Wednesday, January 4, 2012

விடைபெற்றுக் கொள்கிறேன் நட்புக்களே




பதிவுலகம் காலடிவைத்து ஒன்பதாவது மாதம் நடக்கிறது

இந்த ஒன்பது மாதத்தில் அருமையான அன்பான
உறவுகள் பல பெற்றேன் ,அவர்களின் அன்பு
மழையில் நனைந்தேன்

200 பதிவுகளுக்கு மேல் பதிவு வெளிவந்து

2 லட்சத்திற்கு மேல் ஹிட்சும் பெற்று

2 வது இடம் தமிழ்மணம் தொட்டு

தடங்களின்றி அருமையாக பயணம் செய்தது
இந்த அன்பு உலகம்

அதற்கு தங்களின் அன்பான ஒத்துழைப்பும்
ஆதரவும் தான் நட்புக்களே

அதற்கு எனது மனப்பூர்வமான



நன்றி நன்றி நன்றி



தற்காலிகமாக தங்களிடமிருந்து விடைபெறுகிறேன்

என்னை பின்தொடரும் நட்புக்களுக்கும் ,மற்றும் எமது
அன்பு உலகம் வந்து பதிவுகளை படித்து சென்ற
அனைவருக்கும் எமது நன்றிகள்

அனைவரும் எல்லா வளமும் பெற்று மகிழ்வோடு வாழ
இறைவனை வேண்டிக்கொண்டு..

வாய்ப்பிருந்தால் திரும்ப வருகிறேன் எனக் கூறிக்கொண்டு

உங்களை பிரிய மனமில்லாமல் பிரிந்து செல்லும்

உங்கள் நண்பன்


மு . ரமேஷ்

வாழ்க வளமுடன்


Tuesday, January 3, 2012

அட ..கஞ்சி குடிக்கலாம் வாங்க




சம்பா அரிசிக் கஞ்சி

தன்மை : குளிர்ச்சியும் , சிலிர்ப்பும் ஆகும்

நன்மை : குடலிலும் , தீனிப்பையிலும் சூட்டை அகற்றும்

நோய் : நீரை அதிகமாக விளைவிக்கும் , மூத்திரப் பெருக்கு
உண்டாக்கும் , குளிர்ந்த உடலுக்கு காற்று அதிகரிக்கும்

மாற்று : குல்கந்து , புதினா இலை