அன்பான நட்புக்களே வணக்கம்
அழகான பின்னூட்டத்திற்கும் ,அன்பான வாக்கிற்கும் நன்றி
நேற்று நமது பதிவில் எதெல்லாம் நம் வாழ்வில் அடக்க கூடாது
என்று பார்த்தோம் .
அந்த பதிவு படிக்காதவர்கள் இங்கு சென்று படித்துக்கொள்ளவும் .
அதன் தொடர்ச்சியாக இன்று .....
மலம் :-
இதனையும் அடக்காதீர்கள் .மலத்தை அடக்கினால் அபானம் பெருகி,அடக்கப்பட்ட மலம் தள்ளும்.
கிருமிகள் பெருங்குடலில் சேரும்.தலைவலி உருவாகும்.
முழங்கால் கீழ் வலி ஒலியுடன் காற்று பிரிதல் உடல்
வன்மை குறைவு ஆகியவை தோன்றும்.
கொட்டாவி :-
கொட்டாவி ஒரு கெட்ட ஆவின்னு அதை அடக்காதீங்க.
அடக்கினால் முகம் வதங்கல்,அளவோடு சாப்பிட்டாலும் செரிக்காது.
நீர் நோய்,வெள்ளை நோய்,அறிவு மயங்கல் போன்றவை ஏற்படும்.
பசி :-
பசி வந்தால் புசி,மாறி அதனை அடக்காதே. அடக்கினால் அதன் விளைவாக நீர் வேட்கை ,உடலும்,உடலின் பல்வேறு உறுப்புகளும்
தத்தம் தொழில்களை சரிவர செய்யாமை ,உடல் இளைப்பு,பிரம்மை,
முகவாட்டம் போன்றவைகள் தோன்றும்.
பட்டினி கிடந்தால் அல்சர் தோன்றும்.அல்சரின் கொடுமை
தெரியுமல்லவா ?
இருமல் (காசம்):-
இருமல் சளி பிடித்தால் வரும்.வறட்டு இருமல் ,சளி இருமல் என்ற
வகைகள் உண்டு .
இந்த இருமல் தீர மருந்து எடுத்துக் கொள்ளுங்கள் .
ஆனால் இருமலை அடக்காதீர்கள்.மற்றவர்களிடம் கவுரவம்
பார்த்து தம்மை நோயாளி என்று நினைத்து விடுவாரோ என
நினைத்து இருமலை அடக்கினால் .....வருவது
மிக்க இருமல் ,மூச்சு விடும்பொழுது அம்மூச்சில் கெட்ட
நாற்றம் வீசுதல் ,இருதய நோய் உண்டாதல் ,
ஆகியவை தோன்றும்.
இளைப்பு :-
இளைப்பு வாங்குதல் உங்களுக்கு தெரியும் .அதனை அடக்கினால்
நீர் மேகம் பெருகும்,குன்மம் ,மூர்ச்சை ,குளிர்
ஆகியவை தோன்றும்.
தூக்கம்:-
யாராக இருந்தாலும் தூக்கம் அவர்களுக்கு அவசியம். உழைக்கும்
உடலுக்கு கொஞ்சம் ஒய்வு தேவை.
தூங்கினால் உடல் புத்துணர்ச்சி அடையும்.தூங்காமல் இருந்தால்
உடல் படும் அவஸ்தை ..
நாள் முழுதும் தலைக்கனம்,கண்கள் சிவத்தல்,செவிடு,
அரைப்பேச்சு ஆகியவை தோன்றும்.
டென்சன் ,எடுக்கும் தீர்மானத்தில் தெளிவின்மை ,களைப்பு
ஆகியவை தோன்றும்.
வாந்தி :-
தோலில் தடிப்புகள் உண்டாதல் ,உடலில் நஞ்சு சேரல்,
பாண்டு (வெளுப்பு நோய்),கண்நோய்கள்,இரைப்பு,காய்ச்சல்,
இருமல்,ஆகியன தோன்றும்.
கண்ணீர் :-
கண்ணீரையும் அடக்காதே ,சில சமயம் கண்ணீர் மனதின்
பாரத்தை குறைக்கும் .கண்கள் சுத்தம் அடையும் .
கண்ணீரை அடக்கினால் வரும் அவஸ்தை .......
கண் நோய் ,தலையில் புண்,வயிற்று வலி ஆகியவை வரும்.
சுக்கிலம்:-
சுக்கிலத்தை அடக்கினால் வருவது...சுரம்,நீர்க்கட்டு,கைகால்கள்
மற்றும் கீல்கள் நோதல்,விந்து கசிதல் மாற்படைப்பு,மார்பு துடிப்பு ,வெள்ளை இவைகள் உண்டாகும்.
சுவாசம் (மூச்சு அல்லது உயிர்ப்பு ):-
இருமல்,வயிற்றுப் பொருமல்,சுவை தெரியாமை ,குலை நோய் ,
காய்ச்சல் ,வெட்டை ஆகியவை தோன்றும்.
21 comments:
மாப்ள பகிர்வுக்கு நன்றி!
தலைப்ப பாத்திட்டு தெறிச்சு ஓடிட்டேன், ஆனா மேட்டர் சூப்பர்.. தூக்கம் கெட்டதால் கெட்டவன் நான், இனிமேல் அதனை அடக்குவதாக இல்லை.. நன்றி பகிர்வுக்கு.
Thank u
நன்றி பகிர்தலுக்கு!
நன்றி நண்பா பகிர்வுக்கு
நல்ல தகவல்கள் சொல்லியிருக்கீங்க!
ஆனால் தலைப்பு இப்படி வைக்காதீங்க! தமிழ்மணத்தில் இருந்து தூக்கிடப் போறாங்க! நீங்கள் ஒன்றும் கேள்விப்படவில்லையா?
Powder Star - Dr. ஐடியாமணி said...
நல்ல தகவல்கள் சொல்லியிருக்கீங்க!
ஆனால் தலைப்பு இப்படி வைக்காதீங்க! தமிழ்மணத்தில் இருந்து தூக்கிடப் போறாங்க! நீங்கள் ஒன்றும் கேள்விப்படவில்லையா?
இல்லை நண்பரே ,என்ன விஷயம்
நல்ல ,தேவையான பதிவு நண்பரே!
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... இது கொட்டாவி.. அடக்காமல் விட்டுட்டேன் ரமேஸ்ஸ்ஸ்ஸ்:))).
ஓபீஷில நித்திரை வந்தால் விடமாட்டினமாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இந்தப் பதிவைக் கொண்டுபோய் அங்கின ஒட்டி வைக்கோணும்:))) ஆ.. முறைக்காதீங்க.. அருமையான விளக்கமும்... நல்ல பதிவும்... நான் போயிட்டுவாறன் நேரமாகுது.. சீயா மீயா.
அடக்கினால் வரும் விளைவுகளை
சொல்லி விழிப்பை ஏற்படுத்திய உங்களுக்கு மிக்க நன்றி.
இடம் பொருள் அறிந்து சில நேரங்களில் அடக்க வேண்டி இருந்தாலும்
பொதுவாக இவைகளை அடக்காமல் இருப்பது நல்லது.
பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே.
வழக்கம் போல நல்ல தகவல் பாஸ்
பகிர்வுக்கு நன்றி சகோ....
மக்களுக்கு பிரயோஜனம் உள்ள பதிவு வாழ்த்துக்கள் டாக்டர்...!!
நன்றி நண்பா பகிர்தலுக்கு!
பயனுள்ள குறிப்பு நன்றி.......
அடக்க முடியாதது,அடக்கக் கூடாதது என்று சூப்பர் லிஸ்ட்.
நல்ல 'அடங்காத' பதிவு நண்பரே..
இந்த பதிவிர்க்கு வந்து கருத்திட்டு ,வாக்கும் அளித்து சென்ற அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
மன்னிக்கவும் தனித்தனியாக பதில் அளிக்க இயலவில்லை ,மீண்டும் மன்னிக்கவும்
வாத்தியார் கொட்டாவி விட்டா திட்டுவாருன்னு எத்தனை பேரு அடக்கியே வைச்சிருக்காங்க!
இதை பார்த்தாவது திட்டாம இருக்கட்டும்!
பகிர்வுக்கு நன்றி .
ஆரோக்கிய வாழ்க்கைக்கு உதவும் அசத்தலான பதிவு பாஸ்...
தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்.
Post a Comment