வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Saturday, November 12, 2011

வெங்காயத்தின் மகிமை -பாகம் -2

நேற்றைய தொடர்ச்சி .....




பாகம் ஒன்று படிக்காதவர்கள் இங்கு க்ளிக் -கவும்






தொண்டைப் புண் குணமாக 





தேவையான பொருள்கள் :


பெரிய வெங்காயம் : 150 கிராம் 
மணத்தக்காளிக் கீரை : 250 கிராம் 
                            பூண்டு : 100 கிராம் 
   கடுகு ரோகினித் தூள் : 15 கிராம் 
        விளக்கெண்ணெய் : 100 மி.லி


வெங்காயத்தை நறுக்கித் துண்டுகளாக்கி கொள்ளவும் .
பின் பூண்டின் பற்களை உரித்து தோலை நீக்கி சுத்தம் 
செய்து கொள்ளவும்.


பின் மணத்தக்காளிக் கீரையை ஆய்ந்து அலசி சுத்தம் 
செய்து இடித்து சாறு பிழிந்து கொள்ளவும்.


ஒரு வாணலியில் இந்த மணத்தக்காளிச் சாறு ,விளக்கெண்ணை 
ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து அடுப்பில் ஏற்றி காய்ச்சவும்.


கலவையில் உள்ள நீர் சுண்டிய வுடன் நறுக்கி வைத்துள்ள 
வெங்காயத் துண்டுகள் ,பூண்டு பற்கள் ஆகியவற்றை 
எண்ணை ,கலவையில் போட்டு சிவக்க வதக்கவும் .


பொன்னிறமானதும் கடுகு ரோகினித் தூளைக் கொட்டி 
ஒரு மணி நேரத்திற்குப் பிறகு இறக்கி ஆற விடவும்.


மருந்து முற்றிலுமாக ஆறியதும் வடிகட்டி பாட்டில் 
ஒன்றில் ஊற்றி பத்திரப் படுத்திக் கொள்ள வேண்டும்.


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த மருந்தை 
உட்கொண்டு தொண்டைப் புண் குனமாக்கிக் கொள்ளலாம் 


இம்மருந்து சிறுவர்களுக்கு அரை தேக்கரண்டி ,
பெரியவர்களுக்கு ஒரு தேக்கரண்டி அளவும் தொடர்ந்து 
ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஐந்து முறை கொடுத்து 
வந்தால் குடல் சுத்தமாகி , தொண்டை மற்றும் வாய் 
பகுதிகளில் உண்டாகும் புண்கள் ஆறி குணம் 
உண்டாகும்.









தொண்டை வலி குணமாக 




தேவையான பொருட்கள் :


பெரிய வெங்காயம் = இரண்டு 
                             தயிர் = 150 மி.லி
                     சர்க்கரை = ஒரு தேக்கரண்டி 




பெரிய வெங்காயம் இரண்டு எடுத்து அதன் மேல் தோல் உரித்து 
சுத்தம் செய்து கொண்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.


பின் பாத்திரம் ஒன்றில் 150 மி.லி தயிரினை ஊற்றி அதில் ஒரு 
தேக்கரண்டி நாட்டு சர்க்கரையை சேர்த்துக் கலக்கவும்.


இவ்வாறு கலக்கிய பிறகு துண்டுகளாக நறுக்கிய வெங்காயத்தை 
அதில் போட்டு ஊற வைக்க வேண்டும். 


ஒரு மணி நேரம் கழித்து இதனை உட்கொண்டால் தொண்டை வலி 
நீங்கி குணமாகும்.


இதனை நாள் ஒன்றுக்கு ஒரு முறை உட்கொண்டாலே போதுமானது 




காமாலை நோய் குணமாக 




தேவையான பொருட்கள் :


வெங்காயம் := 100 கிராம் 
புளித்த காடி நீர் : 50 மி.லி




வெங்காயத்தை உரித்து உரலில் இட்டு இடித்து பிழிந்து சாறு 
எடுத்துக் கொள்ளவும்.


இந்த சாற்றுடன் புளித்த காடி நீரை சேர்த்து காமாலை 
நோயாளிக்கு உள்ளுக்கு குடுத்து வரவும்.


இதுபோல் மூன்று நாட்களுக்கு கொடுத்து வந்தால் 
காமாலை நோய் நீங்கி குணம் உண்டாகும்.




மூட்டு வீக்கம் குணமாக 




தேவையான பொருட்கள் 


வெங்காயம் : 500 கிராம் 
    சதகுப்பை : 50 கிராம் 


சதகுப்பை என்பது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் .
இதனை வாங்கி வந்து அதனுடன் தோலுரித்த வெங்காயத்தையும் 
சேர்த்து அம்மியில் வைத்து மைபோல் அரைக்கவும்.


அரைத்து எடுத்த இந்த விழுதினை காலையில் பாதியும் 
இரவு படுக்கப் போகும் முன்பாகப் பாதியும் மூட்டு வலி 
உள்ள இடங்களில் பற்றாகப் போடவும்.


குணம் உண்டாகும். மறுநாளும் வலி இருக்குமானால் 
முன் கூறிய செய்முறைப் படியே மருந்தை ரெடி பண்ணி 
மீண்டும் பற்றாகப் போட்டு வந்தால் மூட்டு வலி 
நீங்கி குணம் உண்டாகும்.




பல்வலி குணமாக 


பற்களில் உண்டாகும் எவ்வகையான வலியாக இருந்தாலும் 
சின்ன வெங்காயம் இரண்டைத் தோல் உரித்து சிறு துண்டுகளாக
நறுக்கி வலியுள்ள பாகங்களில் வைத்து வாயை மூடிக் 
கொண்டால் சற்று நேரத்தில் வலி நீங்கி குணம் உண்டாகிவிடும்.


நீரிழிவு குணமாக 


தேவையான பொருட்கள் : 


         வெங்காயம் = 150 கிராம் 
கோரைக் கிழங்கு= 150 கிராம் 
கடுக்காய் தோல் = 150 கிராம் 
   நெல்லி முள்ளி = 150 கிராம் 
   மூங்கில் இலை = 150 கிராம் 


இதில் வெங்காயத்தை தவிர பிற பொருள்களை நாட்டு 
மருந்துக் கடையில் வாங்கி வரவும் .


பின் வெங்காயத்தைத் தோலுரித்துக் கொண்டு பிற 
பொருள்களையும் சுத்தம் செய்து கொள்ளவும் .


இவை அனைத்தையும் ஒன்றாக அம்மியில் வைத்து 
நைத்துக் கொண்டு பாத்திரம் ஒன்றில் போட்டு எட்டு 
லிட்டர் தண்ணீரை ஊற்றிக் கலக்கி அடுப்பில் ஏற்றி 
கொதிக்க விடவும்.


நன்றாக கொதிவந்து சரிபாதியாக சுண்டியதும் இறக்கி 
ஆறவிட்டு வடிகட்டி வாயகன்ற கண்ணாடி பாட்டிலில் 
ஊற்றி பத்திரப்படுத்தவும்.


இந்த கஷாயத்தில் வேளைக்கு ஒரு டீஸ்பூன் அளவுக்கு 
எடுத்து அதனுடன் அரை டீஸ்பூன் தேன் கலந்து 
உட்கொள்ளவும். 


இம்மாதிரி தொடர்ந்து காலை மாலை என இருவேளையும் 
உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோய் படிப்படியாக 
குணமாகும்.




நீர்க்கடுப்பு குணமாக 




தேவையான பொருள்கள் :


    வெங்காயம் : 100 கிராம் 
         நீராகாரம் :  ஒரு டம்ளர் 
                  உப்பு : சிறிதளவு 


வெங்காயத்தை தோல் உரித்து இடித்துச் சாறு எடுத்து 
அதனுடன் நீராகாரம் கலந்து கொள்ளவும் .


பின் தேவையான அளவு உப்பு சேர்த்து காலை வேலையில் 
மட்டும் குடித்து வரவும்.


இம்மாதிரி ஒருவாரம் உட்கொண்டு வந்தால் நீர்க்கடுப்பு 
குணமாகி விடும்.


மருந்து எடுத்துக் கொண்ட மூன்றாம் நாளிருந்து குணம் 
பெறுவதை நோயாளி உணரலாம் .





இதே போல வெங்காயத்தின் குணம் நிறைய இருக்கு 
நண்பர்களே .
சொல்ல ஆரம்பித்தால் சொல்லிக் கொண்டே 
போகலாம் 





நன்றி 



 

19 comments:

RAMA RAVI (RAMVI) said...

வெங்காயத்தின் மருத்துவ குணங்கள் பற்றிய சிறப்பான பதிவு.நன்றி பகிர்வுக்கு.

M.R said...

RAMVI said...
வெங்காயத்தின் மருத்துவ குணங்கள் பற்றிய சிறப்பான பதிவு.நன்றி பகிர்வுக்கு.//

கருத்திற்கு நன்றி சகோதரி

தமிழ்வாசி பிரகாஷ் said...

வெங்காய மகிமையோ மகிமை.


நம்ம தளத்தில்:
ஹையோ! எவ்ளோ அருமையான படங்கள்! சூப்பரோ சூப்பர்!!

கூடல் பாலா said...

பயனுள்ள மருத்துவக் குறிப்புகள் !

சக்தி கல்வி மையம் said...

உபயோகமான பதிவு ..

தகவல்களுக்கு நன்றி..

middleclassmadhavi said...

'வெங்காய'த்துக்கு இவ்வளவு மருத்துவ குணங்களா?!! பகிர்வுக்கு நன்றி

MANO நாஞ்சில் மனோ said...

பாட்டி வைத்தியங்கள் சூப்பர் மக்கா நன்றியுடன் வாழ்த்துக்களும் உங்களுக்கு....!!!!

சென்னை பித்தன் said...

த.ம.4
குறித்துக் கொண்டேன்.நன்றி.

K.s.s.Rajh said...

சூப்பர் தகவல்கள் பாஸ்

M.R said...

தமிழ்வாசி - Prakash said...
வெங்காய மகிமையோ மகிமை.


நன்றி நண்பரே

M.R said...

koodal bala said...
பயனுள்ள மருத்துவக் குறிப்புகள் !//


நன்றி நண்பரே

M.R said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...
உபயோகமான பதிவு ..

தகவல்களுக்கு நன்றி..//


நன்றி நண்பரே

M.R said...

middleclassmadhavi said...
'வெங்காய'த்துக்கு இவ்வளவு மருத்துவ குணங்களா?!! பகிர்வுக்கு நன்றி//

நன்றி சகோதரி

M.R said...

MANO நாஞ்சில் மனோ said...
பாட்டி வைத்தியங்கள் சூப்பர் மக்கா நன்றியுடன் வாழ்த்துக்களும் உங்களுக்கு....!!!!//

நன்றி நண்பரே

M.R said...

சென்னை பித்தன் said...
த.ம.4
குறித்துக் கொண்டேன்.நன்றி.//

நன்றி ஐயா

M.R said...

K.s.s.Rajh said...
சூப்பர் தகவல்கள் பாஸ்//

நன்றி நண்பா

Unknown said...

வெங்காய நலன்கள் பதிவுக்கு நன்றி மாப்ள!

M.R said...

விக்கியுலகம் said...
வெங்காய நலன்கள் பதிவுக்கு நன்றி மாப்ள!

நன்றி மாம்ஸ்

அம்பாளடியாள் said...

ஆகா ....இன்னும் இருக்கா சகோ .அருமையான தகவல் .
மிக்க நன்றி பகிர்வுக்கு வாழ்த்துக்கள் .........

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out