நேற்றைய தொடர்ச்சி............
பதார்த்த குணங்கள் பாகம் -2
முந்தைய பதிவு ஆட்டிறைச்சி குணங்கள் படிக்காதவர்கள்
படித்துவிடுங்கள்
முயல் இறைச்சி
தன்மை : குளிர்ச்சியானது
நன்மை : உடல் தழைக்கும் , சூடு தணியும் , மார்புக்குப்
பலம் கொடுக்கும் , இருமல் நீங்கும் , மூல இரத்தத்தை
மாற்றும்
நோய் : பித்த நோயாளிகளுக்கு உதவாது
மாற்று : நெய் , சல்லாத்துக் கீரை
உடும்பு இறைச்சி
தன்மை : சூடும் ,கொழுமையும் ஆகும்
நன்மை : தேக வலிமை உண்டாக்கும் , உடல் பருக்கும்
உதிரத்தை சுத்தப் படுத்தும் , மூலம் , வெட்டை , சீதம் ,
இரத்தக் கடுப்பு , குஷ்டம் , இவைகளுக்கு உபயோகப் படும்
நோய் : குடல் வலிமையற்றவர்களுக்கு உதவாது
மாற்று : எலுமிச்சம் பழச்சாறு , புதினா
ஒட்டகத்தின் இறைச்சி
தன்மை : சூடும் , வறட்சியும் ஆகும்
நன்மை : குளிர்ந்த உடலுக்கு உதவும் , உடல் தழைக்கும்
நோய் : வயிறு வலிக்கும் , காற்று அதிகரிக்கும்
மாற்று : காடி , புதினா , எலுமிச்சம் பழச்சாறு
சேவல் இறைச்சி
தன்மை : சூடும் ,கொழுமையும் ஆகும்
நன்மை : சத்து குறைந்து , இரத்தம் அதிகரிக்கும் .பலம்
கொடுக்கும் , உடல் தழைக்கும் , வயிற்று நோய் நீங்கும்
குளிர்ச்சி சம்பந்தமான நோய்களுக்கு பயன்படும்
கிழச்சேவல் இறைச்சி அதிக சூடாகும்
நோய் : தலைவலி , பித்தம் அதிகரிக்கும்
மாற்று : காடி, எலுமிச்சம் பழச்சாறு
பெட்டைக்கோழி இறைச்சி
தன்மை : சூடும் , கொழுமையும் ஆகும்
நன்மை : உடல் வலிமை ,ஆத்ம வலிமை அதிகரிக்கும்
தாது விருத்தியாகும் , பசித் தீபனம் உண்டாகும்
நோய் : சூடு சம்பந்தமான தேகம் உள்ளவர்களுக்கு ஆகாது
மாற்று : காடி , எலுமிச்சம் பழச்சாறு
கோழிக் குஞ்சு
தன்மை : குளிர்ச்சியும் , சிலிர்ப்புமாகும்
நன்மை : ஜீரணமாகும் ,பிள்ளைகளுக்கும் ,நோயாளிகளுக்கும்
ஒத்து வரும் , உடல் தழைக்கும் , பல வியாதிகளுக்கும் ஆகும்
பத்தியத்திற்கு பயன் படும்
நோய் : இல்லை
மாற்று : இல்லை
வான் கோழிக் கறி
தன்மை : சூடும் , கொழுமையும் ஆகும்
நன்மை : உடல் தழைக்கும் , தாது விருத்தி அதிகரிக்கும் கொழுமை
உண்டாகும் , ஜீரணமாகும் , குடல் வலிமை அதிகரிக்கும்
நோய் : கரப்பான் , சொறி , சிரங்கு உண்டாகும்
மாற்று : புதினா , எலுமிச்சம் பழச்சாறு
அன்புடன்
நன்றி :
படங்கள் உதவி கூகிள்
தகவல் : பதார்த்தகுண சிந்தாமணி என்ற புத்தகத்திலிருந்து
அருமையான தகவல்கள்.
ReplyDeleteஅறிந்துகொண்டேன்.
தகவலுக்கு நன்றி.
This comment has been removed by the author.
ReplyDeleteகாடி என்றால் அமிலம் தானே ,
ReplyDeleteஇல்லை வேறு எதுவும் உள்ளதா?.
இங்கு எதை குறிப்பிடுகின்றீர்கள் சகோ.
காடி என்றால் வினிகர் தானே?
ReplyDeleteநண்டு @நொரண்டு -ஈரோடு said...
ReplyDeleteஅருமையான தகவல்கள்.
அறிந்துகொண்டேன்.
தகவலுக்கு நன்றி.//
நன்றி நண்பரே
நண்டு @நொரண்டு -ஈரோடு said...
ReplyDeleteகாடி என்றால் அமிலம் தானே ,
இல்லை வேறு எதுவும் உள்ளதா?.
இங்கு எதை குறிப்பிடுகின்றீர்கள் சகோ.
கறிச்சுவையூட்டிகளில் ஒன்றான வினிகர் தான் சகோ
அமர பாரதி said...
ReplyDeleteகாடி என்றால் வினிகர் தானே?
ஆம் நண்பரே
வணக்கம் நண்பா,
ReplyDeleteநீங்கள் இப் பதிவில் குறிப்பிட்டவற்றில் நான் கோழி முயல் மாத்திரம் தான் சாப்பிடுவேன். பயனுள்ள தகவல்,
வணக்கம் நண்பா,
ReplyDeleteநீங்கள் இப் பதிவில் குறிப்பிட்டவற்றில் நான் கோழி முயல் மாத்திரம் தான் சாப்பிடுவேன். பயனுள்ள தகவல்,
நிரூபன் said...
ReplyDeleteவணக்கம் நண்பா,
நீங்கள் இப் பதிவில் குறிப்பிட்டவற்றில் நான் கோழி முயல் மாத்திரம் தான் சாப்பிடுவேன். பயனுள்ள தகவல்,//
வணக்கம் நண்பா ,
நல்லது நண்பரே
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பா
அட அருமையான தகவல்கள் முதல் பகுதியை படிக்கவில்லை இப்போ படிக்கின்றேன் பாஸ்
ReplyDeleteபுது புது மருத்துவ உண்மைகளை எமக்கு சொல்லி வருவதுக்கு மிக்க நன்றி....!!!
ReplyDeleteகோழி குஞ்சு அழகு.
ReplyDeleteIntha vaaram 'IRAICHI VAARAMA' Sago. Pattaiya kelappuringa. PUTHTHANDU VAALTHUKKAL!
ReplyDelete.s.s.Rajh said...
ReplyDeleteஅட அருமையான தகவல்கள் முதல் பகுதியை படிக்கவில்லை இப்போ படிக்கின்றேன் பாஸ்//
நன்றி நண்பா
MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteபுது புது மருத்துவ உண்மைகளை எமக்கு சொல்லி வருவதுக்கு மிக்க நன்றி....!!!
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே
கோமதி அரசு said...
ReplyDeleteகோழி குஞ்சு அழகு.//
நன்றி சகோதரி
துரைடேனியல் said...
ReplyDeleteIntha vaaram 'IRAICHI VAARAMA' Sago. Pattaiya kelappuringa. PUTHTHANDU VAALTHUKKAL!
ஹா ஹா ஆமாம் நண்பரே
தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இறைச்சியை வகைவகையாய் பிரித்து
ReplyDeleteபலன்களும் கெடுதல்களும் அழகுற தொகுத்து தந்தமை
நன்று நண்பரே.
மொத்தத்தில் எலுமிச்சை நல்லதொரு சர்வரோக நிவாரணி என்பது
விளங்குகிறது.
மச்சி பயனுள்ள குறிப்புகள் . உங்கள் தளத்தின் தகவல்கள் அனைத்தும் சூப்பர இருக்கே
ReplyDeleteமாப்ள உடும்பு கூட சாப்பிடுவாங்களா....
ReplyDelete//மாப்ள உடும்பு கூட சாப்பிடுவாங்களா//
ReplyDeleteஅந்த மாதிரிச் சுவையாக இருக்கும்.
சசிக் குமார்!, உலகப் பந்தில் ஒவ்வொரு நாட்டிலும் கிடைக்கும் ஒவ்வொரு உயிரையும் உணவாக்குகிறார்கள். நம் நாடுகளிலும் பெருநகர், நகர், கிராமம், குக்கிராமம் என உணவில் கலக்கும்
ReplyDeleteஉயிர்கள் மாறும். ஆனால் ஏதோ ஒரு இடத்தில் இன்னுமொரு இடத்தில் உண்ணாத உயிர் உண்ணப்படும்.
அந்த வகையில் உடும்பு உங்கள் பகுதியில் உண்ணப்படுவதில்லைப் போல்.
நான் பிரான்சில் நத்தை உண்பதைப் பார்த்துள்ளேன். உலகில் இவர்கள் தான் நத்தை உண்பார்கள் என நினைத்தேன். ஆனால் "வாகை சூடவா" படத்தில், ஒரு பாடல் காட்சியில் கதாநாயகி நத்தை அவித்து கழுவி இட்டிலிக்குள் வைத்து கதாநாயனுக்குச் சமைப்பதாகவும், உண்பதாகவும் காட்சிவருகிறது.
https://www.youtube.com/watch?v=xxjvz-WGhaE
பாம்பை சீனா சார்ந்த கிழக்காசிய நாட்டார் தான் உண்கிறார்கள், என நினைக்கிறோம். அமெரிக்கர்களும் உண்கிறார்கள்.https://www.youtube.com/watch?v=DkhQe2MYUGw
பின்வரும் லிங்கைப் பார்க்கவும்.. தயவு கூர்ந்து
ReplyDeletehttp://www.thirukkural.com/2009/01/blog-post_9289.html