Friday, September 30, 2011

யோகா கற்றுக்கொள்ளுங்கள்-பாகம் 3

நண்பர்களே வணக்கம் .நமது நேற்றைய பதிவான
வாங்க சிரிக்கலாம் படித்து சிரித்திருப்பீர்கள் .

சரி யாரெல்லாம் சிரித்தார்கள் என்று பார்க்க கணினி
ஓபன் செய்து பார்த்தேன் ,அதில் நண்பர் ரெவரி "யோகா "
பற்றி நினைவு படுத்தினார் .



நானும் இன்று திருச்சிராப்பள்ளி செல்வதால் பதிவு
வேண்டாம் என்று நினைத்திருந்தேன் .
ரெவரியின் நினைவால் ...இன்று யோகா
(அவர் என்ன நினைத்தார் என்று நேற்றைய பதிவில்
அவருடைய கமண்ட் பாருங்கள் )

யோகாவின் முந்தய பதிவுகள் படிக்காதவர்களுக்காக

யோகா கற்றுக் கொள்ளுங்கள் பாகம்-1

யோகா கற்றுக்கொள்ளுங்கள் பாகம் -2

பார்ஸ்வ உத்தானாசனம் 





செய்முறை :-

நின்றபடி இடது காலை இரண்டரை அடி நீளத்திற்கு முன்னால்
அகற்றி வைக்க வேண்டும்.

மூச்சை மெதுவாக உள்ளே இழுத்தப்படி கைகளைத் தூக்கவும்.

இது அராம்ப நிலை .

பின்னர் மூச்சை நிதானமாக வெளியே விட்டவாறு குனிந்து
கைகளால் பாதத்தைத் தொட வேண்டும்.

அதே சமயத்தில் முகத்தை முன்கால் முட்டிமேல் வைக்க வேண்டும்.

மீண்டும் மூச்சை உள்ளே இழுத்தபடி நிமிர்ந்து கைகளைத்
தூக்கி பழைய நிலைக்கு வரவேண்டும்.

இவ்வாறு இருபக்கமும் 4-6 முறை செய்யவும்.

செய்வதற்குக் கடினமாக இருந்தால் குனியும் பொழுது
முன்முட்டியை மடிக்கவும்.

பயன்கள் :-

அடிவயிற்றுப் பகுதியிலுள்ள நோய்களுக்கு நல்லது.
முதுகு,இடுப்பு வலி வராமல் தடுக்கும்.

தவிர்க்க வேண்டியவை :-

கழுத்து ,இடுப்பு ,Disc Prolapse , முதுகுத் தண்டு கோளாறுகள் 
உள்ளவர்கள் ,வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து 
கொண்டவர்கள் ,(Hernia)-குடல் இறக்கம் உள்ளவர்கள் 
தவிர்க்கவும்.


உத்கடாசனம் 
(Half Standing/ Half Sitting)






செய்முறை :-


பாதங்களை சிறிது இடைவெளி வைத்து நிற்கவும்.
மூச்சை மெதுவாக இழுத்தவாறு கைகளைத் தூக்கவும்.


இது ஆரம்ப நிலை,


பின்னர் மூச்சை நிதானமாக வெளியே விட்டவாறு முட்டிகளை 
மடித்து மடித்து பாதி உட்காரவும்.


பின்பு மூச்சை விட்ட வண்ணம் குதிகால்களைத் தூக்கிய படி 
உட்காரவும்.


பின்னர் மூச்சை உள்ளே இழுத்தவாறு கைகளைத் தூக்கிய 
படி மேலே பழைய நிலைக்கு வரவேண்டும்.


6-8 முறை செய்யவும்.


செய்யக் கடினமாக இருந்தால் ஜன்னல் கம்பிகளை 
பிடித்தபடி முடிந்த வரை கீழே உட்கார வேண்டும்.


பயன்கள் :-


இதனால் தசைகள் ,மூட்டுகள் வலுப்பெறும்.


தவிர்க்க வேண்டியவேர்கள் :-


(Arthiritis )-மூட்டுக் கோளாறுகள் ,Disc Prolapse , இருதய நோய்
உள்ளவர்கள் தவிர்க்கவும்.

19 comments:

  1. மிகவும் பயனுள்ள ஆசனங்கள். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. த.ம.2.

    பயனளிக்கும் ஆசனங்கள்.

    ReplyDelete
  3. மிகவும்,மிகவும் பயனுள்ள பதிவு..
    பகிர்வுக்கு நன்றிகள்..

    ReplyDelete
  4. பயனுள்ள பதிவு..

    எனக்கு வயிறு பெருசு 45 டிகிரி குனிந்து 5 செகண்ட் நின்னாகூட மூச்சு வாங்கும் என்ன ஆசனம் பண்ண தொப்பையை குறைக்கமுடியும் தொப்பை சைஸ் மட்டும் 54 இன்ச் மேலே போயிடுச்சு கொஞ்சம் சொன்னா முயற்சி பண்றேன்.

    ReplyDelete
  5. இன்று படத்துடன் விளக்கம்
    பயனுள்ளதாக இருந்தது நண்பரே.

    ReplyDelete
  6. சிறப்பான ஆசனங்கள் நன்றி ஆசானே...!!!

    ReplyDelete
  7. நல்ல ஆசனங்கள் நன்றி பாஸ்

    ReplyDelete
  8. மாப்ள பேரெல்லாம் பாபா படத்துல வராப்போல இருந்தாலும்(!)...உங்க பதிவு பயணுள்ளதுய்யா நன்றி!

    ReplyDelete
  9. பதிவுலக வரலாற்றிலேயே முதல் முறையாக ஆணின் படத்துடன் யோகாசனம் நற நற ஹி ஹி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. பத்தாண்டுகளுக்கு முன்பாக
    ஆசிரியர் மூலம் நேரடியாகக் கற்றுக் கொண்டது
    வேலைப் பளுவின் காரணமாக தொடர முடியாது போனது
    தற்போது தாங்கள் படங்களுடன் எளிமையாக
    விளக்கிப் போவது அறிந்து கொள்ள ஏதுவாக உள்ளது நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. நன்றி ரமேஷ்.


    சிபி கமெண்ட்டைக் கொஞ்சம் கவனிங்க!

    ReplyDelete
  12. நன்றி மாஸ்டர்......

    செங்கோவி கமெண்ட்டைக் கொஞ்சம் கவனிங்க...!

    ReplyDelete
  13. அந்த மஞ்ச புடவை அம்மாவை மாடலா கூப்பிடக்கூடாதா...?
    நான் சொல்லல...செங்கோவி வெட்கப்பட்டு சொன்னத விளக்கமா சொல்றேன்...

    ReplyDelete
  14. நன்றி சகோ....பன்னிக்குட்டி கமேண்ட கொஞ்சம் கவனிங்க...

    ReplyDelete
  15. தவிர்க்கவேண்டியவர்கள் பிரிவில் நான் இருக்கேன் அதாவது (மூட்டுவலி, இதயக்கோளாறுகள்) அதனால நான் இதை முயற்சி செய்ய முடியாது இல்லியா?

    ReplyDelete
  16. உத்தாசனம் பற்றிய விளக்கப் பகிர்விற்கு நன்றி நண்பா.

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே