்கம் அனுசரிப்போம்....கலந்து ஆலோசிக்கவும்.

    ReplyDelete
  34. ஏனய்யா இந்த இடியேறு பதிவுலகின் மீது திடிரென விழுந்தது?
    அன்னாரின் குடும்பத்துக்கு கூகிள்சிறியின் இரங்கல்களும் வார்த்தையில்லா மௌனம் கலந்த ஆறுதல்களும்.
    ஆண்டவன் தன்மடியில் ராயேஷை தாலாட்டி சிராட்டி தூங்கவைக்க வேண்டுமென எல்லோரும் இணைந்து எல்லாம்வல்ல அந்த இறைவனிடம் இறைஞ்சுவோம்

    ReplyDelete
  35. தாங்க முடியவில்லை...

    பதிவுலகில் இருந்து எனக்கு முதல் அதிர்த்தியான செய்தி இந்த இழப்பு...

    ReplyDelete
  36. அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்..

    ReplyDelete
  37. வணக்கம்!
    இளம் வயது அகால மரணம் தாங்கிக் கொள்ள முடியாத துயரம்.
    எனது ஆழ்ந்த இரங்கலை தங்கள் மூலம் மாய உலகம் ராஜேஷ் குடும்பத்தாருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்

    ReplyDelete
  38. தங்கள் சோகத்தில் நானும் பங்குகொள்கிறேன்.

    ReplyDelete
  39. ராஜேஸ் ஆத்மா சாந்தி அடையட்டும் அவர் பிரிவால் வாடும் உறவுகளுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். 

    ReplyDelete
  40. சகோ.ராஜேசின் அகால மரணம் என்னை திடுக்கிட வைத்து விட்டது. என்னாச்சு சார். அவருக்கு எனது கண்ணீர் அஞ்சலி!. அவரை இழந்து வாடும் உங்கள் குடும்பத்துக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  41. I can't believe this news. Such a good person. I am familiar with Rajesh through his Anmeega ulagam. His spiritual interest made me wonder about the young man. I feel very sorry and I pray for the god for his peaceful sleep.

    ReplyDelete
  42. கேட்கவே மிகவும் வருத்தமாக உள்ளது. என்ன ஆச்சு திடீரென்று?

    அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

    ReplyDelete
  43. ரொம்ப அதிர்ச்சியாக உள்ளது சகோதரரே :-( உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  44. நம்ப முடியவில்லை. அந்த சகோக்கு என்ன ஆச்சு . ரெம்பவும் வருத்தமாக உள்ளது . அவருடைய குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

    ReplyDelete
  45. தகவல் மனதை நெருடுகிறது.....

    தோழருக்கு என் இறுதி வணக்கம்.

    ReplyDelete
  46. கொடுமை.மனம் தாங்க முடியவில்லை.அன்புச் சகோதரா.இதற்குதான் மாய உலகம் என்று பெயரிட்டு அன்போடு பழகினாயோ.ஆன்மா அமைதியடையட்டும் !

    ReplyDelete
  47. திடீரென இச் செய்தி கேட்டு நொந்து போனேன் . என்ன ஆச்சு . நோய் வந்ததனால் காலன் வந்தானா? இல்லை காலனை அழைக்க ஏதாவது திடீரென நடந்து விட்டதா. மிக்க கவலை ஆக இருக்கிறது. அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றேன்

    ReplyDelete
  48. அதிர்ச்சியான செய்தி!!எப்போதும் கலகலப்பாக கமெண்ட் போடுவர் .எனது ஆழ்ந்த அனுதாபங்கள்..

    ReplyDelete
  49. மிகவும் வருந்துகிறேன்.செய்தி அறிந்ததும் அதிர்ச்சியாக இருக்கிறது.

    ReplyDelete
  50. மின்னாமல் இடிதாங்கி வந்த
    மரணம் போல் என்னால் தாங்க இயலா
    செய்தி சகோ இது
    நிரூபனின் கவிதை மூலமே
    நான் செய்தியை அறிந்தேன்
    அவர் ஆன்மா சாந்தி பெற நான
    வேங்கடவனை வேண்டுகிறேன்
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  51. என்னால் நம்ப முடியவில்லை நண்பரே! சிறுபிள்ளை போல் வெளிப்படையாக பழகுபவர் நண்பர் ராஜேஷ். இப்படிப்பட்ட ஒரு இனிய நண்பர் நம்மைவிட்டு பிரிந்தது வருத்தமளிக்கிறது.

