வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Tuesday, August 2, 2011

தங்க சுரங்கம் ரைஸ் மில்லாச்சு


தன்னம்பிக்கை தொடர் 

நேற்றைய தொடர்ச்சி .....

நண்பர்களே வணக்கம்

சுரங்கத்தை ஆராய்ந்து பார்த்த இன்ஜீனியர் சில
கணக்கெல்லாம் போட்டுசில உண்மைகளை அந்த
கயலாங்கடைக் காரனிடம் சொன்னார் .


அதாவது சுரங்கங்களில் சில போலியான கோடுகள் காண்பிக்கும் ,
சரியாக அதற்க்கு கீழே மூன்று முதல் ஐந்தடி தோண்டினால்
தங்கம்நிறைய கிடைக்கும் என்ற உண்மையை சொன்னார் .

ஆனால் டார்பின் மாமாவிற்கோ ,டார்ப்பின்கோ இது தெரிய வாய்ப்பில்லை .
இந்த இடத்தில் கயலாங்கடைக் காரரின் புத்தியை மெச்ச வேண்டும் .


அந்த இடத்தை மேற்கொண்டு தொண்டலாமா இல்லை வேண்டாமா
என்று ஒரு இன்ஜீநியரைக் கொண்டு தீர்மானித்த அந்த புத்தி 
டார்பிகோ ,அவரது மாமாவிற்கோ தோன்ற வில்லை பாருங்கோ .

பிறகு கயலாங்கடைக் காரர் தங்கத்தை தோண்டி லட்சம் லட்சமாக (அப்பொழுது லட்சம் என்பது பெரிய தொகைங்க ) டாலர்களை சம்பாதித்தார்

வெறும் மூன்றடி தூரத்தில் புதையலை கோட்டை விட்ட 
டார்பின் மனம்நொந்தார் .

தனக்கு ஒரு இன்ஜினியரை வைத்து சோதித்து பார்க்க 
தோணலையேஎன்று மனம் வருத்தப்பட்டார் .

அதையே ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு விடா முயற்சி 
இல்லாததால் மூன்றடி தூரத்தில் தங்கத்தை கோட்டை 
விட்டதை எண்ணி , 


தற்காலிகதோல்விகளை கண்டு பின் வாங்க கூடாது 
என்று எண்ணி ,

ஒரு இன்சூரன்ஸ் ஏஜண்டாக சேர்ந்து வாடிக்கையாளர்கள் 
வேண்டவே வேண்டாம் என்று மறுத்தாலும் , 


ஓயாது அவர்களைப் பார்த்து அவர்களைக்ளையண்டாக 
சேர்த்து பின் மிகப் பெரிய பணக்காரர் ஆனார் டாற்பி .

ஆம் வருடத்தில் பல லட்சம் டாலர் இன்சூரன்ஸ் 
பிசினஸ் செய்யும் ஏஜண்டாக பெயர் வாங்கினார் .

அவர் அந்த நிலையை அடைய .முன்பு பின்பற்றாத விடா 
முயற்ச்சியைஇப்பொழுது பின் பற்றியதும் , தற்காலிக 
தோல்விகளை கண்டு மனம் தளரக்கூடாது என்று உறுதியான
மனப் பான்மையாலும் பணம் சம்பாதித்தார்.


யாராக இருந்தாலும் வெற்றிக் கனிகளை பறிக்கும் முன் 
தொல்விக்கனிகளை ருசித்தே ஆக வேண்டும் .

ஒரு செயலில் இறங்கும் பொழுது நமக்கு முதலில் தெரிவது 
தோல்விதான் (அதுவும் தற்காலிகம் தான் என்பதை அறியாமல்)
உடனே அந்த செயலை நிறுத்தி விட்டு விலக நினைப்போம் 
,ஏனென்றால்அது சுலபமாக இருப்பதால் .

நிறைய பேர் இதைதான் செய்கிறார்கள் . வெற்றி பெற்ற யாரும்
சுலபமாகஅதுவும் எடுத்த உடனே வெற்றி அடைந்தது இல்லை .

சில பல தோல்விகளை சந்தித்து ,அதையும் கடந்து விடாமல் 
முயற்சிசெய்ததால் தான் வெற்றி பெற்றார்கள் என்பது யாரும் 
மறுக்கமுடியாத உண்மை .

கைக்கெட்டும் தூரத்தில் வெற்றி இருக்கும் பொழுது நம்
காலை வாரி விடுவதில் தோல்விக்கு செம குஷி .

ஏன் தெரியுமா ? நிறைய பேர் விடா முயற்ச்சியை விட 
விட்டுட்டு போறதைதான் விரும்புவார்கள் .


டார்பி ஜெயித்ததற்க்கு என்ன காரணம் ,எற்கனவே 
தோல்வியை தழுவியதால் .

ஆம் தற்காலிக தோல்விக்கு தங்க சுரங்கம் காரணமாக 
இருந்ததுபோல் விடா முயற்சிக்கு வேறொரு நிகழ்ச்சி
காரணமாக இருந்தது .

ஆம் ,தங்க புதையலை கைவிட்ட பிறகு ,டார்பின் மாமா
ஊருக்குவந்து ஒரு பழைய ரைஸ் மில் வாங்கி ஓட்டினார் .


அதில் சிறிது சிறிதாக சம்பாதித்து சில விவசாய நிலங்களை 
வாங்கி அதில் நிறைய விவசாயிகள் கூட்டுறவு முறையில் 
வேலை செய்தார்கள்

ஒரு நாள் அந்த மாவு மில்லிற்கு ஒரு சிறிய பெண் வந்தாள். 
டார்பியும்அப்பொழுது அங்கு தான் இருந்தார் .மாமாவிற்கு 
ஒத்தாசையாக .

அந்த சிறுமி அவர் வயலில் வேலை செய்யும் விவசாயின் 
மகள் .அந்த சிறுமியை பார்த்து டார்பின் மாமா 
" என்ன வேண்டும்" என்று கத்தினார் .
(கேட்கவில்லை ,கத்தினார் )

எங்க அம்மா உங்ககிட்ட ஐம்பது ரூபாய் பணம் வாங்கி 
வர சொல்லி என்னை அனுப்பினார்கள் .அமைதியாக அந்த
சிறுமி அவரைப் பார்த்து சொன்னாள்.

அதெல்லாம் கிடையாது வீட்டுக்கு போ என்று சொன்னதும்
அந்த சிறுமி “ சரிங்க சார் “என்று சொல்லிவிட்டு அந்த 
இடத்தை விட்டுநகராமல் அங்கேயே நின்றாள்.

டாற்பி மாமா அந்த சிறுமியை போகச்சொல்லி விட்டு 
வேலையில் மூழ்கினார் .

சிறிது நேரம் கழித்து அந்த சிறுமி அதே இடத்தில் 
நிற்பதைப் பார்த்து


“உன்னைய வீட்டுக்கு போகச்சொன்னேன்ல “என்று
 மீண்டும் கத்தினார்

அதற்கு அந்த பெண் " சரிங்.. சார் "என்றாள் அதே இடத்தில்
நின்று கொண்டு .

மூட்டையை எடுத்து அரவை இயந்திரத்தில் கொட்ட போன
அவர் அந்தசிறுமி அதே இடத்தில் நிற்பதை பார்த்து கோபம்
கொண்டு ஒரு பெரிய தடியை எடுத்துகொண்டு அந்த 
சிறுமியை நெருங்கினார் .

டார்பின் .தன் கண் முன்னே அந்த சிறுமி அடிவாங்க 
போவதை எண்ணி பயந்து போய் பார்த்தார்.

டார்பின் மாமா அந்த சிறுமியை நெருங்கியதும் ......

தொடரும் .......


.
 

32 comments:

மாய உலகம் said...

ஆஹா நான் கனித்தது சரியாகிவிட்டது...முயற்சி விடாமுயற்சியாகி கடைசி வரை போராட வேண்டும் என்பதே இந்த பதிவில் சொல்லியிள்ளீர்கள்..நன்றியுடன் வாழ்த்துக்கள்

M.R said...

வாங்க மாய உலகம் ,

தங்கள் கணிப்பு சரியானது சந்தோசமே

வருகைக்கு நன்றி சகோ

தமிழ்வாசி - Prakash said...

நல்ல நம்பிக்கை தொடருங்கோ...

M.R said...

வாங்க பிரகாஷ் ,

தொடர்ந்திட்டா போச்சி ....

செங்கோவி said...

நல்ல தொடர்..அந்தச் சிறுமிக்கு என்ன ஆச்சு..சொல்லுங்க பாஸ்.

M.R said...

செங்கோவி said ...

M.R said...

நாளைக்கு

நிரூபன் said...

வணக்கம் சகோ, இரண்டாவது பாகத்தினையும் சுவையாக நகர்தியிருக்கிறீங்க.

தோல்வியினைக் கண்டு துவண்டு விடக் கூடாது, விடாமுயற்சியுடன் செயற்பட வேண்டும் எனும் தன்னம்பிக்கை நிறைந்த வரிகளைப் பதிவினூடாகப் பகிர்ந்திருக்கிறீங்க. மனதிற்கு உறுதி தரும் பதிவு.

Chitra said...

என்னுடைய பதிவுக்கு வந்து கருத்திட்டு, ஊக்கமளித்ததற்கு நன்றிங்க.
உங்கள் ப்லாக் நன்றாக இருக்கிறது. Follow பண்றேன்.

ரியாஸ் அஹமது said...

keep it up bro ...very encouraging .tq bro ..
congrats

ரியாஸ் அஹமது said...

suspence makes it more intersting ,,,voted

மைந்தன் சிவா said...

இரண்டாவது பாகமும் சுவாரசியம் பாஸ்!!
நல்ல இடத்தில் தொடரும் போட்டு!!

Ramani said...

இன்றைய வலைச்சரத்தில் தங்களை
அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்

ரியாஸ் அஹமது said...

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

koodal bala said...

அருமையான தொடர் ..தொடர்க ...

M.R said...

வாங்க நிருபன் ,
தங்களது வருகைக்கும் ,பாராட்டுக்கும் நன்றி சகோ ..

M.R said...

வாங்க சித்ரா ,

தங்களை வரவேற்கிறேன் .

தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி சகோதரி .

தொடர்ந்து வாருங்கள் .

சென்னை பித்தன் said...

விடா முயற்சி பற்றி அருமையான பகிர்வு!இன்றைக்கும் சஸ்பென்ஸா?

மாய உலகம் said...

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சகோ

M.R said...

வாங்க சென்னை பித்தன் ஐய்யா ,

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐய்யா

M.R said...

வாங்க ரியாஸ் அஹமது நண்பரே
தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி நண்பரே .

M.R said...

வாங்க மைந்தன் சிவா நண்பரே

தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி நண்பரே .

தொடர்ந்து வாருங்கள் நண்பரே

M.R said...

வாங்க ரமணி நண்பரே .

தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே

என்னை தங்கள் வலைச்சரத்தில் அறிமுக படுத்தியதற்கு நன்றி நண்பரே .

M.R said...

வாங்க பாலா தங்கள் வாழ்த்துக்கு நன்றி பாலா நண்பரே

M.R said...

வாங்க மாய உலகம் தங்கள் வாழ்த்துக்கு நன்றி சகோ..

மகேந்திரன் said...

முயற்சியுடையோர் இகழ்ச்சி அடையார்
சுவையூட்டும் தொடர்.

M.R said...

வாங்க மகேந்திரன் ,தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

நன்றி நண்பரே

ஸ்ரீராம். said...

தோல்வியே வெற்றியின் முதல் படி என்பதை உணர்த்தும் பதிவு.

M.R said...

வாங்க ஸ்ரீராம் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி .

தொடர்ந்து வாருங்கள் நண்பரே

மாலதி said...

very nice

M.R said...

வாங்க மாலதி ,தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும்

நன்றி சகோ...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

தொடருங்கள் ...தொடர்கிறேன் ...

M.R said...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...


வாருங்கள் நண்பரே ,தங்களை வரவேற்கிறேன் .

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே .

தொடர்ந்து வாருங்கள் ஆதரவு தாருங்கள் .

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out