வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Friday, November 11, 2011

வெங்காயத்தின் மகிமை -தாது விருத்தி ஏற்பட

வெங்காயத்தினை நாம் அன்றாடம் உபயோகிக்கிறோம் 
வெங்காயம் பல விதத்தில் மருத்துவ ரீதியாகவும் 
நமக்கு உதவுகின்றது 




வெங்காயத்தின் பலன்கள் அறிந்து கொள்ளுங்கள் 









தாது விருத்தி ஏற்பட 




தேவையான பொருட்கள் :


வெள்ளை வெங்காயம் : இரண்டு 
                     வெண்ணை = ஒரு டீஸ்பூன்
                                 தேன் =  தேவையான அளவு 


                    
வெள்ளை வெங்காயத்தை மேல் தோல் உரித்து சுத்தம்
செய்து கொண்டு சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.


பின் வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து அதில் ஒரு 
டீஸ்பூன் அளவு வெண்ணையை விட்டு காய்ச்சவும்.


வெண்ணை உருகிக் காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள 
வெள்ளை வெங்காயத் துண்டுகளை அதில் போட்டு 
வதக்கவும்.


வெங்காயத் துண்டுகள் நன்றாக வதங்கியதும் 
இறக்கி ஆறவிடவும்.


இவ்வாறு வதக்கி ஆறவைத்த வேங்காயத்துண்டுகளை 
ஒரு டீஸ்பூன் அளவு தேனுடன் சேர்த்து தினமும் 
வெறும் வயிற்றில் விடியற்காலைப் பொழுதில் 
உட்கொண்டு வந்தால் தாது விருத்தி உண்டாவதுடன் 
இல்லற இன்பமும் அதிகமாகச் செய்யும்.








இதயம் பலமடைய 


சிலருக்கு பலஹீனமான இதயம் இருப்பதால் அவர்களுக்கு 
அடிக்கடி இதயவலி மற்றும் பிற இதயக் கோளாறுகள் 
உண்டாகும் .


இவ்வாறு பலஹீனமான இதயம் கொண்டவர்கள் சிறுது 
அளவு வெங்காயம் எடுத்து அதனை இடித்து பிழிந்து 
அதிலிருந்து ஒரு தேக்கரண்டி அளவுக்கு சாறு 
பிழிந்து எடுத்துக் கொள்ளவும் .


இவ்வாறு பிழிந்தெடுத்த சாருடன் ஒரு தேக்கரண்டி 
பனைவெல்லத்தூளை சேர்த்து தினந்தோறும் காலை 
வேலையில் உட்கொள்ளச் செய்தால் நாளடைவில் 
பலஹீனமாக இருந்த இதயம் பலப்படும் .


அத்துடன் இதயக் கோளாறு நீங்கி ஆரோக்கியமான 
வாழ்க்கைக்கு வழி வகுக்கும் .








வாய்வுத்தொல்லையிலிருந்து விடுபட 


இரண்டு அல்லது மூன்று வெங்காயத்தை எடுத்துப் 
பொடியாக நறுக்கிக் கொள்ளவும் .


இவ்வாறு நறுக்கப் பட்ட வெங்காயத் துண்டுகளுடன் 
ஒரு டீஸ்பூன் அளவுக்கு தேனை சேர்த்து தினமும் 
காலை வேலையில் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு 
உட்கொண்டு வந்தால் வாய்வு உபாதைகளில் இருந்து 
விடுபட்டு குணம் பெறலாம் .








நரம்புத் தளர்ச்சி குணமாக 


ஐந்து சின்ன வெங்காயத்தை உரித்து எடுத்துக் கொள்ளவும்.
அதனை வாணலி ஒன்றில் போட்டு வதக்கி அல்லது 
நெருப்பில் போட்டு சுட்டு ,
தினமும் வெறும் வயிற்றில் உண்டு வரவும்.


இவ்வாறு தொடர்ந்து மூன்று மாதங்கள் உண்டு 
வந்தால் நரம்பு தளர்ச்சி நீங்கி குணம் உண்டாகும்.


இதற்கு வெள்ளை வெங்காயம் என்றால் மிகவும் 
சிறந்ததாக இருக்கும் .

மேலும் பார்ப்போம் ......

நன்றி


படங்கள் உதவி : இணையம்



முக்கிய நாள் 

இன்று 11.11.11

அழகிய இந் நாளில் அற்புதங்கள் செய்திடுவீர் 

42 comments:

Anonymous said...

11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

K.s.s.Rajh said...

இவ்வளவு பலன் உள்ள வெங்காயத்தை வைத்துதான் நாம் பலரை திட்டுகின்றோமா வெங்காயம் என்று..ஹி.ஹி.ஹி.ஹி...

rajamelaiyur said...

அப்ப இனி யாரையும் போடா வெங்காயம்னு திட்ட கூடாது

Unknown said...

வெங்காயத்தில் இவ்வளவு விஷயமா? அருமை நண்பரே... நிறையவே தெரிஞ்சுக்கிட்டோம்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

உரிக்க உரிக்க ஒன்னுமிலலாத வெங்கயாயத்தில் இத்தனை இருக்கா...

வகைகள் அவற்றின் பயன்கள் பகுத்து கொடுத்துள்ளீர்...

வாழ்த்துக்கள்...

arasan said...

வெங்காயத்தை உரித்தால் கண்ணீர் தான் வரும் ,,,
உங்கள் பதிவில் நெஞ்சில் வார்த்தைகள் இல்லை வாழ்த்த ...

கோகுல் said...

பெரியாருக்கு அப்பவே தெரிஞ்சுருக்கு!

சென்னை பித்தன் said...

வெங்காய மகத்துவம் சூப்பர்!

சக்தி கல்வி மையம் said...

உரிக்க,உரிக்க ஒன்னும் இல்லாத வேங்காயத்துல இவ்வளோ மகத்துவமா..

நன்றி நண்பா...தகவல்களுக்கு...

Unknown said...

ஒரு வெங்காயத்தில் இவ்வளவு விசயமா ! நன்றி பயனுள்ள தகவல். இது என் தந்தைக்கு பயன்படும்.
மகேஷ்

Unknown said...

மாப்ள உபயோகமான பல தகவல்களுக்கு நன்றி!

அம்பாளடியாள் said...

அடடா இத்தனை அருமையான குணாதிசையமா வெங்காயத்துக்கு!...
சாமி இனித் திட்டுவதென்று முடிவானால் வெங்காயம் என்றே திட்டுங்கள்
இல்லாத புகழ்ளேனும் எமக்குக் கிட்டட்டும் .வாழ்க வெங்காயம் .............மிக்க நன்றி சகோ அருமையான தகவலுக்கு .

மகேந்திரன் said...

அருமையான விளக்கங்கள் நண்பரே..
சில சமயம் விலையின் உச்சிக்கு ச்ல்லும்
வெங்காயத்தின் உன்னதம் பற்றிய
பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது...

சிறிய வெங்காயம் மஞ்சல்காமாலையை
கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது..

தகவல்களுக்கு மிக்க நன்றி நண்பரே.

Yaathoramani.blogspot.com said...

அருமையான பயனுள்ள தகவல்களை
பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
த.ம 7

MANO நாஞ்சில் மனோ said...

அட வெங்காயத்தில் இம்புட்டு மருத்துவ மேட்டர் இருக்கா சிம்பிளா இருக்கே ம்ம்ம் நன்றி மக்கா...

முற்றும் அறிந்த அதிரா said...

வெங்காயம் பற்றிய நல்ல பகிர்வு.

முற்றும் அறிந்த அதிரா said...

ஆனா, ஊரில் சொல்வார்கள் சின்ன வெங்காயத்தில்தான் அதிக சத்திருக்குதென. அது எவ்வளவுதூரம் உண்மை என ஏதும் தெரியுமோ?

Anonymous said...

இனி யாரையும் போடா வெங்காயம்னு திட்ட கூடாது...-:)

அன்புடன் நான் said...

தரமானத்தகவல்... மிக்க நன்றி.

தமிழ்வாசி பிரகாஷ் said...

நல்லதொரு நாளில் நல்ல பதிவு....


நம்ம தளத்தில்:
மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! சிஎன்சி (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 11

Unknown said...

வெம்காயத்திற்கு நலன் தரும்
வெங்காயம் பற்றிய பதிவு!

நன்று!

புலவர் சா இராமாநுசம்

M.R said...

மாய உலகம் said...
11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...


நன்றி

M.R said...

K.s.s.Rajh said...
இவ்வளவு பலன் உள்ள வெங்காயத்தை வைத்துதான் நாம் பலரை திட்டுகின்றோமா வெங்காயம் என்று..ஹி.ஹி.ஹி.ஹி...

ஹா ஹா ஹா

M.R said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...
அப்ப இனி யாரையும் போடா வெங்காயம்னு திட்ட கூடாது//

ஆமாம் நண்பரே ,வெங்காயம் பாவம்

M.R said...

ஜ.ரா.ரமேஷ் பாபு said...
வெங்காயத்தில் இவ்வளவு விஷயமா? அருமை நண்பரே... நிறையவே தெரிஞ்சுக்கிட்டோம்...//


நன்றி நண்பரே

M.R said...

கவிதை வீதி... // சௌந்தர் // said...
உரிக்க உரிக்க ஒன்னுமிலலாத வெங்கயாயத்தில் இத்தனை இருக்கா...

வகைகள் அவற்றின் பயன்கள் பகுத்து கொடுத்துள்ளீர்...

வாழ்த்துக்கள்...//

அழகிய கருத்திற்கு நன்றி நண்பரே

M.R said...

அரசன் said...
வெங்காயத்தை உரித்தால் கண்ணீர் தான் வரும் ,,,
உங்கள் பதிவில் நெஞ்சில் வார்த்தைகள் இல்லை வாழ்த்த ...//


தங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே

M.R said...

கோகுல் said...
பெரியாருக்கு அப்பவே தெரிஞ்சுருக்கு!//


ஆமாம்

M.R said...

சென்னை பித்தன் said...
வெங்காய மகத்துவம் சூப்பர்!//

நன்றி ஐயா

M.R said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...
உரிக்க,உரிக்க ஒன்னும் இல்லாத வேங்காயத்துல இவ்வளோ மகத்துவமா..

நன்றி நண்பா...தகவல்களுக்கு...//

கருத்திற்கு நன்றி நண்பரே

M.R said...

Maheswaran.M said...
ஒரு வெங்காயத்தில் இவ்வளவு விசயமா ! நன்றி பயனுள்ள தகவல். இது என் தந்தைக்கு பயன்படும்.
மகேஷ்//


தங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே

M.R said...

விக்கியுலகம் said...
மாப்ள உபயோகமான பல தகவல்களுக்கு நன்றி!//

நன்றி மாம்ஸ்

M.R said...

அம்பாளடியாள் said...
அடடா இத்தனை அருமையான குணாதிசையமா வெங்காயத்துக்கு!...
சாமி இனித் திட்டுவதென்று முடிவானால் வெங்காயம் என்றே திட்டுங்கள்
இல்லாத புகழ்ளேனும் எமக்குக் கிட்டட்டும் .வாழ்க வெங்காயம் .............மிக்க நன்றி சகோ அருமையான தகவலுக்கு .//


ஹா ஹா கருத்திற்கு நன்றி சகோ

M.R said...

மகேந்திரன் said...
அருமையான விளக்கங்கள் நண்பரே..
சில சமயம் விலையின் உச்சிக்கு ச்ல்லும்
வெங்காயத்தின் உன்னதம் பற்றிய
பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது...

சிறிய வெங்காயம் மஞ்சல்காமாலையை
கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது..

தகவல்களுக்கு மிக்க நன்றி நண்பரே.//


தங்கள் மருத்துவ குறிப்பிற்கும் நன்றி நண்பரே

M.R said...

Ramani said...
அருமையான பயனுள்ள தகவல்களை
பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
த.ம 7//


தங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே

M.R said...

MANO நாஞ்சில் மனோ said...
அட வெங்காயத்தில் இம்புட்டு மருத்துவ மேட்டர் இருக்கா சிம்பிளா இருக்கே ம்ம்ம் நன்றி மக்கா...//


நன்றி நண்பரே

M.R said...

athira said...
வெங்காயம் பற்றிய நல்ல பகிர்வு.

ஆனா, ஊரில் சொல்வார்கள் சின்ன வெங்காயத்தில்தான் அதிக சத்திருக்குதென. அது எவ்வளவுதூரம் உண்மை என ஏதும் தெரியுமோ?//

ஆமாம் தோழி நானும் கேள்விப் பட்டுள்ளேன்

M.R said...

ரெவெரி said...
இனி யாரையும் போடா வெங்காயம்னு திட்ட கூடாது...-:)//


திட்டாதீங்க

M.R said...

சி.கருணாகரசு said...
தரமானத்தகவல்... மிக்க நன்றி.//

நன்றி நண்பரே ,தொடர்ந்து வாருங்கள்

M.R said...

தமிழ்வாசி - Prakash said...
நல்லதொரு நாளில் நல்ல பதிவு....


நன்றி நண்பரே

M.R said...

புலவர் சா இராமாநுசம் said...
வெம்காயத்திற்கு நலன் தரும்
வெங்காயம் பற்றிய பதிவு!

நன்று!

புலவர் சா இராமாநுசம்//


நன்றி ஐயா

r.v.saravanan said...

வெங்காயத்தில் இவ்வளவு பயன்களா தெரிவித்தமைக்கு நன்றி நண்பா

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out