Friday, September 2, 2011

கிழங்கின் மகத்துவம் தெரியுமா


பழங்கள் ,காய்கறிகள் இவற்றை தொடர்ந்து 
கிழங்கு வகைகள்


கிழங்குகளில் உள்ள மருத்துவ குறிப்புகள்

உருளைக் கிழங்கு :-

உடலுக்கு ஊட்டத்தைக் கொடுத்து இளைத்த உடலைத்
தேற்றும். வளரும் சிறுவர்களுக்கு ஏற்றது.

உருளைக் கிழங்கு மலத்தைக் கட்டும்.
வாத நோய், மூல நோய், வயதானவர், இதயவலி 
உடையவர் இவர்களுக்கு உருளைக்கிழங்கு ஆகாது.



கருணைக்கிழங்கு:-

உடல் சூட்டைக் குறைக்கும். மூல நோய் வராமல் 
தடுக்கும்.மூல நோயைக் குணப்படுத்தும். மலத்தை இளக்கும்.
உடலுக்கு பழம் கொடுக்கும்.வயிற்று வலி,வயிற்றுப் புண்
குணமாகும்.வாதம், பித்தம் குறையும்.
காட்டுக்கருனைக் கிழங்கு மூலத்திற்கு மிக ஏற்றது.

சேப்பங்கிழங்கு:-

வயிற்றுப் புண் ஆற்றும்.மலத்தை இளக்கும்.

குழந்தைகள்,வயதானவர்,வாத நோயாளிகள் 
இவர்களுக்கு ஆகாது.



முள்ளங்கி:-


உடல் வெப்பம் தணியும், சிறுநீரைப் பெருக்கும்.
வாரந்தோறும் சாப்பிட்டு வந்தால் கை,கால்,வீக்கம்
வராது. பேறு எளிதாகும்.சிறுநீரக கோளாறு குணமாகும்.
எலும்பு வளரும்.மூல நோய் குணமாகும்.ஈரலுக்கு ஏற்றது.

மாதவிலக்கு நாட்களில் பெண்கள் சாப்பிடக்கூடாது.
சாப்பிட்டால் குருதி மிகும்.
மழைக்காலத்தில் குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் 
ஆகாது. 

வெள்ளை முள்ளங்கி மிகச் சிறந்தது.

காரட்:-

மூளை வளர்ச்சிக்கு ஏற்றது. கண்ணுக்கு ஒளி தரும்.
முடி வளரும்.எலும்பு பழம் பெறும்.தலை சுற்று ,மயக்கம் 
போக்கும்.வாய்வு நீங்கும்.ஜீரணத்தைத் தூண்டும்.மூட்டு
வலி குறையும்.கருவுற்றோர்,சிறுவர்கள்,நோயுற்றோர் 
ஆகியவர்களுக்கு சிறந்தது.
உயிர்ச்சத்து நிறைந்தது.

பீட்ரூட்:-


இரத்தத்தை தூய்மை படுத்தும்.உடலைப் பருமனாக்கும்.
வெப்பம்குறையும்.தோல் வறட்சி நீங்கும்.சோகை நோய்
நீங்கும்.உடல் இளைத்தவர்களுக்கு ஏற்றது.

பீட்ரூட் வாதநோயாளிகளுக்கும், குண்டாயிருப்போர்க்கும்
ஆகாது.







"ஏன் எலிய புடிக்கல"ன்னு இப்பிடி துப்பாக்கிய காட்டி மிரட்டுரானே
ஒரு உயிரை கொல்றது பாவம் இல்லையா .அதனால தானே
எலிய புடிக்கல .

(எப்பிடில்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு சொகுசா வாழறதுக்கு )

31 comments:

  1. கிழங்குகளை அளவுடன் சேர்த்துக்கொண்டால் நன்மை.
    நல்ல பயனுள்ள தகவல்கள்..

    ReplyDelete
  2. நல்ல தகவல்கள் நண்பா.

    இன்று என் கடையில்(பகுதி-7)நினைவுகள் மாறாத உண்மைக்கதை மறக்கமுடியாதபாடசாலைநாட்கள்+சரண்யா புள்ள மீதான உத்தியோக பூர்வ காதல் அறிவிப்பும் அஞ்சலியிடம் இருந்து விலகலும்
    http://cricketnanparkal.blogspot.com/2011/09/7.html

    ReplyDelete
  3. கிழங்குகளைப்பற்றி அருமையான ஆரோக்கிய தகவல் நன்றி சகோ

    ReplyDelete
  4. சகோதரி ராம்வி அவர்கள்

    வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  5. நண்பர் கே.எஸ்.எஸ்.ராஜ்

    அவர்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  6. சகோதரன் ராஜேஷ் அவர்கள்

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  7. மாப்ள பல தேவையான விஷயங்கள் அடங்கிய பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  8. வாங்க விக்கி மாம்ஸ் தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் வாக்குக்கும் நன்றி மாம்ஸ்

    ReplyDelete
  9. தமிழ் மணம் 3

    கிழங்குகள் பற்றிய அருமையான தகவல்கள் நண்பரே.
    கிடைத்தற்கரிய செய்திகள்
    பகிர்வுக்கு நன்றி.
    உருளைக்கிழங்கு இரத்த அழுத்தத்திற்கு மிகவும் நல்லதாம்....
    நேற்று தான் நாளிதழில் படித்தேன்.

    ReplyDelete
  10. உடல்நலக்குறிப்புகள் அருமை

    தொடர்ந்து பதிவிடுங்கள் நண்பா.

    ReplyDelete
  11. உண்மையில் பயன் உள்ள தகவல்கள்..

    ReplyDelete
  12. கிழங்கின் பயன்களை மட்டும் சொல்லாமல், யாருக்கு அது ஆகாது என்று சொல்லி இருப்பது தான் இந்தப் பதிவின் சிறப்பு.

    ReplyDelete
  13. காய்கறி மேட்டர் தொடர்ந்து அசத்தலாக உள்ளது ....தொடருங்கள் ....

    ReplyDelete
  14. மிக அருமையான பயனுள்ளதகவல்கள்.பகிர்வுக்கு நன்றி .தொடருங்கள் தொடர்கிறேன் ...வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  15. கிழங்குகள் குறித்த பயனுள்ள பதிவைத்
    தந்தமைக்கு மிக்க நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. கிழங்குகள் குறித்த பயனுள்ள தகவல்கள்!

    ReplyDelete
  17. கிழங்குகள் பற்றி பயனுள்ள தகவல்களுக்
    க்கு நன்றி. சர்க்கரை நோய் உள்ளவர்களும் உருளைக்கிழங்கை சாப்பிடக்கூடாத்துன்னு சொல்வாங்க.

    ReplyDelete
  18. நண்பர் மகேந்திரன் அவர்கள்

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ================================

    நண்பர் குணசீலன் அவர்கள்

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ==============================

    நண்பர் செங்கோவி அவர்கள் வருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் நன்றி

    ===============================

    நண்பர் பாலா அவர்கள்

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    =============================

    ReplyDelete
  19. நண்பர் ராஜசேகர் அவர்கள்

    வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி

    ==========================

    நண்பர் ரமணி அவர்கள்

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ==============================

    சென்னை பித்தன் ஐயா அவர்கள்

    வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  20. நண்பர் சரவணன் அவர்கள்

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ===============================

    லக்ஷ்மி அம்மா அவர்கள்

    வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  21. நண்பர் சிபி செந்தில்குமார் அவர்கள்

    வருகைக்கும் அன்பிற்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  22. அடடா கிழங்கில இவ்வளவு விசயம் இருக்கா

    ReplyDelete
  23. நண்பர் மதுரன் அவர்கள்

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  24. கிழங்குகளைப்பற்றி அருமையான... ஆரோக்கிய தகவல்...தொடருங்கள் ரமேஸ்...

    ReplyDelete
  25. யாருக்கெல்லாம் ஆகாது என்றும் குரிப்பிட்டிக்கிறீர்கள்!ரொம்ப அவசியமானொன்று!கனி காய்கறியை தொடர்ந்து கிழங்கு!
    கிளப்புங்கள்!

    ReplyDelete
  26. நண்பர் ரெவரி அவர்கள் வருகைக்கும்

    வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  27. நண்பர் கோகுல் அவர்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  28. கிழங்கின் மகத்துவம் பற்றிய நல்லதொரு ஆரோக்கியமான பதிவு நண்பா.

    நன்றிகள்.

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே