ஆணாக இருந்தாலும்,பெண்ணாக இருந்தாலும் !
ஒருவரின் தோற்றம் தான் அவரிடம் நெருங்க
வைப்பதும் ,விலக வைப்பதும்
கண்ணிய தோற்றம்,களவானி தோற்றம் இந்த இரண்டில்
கண்ணிய தோற்றம் அனைவரையும் மரியாதையுடனும்,
பாசத்துடனும் ,நேசத்துடனும் நெருங்க வைக்கும்.
களவானி தோற்றம் விலகி செல்லத்தூண்டும்,
பயந்து செல்ல தூண்டும்.
ஒரு "மாதிரி" தோற்றம் முகம் சுழிக்க வைக்கும்.
அப்புறம் தோற்றம் அணுக மட்டுமே. கிட்ட அழைத்து
வந்த அந்த தோற்றம் நிரந்தரமாக அருகில் வைப்பதும்,
எட்டி ஓட செய்வதும் பழக்கவழக்கமே !
பார்த்த உடனே மனதில் பதியும் தோற்றம் பளிச் தோற்றமே.
பளிச் என்றால் நீட்டாக ஆடை உடுத்தியிருக்க வேண்டும்.
ஒரு ஆணைப் பெண்ணாகட்டும் ,அல்லது பெண்ணை
ஆணாகட்டும் கவர்ந்திழுப்பது அல்லது மனதினுள் நுழைவது
அவர்களின் எதாவதுஒரு (மேனாரிசம்) செயல் தான் காரணமாக
இருக்கும்.
ஆணாகட்டும் கவர்ந்திழுப்பது அல்லது மனதினுள் நுழைவது
அவர்களின் எதாவதுஒரு (மேனாரிசம்) செயல் தான் காரணமாக
இருக்கும்.
அதே போல வெறுக்கவும் ஏதாவது ஒரு காரணமாக இருக்கும்.
ரஜினி சார் தலைமுடியை கோதி விடுவது அப்பொழுது ஸ்டைலாக
இருந்ததால் அனைவரையும் அவர்பால் ஈர்க்க செய்தது.
மற்றவர்கள் பார்வைக்கு ஒரு பெண் பார்க்க சுமாராக
இருந்தாலும் அவளை விரும்பும் ஆடவனுக்கு,அல்லது
அவள் மேல பாசம் உள்ளவர்களுக்கு அவள் அழகாக தெரிவாள்.
காரணம் அவளுடைய ஏதாவது ஒரு செயல் அவர்களின்
மனதை தொட்டிருக்கலாம்.
அது அவர்களுக்கு பிடித்திருக்கலாம்.அதனால் தான் மற்றவர்
கண்ணுக்கு சுமாராக தெரியும் பெண் அவன் கண்களுக்கு ரதி
போல் தெரிகிறாள்’
ஒரு பாடல் கூட கேட்டிருப்பீர்கள்
எந்த பெண்ணிடமும் இல்லாத ஒன்று ஏதோ அது ஏதோ
உன்னிடம் இருக்கிறது
என்று தொடங்கும் பாடலில் அவளின் தெற்றுப் பல்லை
கூட அவனை கவர்ந்தது போல் இருக்கும் அவன் ஆராய்ச்சியில்.
குழந்தையே எடுத்துக் கொள்வோம் மற்றவர்களுக்கு அவர்கள்
செய்வது சேட்டையாக தெரிந்தாலும் பெற்றவருக்கு அது ரசிக்கும்
தன்மையாக இருக்கும்.
சிரிக்கும் பொழுது கன்னத்தில் குழிவிழுவது,பேசிக்கொண்டிருக்கும்
பொழுது தவறாக பேசி விட்டோமோ என நாக்கை கடிப்பது போன்ற
செயல்கள் (நிறைய சொல்லலாம்) இப்பிடி ஏதோ ஒன்று மனதை தொடும்.
இது அவர்கள் மனதில் புகவும் பதியவும் செய்த காரணமாக இருக்கும்.
ஆனால் அதன் கூட அவர்களின் செயல்களும் பதிந்து போனால்
வாழ்வின் கடைசி வரை தன்னை கவர்ந்த செயல்கள் அழியாமலும் மறையாமலும் இருக்கும்.
தோற்றத்தோடு அவளிடமோ ,அவனிடமோ கவர்ந்த மேனாரிசம்
இவையோடு அவர்களது ஆக்டிவிட்டிஷ் அதாவது குணங்களும்
அப்பிடியே எறுக்கொள்ள வேண்டும்.
குணங்கள் அல்லாது வெறும் தோற்றத்தால் கவரப்பட்டு நெருங்கினாலும்
ஏதாவது ஒரு ஸ்டைலில் மேனாரிசத்தால் கவரப்பட்டு நேருங்கிநாலும்
அது கானல் நீர் போல் மறைய வாய்ப்புண்டு .இதனோடு அவர்களது
குணங்களும் ஏற்றுக்கொள்ளப் பட்டால் விட்டுக்கொடுக்கும் குணம்
வரும்.
இதனால் மனசங்கடம் வராது. பிரிவினைகள் வராது.
காதல் கொண்டு மணம் முடித்தவர்களின் காதல் கானல் நீராய்
போகாமல் இருக்க மேற்சொன்னது போல் குணத்தாலும் கவரப்பட்டு
இருக்க வேண்டும்.
பெற்றவர்கள் பார்த்து மணம் முடித்து வைப்பதும் நாளடைவில்
இல்வாழ்க்கை கசந்து போவதும் குணங்களை புரிந்து கொள்ள
முயலாதது தான்
புரிந்து கொண்டு வாழ்ந்திருந்தால் மேலைநாட்டு நாகரீகமாக
இருந்த "விவாக ரத்து' நம் நாட்டுக்கு ஏன் வந்திருக்க போகிறது.
இல்வாழ்க்கை என்றில்லை எந்த விசயத்திலும் வெறும்
தோற்றத்தால் கவரப்பட்டால் அது நாளடைவில் மறைந்து விடும்.
பிறகு "அதன்" உபயோகம் நமக்கு தேவையில்லாத சுமை போல்
தோன்றி "அதன் "மீது வெறுப்பு ஏற்படுத்தி விடும்.
இதில் '"அதன் "என்பது அனைத்து உயிர்களுக்கும்,ஜடப்பொருளுக்கும்
பொருந்தும்.
டிஸ்கி :-
படத்திற்கும் பதிவுக்கும் சம்பந்தமில்லை .
நன்றி :-
ஹி ஹி மேலுள்ள நபர்கள் எனக்கு பழக்கமில்லாததால் படங்கள் இணையத்திலிருந்து எடுத்துக் கொண்டேன் ஹி ஹி .
தனிமனித ஆளுமைக் கூறுகளையும்
ReplyDeleteசமூக உளவியலையும அழகாகப் பதிவிட்டு வருகிறீர்கள்.
அருமை
தொடர்க.
பயனுள்ள பதிவு
ReplyDeleteபடத்திற்கும் பதிவுக்கும் ரொம்ப ரொம்பவே
சம்பந்தமிருக்கு.இல்லையென்று சொன்னால் எப்படி!
தொடர வாழ்த்துக்கள் த.ம 2
நண்பர் குணசீலன் அவர்கள்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
நண்பர் ரமணி அவர்கள்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் ,வாக்கிற்க்கும் நன்றி நண்பரே
நீங்கள் சொல்வதும் சரியே!
ReplyDeleteவணக்கம் நண்பா,
ReplyDeleteதோற்றத்தின் அடிப்படையில் எவ்வாறான மதிப்பு ஒரு மனிதரிடம் ஏற்படுகின்றது, உறவுகள் எவ்வாறு பலமாகின்றது என்பதனை அழகாக சொல்லியிருக்கிறீங்க.
வாங்க செங்கோவி நண்பரே
ReplyDeleteதங்களது கருத்து ஒற்றுமைக்கு நன்றி
வாங்க நிருபன் நண்பரே
ReplyDeleteதங்களது அழகான கருத்துரைக்கு நன்றி
தமிழ்மணம் 5
ReplyDeleteதோற்றத்தை பற்றி அழகிய ஆராச்சி
நடத்தி இருக்கிறீர்கள்
வெளித் தோற்றம் மட்டுமே ஒருவரின்
குணத்தை ஏற்றிவிட முடியாது.
புரிந்துகொள்ளுதலும் விட்டுக்கொடுத்தலுமே
அதாவது அகத்தோற்றமே அழகு.....
அருமை அருமை.
வாங்க மகேந்திரன் நண்பரே
ReplyDeleteமிகச்சரியாக புரிந்து கொண்டீர்கள்
வாழ்த்துக்கு நன்றி
அருமையான தகவல் சகோ
ReplyDeleteவாங்க கிராமத்து காக்கை சகோ
ReplyDeleteதங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி
வணக்கம் ஸார்! கும்புடுறேனுங்க! நீங்க சொல்றதெல்லாம் உண்மை ஸார்! ஒருத்தரோட பர்ஸ்னாலிட்டி, அவைங்க உடுத்துற ஆடைகள்தான், ஒருத்தர கவரவோ வெறுக்கவோ வைக்குது! பதிவுக்கு ரொம்ப நன்றி ஸார்!
ReplyDeleteவாங்க மணி நண்பரே
ReplyDeleteதங்கள் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் வாக்கிற்க்கும் நன்றி
முதல் இரண்டு வரிகள் அருமை.சரியாக சொல்லியிருக்கீங்க.
ReplyDeleteகடைசி வரிகள்.....நம்பிவிட்டோம்...
சகோதரி ராம்வி அவர்கள்
ReplyDeleteவருகைக்கும் அன்பான கருத்துக்கும் நன்றி
த.ம.8
ReplyDeleteநன்று சொன்னீர்கள்!
ReplyDeleteஎல்லா நடிகைகளையும் இழுத்திருக்காப்லே!!
ReplyDeleteம் ...
ReplyDeleteதோற்றத்தாலே கவிழ்த்துடுராளுகளே .......
ReplyDeleteஎன்ன ஒரு ஆராய்ச்சி
ReplyDeleteகலக்கிட்டிங்க
சென்னை பித்தன் ஐயா
ReplyDeleteஅவர்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி
நண்பர் மைந்தன் சிவா அவர்கள்
ReplyDeleteவருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி
===================================
நண்பர் ராஜசேகர் அவர்கள்
வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி
நண்பர் பாலா அவர்கள்
ReplyDeleteவருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி
=============================
நண்பர் கவி அழகன் அவர்கள்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
நண்பர் குணசீலன் அவர்கள்
ReplyDeleteதந்த விருதுக்கு நன்றி
நீங்கள் சொல்வது முற்றிலும் நிஜம் சார் ரஜனி சார் ஒன்றும் பேரழகன் இல்லை ஆனால் அவரது ஸ்டைலில் நொருங்கிய இதயங்கள் எத்தனை மேனலிஷம் என்பது தனியே முக அழகிலும் நிறத்திலும் இல்லை என்பதற்கு தலைவர் ரஜனிகாந் மிகச்சிறந்த உதாரணம்.
ReplyDeleteவாங்க கே.எஸ்.எஸ்.ராஜ்
ReplyDeleteதங்கள் தெளிவான கருத்துக்கு நன்றி
தோற்றத்தை பற்றி அழகிய ஆராச்சி
ReplyDeleteதொடருமா?