    ReplyDelete
  52. துயரில் பங்குபெறுகின்றேன்.

    அன்னாரின் ஆத்மா சாந்தியடைய என் பிரார்த்தனைகள்.

    சின்ன வயசு.......... அப்படி என்ன காலனுக்கு அவசரம்? மனசு தாங்கலை:(

    ReplyDelete
  53. உங்கள் துயரத்தில் நாமும் இணைந்து கொள்கிறோம் ரமேஷ்.

    அதிர்ச்சியான செய்தி, அதிரா மூலம்தான் அறிந்து கொண்டேன். ஒரு இனிய சகோதரரின் இழப்பு, எங்களுக்கே ஏற்றுக் கொள்ளச் சிரமமாக இருக்கிறது. தாங்கும் சக்தியை இறைவன் உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் அருள வேண்டும்.

    அன்புச் சகோதரர் ராஜேஷின் ஆன்ம இளைப்பாற்றிக்காக என் பிரார்த்தனைகள்.

    We will miss him. ;((

    ReplyDelete
  54. அதிர்ச்சியான செய்தி... ராஜேஷ் அவர்களின் ஆத்மா ஷாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன், அன்னாரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்...

    ReplyDelete
  55. என் கண்ணீர் அஞ்சலிகளையும் பதிவு செய்கிரென் வேர என்ன சொல்வதுன்னு தெரியல்லே.

    ReplyDelete
  56. மாயா ராஜேஷ் அவர்களின் திடீர் மறைவு மிகவும் வருத்தம் அளிக்கிறது.அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

    ReplyDelete
  57. பதிவுலகை விட்டு விலகியவ்ர் இப்போ நம்மை விட்டும் வெகு தொலைவில் சென்று விட்டாரே? கண்ணீருடன்...

    ReplyDelete
  58. உங்க ஃபோன் நெம்பரை 9842713441க்கு SMS செய்க

    ReplyDelete
  59. அதிர்ச்சியாக, மிக வேதனையாக உள்ளது. கருத்துகளிடுவார். என்னை வலைச்சரத்திலும் அறிமுகமிட்டவர். அவரது ஆதமா சாந்தியடையட்டும்.அவரது நெருங்கியவர்களிற்கு மன ஆறுதல் கிடைக்கட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  60. உன் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன் சகோதரா
    வருத்ததுடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete
  61. மாயா ராஜேஷின் ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.,

    ReplyDelete
  62. மாயா ராஜேஷின் ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.,

    ReplyDelete
  63. அதிரா ப்ளாக் மூலம் வந்தேன்,படித்ததும் அதிர்ச்சியாகவும்,நம்பவும் முடியவில்லை...அவரின் ஆத்மா சாந்தியடைய ப்ரார்த்தனைகள்.

    ReplyDelete
  64. அதிர்ச்சியான விஷயம்.. அவர் ஆத்மா.. சாந்தியடைய இறைவன் அருள் புரியட்டும்..!

    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்..! :(

    ஆண்டவன் உங்களுக்கு சக்தியை கொடுக்கட்டும்..!

    ReplyDelete
  65. அவரது ஆன்மா சாந்தி அடைவதாக. துயரப்படும் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரஙகல்கள்

    ReplyDelete
  66. என் அனுதாபங்களும் ராஜேசின் குடும்பத்திற்கு உரித்தாகுக....

    ReplyDelete
  67. நண்பர் மாய உலகம் ராஜேஷ் அவர்களின் ஆன்மா அமைதி கொள்ளட்டும்!

    ( முன்பே உணர்ந்ததால் தான் அவரது வலைப்பக்கத்துக்கு “மாய உலகம்” என பெயரிட்டாரோ?)

    ReplyDelete
  68. நம்பவே முடியலை.. அதிர்ச்சியா இருக்கு. என்னாச்சுப்பா??

    அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.ஆழ்ந்த இரங்கல்கள்.

