Sunday, October 16, 2011

நான் நடித்த படம் நூறு நாள் ஓடும்



நடிகர் :- நான் நடித்த படம் நூறு நாள் ஓடும் என்று எனக்கு
நம்பிக்கை  இருக்கு

ரசிகன் :- நூறு நாள் என்ன சார் நூறு நாள் ,ஐநூறு நாளே ஓடும்


நடிகர் :- என்னங்க காமடி பண்றீங்க ....

ரசிகன் :- ங்கொய்யால .. முதல்ல யாரு காமடி பண்ணினது .





ஒருவன் :- அந்த படம் ஓடும் தியேட்டரில் கேட்டை 

திறப்பதற்கு 

பத்து ரூபாய் லஞ்சம் கேட்கிறார்கள் .



மற்றவன் ;- என்னது படம் அவ்வளவு கூட்டமா !!!

ஒருவன் :- இல்லப்பா ,படம் பிடிக்கலன்னு எழுந்து ஓடி
வரவங்களுக்கு
வெளியே
 போறதுக்கு கேட்டை திறக்க 


லஞ்சம் கேட்கிறாங்க .





( பாரில் )


ராமு :- இந்த பீரில் நிறமில்லை

சோமு :- இந்த பீரில் திடமில்லை

பரமு :- இந்த பீரில் சுவையில்லை

மாமு  :- ங்கொய்யால.... இது பீரே இல்லடா ..இது சோடா


ஒருவன் :- அந்த ரவுடிய இந்த ஏரியா விட்டு தொரத்தரதுக்கு
ஒரு ஐடியா இருந்தா சொல்லுங்களேன் அண்ணாச்சி

அண்ணாச்சி :- அவன எம் எல் ஏ விற்கு நிற்க வைத்து ஒட்டு
போட்டு ஜெயிக்க வச்சிடுங்க

ஒருவன் :- அப்பிடி செஞ்சா

அண்ணாச்சி :- அஞ்சு வருசத்துக்கு இந்த ஏரியா பக்கமே 
வரமாட்டான் 









ஹார்ட் அட்டாக் என்றால் என்னன்னு தெரியுமா 
( சும்மா காமடிக்கு )


ஒரு அழகான பொண்ணு உன்னை பார்த்தா உனது


இரத்தம்

 சூடாகும்.




அவள் சிரித்தால் உன் ப்ளட்பிரசர் லைட்டா அதிகரிக்க


ஆரம்பிக்கும் 





அவள் உன் பக்கத்தில் வந்தால் ,உனது இருதய துடிப்பு
அதிகரிக்கும்.

முகம் வேர்க்கும் ,நாக்கு குழறும் .

அவள் தன்னோட அழகான உதட்டினை திறந்து

“ அண்ணா ” 13B பேருந்து எத்தனை மணிக்கு வரும்னு


கேட்கும்பொழுது 

உனது இருதயத்துல டமால்னு 

ஒரு 


வெடி சத்தம் கேட்கும் பாரு ...



அதுக்கு பேருதான் ஹார்ட் அட்டாக் .











தத்துவம் 



தூங்க போறதுக்கு முன்னாடி தூங்க போறேன்னு சொல்லலாம் .ஆனால்

தூக்கத்திலிருந்து எழுந்து கொள்வதற்கு முன்னாடி எழுந்து கொள்ளப் போகிறேன்னு சொல்லமுடியுமா ?.

செருப்பு இல்லாம நாம நடக்கலாம் .நாம இல்லாம செருப்பு நடக்குமா !!!



நன்றி 




விடை 


நேற்றைய பதிவில் நான் கேட்ட கேள்விக்கு 
பதில் இரண்டு பேர் சரியான விடை 
சொல்லியிருக்கிறார்கள் 


நண்பர் அம்பலத்தார் 


சகோதரி கோவைக்கவி (இலங்காதிலகம்)


ஆம் இரண்டு எலுமிச்சம் பழங்கள் 
அவன் பறித்தது ,வீட்டுக்கு எடுத்து 
சென்றது .

28 comments:

  1. சரியான காமெடி ...தத்துவம் தாங்க முடியல ...

    ReplyDelete
  2. எல்லா ஜோக்குமே சூப்பர்.அதிலும் ஹார்ட் அட்டாக் நல்ல வேடிக்கை.

    ReplyDelete
  3. நூறு நாள் படம் யாரோடது?
    இதுல உள்குத்து நிச்சயம் இருக்கு தானே?

    ReplyDelete
  4. ஹா.....ஹா....சூப்பர் முதல் காமெடியே அசத்தல்

    ReplyDelete
  5. நண்டு @நொரண்டு -ஈரோடு said...
    ஹா..ஹா...


    ஹே ஹே

    ReplyDelete
  6. koodal bala said...
    சரியான காமெடி ...தத்துவம் தாங்க முடியல ...//

    விட மாட்டம்ல ஹா ஹா

    ReplyDelete
  7. r.v.saravanan said...
    ஹா.... ஹா

    சிரியுங்கள் சிரியுங்கள் நன்றாகசிரியுங்கள்

    ReplyDelete
  8. RAMVI said...
    எல்லா ஜோக்குமே சூப்பர்.அதிலும் ஹார்ட் அட்டாக் நல்ல வேடிக்கை.

    நன்றி சகோதரி ,ஹி ஹி

    ReplyDelete
  9. ஹார்ட்அட்டக் சிறந்த விளக்கம் இப்படித்தான் அண்ணன்னு கூப்பிட்டா இதயம் வெடிக்கும

    ReplyDelete
  10. கோகுல் said...
    நூறு நாள் படம் யாரோடது?
    இதுல உள்குத்து நிச்சயம் இருக்கு தானே?

    கோத்துவிடரதிலேயே குறியா இருக்கீங்களே. இதுல எந்த உள் குத்தும் இல்ல நண்பா

    ReplyDelete
  11. வைரை சதிஷ் said...
    ஹா.....ஹா....சூப்பர் முதல் காமெடியே அசத்தல்

    நன்றி நண்பா

    ReplyDelete
  12. மாலதி said...
    ஹார்ட்அட்டக் சிறந்த விளக்கம் இப்படித்தான் அண்ணன்னு கூப்பிட்டா இதயம் வெடிக்கும//

    ஹா ஹா

    ReplyDelete
  13. ஹா ஹா ஹா ஹா கலக்கல் காமெடி கும்மி...!!!

    ReplyDelete
  14. இராஜராஜேஸ்வரி said...
    very nice..

    நன்றி மேடம்

    ReplyDelete
  15. MANO நாஞ்சில் மனோ said...
    ஹா ஹா ஹா ஹா கலக்கல் காமெடி கும்மி...!!!//

    ஹி ஹி நன்றி நண்பரே

    ReplyDelete
  16. வணக்கம் பாஸ்,

    கலக்கலான காமெடிகள்,
    அப்போ நீங்க இன்னும் படம் நடிக்கவே இல்லையா;-)))

    ஹே...ஹே...

    படம் பிடிக்கலைன்னா இம்புட்டு லஞ்சமா கேட்பாங்க;-))

    ReplyDelete
  17. தத்துவம் மாத்தி யோசித்திருக்கிறீங்க.

    ReplyDelete
  18. மதிப்பிற்குரிய
    அம்பலத்தார், கோவைக் கவி ஆகியோரை உங்களோடு சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  19. நிரூபன் said...
    வணக்கம் பாஸ்,

    கலக்கலான காமெடிகள்,
    அப்போ நீங்க இன்னும் படம் நடிக்கவே இல்லையா;-)))

    ஹே...ஹே...

    படம் பிடிக்கலைன்னா இம்புட்டு லஞ்சமா கேட்பாங்க;-))

    ஹா ஹா ஹா

    ReplyDelete
  20. நிரூபன் said...
    தத்துவம் மாத்தி யோசித்திருக்கிறீங்க.

    மதிப்பிற்குரிய
    அம்பலத்தார், கோவைக் கவி ஆகியோரை உங்களோடு சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்.//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  21. அருமை!(காப்பி பேஸ்ட் கமண்ட் இல்லை)ஜோக்கெல்லாம் நல்லாருக்கு!என்னமோ ஹார்ட் அட்டாக்குன்னா வெடிவெடிக்கிற சத்தமெல்லாம் கேக்குமா?ஹா!ஹா!ஹா!

    ReplyDelete
  22. Yoga.S.FR said...
    அருமை!(காப்பி பேஸ்ட் கமண்ட் இல்லை)ஜோக்கெல்லாம் நல்லாருக்கு!என்னமோ ஹார்ட் அட்டாக்குன்னா வெடிவெடிக்கிற சத்தமெல்லாம் கேக்குமா?ஹா!ஹா!ஹா!

    வாங்க ஐயா ,கருத்துக்கு நன்றி ஐயா .

    ReplyDelete
  23. காமெடிக் கோட்டை கட்டியிருக்கீங்க நண்பரே.
    வாசித்து வாசித்து சிரித்தேன்.
    அத்தனையும் அருமை.

    அந்த தத்துவம் யப்பா.....

    ReplyDelete
  24. ஹா..ஹா..ஹா.. விழுந்து விழுந்து சிரிக்க வைத்திட்டீங்க ரமேஸ்..

    ங்கொய்யாலே... எனபதை எங்கு கண்டாலும், என்னால் சிரிப்பை அடக்க முடிவதில்லை:))).

    ReplyDelete
  25. முதல் ஜோக் சூப்பர்...

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே