வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Monday, January 2, 2012

முட்டை சாப்பிடுவீங்களா ?அப்ப அதன் குணத்தை தெரிந்து கொள்ளுங்கள்


பதார்த்த குணங்கள் பாகம் - 3

முந்தைய பதிவு ஆட்டிறைச்சியின் குணங்கள் 

கோழி, முயல், உடும்பு, ஒட்டகம் சாப்பிடுவீங்களா ? அப்ப இத படிங்க

கோழி முட்டை 





தன்மை : சூடும் , கொழுமையும் ஆகும்

நன்மை :  விந்து விளையும் , தாது விருத்தி அதிகரிக்கும்.
உடல் தழைக்கும் , இரத்தம் அதிகரிக்கும் , சூட்டைப் பற்றிய
பீனிசத்தை மாற்றும், கோழி முட்டையை அரைவரிசை
வேகவைக்கும் பொழுது இந்த குணங்களை காட்டும்.

நோய் : அதிகமாக வெந்தால் காற்று அதிகரிக்கும் ,மந்தப்படும்

மாற்று : சூட்டு உடலுக்கு நாட்டுக்காடி , குளிர்ச்சி உடலுக்கு
குல்கந்து

வாத்து முட்டை 



தன்மை : குளிர்ச்சியும் ,சிலிர்ப்புமாகும்

நன்மை : உடல் வலிமை ஏற்படும் , உடல் பருக்கும்

நோய் : மந்திக்கும் , வயிறு வலிக்கும் , காற்று அதிகரிக்கும்

மாற்று : இஞ்சி , சீரகம் , கொத்தமல்லி

புறா முட்டை



தன்மை : சூடும் ,கொழுமையும் ஆகும்

நன்மை : ஜீரணப் படும் , நீர் சம்பந்தமாக நோய்களைக்
கண்டிக்கும் , உடல் தழைக்கும் , தாது அதிகரிக்கும் ,
விந்து விளையும்

நோய் : சூடு , உண்டாகும்

மாற்று : பசுவின் நெய்யில் பொரித்துக் கொள்ளவும்

மயில் முட்டை 

தன்மை : சூடும் , வறட்சியும் ஆகும்

நன்மை : பிடிப்புகளை மாற்றும் , கடிகளை நீக்கும் , வலிமை
உண்டாக்கும் , ஜீரணப்படும்

நோய் : சூடு , உண்டாக்கும்

மாற்று : கொத்தமல்லிக் கீரை ,வெங்காயச் சாறு

காக்கா முட்டை 

தன்மை : சூடும் , வறட்சியும் ஆகும்

நன்மை : மண்ணீரலுக்கு வலிமை தரும் , காமாலை , பித்தம்
பாண்டு , சோகை , இவைகளை நீக்கும் , ஜீரணமாகும் ,
கண்ணொளி அதிகப்படும்

நோய் : சூட்டு உடம்புக்கு பயன்படாது

மாற்று : வெங்காயச்சாறு , கொத்தமல்லி கீரை

ஆமை முட்டை 

தன்மை : குளிர்ச்சியும் , வறட்சியுமாகும்

நன்மை : வலிமை தரும் , உடல் தணியும் ,அதிசார பேதிகளை
கட்டி விடும் , குடலுக்கு வலிமை உண்டாகும்

நோய் : நெஞ்சு கரிக்கும

மாற்று : ஏலம் , சீரகம்

மீன் முட்டை



தன்மை : சூடும் , குளிர்ச்சியும் ஆகும்

நன்மை : உடல் தழைக்கும் ,பலம் ஏற்படும் ,அதிசார பேதிகளை
நிறுத்தும் .

நோய் : வயிற்றில் களிம்பு கட்டும்

மாற்று : மிளகு , கடுகு , சீரகம்


தொடரும்................





நன்றி : 



படங்கள் உதவி கூகிள்
தகவல் : பதார்த்தகுண சிந்தாமணி என்ற புத்தகத்திலிருந்து

21 comments:

Admin said...

நல்ல சத்தான பதிவுதான்..ஆமாம் மயில் முட்டை சாப்பிட அனுமதி உண்டா?..

அன்போடு அழைக்கிறேன்..

உயிரைத் தின்று பசியாறு(அத்தியாயம்-1)

M.R said...

மதுமதி said...
நல்ல சத்தான பதிவுதான்..ஆமாம் மயில் முட்டை சாப்பிட அனுமதி உண்டா?..


நன்றி நண்பரே , இல்லை நண்பரே

K.s.s.Rajh said...

முட்டை பற்றி நல்ல தகவல்கள் பாஸ்

ஜெய்லானி said...

புறா முட்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பக்க வாத நோய் நீங்கும் :-)



அருமையான பகிர்வு :-)

சசிகுமார் said...

ஒரு முட்டையை வைத்து இவ்ளோ மேட்டரா... சூப்பர் மாப்ள வழக்கம் போல எல்லாத்திலும் ஓட்டு போட்டாச்சு...

சசிகலா said...

முட்டையில் இத்தனை உண்டா நன்றி

MANO நாஞ்சில் மனோ said...

புறா முட்டையில மருத்துவ குணமா, அதுவும் பக்கவாதத்திற்கு மருந்தா சூப்பர் மக்கா நன்றி...!!!!

arasan said...

நிறைய அறிந்து கொண்டேன் அண்ணே ..
சில விடயங்கள் ரொம்ப புதுசா இருக்கு ..
பதிவுக்கு நன்றிங்க அண்ணே ...

M.R said...

ஜெய்லானி said...
புறா முட்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பக்க வாத நோய் நீங்கும் :-)



அருமையான பகிர்வு :-)//

கருத்திற்கு நன்றி நண்பரே

M.R said...

K.s.s.Rajh said...
முட்டை பற்றி நல்ல தகவல்கள் பாஸ்//

நன்றி நண்பா

M.R said...

சசிகுமார் said...
ஒரு முட்டையை வைத்து இவ்ளோ மேட்டரா... சூப்பர் மாப்ள வழக்கம் போல எல்லாத்திலும் ஓட்டு போட்டாச்சு...//

ஆமாம் மச்சி ,நன்றி மச்சி

M.R said...

sasikala said...
முட்டையில் இத்தனை உண்டா நன்றி//

நன்றி சகோதரி

M.R said...

MANO நாஞ்சில் மனோ said...
புறா முட்டையில மருத்துவ குணமா, அதுவும் பக்கவாதத்திற்கு மருந்தா சூப்பர் மக்கா நன்றி..//


நன்றி நண்பா

M.R said...

அரசன் said...
நிறைய அறிந்து கொண்டேன் அண்ணே ..
சில விடயங்கள் ரொம்ப புதுசா இருக்கு ..
பதிவுக்கு நன்றிங்க அண்ணே ...//


நன்றி நண்பா

சென்னை பித்தன் said...

நன்று.

த.ம..6

நீண்ட வராமைக்கு மன்னிக்கவும்.இனி தொடர்ந்து வருவேன்.

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

புத்தாண்டில் புதிய பொலிவோடு புறப்படட்டும் உங்கள் பதிவுகள்.

Yaathoramani.blogspot.com said...

முட்டை குறித்த முழுமையான தகவல்கள்
தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
த.ம 7

M.R said...

சென்னை பித்தன் said...
நன்று.

த.ம..6

நீண்ட வராமைக்கு மன்னிக்கவும்.இனி தொடர்ந்து வருவேன்.

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

புத்தாண்டில் புதிய பொலிவோடு புறப்படட்டும் உங்கள் பதிவுகள்.//


நன்றி ஐயா

M.R said...

Ramani said...
முட்டை குறித்த முழுமையான தகவல்கள்
தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
த.ம 7//


நன்றி நணபரே

துரைடேனியல் said...

Ahaa...Muttai la ivvalo visayangalaa?

Kalakkal Sago.

துரைடேனியல் said...

Ahaa...Muttai la ivvalo visayangalaa?

Kalakkal Sago.

Anonymous said...

நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out