Saturday, October 1, 2011

அட இதெல்லாம் செய்ய கூடாதுங்க



எண்ணெய் தேய்த்து குளிக்கும் பொழுது வெந்நீரை
தவிர வேற நீரில் குளிக்க கூடாது .

இரவில் பசும்பாலைத்தவிர வேற பால் குடிக்க கூடாது.

மலம் ,சிறுநீர் ஆகியவைகளை அடக்க கூடாது

மூல நோய் உண்டாக்கும் காய்கறிகளை உண்ண கூடாது






முதல் நாள் சமைத்த காய்கறிகளை மறுநாள் உண்ண கூடாது

பசித்தாலின்றி உண்ண கூடாது

கிழங்கு வகைகளில் கருணை கிழங்கு தவிர மற்ற கிழங்குகளை
உண்ணாதே (குறிப்பாக நாற்பது வயதுக்கு மேல் )





பகற்பொழுதில் உடலுறவு மற்றும் தூக்கம் கூடாது

வயதிற்கு மூத்த மாதருடன் உடலுறவு கூடாது

உணவு சீரனமாகும் சமயத்தில் உடலுறவு கூடாது



உறங்கும் பொழுது இடது கையை தலைக்கு வைத்து உறங்க
வேண்டும்.

நடு இரவில் வாசனைப் பொருள்,பூக்கள் போன்றவைகளை
முகர கூடாது.

கெட்ட மணம் ,தூசி போன்ற பொருட்கள் உடலில் படும்படி
நெருங்க கூடாது

இளவெயில் ஆகாது.



உணவு உண்டபின் தான் தண்ணீர் அருந்த வேண்டும்.

உண்ட பின் சிறிது தூரம் குறுநடை கொள்ள வேண்டும்.





ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வாந்தி மருந்தையும் ,
நான்கு மாதங்களுக்கு ஒரு முறை பேதி மருந்தையும்
எடுத்து கொள்ள வேண்டும்.


நான்கு நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் குளியல்
மூன்று நாட்களுக்கு ஒரு முறை கண்களுக்கு மையிடுதல்
வேண்டும்.

இரவில் மர நிழலில் தங்க கூடாது

நகங்களையும்,முடியையும் சுத்தமாக வைத்துக் கொள்ள
வேண்டும்.

எப்பொழுது நீரைக்காய்ச்சியும் ,நெய்யை உருக்கியும்,தயிரை
நீர்விட்டு மோராக்கியும் மட்டுமே உபயோகிக்க வேண்டும்.

நன்றி

 

ஹி ஹி ஹி


தினந்தோறும் அன்பு உலகம் வராமல் இருக்க கூடாது

கருத்துக்கள் பதியாமல் செல்ல கூடாது

வோட்டும் போடாமல் போகக்கூடாது


நன்றி :-

படங்கள் உபயம் :-இணையம்

ரெபரன்ஸ்:- இந்திய மருத்துவ முறை மருத்துவ சிலபஸ்


45 comments:

  1. பயனுள்ள தகவல்கள் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. ஏங்க இப்படி ஸ்டில்ஸ் போட்டா
    பதிவோட மேட்டர் எப்படிங்க மனசில நிக்கும்.
    ம்ம்ம்,என்னவோ போங்க!

    ஆனாலும் பயனுள்ள பதிவுங்கோ!

    ReplyDelete
  3. மாப்ள கவர்ச்சி(!) படங்கள் மற்றும் ஆரோக்கியமான விஷயத்துக்கான பதிவு...ஹிஹி நாங்களும் கோத்து விடுவோம்ல!

    ReplyDelete
  4. உங்க கையெழுத்துக்கு மேலே இருக்கிறது சூப்பர்! கீழே இருக்கிறது சூப்பர் ஓ சூப்பர்!

    ReplyDelete
  5. அனைத்தும் பயனுள்ள தகவல்கள்..
    நன்றி...

    ReplyDelete
  6. kobiraj said...
    பயனுள்ள தகவல்கள் பகிர்வுக்கு நன்றி

    நன்றி நண்பரே

    ReplyDelete
  7. கோகுல் said...
    ஏங்க இப்படி ஸ்டில்ஸ் போட்டா
    பதிவோட மேட்டர் எப்படிங்க மனசில நிக்கும்.
    ம்ம்ம்,என்னவோ போங்க!

    ஆனாலும் பயனுள்ள பதிவுங்கோ!//

    சாரி நண்பரே வேண்டுமென்றால் எடுத்து விடுகிறேன்

    ReplyDelete
  8. விக்கியுலகம் said...
    மாப்ள கவர்ச்சி(!) படங்கள் மற்றும் ஆரோக்கியமான விஷயத்துக்கான பதிவு...ஹிஹி நாங்களும் கோத்து விடுவோம்ல!

    உறுத்துதா மாம்ஸ் ,சொல்லுங்க எடுத்து விடலாம்

    ReplyDelete
  9. Powder Star - Dr. ஐடியாமணி said...
    உங்க கையெழுத்துக்கு மேலே இருக்கிறது சூப்பர்! கீழே இருக்கிறது சூப்பர் ஓ சூப்பர்!

    நன்றி நண்பரே

    ReplyDelete
  10. வேடந்தாங்கல் - கருன் *! said...
    அனைத்தும் பயனுள்ள தகவல்கள்..
    நன்றி...//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  11. பின்தொடர்வது கஷ்டம் ங்கோ

    ReplyDelete
  12. ராத்திரி மரத்துல நிழல் எப்பிடிய்யா டாக்டர்...???

    ReplyDelete
  13. உபயோகமான தகவல்கள்...!!!

    ReplyDelete
  14. கார்த்தி கேயனி said...
    பின்தொடர்வது கஷ்டம் ங்கோ

    ஒரு சிலது கூடவா

    ReplyDelete
  15. MANO நாஞ்சில் மனோ said...
    ராத்திரி மரத்துல நிழல் எப்பிடிய்யா டாக்டர்...???//


    மரத்து நிழலில் தங்க கூடாது நண்பரே

    கரியமிலவாயு பிரச்சனை இருக்கில்ல

    ReplyDelete
  16. MANO நாஞ்சில் மனோ said...
    உபயோகமான தகவல்கள்...!!!

    நன்றி நண்பா

    ReplyDelete
  17. பயனுள்ள தகவல்கள் சகோ

    ReplyDelete
  18. பயனுள்ள செய்ய கூடாத விஷயங்கள்.
    நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  19. Mahan.Thamesh said...
    பயனுள்ள தகவல்கள் சகோ

    தமிழ்மணம் 7//

    மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  20. RAMVI said...
    பயனுள்ள செய்ய கூடாத விஷயங்கள்.
    நன்றி பகிர்வுக்கு.

    நன்றி சகோதரி

    ReplyDelete
  21. ஜாக்கிங் கேர்ள் படம் கலக்கல். நல்ல பதிவு.

    ReplyDelete
  22. நீங்கள் சொல்வது எல்லாமே சிறப்புத்தான் நடைமுறைப்படுதுவது தான் கடினம்!

    ReplyDelete
  23. நல்ல தகவல்கள் என்ன அந்த பிகருகள்(நடிகைகள்)படங்கள் தான் பதிவை முழுமனதோடு படிக்கவிடவில்லை..ஹி.ஹி.ஹி.ஹி.......

    ReplyDelete
  24. பயனுள்ள பதிவு
    கடைசியில் சொன்ன கூடாதுகள் ரொம்ப முக்கியம்
    வாழ்த்துக்கள் த.ம 9

    ReplyDelete
  25. சி.பி.செந்தில்குமார் said...
    ஜாக்கிங் கேர்ள் படம் கலக்கல். நல்ல பதிவு.

    நன்றி நண்பா

    ReplyDelete
  26. தனிமரம் said...
    நீங்கள் சொல்வது எல்லாமே சிறப்புத்தான் நடைமுறைப்படுதுவது தான் கடினம்!

    கருத்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  27. K.s.s.Rajh said...
    நல்ல தகவல்கள் என்ன அந்த பிகருகள்(நடிகைகள்)படங்கள் தான் பதிவை முழுமனதோடு படிக்கவிடவில்லை..ஹி.ஹி.ஹி.ஹி.......

