வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Monday, October 24, 2011

மன நல மருத்துவரை யாரெல்லாம் பார்க்கலாம்



மனநிலை பாதிக்கப் பட்டோர் ,பைத்திய நிலை ,புத்தி சரியில்லாதவர்கள்
இவங்க தான் மன நல டாக்டரை பார்க்கனுமா .



அது தப்பு ,இவங்களும் மன நல மருத்துவரை பார்க்க வேண்டும்.
அதற்காக இவர்கள் பைத்தியம் கிடையாது .

 வெளியில் செல்லும் பொழுது கதவை பூட்டிய பின்னும் 
பூட்டினோமா இல்லையா என்று இழுத்து இழுத்து பார்க்கும் 
மன நிலை கொண்டவர்கள் .

கை கழுவிய பின்னும் இன்னும் சுத்தம் ஆகலியே என்று 
திரும்ப திரும்ப கை கழுவிக்கொண்டே வாஷ்பேசினே 
கதியாக கிடப்பது .

எப்பொழுதுமே உடல் அசதி, இனம் புரியாத கவலை ,
படபடப்பு , நடுக்கம் ,தூக்கமின்மை போன்ற தன்மை 
கொண்டவர்கள்.

திரும்ப திரும்ப தேவையில்லாத எதிர்மறையான 
எண்ணங்கள் மனதில் ஓடிக் கொண்டிருப்பது .

தன்னம்பிக்கை இல்லாமல் எதிர்காலமே சூன்யமாகி
விட்டது போல் தோன்றி தற்கொலை எண்ணங்கள் 
அடிக்கடி வருவது .

எதையுமே தள்ளிப் போட்டுக்கொண்டு ,எதிலுமே ஒரு 
முடிவெடுக்க முடியாமல் கடைசி நேரத்தில் பரபரப்புடன்
எதையாவது முடிவெடுத்து கஷ்டப்படுவது .


மேற்கொண்ட எண்ணங்கள் கொண்டவர்களும் ,


மற்றவர்கள் எதாவது பேசினால் அவர்கள் தன்னைப் பற்றித்
தான் பேசுகிறார்கள் என எண்ணுவது .

தன்னிடம் யாரோ காதில் பேசுவது போன்றோ ,மற்றவர்கள் 
எல்லோரும் தமக்கு எதிராக செயல்படுவது போன்ற எண்ணம் 
தோன்றினாலோ .

குறிப்பிட்ட வயதை தாண்டியும் படுக்கையில் சிறுநீர் கழிப்பது ,
விரல் சூப்புவது ,அடிக்கடி நகம் கடிப்பது ,மற்றும் எதற்கெடுத்தாலும்
அடம் பிடிப்பது.

போன்ற எண்ணங்கள் உடையவர்களும் மன நல மருத்துவரை 
காணுதல் நலம்.


நன்றி :-
ஹெல்த் & பியுட்டி மலர்



50 comments:

rajamelaiyur said...

பயனுள்ள , நல்ல பதிவு நண்பா

rajamelaiyur said...

இன்று என் வலையில்

விஜய் Vs சூர்யா : ஜெய்க்கபோவது யார்?

arasan said...

அப்பாடா நான் போக வேண்டிய அவசியம் இல்லை ./.

நல்ல பகிர்வுக்கு நன்றிங்க நண்பரே

MANO நாஞ்சில் மனோ said...

அப்போ கண்டிப்பா சிபி டாக்டரை பார்த்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான்...!!!

Unknown said...

பயனுள்ள பதிவு நண்பரே

M.R said...

என் ராஜபாட்டை"- ராஜா said...
பயனுள்ள , நல்ல பதிவு நண்பா

நன்றி நண்பரே

M.R said...

அரசன் said...
அப்பாடா நான் போக வேண்டிய அவசியம் இல்லை ./.

நல்ல பகிர்வுக்கு நன்றிங்க நண்பரே//

நன்றி நண்பரே

M.R said...

MANO நாஞ்சில் மனோ said...
அப்போ கண்டிப்பா சிபி டாக்டரை பார்த்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான்..//

ஹா ஹா அவர் நல்லவர் நண்பரே

M.R said...

ஜ.ரா.ரமேஷ் பாபு said...
பயனுள்ள பதிவு நண்பரே//

நன்றி நண்பரே

கோகுல் said...

அவசியமான பதிவு.நண்பரே!
உடல் நலம் மட்டும் போதாது
மன நலமும் உடனிருந்தால் தான்
உகந்தது என்பதின் உண்மை உணர்த்தும் பதிவு.

மனிதன் என்ற பெயரே மனதை தன் வசம வைத்திருத்தல் என்பதில் இருந்து வந்தது தானே?
பகிர்வுக்கு நன்றி!

சம்பத்குமார் said...

பயனுள்ளதோர் பகிர்வு நண்பரே..

தொடருங்கள்

நட்புடன்
சம்பத்குமார்

M.R said...

