Monday, August 15, 2011

பூமியே உனக்கு குளிருதா


செய்தி :
கடந்த வாரம் தமிழகத்தில் சில மாவட்டங்களில் நிலநடுக்கம் 

ஏன் 


பூமித் தாயே 

உனக்கும்

குளிருதா

நடுங்குகிறாயே

நிலநடுக்கம் 


=============================================
துரதிஷ்டசாலி 


அவளைக் கண்டேன் 
கண்டாள்



பார்த்து சிரித்தேன் 
சிரித்தாள் 


சம்மதம் கேட்டேன் 
தந்தாள் 


கைப் பிடிக்க எண்ணினேன் 
சரி என்றாள் 


அவள் பெற்றோரும் 
சம்மதம் என்றனர் 


எனக்குள் ஆச்சரியம் 
இதுவரை எனக்கு 
எதுவும் நல்லதே 
நடந்ததும் இல்லை 


நல்ல படியாய்
முடிந்ததும் இல்லை 


எல்லாம் கூடிவந்து 
கரம் கோர்க்க எண்ணி 
அவள் அருகே 
சென்ற போது


வியர்த்தது 
மூச்சு திணறியது 


பட்டென்று விழிப்பு 
வந்தது 
கனவும் கலைந்தது .
மின்வெட்டால் 


அடடா நான் 
கண்டது கனவு

துரதிஷ்டசாலி தான்

வழக்கம் போல








.

45 comments:

  1. வணக்கம் சகோதரி, என் உளம் நிறைந்த இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும், உங்கள் உற்றார்- உறவினர் நண்பர்களுக்கும் உரித்தாகட்டும்,

    ReplyDelete
  2. ஒரு சிறிய வேண்டுகோள், உங்கள் ப்ளாக்கின் கமெண்ட் பெட்டியின் தோற்றத்தினை POP UP விண்டோ ஆக மாற்றலாமே,
    செங்கோவி, என் ப்ளாக்கில் உள்ள கமெண்ட் பெட்டி போன்று,
    என் நெட்டிற்கு சூனியம் வைத்து விட்டார்கள். தற்போது ஒரு வயர்லெஸ் Broadband வாங்கியிருக்கேன், அதுவும் ரொம்ப சிலோ.

    ReplyDelete
  3. பூமிக்கு குளிருதா...
    புதிய சிந்தனை தோழரே..
    அழகு

    அடுத்த கவிதையில் செவ்விய உணர்வுள்ள வரிகள்.
    அருமை அருமை.

    இனிய சுதந்திரதின நல வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. பூமித் தாயே

    உனக்கும்

    குளிருதா

    நடுங்குகிறாயே

    நிலநடுக்கம்//

    அருமையான வர்ணனை,


    //அடடா நான்
    கண்டது கனவு

    துரதிஷ்டசாலி தான்

    வழக்கம் போல//

    ஒரு ஆண் மகன் கனவில் ஓர் பெண்ணினை நினைத்துப் புலம்புவது போன்ற உணர்வினை கடைசிக் கவிதை தந்திருக்கிறது.

    ReplyDelete
  5. தங்களின் இனிய வாழ்த்துக்கு நன்றி!

    மேலும் தங்களின் கலைந்த கனவுக்
    கவிதை பகலா இரவா...?
    மின்வொட்டு என்பதால் பகலாத்தான்
    இருக்கும்.
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  6. வாங்க நிரூபன்

    வாழ்த்துக்கு நன்றி நண்பரே

    தங்களின் விரிவான கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  7. வாங்க மகேந்திரன்
    நான் இருக்கும் பகுதியல் தான் நில நடுக்கம் நண்பரே

    பதிவு ரெடி பண்ணிக் கொண்டு இருக்கும் பொழுது

    அதிர்வை உணர்ந்தேன்

    அப்பொழுது மனதில் தோன்றிய வார்த்தை தான் இது நண்பரே

    பாராட்டுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  8. வாங்க ராமானுஜம் ஐய்யா

    வருகைக்கு நன்றி

    இப்பொழுதெல்லாம் மின்வெட்டு இரவிலும் வருகிறதே ஐய்யா

    ReplyDelete
  9. ஒரு நாள் அந்த அதிஷ்டம் கூட வர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. வித்தியாசமான பதிவு...

    பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  11. கனவில் நடந்தது நினைவில் கைகூட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. நிலநடுக்கத்தால் ஒரு நன்மை ஏற்பட்டுள்ளது ..
    ஆம் உங்க கவிதையை தான் சொலுறேன்

    ReplyDelete
  13. ஆஹா ஆஹா அருமையான கவிதை

    ReplyDelete
  14. இரண்டு கற்பனைகளும் அருமை
    இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. இரண்டு கவிதைகளும் நல்லாருக்குங்க அருமை...

    இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  16. அடச்சா...எந்த பிகருமே நல்லா இல்ல...சி பி அண்ணன்கிட்டே அட்வைசு கேளுங்க பாஸ்!!

    ReplyDelete
  17. நல்ல கற்பனை நிறைந்த வரிகள்..
    கனவுகள் சிலவேளை பலித்தும்விடும்...!!
    வாழ்த்துக்கள் சகோ..
    இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  18. வாங்க சௌந்தர் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  19. வாங்க லக்ஷ்மி அம்மா

    தங்களின் அன்பான கருத்துக்கு நன்றி அம்மா

    ReplyDelete
  20. வாங்க ரியாஸ் நண்பரே

    தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் கடமைக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  21. வாங்க கவி அழகன நண்பரே

    தங்கள் வருகைக்கும் ,அழகான பாராட்டிற்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  22. வாங்க ரமணி நண்பரே

    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே

    தங்களுக்கும் வாழ்த்து நண்பரே

    ReplyDelete
  23. வாங்க மாணவன் நண்பரே
    தங்களை வரவேற்கிறேன் நண்பரே

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  24. வாங்க சிவா
    தங்கள் கருத்து ஏற்கப்பட்டது நண்பரே

    வருகைக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  25. வாங்க விடிவெள்ளி சகோ

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  26. ஏன் குளிர்ந்தா இலவசமா போர்வை வாங்கிக் கொடுக்கப் போறீங்களா?

    ReplyDelete
  27. ஓ..கவிதையா..அப்ப சரி..குளிரட்டும்..குளிரட்டும்!

    ReplyDelete
  28. வாங்க செங்கோவி நண்பரே

    பூமி அதிர்ந்ததில் என்னுடைய நாற்காலியும் கொஞ்சம் அதிர்ந்தது .

    அதனால் எழுந்த கேள்வி நண்பா

    ReplyDelete
  29. //நிரூபன் said...

    வணக்கம் சகோதரி //

    சகோதரியா...யோவ் ரமேசு, என்னய்யா கூத்து இது?

    // உங்கள் ப்ளாக்கின் கமெண்ட் பெட்டியின் தோற்றத்தினை POP UP
    விண்டோ ஆக மாற்றலாமே, //

    ஆமாய்யா..ஆஃபீஸ்ல இருந்து கமெண்ட் போட முடியலை..முதல்ல அதை மாத்துங்க...எப்படின்னு இங்க பாருங்க : http://ethirneechal.blogspot.com/2010/09/comment-form.html

    ReplyDelete
  30. அவரு குழப்பத்தில் இருப்பார்னு நினைக்கிறேன்

    அதனால் தான் நானும் கண்டுக்க வில்லை

    இத்தனை நாளில் இன்று மட்டும் தான் அவருக்கு தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது .

    தடுமாறுவது மனித இயல்பு செங்கோவி

    நண்பரே ,

    ReplyDelete
  31. உங்கள் அன்பான தகவலுக்கு நன்றி செங்கோவி நண்பா

    ReplyDelete
  32. காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி....

    ReplyDelete
  33. ரசித்தேன்...என் சுதந்திர தின வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  34. வாங்க மாய உலகம்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

    ReplyDelete
  35. வாங்க கார்த்தி

    வாழ்த்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  36. வாங்க reveri நண்பரே

    ரசிப்புக்கு நன்றி ,தங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  37. பூமிக்குக் குளிர் புது சிந்தனை அருமையான ரசனை. காதல் வரிகளை வாசித்து குலுங்கிக் குலுங்கிச் சிரித்தேன். ஏனென்லால் இறுதியில் கனவு.....ஆஹா......ஹ.....ரசனையாக இருந்தது.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  38. கலக்கல் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  39. நல்லாயிருந்தது...

    ReplyDelete
  40. பூமிக்கு குளிருதா? வித்யாசமான சிந்தனை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  41. அணு உலைக்கெதிரான போராட்டத்தில் பிசியாக இருப்பதால் பிறகு வருகிறேன் ....

    ReplyDelete
  42. தொடர்ந்து எழுதுங்கள்...

    சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்..

    கவிதைகள் இன்னும் இன்னும் மெருகேற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  43. வருகை தந்து வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி நட்புகளே

    ReplyDelete
  44. thappichuteenga boss neenga...

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே