Tuesday, October 18, 2011

நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களின் பலன்கள் பாகம் -6


முந்தைய பாகமான பாகம் -5 ஐ படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.



ரோஜாப்பூ , இலந்தைப் பழம் ,பரங்கிக்காய் , நன்னாரி வேர் ஆகியவை இரத்தத்தை சுத்தி செய்யும். சுக்கிலத்தை கெட்டிப் படுத்தும்.



தோல் நீக்கிய ஐந்து ஆமணக்கு விதைகளை தினமும் காலை,
மாலை சாப்பிட்டு வந்தால் பாரிசவாயு , கை ,கால் ,வாய் விளங்காமை ஆகியவை குணமாகும்.




பூண்டு , ஆலிவ் ஆயில் இவை எழுபது வியாதிகளைக் 
குணமாக்கும்.கருஞ்சீரகம் , எள் இரண்டையும் வறுத்து 
இடித்து தேன் கலந்து லேகியமாக்கிச் சாப்பிட்டு வர 
சர்க்கரை நோய் கட்டுப்படும்.



காரட் , பீட்ரூட் ஆகியவற்றைச் சிறிதாக நறுக்கி சிறிதளவு
நீர் விட்டுக் கொதிக்க வைத்து அருந்த நரம்புத் தளர்ச்சி 
நீங்கி உடல் திடகாத்திரம் பெறும்.


வெங்காயம் , வெள்ளைப் பூண்டு ஆகியவறில் “ செலீனியம்
என்ற சத்து உள்ளது .இது புற்று நோய் வராமல் தடுக்கும்.
கேழ்வரகு , எள் ,வெல்லம் மூன்றையும் இடித்து அடை செய்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.


புதுப்புளி :



இளமையிலேயே நரையைத் தோற்றுவிக்கும். தாதுவைக் 
குறைக்கும். புத்தி மந்தம் ஏற்படும்.


பழைய புளி :

வாதம் போக்கும் , சூடு அதிகரிக்கும் , சூலை நோய் குணமாகும்.
ஆனால் இரத்தம் முறிந்து விடும்.


புளியங்காய் :

வாதத்தை உண்டு பண்ணும்.



புடலங்காய் :

உடலுக்கு பலம் கொடுக்கும். ஆனால் பித்தத்தையும் உண்டுபண்ணும்.

நன்றி 


 

படங்கள் இணையத்திலிருந்து நன்றி

30 comments:

  1. த.ம.1
    தொடர்ச்சியாக பயனுள்ள செய்திகளைப் பகிர்ந்து கொள்வதற்கு நன்றி.

    ReplyDelete
  2. பயனுள்ள தகவல்கள்...

    நட்புடன்,
    http://tamilvaasi.blogspot.com/

    ReplyDelete
  3. நல்ல பயனுள்ள தகவல்கள்.......
    தொடர்ந்து எழுதுங்கள்.......

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    ReplyDelete
  4. பயனுள்ள தகவல். பகிர்வுக்கு நன்றிங்க...

    ReplyDelete
  5. பயனுள்ள தகவல்
    புளியைக் குறைக்கச் சொல்லுகிற காரணம் இப்போதுதான் புரிகிறது
    அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள் த.ம 3

    ReplyDelete
  6. புளி பற்றிய தகவல், வயிற்றில் புளியைக் கரைக்குதே..

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. வழக்கம் போல் அருமை பாஸ்

    ReplyDelete
  9. மிக்க நன்றி டாக்டர் அவர்களே....நாம் சாப்பிடும் ஆகாரங்களே மருந்துகள்தான் போல இல்லையா...!!!

    ReplyDelete
  10. சென்னை பித்தன் said...
    த.ம.1
    தொடர்ச்சியாக பயனுள்ள செய்திகளைப் பகிர்ந்து கொள்வதற்கு நன்றி.

    கருத்துக்கு நன்றி ஐயா

    ReplyDelete
  11. தமிழ்வாசி - Prakash said...
    பயனுள்ள தகவல்கள்...


    நன்றி நண்பா

    ReplyDelete
  12. விக்கியுலகம் said...
    கலக்கல்//

    நன்றி மாம்ஸ்

    ReplyDelete
  13. Kannan said...
    நல்ல பயனுள்ள தகவல்கள்.......
    தொடர்ந்து எழுதுங்கள்.......

    நன்றி,
    கண்ணன் //

    நன்றி நண்பரே ,தாங்கள் குறிப்பிட்ட தள்ம் வந்தேன் நண்பரே ,அருமையாகவும் வித்தியாசமாகவும் உள்ளது நண்பரே

    ReplyDelete
  14. மாய உலகம் said...
    பயனுள்ள தகவல். பகிர்வுக்கு நன்றிங்க...

    நன்றி சகோ

    ReplyDelete
  15. Ramani said...
    பயனுள்ள தகவல்
    புளியைக் குறைக்கச் சொல்லுகிற காரணம் இப்போதுதான் புரிகிறது
    அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள் த.ம 3//

    தங்கள் அன்பான கருத்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  16. செங்கோவி said...
    புளி பற்றிய தகவல், வயிற்றில் புளியைக் கரைக்குதே..//

    எதுவும் அளவுக்கு மீறினால் தானே நண்பரே கேடு விளைவிக்கும்

    ReplyDelete
  17. K.s.s.Rajh said...
    வழக்கம் போல் அருமை பாஸ்

    நன்றி நண்பா

    ReplyDelete
  18. தங்கள் பதிவுகளைப் படித்தால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் வராது போலிருக்கிறது ...

    ReplyDelete
  19. MANO நாஞ்சில் மனோ said...
    மிக்க நன்றி டாக்டர் அவர்களே....நாம் சாப்பிடும் ஆகாரங்களே மருந்துகள்தான் போல இல்லையா...!!!

    ஆம் நண்பரே சரியாக சொன்னீர்கள்

    ReplyDelete
  20. koodal bala said...
    தங்கள் பதிவுகளைப் படித்தால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் வராது போலிருக்கிறது ...

    அன்பு கருத்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  21. அருமையான தகவல்கள்

    ReplyDelete
  22. அபூர்வமான தகவல்கள் ரமேஷ்.தொடருங்கள்.
    நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  23. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    அருமையான தகவல்கள்

    நன்றி நண்பரே

    ReplyDelete
  24. RAMVI said...
    அபூர்வமான தகவல்கள் ரமேஷ்.தொடருங்கள்.
    நன்றி பகிர்வுக்கு.

    தொடர்கிறேன் சகோதரி

    ReplyDelete
  25. கலக்கறீங்க நண்பா காய்கறிகள், மற்றும் பழங்கள் பற்றி எது தேவையாயினும் உங்கள் தளத்தை பார்த்தால் போதுமானது அந்த அளவுக்கு தகவல்கள் அசத்தல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  26. r.v.saravanan said...
    கலக்கறீங்க நண்பா காய்கறிகள், மற்றும் பழங்கள் பற்றி எது தேவையாயினும் உங்கள் தளத்தை பார்த்தால் போதுமானது அந்த அளவுக்கு தகவல்கள் அசத்தல் வாழ்த்துக்கள்//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  27. பயனுள்ள தகவல். பகிர்வுக்கு நன்றிங்க நண்பரே...

    ReplyDelete
  28. ரெவெரி said...
    பயனுள்ள தகவல். பகிர்வுக்கு நன்றிங்க நண்பரே...//

    நன்றி ந்ண்பரே

    ReplyDelete
  29. வணக்கம் சகோதரம்,
    நல்லதோர் பதிவு,
    நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் உள்ள சிறப்பியல்புகளை அறிந்து, பயன்படுத்துவதற்கேற்ற அருமையான பதிவு.

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே