வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Thursday, December 29, 2011

நாம் உண்ணும் உணவின் தன்மைகள் பாகம் -1

நீண்ட இடைவெளிக்கு பின் ....

நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் பலவகையான
உணவின் நன்மை தீமைகளை அதாவது அவைகளின்
குணங்களை தெரிந்து கொள்வோம்

முதலில் இறைச்சி வகைகள்


ஆட்டு இறைச்சி

தன்மை : சூடும் , வளமையும் ஆகும்

நன்மை :வலிமை உண்டாகும் , உடல் தழைக்கும் , தாது
விருத்தி உண்டாகும் , குடல் பெருக்கும் , சத்து அதிகரிக்கும்,
மலம் குறையும்

 நோய் : கீல் வாதம் , நரம்பு இசிவு அதிகரிக்கும்

இதற்கு மாற்று : கொத்தமல்லி -கருவாப்பட்டை நெய்

ஆட்டின் தலை இறைச்சி

தன்மை : சூடு , வளமை , குளிர்ச்சி , இவைகள் மூன்றும்
சமமாக இருக்கும்

நன்மை : குடல் புஷ்டி உண்டாக்கும் , உடல் தழைக்கும் ,
இருதய கமலம் சம்பந்தமான நோய்களை கண்டிக்கும் ,
சத்து அதிகரிக்கும் , மலம் குறையும்

நோய் : வயிற்றில் காற்று அதிகரிக்கும் ,மந்திக்கும்

மாற்று : இஞ்சி ,எலுமிச்சம் பழச்சாறு , புதினா

ஆட்டின் தலை மூளை

தன்மை : குளிர்ச்சியும் , சிலிர்ப்பும் ஆகும்

நன்மை : சூட்டை அகற்றும் , தோளின் மேல் இருக்கும்
தோலுக்கு மினுக்கு உண்டாகும் ,பசுமை கொடுக்கும்

நோய் : அசுத்த உதிரத்தையும் ,அசுத்த சத்துக்களையும்
உண்டு பண்ணும்

மாற்று : காடி, சீரகம் ,  கொத்தமல்லி கீரை

ஆட்டின் மண்ணீரல்

தன்மை : குளிர்ச்சியும் ,வறட்சியும் ஆகும்

நன்மை : ஆகாரம் மட்டும்

நோய் : உடலில் வண்டலையும் , அசுத்த உதிரத்தையும்
உண்டு பண்ணும் , உதிரத்தில் குழம்பேற்றும் , மந்திக்கும்

மாற்று : லவங்கப் பட்டை ,நெய்ஆட்டுக் குடல்

தன்மை : குளிர்ச்சியானது

நன்மை : குடலுக்கு பலம் கொடுக்கும்

நோய் : அசுத்த இரத்தத்தை உண்டாக்கும் ,மந்தப்படும் , வயிறு
கணக்கும் ,வயிற்றில் வலி உண்டாகும்

மாற்று : சுக்கு , திப்பிலி , சீரகம் , கடுகு

ஆட்டுக் கொழுப்புக் குடல்

தன்மை : சூடும் , கொழுமையும் ஆகும்

நன்மை : இரத்தப் போக்கு , இரத்த கடுப்பு இவைகளை மாற்றும்
சூடு தணியும் , வலிமை உண்டாகும் , இரவுக் குருட்டை நீக்கும்
இரத்தத்தில் கொழுப்பை அதிகரிக்கும்

நோய் : மந்திக்கும் , வயிறு கனக்கும்

மாற்று : காடி , எலுமிச்சம் பழச்சாறு

ஆட்டின் குண்டிக்காய் 

தன்மை : குளிர்ச்சியும் , வறட்சியும் ஆகும்

நன்மை : இடுப்புக்கும் , குண்டிக்காய்க்கும் பலம் கொடுக்கும்
தாது விருத்தியாகும் . இடுப்பு நோயை மாற்றும் ,

