வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Thursday, October 27, 2011

ஆங்கில வைத்திய முறையின் சிறப்பம்சங்கள்

மனிதர்களை நோயிலிருந்து விடுவித்து அவனுக்கு மருவாழ்வு 
கொடுத்து வாழவைப்பதே ம்ருத்தவத்தின் கடமை.


இன்றைய அவசரகால சூழ்நிலையில் மனிதனுக்கு தேவைப்
படும் உடனடி உயிர்காக்கும் தன்மையாக விளங்குவது அலோபதி.






அலோபதி மருத்துவத்தின் சிறப்பம்சங்கள்

பலன்கள்:-


1.இரத்தம் இழந்தவர்களுக்கு உடனடியாக இரத்ததின் இழப்பை
சரி செய்து மனிதர்களின் உயிரினை காப்பதில் முதலிடம் 
வகிக்கிறது .


2. கைகால்கள் மற்றும் உடல் உறுப்புகள் பாதிப்பு அடைந்து 
இழக்கவோ அல்லது எடுக்கவோ வேண்டிய சூழ்நிலைகளில் 
மாற்று உறுப்புகள் பொருத்தப் பட்டு அவர்களின் வாழ்வில் 
மீண்டும் ஒளியேற்றுவதில் அலோபதி சிறந்து விலங்குகிறது .


3. தீ விபத்துகளில் தோல்கள் , நரம்புகள் பாதிக்கப் பட்டாலும் 
அவற்றிற்கு தீர்வாக அமைகிறது.


4. சிறு நீரக மற்றும் கர்ப்பப்பை பிரச்சனையில் மோசமான 
சூழ்நிலையில் நல்ல தீர்வாக அமைகிறது 


5. எலும்புகள் முறிவு ஏற்பட்டால் அது எங்கே உடைந்து உள்ளது
என்று அறிந்து அதற்கு உடனடி தீர்வும் அளிக்கப் படுகிறது


6. நோய் முற்றிப் போகாமல் தடுக்க இரத்தம் மற்றும் சிறுநீரில் 
பரிசோதனை செய்து மேற்கொண்டு பரவாமல் தடுக்கப் படுகிறது


7. கை ,கால்கள் ,தலை மற்றும் உடலுறுப்புகள் இயல்பிற்கு மாறாக
ஒட்டியோ அல்லது பிளவுப்பட்டோ இருந்தால் அதனை நவீன 
உபகரணங்களைக் கொண்டும் விஞ்ஞான யுக்திகளை 
உபயோகித்தும் சரி செய்யப்படுகிறது.


8.பிறப்பிலேயே முகத்தில் அல்லது உடல் உறுப்புகளின் 
அமைப்பில் மாற்றம் இருந்தால் அவற்றை நவீன 
சிகிச்சையால் மேற்கொண்டு சீர் செய்வது .


9.பல் சொத்தை ,பல் சம்பந்தப் பட்ட பிரச்சனைகளில் பல் 
பிடுங்குதல்பல் மாற்றுதல் போன்றவைகளுக்கு நல்ல 
தீர்வளிக்கிறது


10. பிரசவ காலங்களில் தாய் மற்றும் குழந்தைகளின் நோய்களை 
உடனடியாக போக்கவும் அவர்களின் உடல் ஆரோக்கியத்தைப்
பாதுகாக்கவும் அலோபதி மருத்துவ முறை சிறந்து விளங்குகிறது.



இதனால் தீமைகள் இல்லையா ,இருக்கு 

அலோபதி வைத்திய முறையில் கொடுக்கப்படும் சில 
மருந்துகள் அதிக வீரியம் தன்மை உடையதாக 
இருப்பதாலும் ,நோயாளியின் உடல் விரைவாக ஜீரணிக்கும்
தன்மை மற்றும் வெளியெற்றும் தன்மை இழந்திருப்பதாலும் 
மருந்தானது உடலின் உட்பாகங்களில்தங்கி வெளியேற 
வழியில்லாமல் நச்சுப் பொருட்களாக அல்லது வேறு பரிமாணங்களாகவோ மாறி நோய்களை ஏற்படுத்துகிறது.


எந்த நோயினை விரட்டுவதற்காக கொடுக்கப் பட்டதோ ,அந்த 
நோயினை விரட்டியோ அல்லது விரட்டாமலோ பல பக்க 
விளைவுகளை சில சமயம் ஏற்படுத்தி விடுகிறது.


அதுக்கு இந்த அலோபதி வைத்திய முறை குறை சொல்ல 
முடியாது .


சில அலோபதி வைத்தியரின் அணுகு முறை மற்றும் அவர் 
தீர்மானம் செய்து மருந்து வழங்கும் விதம் தவறானதாக 
அமையும்.

டிஸ்கி :

எந்த மருத்துவ முறையும் தவறானது அல்ல , அந்தந்த மருத்துவ
முறையில் உள்ள ஒரு சில மருத்துவர்களே தவறு செய்பவர்கள்

24 comments:

சக்தி கல்வி மையம் said...

பயனுள்ள தகவல்.,
நன்றி சகோ.

M.R said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...
பயனுள்ள தகவல்.,
நன்றி சகோ.//

வருகைக்கும் அன்பு கருத்துக்கும் நன்றி சகோ

Yaathoramani.blogspot.com said...

நோயினை மிகச் சரியாக கண்டறியவும்
உடனடியாக தேவைப்படும் சிகிச்சைக்கு
அலோபதி வைத்தியம் தான் பிற
வைத்தியமுறைகளை விட சரியானதாக இருக்கிறது
பயனுள்ள பதிவைத் தந்தமைக்கு நன்றி
த.ம 3

M.R said...

Ramani said...
நோயினை மிகச் சரியாக கண்டறியவும்
உடனடியாக தேவைப்படும் சிகிச்சைக்கு
அலோபதி வைத்தியம் தான் பிற
வைத்தியமுறைகளை விட சரியானதாக இருக்கிறது
பயனுள்ள பதிவைத் தந்தமைக்கு நன்றி
த.ம 3//

தங்கள் வருகைக்கும் அழகான கருத்துக்கும் நன்றி நண்பரே

Mathuran said...

மிகவும் பயனுள்ள தகவல் பாஸ்

சென்னை பித்தன் said...

அலோபதியின் நன்மை ,தீமைகளை அழகாய் எடுத்துரைத்தீர்கள்.

சென்னை பித்தன் said...

த.ம.5

M.R said...

மதுரன் said...
மிகவும் பயனுள்ள தகவல் பாஸ்//

வாங்க மதுரன் தங்கள் வருகைக்கும் அன்பு கருத்துக்கும் நன்றி நண்பரே

M.R said...

சென்னை பித்தன் said...
அலோபதியின் நன்மை ,தீமைகளை அழகாய் எடுத்துரைத்தீர்கள்.//

வாங்க ஐயா ,தங்கள் வருகைக்கும் அன்பு கருத்துக்கும் நன்றி ஐயா

Unknown said...

நல்ல விஷயங்களை தொகுத்து இருக்கீங்க

கடைசியா சொன்னது உண்மை

கூடல் பாலா said...

பயனுள்ள தகவல் ...நன்றி!

தமிழ்வாசி பிரகாஷ் said...

பகிர்வுக்கு நன்றிங்கோ......

MANO நாஞ்சில் மனோ said...

உண்மையான தகவல்கள்....!!!
ஒரு சில மருத்துவர்கள் தவறு செய்கிறார்கள் என்பதும் உண்மையே...!!!

RAMA RAVI (RAMVI) said...

ஆம் ரமேஷ்,உடனடி உயிர் காப்பது அலோபதி தான்.

பயனுள்ள குறிப்புகள்.தகவலுக்கு நன்றி.

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
நன்றி.

K.s.s.Rajh said...

பயனுள்ள தகவல்கள்....பாஸ்.....கூகுள்+ ஓரு கமண்ட் போட்டேன் பார்த்திங்களா..

மகேந்திரன் said...

தமிழ் மருத்துவத்தோடு
ஆங்கில மருத்துவத்தையும்
சொன்னதற்கு மிக்க நன்றி நண்பரே.
உடனடித் தீர்வுக்கு
ஆங்கில மருந்தே சரி....

விச்சு said...

பயனுள்ள மருத்துவ தகவல்...

அம்பாளடியாள் said...

மிக்க நன்றி சகோ பயனுள்ள மருத்துவக் குறிப்பிற்கு .....

Unknown said...

எல்லா பாய்ண்டும் சூப்பர் நண்பரே கடைசியா சொன்ன டிஸ்கி சூப்பரோ சூப்பர்

Anonymous said...

பயனுள்ள தகவல் ...நன்றி நண்பரே...

நிரூபன் said...

அலோபதி மருத்துவ முறையின் நன்மை தீமைகளை அழகு தமிழில் எளிமையாகச் சொல்லியிருக்கிறீங்க.
நன்றி பாஸ்...

நிரூபன் said...

டிஸ்கியில் பஞ்ச் வசனம் சூப்பர் தல.

Unknown said...

Appadi O enna oru super vasanam

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out