வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Saturday, August 20, 2011

பதிவுலக நட்பிற்கு நன்றி

பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் 
எனது அன்பான வணக்கங்கள்

இன்றைய பதிவு எனது நூறாவது பதிவாகும் 

நட்புக்காக , நண்பர்களின் அன்பிற்காக இந்த 
அன்பு உலகத்தை தொடங்கினேன் .


பெற்றேன் பல நட்புகளை , நனைந்தேன் அவர்களின்
அன்பு மழையில்.

எனது முதல் பதிவிலிருந்து நூறாவது பதிவு வரை
என்னை அன்போடு வளரவைத்த அனைத்து நல் 
உள்ளங்களுக்கும் நன்றி நட்புகளே

புதியவன் என்று ஒதுக்காமல் தங்கள் அன்பால் என்னையும்
உங்களோடு, உங்களில் ஒருவனாக என்னைப் பிணைத்து ,
பின் தொடர்ந்தும் ,பின்னூட்டமிட்டும் ,வாக்களித்தும் என்னை
எழுத தூண்டிய அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி.

இனி வரும் நட்புக்கும் எனது நன்றியை 
தெரிவித்துக்கொள்கிறேன்

நகைச்சுவை :-

 ஜோதிடர்:-  நீங்கள் இந்த ஜாதகரை திருமணம் செய்து 
             கொண்டால் உங்கள் தோஷம் போய்விடும் .
 ஒருவர் :-  என்ன தோஷம் ஜோசியரே ?
 ஜோதிடர் :-  சந்தோசம்
 ஒருவர் :- !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

விளம்பரம் :-

மனைவி : (பிள்ளையை பார்த்து ) திவ்யா கம்யூட்டரை 
தொடாதே ,அப்புறம் உங்க அப்பா வந்தா திட்டுவாரு 
கெட்டு போவ ,படிப்பு போவும்,இப்பிடி அப்பிடி ...
(கணவன் வருவதைப் பார்த்து )சொல்லிக்கிட்டே இருந்தேன்
நீங்க வந்துட்டீங்க
கணவன் :-என் பிள்ளைகளுக்கு அதைப் பத்தின கவலை 
தேவை இல்லை .
அன்பு உலகம் போன்ற தளங்கள் இருக்க கவலை எதுக்கு !!!

அசிரிரி
ஆம் அன்பு உலகம் நண்பர்கள் பரிந்துரைக்கும் நல்ல தளம் .


மன இயல் :-

“ மனம் எனும் மாடு அடங்கில்
  தாண்டவக் கோனே
  முத்தி வாய்ந்த தென்று ஆடேடா
  தாண்டவக் கோனே !”  :-  இடைக்காட்டு சித்தர்

மருத்துவ குறிப்புகள் :-

  உணவே மருந்து ,மருந்தே உணவு
இதில் எது வேண்டும் உங்களுக்கு ,
நீங்களே தீர்மானியுங்கள்

அளவோடு உண், தேவையானது உண் ,
சேராததை உண்ணாதே .
இல்லையேல் உணவே விஷமாகும் .
பசிக்காக சாப்பிடு ,ருசிக்காக சாப்பிடாதே .
பசித்து உண் ,
நன்றாக மென்று விழுங்கு .
அரை வயிறு உணவு ,கால் வயிறு நீர் ,கால் வயிறு 
காற்று என்று பழகிக்கொள் .

Photobucket
கவிதை :-

காதலிக்கும் பொழுது
காதலி அவன் 
சிந்தையை மறைக்கும்
அழகாக தெரிவாள்
கல்யாணத்திற்கு பிறகு
அவளை தவிர
அனைவரும்
அழகாய் தெரிவார்கள்

உலகில் அனைத்தையும் காதலி 

காதலிக்கும் பொழுது
அதன் குணங்களை காதலி
காலத்தால் அழியாது காதல்

மாறாக உருவத்தை காதலித்தால்
அதன் மோகம் தீர்ந்த உடன்
காதலும் மறைந்து விடும் .


தத்துவங்கள் :-

எந்த தொழிலாக இருந்தாலும் அதனைப் பற்றிய
அறிவு (தெளிவு) இல்லாமல் அதில் இறங்காதே .

வீட்டிலேயும் ,நாட்டிலேயும் விட்டு கொடுத்தால் 
சண்டை இல்லை
சச்சரவும் இல்லை எங்கும் .

உயிர்களை நேசி மனிதனாவாய்
உயிர்களை கொன்றால் மிருகமாவாய்


நூறின் சிறப்பு:-

கிரிக்கெட் விளையாட்டை எடுத்து கொள்வோம் .
அதில் நூறாவது ரன் எடுக்கும் பொழுது கிடைக்கும் 
சந்தோசம் அதற்கு முன்பு எடுக்கும் ரன்முதல்
அதற்கு பின் எடுக்கும் ரன் வரை கிடைப்பதில்லை .
செஞ்சுரி என்பது தானே பெயர் வாங்கி கொடுக்கிறது .

மதிப்பு என்பது நூறை வைத்து தானே சொல்கிறார்கள்.
நூற்றுக்கு இவ்வளவு என்று.

ஏன் அவசர போலீசே நூறு தானே

திரைப்படமோ ,சின்னத்திரை நாடகமோ நூறாவது 
நாளோ ,நூறாவது எபிசோடோ எட்டினால் சந்தோசம்
அவர்களுக்கு.

இப்பிடி சொல்லிகிட்டே போகலாம் நூறைப்பற்றி.

அப்பிடி பட்ட நூறை எட்டிய என்னை ஊக்குவித்த
அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி 


 

52 comments:

மாய உலகம் said...

தங்களது நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் சகோ... மேன்மேலும் பல்லாயிரம் நூறுகளை கடக்க வாழ்த்துக்கள்

மாய உலகம் said...

நகைச்சுவை , மருத்துவம் , மன இயல் , கவிதை என உங்கள் லேபிள்கள் அனைத்தும் கலக்கலாக கலைக்கட்டுகிறது...வாழ்த்துக்கள்

M.R said...

நூறாவது பதிவிற்கு வருகை தந்த மாய உலகம் ராஜேஷ் சகோ.விற்கு நன்றி
வாழ்த்துக்கு நன்றி

கோகுல் said...

நூறு நாட் அவுட்.அசத்துங்க.வாழ்த்துக்கள்.

அசரீரி சொல்றது உண்மைதான்!

நிரூபன் said...

வணக்கம் சகோதரி,
தங்களின் நூறாவது பதிவிற்கு என் உளம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர்ந்தும் காத்திரமான படைப்புக்களோடு பதிவுலகில் வெற்றிக் கொடி நாட்டுங்கள்.

நிரூபன் said...

விளம்பரம்...சுவையான டைம்மிங் காமெடி.

நிரூபன் said...

வித்தியாசமான கலவையாக நூறாவது பதிவினைத் தந்திருக்கிறீங்க.
ரசித்தேன்.

Rathnavel said...

தங்கள் நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

100க்க வாழ்த்துக்கள் சகோ .

மகேந்திரன் said...

எம் அருமை அன்பரே
நூறைத் தொட்ட நீவீர்
ஆயிரம் தொடவேண்டும்
பல்சுவை பதிவுகளில்
கோலேச்சும் நீவீர்
பல்லாண்டு வாழியவே!

இராஜராஜேஸ்வரி said...

தங்களது நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்

Kousalya said...

தனித்துவமான பதிவுகள் தரும் உங்களுக்கு பாராட்டுகள்.

நூறை தொட்டதுக்கு என் வாழ்த்துக்கள்.

Abdul Basith said...

நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் நண்பா! மேலும் பல பதிவுகளை எழுதவும் எனது வாழ்த்துக்கள்.

விளம்பரம் சூப்பர்!

M.R said...

வாங்க கோகுல்

தங்கள் அன்பான வாழ்த்துக்கு நன்றி நண்பரே

M.R said...

வாங்க நிரூபன் நண்பரே

தங்களின் அன்பான வாழ்த்துக்கு நன்றி நண்பரே

M.R said...

வாங்க ரத்னவேல் ஐயா

தங்களின் அன்பான வாழ்த்துக்கு நன்றி

M.R said...

வாங்க நண்டு நொரண்டு சகோ

தங்களின் அன்பான வாழ்த்துக்கு நன்றி

M.R said...

வாங்க மகேந்திரன் நண்பரே
தங்களின் அன்பான வாழ்த்துக்கு நன்றி நண்பரே

M.R said...

வாங்க ராஜேஸ்வரி மேடம் தங்களின் வாழ்த்துக்கு நன்றி

M.R said...

வாங்க கௌசல்யா சகோதரி

தங்கள் அன்பான வாழ்த்துக்கு நன்றி

M.R said...

வாங்க அப்துல் பஷித்

தங்களின் அன்பான வாழ்த்துக்கு நன்றி நண்பரே

RAMVI said...

100 பல100 ஆக வாழ்த்துக்கள், எம்.ஆர்.

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

வாழ்த்துக்கள்,..


நன்பேண்டா..

Lakshmi said...

100-வதுபதிவுக்கு வாழ்த்துக்கள்
மேலும் ப்ல100- பதிவுகள்
படைக்க அட்வான்ஸ் வாழ்த்
துக்கள்.

M.R said...

வாங்க ராம்வி சகோதரி

தங்கள் வாழ்த்துக்கு நன்றி

M.R said...

வாங்க கருன் நண்பரே

தங்கள் அன்பான வாழ்த்துக்கு நன்றி

ஆம் நண்பேன்டா

M.R said...

வாங்க லக்ஷ்மி அம்மா

தங்கள் அன்பான வாழ்த்துக்கு நன்றி

செங்கோவி said...

ஆஹா...செஞ்சுரியா..வாழ்த்துகள்..வாழ்த்துகள்..

நான் உங்களை புது பதிவர்-னுல்ல நினைச்சேன்!!

M.R said...

வாங்க செங்கோவி நண்பரே
தங்கள் வாழ்த்துக்கு நன்றி

ஆமாம் என்றும் புதியவன் தான் நண்பரே
கற்று கொள்வதில் !

ரியாஸ் அஹமது said...

வாழ்த்துக்கள் சகோ
நூறு ஒட்டு போட்டு வாழ்த்து சொல்லலாமா
முடியாதே வா.........................ழ்....................................த்........து ............க்......க .........................................................................ள்

M.R said...

வாங்க ரியாஸ் அஹமது நண்பரே தங்களின் அன்பான நீண்ட வாழ்த்துக்கு நன்றி .மிக்க மகிழ்ச்சி

கவி அழகன் said...

தங்களது நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்

தமிழ்வாசி - Prakash said...

நூறு பதிவு போட்டாச்சா... வாழ்துக்கள். உங்களை புது பதிவர்னு நெனச்சேன்.

மைந்தன் சிவா said...

வாழ்த்துக்கள் சகோ!!!!தொடர்ந்து செல்லுங்கள்!!
தமிவாசிக்கு காமெடி !!

M.R said...

வாங்க கவி அழகன் நண்பரே

தங்கள் அன்பான வாழ்த்துக்கு நன்றி

M.R said...

வாங்க பிரகாஷ் நண்பரே

தங்களின் வாழ்த்துக்கு நன்றி நண்பரே

கற்றலில் என்றும் புதியவனே

M.R said...

வாங்க மைந்தன் சிவா நண்பரே

தங்களின் அன்பான வாழ்த்துக்கு நன்றி

ஆமினா said...

நூறாவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ...

மேலும் பல நல்ல படைப்புகளை படைத்திட இதயம் கனிந்த வாழ்த்துக்களும்

M.R said...

வாங்க ஆமினா சகோ ...

தங்களின் அன்பான வாழ்த்துக்கு நன்றி

r.v.saravanan said...

வாழ்த்துக்கள் நண்பா
வெற்றி பயணம் தொடரட்டும் நட்புடன் தொடர்கிறோம்

M.R said...

வாங்க சரவணன் நண்பரே

தங்களின் அன்பான வாழ்த்துக்கு நன்றி

Reverie said...

தங்களது 100 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் ... பல நூறுகளை கடக்க வாழ்த்துக்கள்...

M.R said...

வாங்க reverie சகோ..

தங்கள் அன்பான வாழ்த்துக்கு நன்றி

சென்னை பித்தன் said...

புதிய உயரங்களைத்தொட வாழ்த்துகிறேன்.

M.R said...

வாங்க சென்னை பித்தன் ஐயா

தங்கள் அன்பான வாழ்த்துக்கு நன்றி

ஆகுலன் said...

நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்......

நாலு கப் டீ......(கொஞ்சம் குடிச்சு பாருங்கோ)

ஆகுலன் said...

நூறின் சிறப்பு சிறப்பு...

நாலு கப் டீ......(கொஞ்சம் குடிச்சு பாருங்கோ)

புலவர் சா இராமாநுசம் said...

நூறாவது பதிவு வெளியிடும்
தாங்கள் நூறாண்டு வாழ்க!

புலவர் சா இராமாநுசம்

M.R said...

வாங்க ஆகுலன் சகோ
தங்கள் வாழ்த்துக்கு நன்றி

M.R said...

வாங்க ராமானுஜம் ஐயா

தங்கள் அன்பான வாழ்த்துக்கு நன்றி

பத்மநாபன் said...

நூறு பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்..ஆயிரம் பல்லாயிரமாக தொடர நல் வாழ்த்துக்கள்

M.R said...

வாங்க பத்மநாபன் நண்பரே

தங்களின் அன்பான வாழ்த்துக்கு நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out