நோய் : மந்திக்கும் , காற்று அதிகரிக்கும்

மாற்று : மிளகு , திப்பிலி , உப்பிட்டு பொரிக்க வேண்டும்ஆட்டுக் கொழுப்பு

தன்மை :  சூடும் , கொழுமையுமாகும்

நன்மை : இடுப்புக்கு பலம் கொடுக்கும் , குண்டிக்காயின்
மேலிருக்கும் கொழுப்பு சகல இரணத்தையும் ஆற்றி விடும்

நோய் : வயிற்றில் களிம்பு கட்டும்

மாற்று : சுக்கு , சீரகம்

ஆட்டின் கால்கள் 

தன்மை : குளிர்ச்சியும் , வறட்சியும் ஆகும்

நன்மை : கால்களுக்கு பலத்தைக் கொடுக்கும் , தைரியம்
உண்டாகும் , உடல் தழைக்கும் , எலும்புகளுக்கு வலிமை
உண்டாகும்

நோய் : மந்திக்கும் , காற்றை உண்டு பண்ணும்

மாற்று : சீரகம் , புதினா , காடி
தொடரும்..........நன்றி :


படங்கள் இணையத்திலிருந்து


தகவல் பதார்த்த குண சிந்தாமணி என்ற புத்தகத்திலிருந்து
வேண்டாம் ................மீ........ பாவம் 25 comments:

கோமதி அரசு said...

வேண்டாம் ................மீ........ பாவம் //

இரைபோடும் மனிதருக்கே
இரையாகும் வெள்ளாடே!

M.R said...

கோமதி அரசு said...
வேண்டாம் ................மீ........ பாவம் //

இரைபோடும் மனிதருக்கே//


சரியா சொன்னீங்க சகோதரி சரியா சொன்னீங்க !

ராஜி said...

வித்தியாசமான பகிர்வு.

நிரூபன் said...

வணக்கம் நண்பா,
நல்லா இருக்கிறீங்களா?

நாம் உண்ணும் உணவின் தன்மைகளை ஆட்டிறைச்சி மூலம் இன்றைய தினம் அலசியிருக்கிறீங்க.

ஆட்டின் ஒவ்வோர் பாகத்திலும் இவ்வளவு பயன்கள் என்பதனை குணசிந்தாமணி நூலின் ஆதாரத்தோடு விளக்கியிருக்கிறீங்க.

M.R said...

ராஜி said...
வித்தியாசமான பகிர்வு.//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ

M.R said...

நிரூபன் said...
வணக்கம் நண்பா,
நல்லா இருக்கிறீங்களா?

நாம் உண்ணும் உணவின் தன்மைகளை ஆட்டிறைச்சி மூலம் இன்றைய தினம் அலசியிருக்கிறீங்க.

ஆட்டின் ஒவ்வோர் பாகத்திலும் இவ்வளவு பயன்கள் என்பதனை குணசிந்தாமணி நூலின் ஆதாரத்தோடு விளக்கியிருக்கிறீங்க.//

வணக்கம் நிரூபன் ,நலம் .

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பா

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமையான தகவல்.
அறிந்துகொண்டேன்.
தகவலுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.

M.R said...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...
அருமையான தகவல்.
அறிந்துகொண்டேன்.
தகவலுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.


வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே

Advocate P.R.Jayarajan said...

பயனுள்ள தகவலை தேடி கண்டுபிடிச்சு தந்திருக்கீங்க...
கருவாப்பட்டை நெய் என்பதற்கு விளக்கம் தெரியவில்லை...
தவிர இது மாதிரி நாட்டுக்கோழி, பிரைலர் கோழி பத்தி சொன்னா நலம்.

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் மக்கா ஆட்டிறைச்சியில் இம்புட்டு மேட்டர் இருக்கா...? எனக்கு எல்லாமே இது புது தகவலா இருக்கே...!!!

M.R said...