    ஹி ஹி ஹி அது சும்மா தமாசுக்கு

    ReplyDelete
  28. Ramani said...
    பயனுள்ள பதிவு
    கடைசியில் சொன்ன கூடாதுகள் ரொம்ப முக்கியம்
    வாழ்த்துக்கள் த.ம 9

    நன்றி நண்பரே

    ReplyDelete
  29. எத்தனை கூடாதுகள்?நன்று!
    (வந்தாச்சு,வோட்டுப் போட்டாச்சு, கருத்தும் சொல்லியாச்சு)

    ReplyDelete
  30. தொடர்ந்து உடல் நலத்திற்கு தேவையான அசத்தல் பதிவுகள் தாறீங்க பாஸ்.. நன்றிப்பா

    ReplyDelete
  31. வைத்திய கலாநிதியே எல்லாம் புரியுது..
    இடது கைவத்து தூங்கினால் என்னாகும்.இது புரியலயே.
    அடுத்த கடைசியில போட்டதுக்கு என்ன பெயர் வைத்தியத்தின் படி ..hahahhaa
    எல்லாம் சுப்பர்..
    அன்புடன் பாராட்டுக்கள்.


    எனது பக்கம்..இறக்கவைத்து, இறந்துபோன நம்பிக்கை...

    ReplyDelete
  32. ஆரோக்கிய வாழ்விற்கேற்ற சூப்பரான டிப்ஸ்களைத் தந்திருக்கிறீங்க பாஸ்..

    மிக்க நன்றி,

    ReplyDelete
  33. அருமையான ஆரோக்கியம் விசயங்கள் நன்றி சகோ

    ReplyDelete
  34. நீங்க டாக்டரா... விஜய் மாதிரியான்னு கேட்கலை நண்பரே...:)

    ReplyDelete
  35. ஆரோக்கியமான வாழ்வுக்கு தேவையான பல விஷயங்களைப்பதிவிட்டு வரீங்க. எல்லாருக்குமே உபயோகமா இருக்கு.

    ReplyDelete
  36. சென்னை பித்தன் said...
    எத்தனை கூடாதுகள்?நன்று!
    (வந்தாச்சு,வோட்டுப் போட்டாச்சு, கருத்தும் சொல்லியாச்சு)//

    மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  37. மதுரன் said...
    தொடர்ந்து உடல் நலத்திற்கு தேவையான அசத்தல் பதிவுகள் தாறீங்க பாஸ்.. நன்றிப்பா//

    நன்றி நண்பா

    ReplyDelete
  38. vidivelli said...
    வைத்திய கலாநிதியே எல்லாம் புரியுது..
    இடது கைவத்து தூங்கினால் என்னாகும்.இது புரியலயே.//

    இடது கைவைத்து உறங்குதல் தான்
    முறை சகோ .இருதயத்திற்கு நல்லது


    அடுத்த கடைசியில போட்டதுக்கு என்ன பெயர் வைத்தியத்தின் படி ..hahahhaa
    எல்லாம் சுப்பர்..
    அன்புடன் பாராட்டுக்கள்.//

    நன்றி சகோ..

    ReplyDelete
  39. நிரூபன் said...
    ஆரோக்கிய வாழ்விற்கேற்ற சூப்பரான டிப்ஸ்களைத் தந்திருக்கிறீங்க பாஸ்..

    மிக்க நன்றி,

    நன்றி நண்பரே

    ReplyDelete
  40. மாய உலகம் said...
    அருமையான ஆரோக்கியம் விசயங்கள் நன்றி சகோ

    நன்றி சகோ...

    ReplyDelete
  41. ரெவெரி said...
    நீங்க டாக்டரா... விஜய் மாதிரியான்னு கேட்கலை நண்பரே...:)//

    ஹா ஹா ஹா

    மருந்தாளுனர் நண்பரே

    ReplyDelete
  42. Lakshmi said...
    ஆரோக்கியமான வாழ்வுக்கு தேவையான பல விஷயங்களைப்பதிவிட்டு வரீங்க. எல்லாருக்குமே உபயோகமா இருக்கு.//

    நன்றி அம்மா

    ReplyDelete
  43. சிறப்பான உங்களது இடுகை பாராட்டுகள் சித்தரில் தேரையர் என்ற சித்தர் அருளியது எனபார்கள் இந்த வாழ்க்கைமுறை அனைவரு பின் பற்றவேண்டியது பாராட்டுகள்

    ReplyDelete
  44. சிறப்பான பயனுள்ள துணுக்குகள் நண்பரே.

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே