நண்பர்களே வணக்கம்
பழங்கள் ,காய்கறிகள் ,கீரைகள் ,கிழங்குகள்
இவற்றைத்தொடர்ந்து மலர்கள்
பூ என்பது வாசத்திற்கும் ,அழகிற்கும் மட்டுமல்ல
அதனால் மருத்துவ பலனும் உண்டு .
முதலில் ரோஜாவை பார்ப்போம்
(அட பூவை சொன்னேங்க )
ரோஜா அனைவருக்கும் பிடித்த பூ
இதைப் பற்றி நிறைய பாடல்கள் வந்துள்ளது.
இது பல நிறங்களில் இருக்கும்
நாம் பார்க்க போவது எங்கும் பார்க்கும் ரோஸ்
நிற ரோஜாக்களை
ரோஜா மலரின் மருத்துவ குணங்கள்
ரோஜா மலர்களின் இதழ்களை ஆய்ந்து ஒரு கைப்பிடி
அளவு காலையிலும் ,மாலையிலும் மென்று தின்று
வந்தால் இரண்டு நாட்களில் சீத பேதி முற்றிலும்
குணமாகும்.
வயிற்றுப்புண் ஆறும் .மலச்சிக்கல் நீங்கும்.
குளிர்ச்சி தரும் .
ரோஜாப்பூ குல்கந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்
இரத்த விருத்தியும் இரத்த சுத்தியும் ஏற்படும்.
மலச்சிக்கல் அடியோடு அகலும்.இது உடலுக்கு
போஷாக்கு டானிக் ஆகும்.
ரோஜாப்பூ குல்கந்து தாயாரிக்கும் முறை :
ரோஜா இதழ்களை சுத்தமாக ஆய்ந்து எடுத்து ,
அதன் எடைக்கு மூன்று மடங்கு அளவு கல்கண்டு
சேர்த்து கல் உரலில் போட்டு நன்றாக இடித்தால்
லேகியம் பக்குவத்தில் மெழுகு போல் ஆகும்.
அதை வாயகன்ற கண்ணாடி பாட்டிலில் போட்டு,
அதில் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு சுத்தமான
தேனை விட்டு கிளற வேண்டும்.
இது தான் குல்கந்து .
இதனை அழுத்தமாக மூடி பத்திரப்படுத்த வேண்டும்.
இதை சிறுவர்கள் அரைக்கரண்டி காலை மாலையும்
பெரியவர்கள் ஒரு கரண்டி வீதம் காலை மாலையும்
சாப்பிடலாம் .
அடுத்ததாக
ரோஜா இதழுடன் சம அளவு சிறுபயறையும் சேர்த்து
இரண்டு மூன்று பூலாங்கிழங்கும் உடன் வைத்து விழுது
போல் அரைத்து உடலில் பூசி அரைமணி நேரம் கழித்து
வெந்நீரில் குளித்து வந்தால் ,
சரும நோய்கள தீரும்.உடல் கவர்ச்சி கரமான
நிறத்தில் மாறும்.
நண்பர்களே இந்த மலரின் மருத்துவம் பிடித்திருக்கிறதா
மலரின் மருத்துவம்
இன்னும் மலரும்...........
நன்றி
ரோஜாவின் மற்ற நிறங்கள் பார்வைக்காக
நண்பர்களே உங்கள் கருத்து !
ரோஜாவைத்தாலாட்டும் தென்றல்
ReplyDeleteசி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteரோஜாவைத்தாலாட்டும் தென்றல்
இந்த பாடலை தான் நானும் உதாரணத்திற்கு போடலாம் என்றிருந்தேன் நண்பரே ஏனென்றால்
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே
//
ReplyDeleteமுதலில் ரோஜாவை பார்ப்போம்
(அட பூவை சொன்னேங்க )
//
செல்வமணி கொவித்துகொல்ல்வர்
மலர்களை பற்றிய அருமையான தகவல்கள்
ReplyDeleteஎன்று என் வலையில்
ReplyDeleteஉங்கள் பதிவை அடுத்தவர்கள் திருடாமல் இருக்க ஒரு சிறந்த வழி..
அருமை ...தொடருங்கள் ...
ReplyDeleteரோஜாவில் இம்புட்டு மேட்டர் இருக்கா(நான் பூவைச்சென்னன்)
ReplyDeleteஅருமையான தகவல்கள்
காதல் ரோஜாவே... எங்கே நீ எங்கே...
ReplyDeleteபயனுள்ள நல்ல பதிவு
ReplyDeleteதமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
மலர்களுக்கு மணம் மட்டுமல்ல குணமும் இருக்கு என்று அழகாக சொல்லியிருக்கீங்க.
ReplyDeleteபயனுள்ள தகவல்கள்.நன்றி.
பல விஷயங்கள் தெரிஞ்சிகிட்டேன் மாப்ள நன்றி!
ReplyDeleteஆ மா, மலர்களுக்குள் மருத்துவ
ReplyDeleteகுணங்களும் நிறம்பி தான் இருக்கு
அதை தெரியப்படுத்திய பதிவுக்கு நன்றி
த.ம.5
ReplyDeleteரோஜா என்றும் ரோஜாதான்!
ReplyDeleteமலர்களைப் பற்றிய மணம் வீசும் பதிவிற்கு நன்றி நண்பா.
ReplyDeleteமிக அருமையான மருத்துவமும் சூப்பரான படங்களும்...
ReplyDeleteபூக்களுக்கு வாசனை மட்டும் தான் உள்ளது என நினைத்திருந்தேன். மருத்துவ குணங்களும் உண்டு என்ற புதிய செய்தியை தெரிந்துக் கொண்டேன். பகிர்வுக்கு நன்றி நண்பா!
ReplyDeleteமீண்டும் ஒரு பயனுள்ள பதிவிற்கு நன்றி சகோ..
ReplyDeleteதாங்கள் தருவதெல்லாம் பயனுள்ள பதிவாகவே உள்ளன
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்
த.ம 11
மலர்களின் மருத்துவ குணங்களை அருமையாக சொல்லியிருக்கீங்க.
ReplyDeleteபாராட்டுக்கள். தொடருங்கள்.
தங்களின் பதிவுகள் எல்லாம் அருமை .ரசித்தேன் .ஓட்டு போட்டாச்சு
ReplyDeleteமணமும், குணமும் நிறைந்த பூக்களை பகிர்ந்தமைக்கு நன்றி சகோ
ReplyDeleteரோஜாவின் பல பயன்கள். நல்ல பதிவு வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
மீண்டும் ஒரு பயனுள்ள பதிவிற்கு நன்றி ...ரமேஸ்
ReplyDeleteரோஜாவை வைத்து ஒரு
ReplyDeleteமருத்துவ சாம்ராஜ்யமே படைத்துவிட்டீர்கள் நண்பரே....
அருமை....
இன்றைய வலைச்சரத்தில் – புறாவும் பூவும் – ஒரு குட்டிக்கதை….
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2011/10/blog-post_15.html
உங்கள் வலைப்பூ பற்றி சொல்லியிருக்கிறேன். முடிந்தால் பாருங்கள்….
நட்புடன்
ஆதி வெங்கட்.