வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Wednesday, August 3, 2011

விடா முயற்சியே வெற்றிக்கு சாவி


நண்பர்களே வணக்கம் .

தங்களின் தொடர் ஆதரவிற்கு என் மனமார்ந்த
நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் .


நேற்றைய தொடர்ச்சி .....

டார்பின் மாமா அந்த சிறுமியை நெருங்கிய உடன் அந்த
சிறுமி சிறிதும்பயப்படாமல் ஒரு அடி முன்னே எடுத்து 
வைத்து அவரின் கண்களையேஉற்று பார்த்துக் கொண்டு
அவரை விட அதிக சத்தமாக 


" நீங்கள் காசு குடுத்தாதான் இங்கிருந்து போவேன் "

என்று சொல்ல அவருக்கு சிறிது
நேரம் ஒன்றுமே புரிய வில்லை .தடுமாறிப் போனார்.

அவர் பாக்கெட்டிலிருந்து பணம் எடுத்து குடுத்தார் .
பணம் வாங்கியதும் அந்த சிறுமி அவரது கண்களின் 
பார்வையிலிருந்து தன் பார்வையை மாற்றாமல் 
அப்பிடியே பின்னாடியே நடந்து வாசல் கதவை 
தாண்டி சென்றாள்’.

அந்த சிறுமி போனவுடன் அந்த இடத்திலேயே சிறிது 
நேரம் உட்கார்ந்து விட்டார் .

டார்பினுக்கு ஆச்சிரியம் அந்த பெண் அடிவாங்கி கொண்டு
அழுது கொண்டே ஓடிப்போகும் என்று எதிர் பார்த்ததற்கு 
நேர்மாறாக நடந்த நிகழ்வைப் பார்த்துஆச்சிரிய பட்டார் 
.
எது அந்த பெண்ணிற்கு தைரியம் கொடுத்தது .எதனைக்
கண்டு இவர் தடுமாறிப் போனார் .

"மைன்ட் பவர்" .மனதை ஒருமுகப் படுத்தி உறுதியாக 
தன்னால் முடியும்என்ற எண்ணத்தோடு செய்கின்ற 
காரியம் நூறு சதவீதம் வெற்றி பெரும் .

சிலருக்கு இயற்கையிலேயே இந்த பவர் இருக்கும் 
அது அந்த சிறுமிக்கு இருந்து இருக்கிறது .

தன்னால்அவரிடமிருந்து பணம் வாங்க முடியும் 
என்றுஅந்த சிறுமிக்கு தோன்றி இருக்கு .

அவருக்கு தடுமாற்றம் உள்ள (பதட்டம் நிறைந்த)
மனது .அதனால் தான்வெறும் மூன்றடியில் 
தங்கத்தை கோட்டை விட்டார் .

உறுதியான மனமும் ,விடா முயற்சியும் கொண்ட
அப்பெண் அதற்கான சமயம் (தருணம் )எதிர் பார்த்தாள்

அந்த சிறுமி .அவர் தள்ளியிருக்கும் பொழுது அந்த சிறுமி
அந்த வார்த்தையை கேட்க வில்லை
ஏனென்றால் அந்த வார்த்தை சிதறி போய் இருக்கும்
அவர் அருகில் வந்ததும் ஒரு அடி முன்னே எடுத்து
வைத்து அவரின் முகம் நோக்கி அழுத்தம் திருத்தமாக
சொன்னதால் அவளுக்கு வெற்றி .

இதை ஆல்ஃபா மைன்ட் பவர் என்று சொல்வார்கள்
அதைப் பற்றி பின்னால்விரிவாக பார்க்கலாம் .இங்கே
அந்த பெண்ணின் விடா முயற்சி தான் நமக்குமுக்கியம் .

நாமும் இதைக் கடைப் பிடித்தால் வெற்றி பெறலாம் .
எப்பிடி கடைப்பிடிப்பது நமக்கு அந்த பவர் இருக்கா .
நாமும் அதனைப் பெறலாம்.

