வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Thursday, October 6, 2011

யோகா கற்றுக்கொள்ளுங்கள்-பாகம் 4

முந்தைய பாகங்களை படிக்க 


இனி.....

சேது பந்தாசனம்


செய்முறை

படுத்த படி இரு கால்களையும் மடக்கி படத்தில் காட்டியவாறு
வைக்க வேண்டும்.

உள்ளங்கைகள் தரையில் படுமாறு உடலை ஒட்டி இருக்க
வேண்டும். இது ஆரம்ப நிலை .



பின்னர் மூச்சை மெதுவாக இழுத்தவாறு இடுப்பை மேலே
உயர்த்தவும்.



மூச்சை நிதானமாக வெளியேற்றியவாறு ஆரம்ப நிலைக்கு
கொண்டு வரவும்.

இவ்வாறு 6-8 முறை செய்யலாம்.

பயன்கள் ;-

முதுகு வலி ,கழுத்து வலி போன்ற நோய்களுக்கு பயனளிக்கும்

சலபாசனம்

செய்முறை :-

குப்புறப் படுத்துக் கொண்டு கால்கள் ,பாதங்களைச் சேர்த்து
நேராக வைக்கவும்.

பின்பு கைகளைத் தொடையின் உட்பகுதியில் வைத்துக் 
கொண்டு ,மூச்சை உள்ளே இழுத்த வண்ணம் ,கால்கள் 
இரண்டையும் மடக்காமல் தூக்கவும்.

பிறகு மூச்சை விட்ட வண்ணம் கால்களைக் கீழே 
கொண்டு வரவும்.

பயன்கள் :-

இடுப்பு ,முதுகுப் பகுதியில் வலி,வயிற்று உள் 
உறுப்புகளுக்கு நல்லது.

தவிர்க்க வேண்டியவர்கள் :-

Hernia ,இருதய நோய் உள்ளவர்கள்,வயிற்றில் அறுவை 
சிகிச்சை செய்து கொண்டவர்கள் தவிர்க்கவும்

தனுராசனம்


செய்முறை

குப்புற படுக்கவும் .
கால்களை மடக்கி கனுக்கால்களைக் கைகளால் 

(படத்தில் காட்டிய படி ) 
பிடிக்கவும்.





இது ஆரம்ப நிலை .

மெதுவாக மூச்சை உள்ளே இழுத்தவாறு கால்களை
நீட்ட முயற்சிக்கவும்.

கைகளை மடக்காமல் கால்களை நீட்ட முயற்சிக்கவும்.

கைகள் மடக்காமல் கால்களை பிடித்தபடி இருக்க வேண்டும்.

அப்பொழுது தலையையும் ,நெஞ்சையையும் நன்றாக

தூக்க வேண்டும்.

அடிவயிறு மட்டும் தரையில் படவேண்டும்.
இது இறுதி நிலை .

பிறகு மூச்சை நிதானமாக வெளியே விட்டவாறு ஆரம்ப
நிலைக்கு 
வரவும்.

பயன்கள்:-

இடுப்பிலிருந்து கழுத்து வரை முதுகின் எல்லாப் 
பகுதிகளுக்கும் பலன் அளிக்கும்.

தொப்பையை குறைக்கும்.

தவிர்க்க வேண்டியவர்கள் :-

Hernia ,இருதய நோய் உள்ளவர்கள்,வயிற்றில் அறுவை 
சிகிச்சை செய்து 
கொண்டவர்கள் தவிர்க்கவும்.




22 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

தகவலுக்கு நன்றி.
தொடருங்கள் ...

மாய உலகம் said...

நல்லதொரு பகிர்வு.. நன்றி சகோ!

அம்பலத்தார் said...

முறையான ஆசிரியர் இன்றி யோகா செய்யலாமா?

கோகுல் said...

thoppai kuraikkum yogaa palarukku payanpadum!

Unknown said...

என்னது யோகா வா நான் இந்த விளையாட்டுக்கு வரல என்ன விட்டுருங்க

நண்பர்களே இன்று பதிவு திருட்டு பற்றி ஒரு பதிவு போட்டுருக்கேன்.வந்து பாருங்க

பதிவை திருடினாலும் இனி கவலை இல்லை?

தமிழ்வாசி பிரகாஷ் said...

நல்ல பதிவு....

படித்து யோகா செய்வதை விட, சரியான பயிற்சியிடத்தில் யோகா கற்றால் முழு பயனை அடையலாம் என்பது என் கருத்து

தனிமரம் said...

நல்ல பதிவைத் தொடர்ந்து தாருங்கள் யோகா உண்மையில் சிறப்பான ஒரு உடல்பயிற்ச்சி!

RAMA RAVI (RAMVI) said...

பயனுள்ள யோகா பதிவு ரமேஷ்.பகிர்வுக்கு நன்றி.

MANO நாஞ்சில் மனோ said...

உபயோகமான பதிவு ஆசிரியரே ஸாரி டாக்டரே...நன்றி...!!!

K.s.s.Rajh said...

தொடர்ந்து பயனுள்ளதகவல் பாஸ்

kobiraj said...

பயனுள்ள யோகா பதிவு பகிர்வுக்கு நன்றி

Unknown said...

தேவையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

identity


புலவர் சா இராமாநுசம்

Anonymous said...

பயனுள்ள யோகா பதிவு ரமேஷ்...

ஒரு டவுட் ...மஞ்சள் மேடம் யோகா பண்ண மாட்டாங்களா..?

rajamelaiyur said...

tamilmanam 11

rajamelaiyur said...

நல்ல பயனுள்ள தகவல்கள் ..

rajamelaiyur said...

உடலுக்கும் ,மனதுக்கும் பயனுள்ளது யோகா ..

சென்னை பித்தன் said...

த.ம.12
இயன்றதைச் செய்தால் நல்லதுதான்!

இராஜராஜேஸ்வரி said...

பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்

நிரூபன் said...

நல்லதோர் பதிவு பாஸ்.

நிரூபன் said...

ஆமா. படத்தில யோகா செய்யுறது நீங்க தானே..

செங்கோவி said...

இதை ட்ரை பண்ணலாம் போலிருக்கே...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தொடருங்கள்.. நண்பா...........

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out