கோகுல் said...
அவசியமான பதிவு.நண்பரே!
உடல் நலம் மட்டும் போதாது
மன நலமும் உடனிருந்தால் தான்
உகந்தது என்பதின் உண்மை உணர்த்தும் பதிவு.

மனிதன் என்ற பெயரே மனதை தன் வசம வைத்திருத்தல் என்பதில் இருந்து வந்தது தானே?
பகிர்வுக்கு நன்றி!//

அருமையான கருத்து நண்பரே ,நன்றி

M.R said...

சம்பத்குமார் said...
பயனுள்ளதோர் பகிர்வு நண்பரே..

தொடருங்கள்
நன்றி நண்பரே

Yoga.S. said...

நல்ல பகிர்வு நன்றி!தொடருங்கள்!!!!

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

நல்ல தகவல், வெளிநாட்டில் இதெல்லாம் சிம்பிள், வேலை இல்லாமல் போனாலும் அங்குதான் போவார்கள், அதிகம்... கவலை, மனக் குழப்பம் அனைத்துக்கும் அங்குதான் போவார்கள், நம் நாட்டில்தான் இதுக்கு பட்டம் வைத்து அழைப்பார்கள் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))...

நம் நாட்டவர் இன்னும் முன்னேற இடமிருக்கு இந்த விஷயத்தில்.

Unknown said...

இதெல்லாம் நடந்தும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருப்பவர்கள் அதிகம் மாப்ளே..!

Yaathoramani.blogspot.com said...

நீங்க சொல்லுவதைப் பார்த்தால்
நன்றாக இருக்கிறோம் என எண்ணிக்கொண்டிருக்கிற
(நான் உட்பட ) பலர் போகவேண்டி இருக்கும்போல் உள்ளதே
எச்சரிக்கைப் பதிவு பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
த.ம 4

M.R said...

Yoga.S.FR said...
நல்ல பகிர்வு நன்றி!தொடருங்கள்!!!!

நன்றி ஐயா கருத்திற்கு

M.R said...

athira said...
நல்ல தகவல், வெளிநாட்டில் இதெல்லாம் சிம்பிள், வேலை இல்லாமல் போனாலும் அங்குதான் போவார்கள், அதிகம்... கவலை, மனக் குழப்பம் அனைத்துக்கும் அங்குதான் போவார்கள், நம் நாட்டில்தான் இதுக்கு பட்டம் வைத்து அழைப்பார்கள் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))...

நம் நாட்டவர் இன்னும் முன்னேற இடமிருக்கு இந்த விஷயத்தில்.//

ஆமாம் தோழி , அழகான கருத்துக்கு நன்றி தோழி

M.R said...

விக்கியுலகம் said...
இதெல்லாம் நடந்தும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருப்பவர்கள் அதிகம் மாப்ளே..!//

ஆமாம் மாம்ஸ்

M.R said...

Ramani said...
நீங்க சொல்லுவதைப் பார்த்தால்
நன்றாக இருக்கிறோம் என எண்ணிக்கொண்டிருக்கிற
(நான் உட்பட ) பலர் போகவேண்டி இருக்கும்போல் உள்ளதே
எச்சரிக்கைப் பதிவு பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
த.ம 4//

அழகான ,விரிவான கருத்துக்கும் வாக்கிற்கும் நன்றி நண்பரே

மகேந்திரன் said...

அவசியமான மற்றும் தேவையான பதிவு நண்பரே.
மருத்துவ பதிவுகளில் தங்களின் தளம் முக்கியமானது.
அத்தனையும் முத்துக்களாய் ஜொலிக்கின்றன.

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் நண்பரே.

K.s.s.Rajh said...

நல்ல விளக்கப்பதிவு பாஸ்
தீபாவளி வாழ்த்துக்கள்

ஸாதிகா said...

மிகவும் உபயோகமான பகிர்வு!

சக்தி கல்வி மையம் said...

மிகவும் பயனுள்ள பதிவு.,
தீபாவளி வாழ்த்துக்கள்...

பூங்குழலி said...

அதோடு மனைவி மீது தேவையில்லாமல் சந்தேகப்படும் கணவன்மார்களும் கணவன் மீது அவ்வாறே சந்தேகப்படும் மனைவியரும் மனநல மருத்துவரை
கண்டிப்பாக பார்க்க வேண்டும்

Mahan.Thamesh said...

வணக்கம் நலமா நண்பா . அருமையான பயனுள்ள பதிவு . தீபாவளி வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

>>MANO நாஞ்சில் மனோ said...

அப்போ கண்டிப்பா சிபி டாக்டரை பார்த்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான்...!!!


அன்புத்தம்பி லேப் டாப் மனோ, போற பக்கம் எல்லாம் என்னை கும்ம வேண்டாம்.. ஹி ஹி

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,
நலமா?
அப்படீன்னா நானும் மனநல மருத்துவரைப் பார்க்கனுமா?

ஏன்னா நானும் கதவை பூட்டி விட்டு மறுபடிடும் வந்து செக் பண்ணுவேனே...

RAMA RAVI (RAMVI) said...

பயனுள்ள தகவல்கள் ரமேஷ்.

தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

ஜோசப் இஸ்ரேல் said...

நிறைய பேர் இப்படிதான்யா இருக்கிறாங்க ...!

அம்பாளடியாள் said...

அடடா என்னுடைய விசயம் இவருக்குத் தெரிஞ்சு போச்சுதோ....!!!!
அப்ப அம்பாளடியாளும் அவசியம் டாக்டரைப் பார்க்கணும் .
மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உங்களுக்கு .

M.R said...

மகேந்திரன் said...
அவசியமான மற்றும் தேவையான பதிவு நண்பரே.
மருத்துவ பதிவுகளில் தங்களின் தளம் முக்கியமானது.
அத்தனையும் முத்துக்களாய் ஜொலிக்கின்றன.

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் நண்பரே.//

அன்பு கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

M.R said...

K.s.s.Rajh said...
நல்ல விளக்கப்பதிவு பாஸ்
தீபாவளி வாழ்த்துக்கள்//

கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா

M.R said...

ஸாதிகா said...
மிகவும் உபயோகமான பகிர்வு!

தங்கள் வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி சகோ
தொடர்ந்து வாருங்கள்

M.R said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...
மிகவும் பயனுள்ள பதிவு.,
தீபாவளி வாழ்த்துக்கள்...

வாழ்த்துக்கும் ,அன்பு கருத்துக்கும் நன்றி நண்பா

M.R said...

பூங்குழலி said...
அதோடு மனைவி மீது தேவையில்லாமல் சந்தேகப்படும் கணவன்மார்களும் கணவன் மீது அவ்வாறே சந்தேகப்படும் மனைவியரும் மனநல மருத்துவரை
கண்டிப்பாக பார்க்க வேண்டும்//

அருமையான கருத்துக்கு நன்றி சகோ

M.R said...

Mahan.Thamesh said...
வணக்கம் நலமா நண்பா . அருமையான பயனுள்ள பதிவு . தீபாவளி வாழ்த்துக்கள்//

நலம் நண்பரே , வாழ்த்துக்கும் ,அன்பு கருத்துக்கும் நன்றி நண்பரே

M.R said...

சி.பி.செந்தில்குமார் said...
>>MANO நாஞ்சில் மனோ said...

அப்போ கண்டிப்பா சிபி டாக்டரை பார்த்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான்...!!!


அன்புத்தம்பி லேப் டாப் மனோ, போற பக்கம் எல்லாம் என்னை கும்ம வேண்டாம்.. ஹி ஹி//


தீபாவளி வாழ்த்துக்கள் நண்பரே

M.R said...

நிரூபன் said...
வணக்கம் பாஸ்,
நலமா?
அப்படீன்னா நானும் மனநல மருத்துவரைப் பார்க்கனுமா?

ஏன்னா நானும் கதவை பூட்டி விட்டு மறுபடிடும் வந்து செக் பண்ணுவேனே..//


வணக்கம் நண்பா
ஹா ஹா அன்புக்கு நன்றி நண்பா

M.R said...

RAMVI said...
பயனுள்ள தகவல்கள் ரமேஷ்.

தீபாவளி நல்வாழ்த்துக்கள்.//

வாழ்த்துக்கும் ,கருத்துக்கும் நன்றி சகோதரி

M.R said...

உங்கள் நண்பன் said...
நிறைய பேர் இப்படிதான்யா இருக்கிறாங்க ...!//


ஆமாம் நண்பரே ,தங்கள் வருகைக்கு நன்றி சகோ ,தொடர்ந்து வாருங்கள்

M.R said...

அம்பாளடியாள் said...
அடடா என்னுடைய விசயம் இவருக்குத் தெரிஞ்சு போச்சுதோ....!!!!
அப்ப அம்பாளடியாளும் அவசியம் டாக்டரைப் பார்க்கணும் .
மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உங்களுக்கு .//


ஹா ஹா வாழ்த்துக்கும் ,அன்பு கருத்துக்கும் நன்றி சகோ

M.R said...

Chitra said...
இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் சகோதரி

Anonymous said...

பயனுள்ள பதிவு நண்பரே...

M.R said...

ரெவெரி said...
பயனுள்ள பதிவு நண்பரே...//

நன்றி நண்பரே

Shanmugam Rajamanickam said...

அப்ப நான் தான் முதல்ல பாக்கணுமா.........?

vetha (kovaikkavi) said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உரித்தாகுக.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

ப.கந்தசாமி said...

எப்பப் பார்த்தாலும் பதிவுலமே கதி என்று இருப்பவர்கள் யாரைப் பார்க்கணும்?

விச்சு said...

நல்லாயிருக்கு..ஆனா நிறைய பேருக்கு இதெல்லாம் இருக்கும் போல இருக்கே.. தீபாவளி வாழ்த்துக்கள் நண்பரே..

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out