இந்த தொடரை தொடர்ந்து வாசித்து வாருங்கள் .உங்களுக்
குள்ளும் அந்த பவர் உங்களை அறியாமலேயே தோன்றியிருக்கும்
 .
இப்போதைக்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டியது இரண்டு

ஒன்று தற்காலிக தோல்விகளை கண்டு மனம் துவண்டு 
விடக் கூடாது 

இரண்டாவது விடாமுயற்சி தன் காரியம்
நிறைவேறும் வரை அதிலிருந்துபின் வாங்க கூடாது .

எதையுமே பயிற்சியால் நாம் பெறலாம் .

ஒரு காரியம் துடங்கி செயல்படும் பொழுது அந்த 
காரியம் தற்காலிகதோல்வியுற்றால் அதற்கான 
காரணங்களை தெரிந்துகொண்டு அந்த தோல்வியை
மறந்து விட்டு அடுத்த ஸ்டெப் எடுத்து போக வேண்டும் .

அதை விட்டு விட்டு அந்த தோல்வியைப் பற்றியே 
சிந்தித்துக்கொண்டு ,அதைப் பற்றியே பேசிக்கொண்டு
இருந்தால் வெற்றி பெற முடியாது .

விழுவது எழுவதற்கே .விழுந்தே கிடப்பதற்கு அல்ல

சுத்தியலால் நிறைய அடிவாங்குவதால் தான் உளி 
கூர்மையாகிறது .

உளி கூர்மையாவதால் தான் கல் சிற்பமாகிறது .

ஐயோ அடி தாங்க முடிய வில்லையே என்று உளி 
எண்ணினால் சிற்பம்தான் ஏது.

தற்காலிக தோல்விகள் உம்மை செம்மை படுத்தவே
.உன்னை புறமுதுகு காட்டி ஓட செய்வதற்காக அல்ல .

இதை உணர்ந்தவன் வெற்றியை எட்டுவான். .
உணராதவன் ????????????

எதுவும் சில முயற்சிகளால் முடியும் 

இந்த யானையை பாருங்கள் பயிற்சியினால்
கால் பந்தின் மீது ஏறி நிற்கிறது.

.பயிற்சி இல்லையென்றால் பந்தின் கதி ???????

அதற்காக உங்களை பந்தின் மீது ஏறி நிற்க சொல்லவில்லை .

பந்து என்பது நீங்கள் செய்யும் செயல் (தொழில் ) யானை
நீங்கள் .நீங்களும் நல்ல பயிற்சியினால் நீங்கள் பார்க்கும் 
செயலை (தொழிலை) சிதறிப் போகாமல் கையாலலாமே .

நான் சொல்லவந்த சாராம்சம் உங்களுக்கு புரியும் 
என்று நினைக்கிறேன் .

மலையேற்றம் செய்ய கடுமையான பயிற்சி தேவை .
வெற்றி என்னும் மலை மீது நாமும் வெற்றிக் கோடி நாட்ட
நமக்கும் சில பயிற்சிகள் தேவை ,

அதை பின் வரும் பதிவுகளில் பார்க்கலாம்
நண்பர்களே இத்துடன் மனம் நினைத்தால் பணம் 
சம்பாதிக்கும் இரண்டாம் பாகம் முடிந்தது .

என்ன இரண்டாம் பாகம் மூன்று பதிவுகளாக போட்டதற்கு 
பொறுக்கவும். விரிவான விளக்கத்துடன் போட்டால் 
தங்களுக்கு புரியும் என்ற எண்ணத்திலும் பெரிய பதிவாக 
போட்டால் தங்களுக்கு போரடிக்கும் என்ற எண்ணத்திலும்
தான் இவ்வாறு பதிவிட்டேன் .

நண்பர்களே இதன் மூன்றாம் பாகம்

வெற்றி ரொம்ப தூரத்தில் இல்லை

 


 அப்பிடி பாக்காதிங்க எனக்கு வெட்கமா இருக்கு

அடடா என்ன சாப்பிட்டேன்னு தெரியல வயிறு கடமுடா 
கடமுடான்னு ஒரே சத்தம் .ம்ம்ம்.... அதான் ஒசுல 
கிடைக்குதேன்னு வாழைப் பழத்தை தாறுமாறா 
சாப்பிட்டது தப்பா போச்சு .


29 comments:

தமிழ்வாசி - Prakash said...

முதல் விதை முளைத்ததே....

செங்கோவி said...

தமிழ்வாசி நமக்கு முன்னே வந்துட்டாரு போலிருக்கே..

செங்கோவி said...

ஆல்ஃபா மைண்ட் பவர் - புதிய விஷயம் தான்..தொடர் நன்றாகச் செல்கிறது...தொடருங்கள்.

Chitra said...

nice post. Informative and inspiring one. :-)

மாய உலகம் said...

ஆஹா...அருமை அருமை...தன்னம்பிக்கை தரும் தொடர் தொடரட்டும்.. தொடர்கிறேன்

Anonymous said...

அருமை...தொடருங்கள்..தொடர்கிறோம்...

Reverie
http://reverienreality.blogspot.com/

koodal bala said...

சில ஃபிகருங்க இந்த பவர வச்சிட்டுதான் பல பசங்கள கொள்ளையடிக்குதுங்கன்னு நினைக்கிறன் .... தொடர் சுவையாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது !

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

Nice.,
Mobilil comment poduvathaal template comment thaan. sorry.

நிரூபன் said...

நூறு வீத மன உறுதியுடன் நாம் ஒரு விடயத்தில் கண்ணாக இருக்க வேண்டும் என்பதையும், முயற்சியோடும் நம்பிக்கையோடுமிருந்தால் நாம் வாழ்வில் வெற்றி பெற்லாம் எனும் பாடத்தினையும் உங்களின் இப் பதிவு எனக்கு கற்றுத் தந்திருக்கிறது.

ரியாஸ் அஹமது said...

I LOVE UR PRESENTATION ...
TQ KEEP GOING
VOTED TAMIL MANAM 7

shanmugavel said...

அருமையான விஷயம் நண்பரே!தொடருங்கள்.

Raazi said...

good

Raazi said...

very good post

சென்னை பித்தன் said...

//விழுவது எழுவதற்கே விழுந்தே கிடப்பதற்கு அல்ல//
உண்மை,உண்மை!நல்ல பகிர்வு!

M.R said...

வாங்க பிரகாஷ் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

M.R said...

வாங்க செங்கோவி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

M.R said...

வாங்க சகோதரி சித்ரா

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

M.R said...

வாங்க மாய உலகம்
வருகைக்கும் வாழ்துக்கும் நன்றி சகோ

M.R said...

வாங்க reverie

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ..

M.R said...

வாங்க பாலா வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி நண்பா

M.R said...

வாங்க கருன் ,வாழ்த்துக்கு நன்றி கருன் நண்பரே

தங்கள் அன்புக்கு நன்றி நண்பரே

M.R said...

வாங்க கருன் ,வாழ்த்துக்கு நன்றி கருன் நண்பரே

தங்கள் அன்புக்கு நன்றி நண்பரே

M.R said...

வாங்க நிரூபன் தங்கள் உணர்வு பூர்வமான கருத்துக்கு நன்றி நண்பரே

M.R said...

வாங்க ரியாஸ் அகமது
தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் ,வாக்குக்கும் நன்றி நண்பரே

M.R said...

வாங்க ஷண்முக வேல் தங்கள் வாழ்த்துக்கு நன்றி நண்பரே

M.R said...

வாங்க ராசி வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

M.R said...

வாங்க சென்னை பித்தன் ஐய்யா ,தங்கள் வாழ்த்துக்கு நன்றி ஐய்யா

மகேந்திரன் said...

படிக்க படிக்க நம்பிக்கை ஊற்றெடுக்கும் பதிவு.
அருமை அருமை

r.v.saravanan said...

தன்னம்பிக்கை தரும் பதிவு பாராட்டுக்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out