    ReplyDelete
  69. ஆத்தூருக்கு வரும் போதெல்லாம் இவரது நினைவு வரும்.தொலைபேசி எண் கேட்டு மெயில் அனுப்பியிருந்தேன் .இப்படி ஒரு செய்தி கேட்டு இடிந்து போயிருக்கிறேன்.பத்து நாள் பதிவுலக தொடர்பு இல்லாமல் இருந்ததால் இப்போது தான் தெரிந்தது.பேரதிர்ச்சி. நண்பரே.என்னை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியுமா? 9486146881

    ReplyDelete
  70. ரமேஷ்.. எப்படி இருக்கிறீங்க? மாயாவின் பிரிவிலிருந்து மீள முடியாமல்தான் இருப்பீங்க, என்ன செய்வது ரமேஷ்... ஏற்கனவே எழுதப்பட்டதை ஆராலும் அழிச்சு எழுதிட முடியாது, நம்முடைய ஸ்டெஷன் வரும்போது இறங்கித்தான் ஆகவேண்டும்...

    போவோருக்கு ஏதும் தெரியுமோ தெரியாது, இருக்கும் நாம்தான் அனுபவிக்கிறோம்.. இதுவும் விதியில் எழுதப்பட்டதுதான்.

    நாமெல்லாம் எப்போதும் இருக்கவா போகிறோம்.. என்றோ போகத்தானே போகிறோம். மனதைத் தேற்றுங்கள்.. பழையபடி வலைப்பூவுக்கு வாருங்கள்.. அப்போதான் கொஞ்சமாவது மனதை டைவேர்ட் பண்ண முடியும்.

    நீங்கள் ஹப்பியாக இருக்க உங்களை மாற்றினால்தான், அம்மாவுக்கு, குடும்பத்துக்கு தென்பையும் ஆறுதலையும் கொடுக்க முடியும்.

    அது என்னமோ தெரியவில்லை... இப்போ எங்கு பார்த்தாலும் வயது குறைந்தோரின் இழப்பைத்தான் அதிகம் அறிய முடிகிறது..

    மீண்டும் வலைப்பூவுக்குள் வாங்கோ ரமேஷ்.. அப்போதான் நீங்கள் கொஞ்சம் மனதை தேற்ற முடியும்.

    ReplyDelete
  71. தங்கள் அன்பிற்கு நன்றி தோழி ,ஒரு வாரத்தில் வலைத்தளத்திற்கு மீண்டும் வருகிறேன்.



    ரமேஷ்

    .

    ReplyDelete
  72. பதிவை இப்போது தான் பார்த்தேன்
    அதிர்ந்து போனேன்.என்னவாயிற்று அவருக்கு

    ReplyDelete
  73. கண்ணீர் அஞ்சலி

    ReplyDelete
  74. ரமேஷ்...

    நலமா?
    நீண்ட நாளைக்கப்புறம்...

    ReplyDelete
  75. வணக்கம் சகோதரரே நலமாய் இருக்கின்றீர்களா?..நீண்டநாள் கழித்து வந்துள்ளீர்கள் பிரிவின் வலியும் அதன் ஆழமும் நன்கு உணரப் பெற்றவள்
    அடிக்கடி இள வயதினரின் இழப்பைக் கண்டு கண்டு மனம் என்னமோ போல் உள்ளது மாயாவின் பிரிவும் கூட இந்த அதிர்வு எந்த ஆறுதலும் சொல்வதற்கு இல்லை .என் வலைத்தளத்தில் நிறைந்திருக்கும் மாயாவின்
    கருத்துக்கள் ஒரு அழகிய நினைவுச் சின்னம்!.......அதை அடிக்கடி பார்க்கும்போது இந்த நிகழ்வை வெறும் கனவாகத்தான் கருதுகின்றேன் இந்த நிலை உங்களுக்கும் கிட்ட வேண்டும் என்பதே என் பிரார்த்தனையும் கூட .

    ReplyDelete
  76. நலமா ரமேஷ்...?

    இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்...

    ReplyDelete
  77. Keep away the summer heat with ourtechnicians Services. Book your Ac services or installation with us. Book now feel happy.
    Services: refrigerated repair and maintenance, Ac repair and installation, washer repair and replace, water purifier repair and installation, chimney repair and install, flour grinder repair and service, mixer grinder repair and maintenance, stove repair and installation.
    home appliance
    https://www.facebook.com/apm.ourtechnicians/?fref=ts&ref=br_tf
    https://www.youtube.com/watch?v=2lFLF4SUTnM
    https://www.instagram.com/ourtechnicians/

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே