வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Friday, December 16, 2011

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்







நமக்கு தேவையான அதாவது பொருத்தமான வேலையைத்
தேர்ந்தெடுப்பது மிகவும் கஷ்டமானது தான்



முதலில் நீங்கள் எப்பிடிப் பட்டவர் என்பதை வடிவேல் ஒரு
படத்தில் சொல்வது போல் நாம் அதற்கு லாயக்கு தானா
என சுய பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்


நாம் எந்த வகையைச் சார்ந்தவர் என தீர்மானிக்க வேண்டும்


கிரியேடிவ் டைப்பா ?


தொழிற்படிப்பைச் சேர்ந்தவரா ?


உடல் உழைப்பை சார்ந்த பணிகளில் விருப்பம் உள்ளவரா ?


சாவால்களை விரும்புவரா ?


என்பதில் நமக்கு எது பொருத்தமானது என தீர்மானிக்க 
வேண்டும்.


தீர்மானித்த பின்.........


ஃபோகஸ் எனப்படும் முனைப்பு வேண்டும்


உங்கள் பணியில் முதலாம் ஆண்டிற்குள் எவற்றையெல்லாம்
செய்து முடித்து விட வேண்டும் என்பதை லிஸ்ட் போட்டுக்
கொள்ள வேண்டும்.


ஆண்டு இறுதியில் அவற்றில் முடிந்தவை எவை ,முடியாதவை
எவை என்பதை குறித்துக் கொள்ள வேண்டும்


அடுத்து உங்கள் பணியின் பாதையை திட்டமாக வகுத்துக் 
கொள்ள வேண்டும்


இதுவரை செய்த தவறுகளை சுத்தமாக மறந்து விடவேண்டும்


மாறாக அவற்றால் நீங்கள் கற்ற பாடங்களை நினைவில் 
தக்க வைத்துக் கொள்ள வேண்டும்


எங்கெல்லாம் தவறு செய்துள்ளோம் என்பதில் குறித்து 
வைத்துக்கொண்டு அது போல தவறு ஏற்படாமல் பார்த்துக் 
கொள்ள வேண்டும்


அடுத்து உங்கள் பலம் ,பலஹீனம் , வாய்ப்புகள் ஆகியவற்றை
குறிப்பு எடுத்து கொள்ள வேண்டும் 


அது உங்களை தெளிவு படுத்த உதவும்


எதிலுமே ஒரு ஈடுபாடு வேண்டும் ,உங்களுக்கு எதில் 
ஈடுபாடு உள்ளது என பார்த்து அதில் ஈடுபடுங்கள் 


தற்போதைய சூழ்நிலையை நன்றாக அலசி ஆராயுங்கள்
அப்பொழுதுதான் எங்காவது மாற்றம் தேவை எனில் அதை
சரி செய்யலாம் 


உங்கள் லட்சியத்தை நோக்கிப் பயனிக்கும் பொழுது லட்சியப்
பாதையில் என்ன இடையூறு வந்தாலும் அதனை தகர்த்து 
எறியும் மன வலிமையை பெற்றிடுங்கள்


நெடு நேரம் உழைக்க வேண்டி இருப்பின் துவண்டு விடாதீர்கள்


உங்கள் ஜாதகத்தில் ஒரு டாக்டராகவோ ,இஞ்சினீயராகவோ
வருவார் என இல்லையே என வருந்தாதீர்கள் 




ஏனென்றால்


கை ரேகை பார்த்து உழைப்பவனை விட
கை ரேகை தேய உழைப்பவனே உயற்வான்


உங்கள் மனதில் தணியாத கொழுந்து விட்டெரியும் லட்சியம்
தான் உங்கள் கனவை நினைவாக்கும்


நீங்கள் அதில் படு உருதியாக இருந்தால் கோள்களும் 
விண்மீன்களும் தங்கள் பார்வையை மாற்றி உங்களை
நோக்கி புன்னகைக்கும்


வெற்றி நிச்சயம் 


முயன்றிடு ,வென்றிடு


முயல் பல சமயம் ஜெயிக்கும்
ஆமை சில சமயம் ஜெயிக்கும்
"முயலாமை "என்றுமே ஜெயித்ததில்லை




நன்றி


நன்றி : பட உதவி இணையம்

31 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

தன்னம்பிக்கை பகிர்வு.... நன்றி


வாசிக்க:
குடிகாரன் மனசும், மக்கள் மனசும் - கவிதை

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை.
வாழ்த்துக்கள்.

கோகுல் said...

முயல்வோம்,வெல்வோம்,

Yaathoramani.blogspot.com said...

மிகச் சரி
ஆமை முயல் மாறி மாறிக் கூட ஜெயிக்கும்
முயலாமை ஜெயிப்பதே இல்லை
வெற்றிக்கு வழிகாட்டும் அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 4

M.R said...

தமிழ்வாசி பிரகாஷ் said...
தன்னம்பிக்கை பகிர்வு.... நன்றி


நன்றி நண்பரே

M.R said...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...
அருமை.
வாழ்த்துக்கள்.//

நன்றி நண்பரே

M.R said...

கோகுல் said...
முயல்வோம்,வெல்வோம்,//

ஆமாம் நண்பா

M.R said...

Ramani said...
மிகச் சரி
ஆமை முயல் மாறி மாறிக் கூட ஜெயிக்கும்
முயலாமை ஜெயிப்பதே இல்லை
வெற்றிக்கு வழிகாட்டும் அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 4//

தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே

சக்தி கல்வி மையம் said...

தன்னம்பிக்கை தரும் பதிவு..
நன்றி தோழர்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

உழைப்பை மறந்து விட்டவனுக்கு வாழ்க்கை சூன்யம்தான்...

வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்...

M.R said...

* வேடந்தாங்கல் - கருன் *! said...
தன்னம்பிக்கை தரும் பதிவு..
நன்றி தோழர்..//


நன்றி நண்பரே

M.R said...

கவிதை வீதி... // சௌந்தர் // said...
உழைப்பை மறந்து விட்டவனுக்கு வாழ்க்கை சூன்யம்தான்...

வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்...//

கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே

சென்னை பித்தன் said...

த.ம.7
நல்ல தன்னம்பிக்கை பதிவு.

M.R said...

சென்னை பித்தன் said...
த.ம.7
நல்ல தன்னம்பிக்கை பதிவு.//

நன்றி ஐயா

ராஜி said...

கைரேகை பார்த்து உழைப்பவனை விட
கைரேகை தேய உழைப்பவனே உயர்வான்.
>>>
சிந்திக்க வேண்டிய வரிகள்

Admin said...

புத்துணர்ச்சி தந்தது.

M.R said...

ராஜி said...
கைரேகை பார்த்து உழைப்பவனை விட
கைரேகை தேய உழைப்பவனே உயர்வான்.
>>>
சிந்திக்க வேண்டிய வரிகள்//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

M.R said...

மதுமதி said...
புத்துணர்ச்சி தந்தது.//

நன்றி நண்பரே

Yoga.S. said...

முயலாமை ஜெயிப்பதே இல்லை.அருமை!!!!

ஹேமா said...

நம்பிகையோடு முயற்சிதான் வாழ்க்கையை உயர்த்தும்.நல்லதொரு பதிவு !

சி.பி.செந்தில்குமார் said...

தன்னம்பிக்கை தரும் பதிவு

துரைடேனியல் said...

Arumaiyana pathivu. Azhagana karuthukkal. Nalla Suyamunnetra pathivu.

மகேந்திரன் said...

விழித்து எழுந்தவுடன் கிடைப்பதல்ல வெற்றி
விழுந்து எழுந்த பின் கிடைப்பது...

மன உரத்துடன் கைகள் உரமேற உழைத்தால்
வெற்றியை அடையலாம்.
அருமையான கட்டுரை நண்பரே.
வாழ்த்துக்கள்.

M.R said...

Yoga.S.FR said...
முயலாமை ஜெயிப்பதே இல்லை.அருமை!!!!

அன்பு கருத்திற்கு நன்றி நணபரே

M.R said...

ஹேமா said...
நம்பிகையோடு முயற்சிதான் வாழ்க்கையை உயர்த்தும்.நல்லதொரு பதிவு !

அழகிய கருத்திற்கு நன்றி சகோ

M.R said...

சி.பி.செந்தில்குமார் said...
தன்னம்பிக்கை தரும் பதிவு//

நன்றி நண்பரே

M.R said...

துரைடேனியல் said...
Arumaiyana pathivu. Azhagana karuthukkal. Nalla Suyamunnetra pathivu.//


நன்றி நண்பரே

M.R said...

மகேந்திரன் said...
விழித்து எழுந்தவுடன் கிடைப்பதல்ல வெற்றி
விழுந்து எழுந்த பின் கிடைப்பது...

மன உரத்துடன் கைகள் உரமேற உழைத்தால்
வெற்றியை அடையலாம்.
அருமையான கட்டுரை நண்பரே.
வாழ்த்துக்கள்.//

விரிவான தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே

Anonymous said...

மிக அருமையான ஊக்கம் தரும் இடுகை. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.

RAMA RAVI (RAMVI) said...

கை ரேகை தேய உழைப்பவனே உயர்வான்..மிக சிறப்பான கருத்து.

மிக அருமையான பதிவு,ரமேஷ்.நன்றி பகிர்வுக்கு.

கோமதி அரசு said...

கை ரேகை பார்த்து உழைப்பவனை விட
கை ரேகை தேய உழைப்பவனே உயற்வான்//

நல்ல பகிர்வு. அருமையான பதிவு.

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out