Advocate P.R.Jayarajan said...
பயனுள்ள தகவலை தேடி கண்டுபிடிச்சு தந்திருக்கீங்க...
கருவாப்பட்டை நெய் என்பதற்கு விளக்கம் தெரியவில்லை...
தவிர இது மாதிரி நாட்டுக்கோழி, பிரைலர் கோழி பத்தி சொன்னா நலம்.//


நாளை வரும் நண்பரே

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே

M.R said...

MANO நாஞ்சில் மனோ said...
எலேய் மக்கா ஆட்டிறைச்சியில் இம்புட்டு மேட்டர் இருக்கா...? எனக்கு எல்லாமே இது புது தகவலா இருக்கே..//


வாங்க நண்பரே கருத்திற்கு மிக்க நன்றி

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஆடு மேல இம்புட்டு கொலைவெறியா?.... ஏன்? ஏன்?

M.R said...

தமிழ்வாசி பிரகாஷ் said...
ஆடு மேல இம்புட்டு கொலைவெறியா?.... ஏன்? ஏன்?//


ஹா ஹா எல்லாம் உங்களுக்காக தான்

அம்பாளடியாள் said...

ஆட்டு இறச்சி உண்பதனால்க் கிட்டும் நன்மை தீமை ,அதற்க்கு உரிய பரிகாரம் என மிக அருமையான உணவுத்
தகவல் தொடர் ஒன்றைத் தொடர்ந்துள்ளீர்கள் மிக்க நன்றி
பகிர்வுக்கு .மேலும் தகவல் தொடர வாழ்த்துக்கள் .

M.R said...

அம்பாளடியாள் said...
ஆட்டு இறச்சி உண்பதனால்க் கிட்டும் நன்மை தீமை ,அதற்க்கு உரிய பரிகாரம் என மிக அருமையான உணவுத்
தகவல் தொடர் ஒன்றைத் தொடர்ந்துள்ளீர்கள் மிக்க நன்றி
பகிர்வுக்கு .மேலும் தகவல் தொடர வாழ்த்துக்கள் .அன்பான கருத்திற்கும் ,வாழ்த்திற்கும் நன்றி சகோ

துரைடேனியல் said...

Aha...Aattkkari patri ivvalo thagavalgalaa. Super. Pakirvukku Nanri.

Oru Request. KUNDI KAI enru varu idangalil bracket la Kidney appadinu potrunthaa Nallarukkum. Ellaarukkum puriyum.

விக்கியுலகம் said...

தேவையான தகவல்கள் நன்றி மாப்ள!

மதுமதி said...

தகவலுக்கு நன்றி..அந்த ஆட்டைப் பார்க்க பாவமா இருக்கு..

மாலதி said...

அருமையானதேவையான தகவல்.
அறிந்துகொண்டேன்.

எனக்கு பிடித்தவை said...

பல விசயங்கள் தெரிந்து கொண்டேன்... பகிர்வுக்கு நன்றிங்க

கோகுல் said...

அவ்வ்வ்வ்.நான் சைவ பட்சினி.
ஆனா தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்.

Ramani said...

நான் சைவம் தான் ஆனாலும்
பதிவு முழுவதும் தாங்கள் சேகரித்துக் கொடுத்துள்ள
அபூர்வ தக்வல்களை ரசித்துப் படித்தேன்
அசைவப் பிரியர்கள் அவசியம் படிக்கவேண்டிய பதிவு
பகிர்வுக்கு நன்றி

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பரே,
இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா
ஆட்டிறைச்சியில்
அத்தனையும் தொகுத்த தங்கள் உழைப்பு
பதிவில் தெரிகிறது நண்பரே.
பகிர்வுக்கு நன்றிகள் பல..

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

ஹேமா said...

வித்தியாசமான பதிவு.சாப்பிடச் சொல்லி மருந்தும் சொல்லி கடைசியில வேணாம்ன்னும் சொல்லிட்டீங்க.இனிய புதுவருட வாழ்த்துகள் அன்பு !

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out