இயற்கை மருத்துவம்
நண்பர்களே வணக்கம்
தங்கள் தொடர் ஆதரவிற்கு நன்றி
இன்று.............
வயிறு சம்பந்தமான நோய்களுக்கு வீட்டு வைத்தியம்
வயிற்று வலிக்கு
கிராம்பை நீரிலிட்டு கஷாயமாக்கி வேளைக்கு 30 மில்லி
வீதம் அருந்திவர வயிற்று வலி குணமாகும் .
உஷ்ணத்தால் வந்த வயிற்று வலிக்கு
ஆமணக்கு செடியின் இளந்தளிர் இலைகளை விளக்கெண்ணெய்
விட்டு வதக்கி தொப்புளின் மீது வைத்து கட்ட உஷ்ணத்தால் வந்த வயிற்றுவலி குணமாகும்
அஜீரணம் காரணமாக வயிற்று வலி வந்தால் பெருஞ்சீரகம் ,
கருஞ்சீரகம் இரண்டையும் கஷாயமாக்கி குடித்தால் அஜீரணம்
நீங்கி வயிற்று வலி குணமாகும் .
சோறு வடித்த நீரில் சிறிது உப்பிட்டு அருந்துவோருக்கு நன்கு
ஜீரண சக்தி உண்டாகும் .
ஆலமரத்து இளம் மொட்டுகளை கொண்டு வந்து ,அம்மியில்
வைத்து மைபோல் அரைத்து ,சிறிது எலுமிச்சை காயளவு
ஒரு தம்ளர் பசும்பாலில் கலந்து காலை ,மாலை இருவேளை
கொடுக்க சகல வயிற்று கோளாறும் தீரும் .
வயிறு உப்புசத்திற்கு
சாதம் வடித்த கஞ்சி நீரில் சிறிது மஞ்சள் தூளை கலந்து ,
தெளிய வைத்து அந்நீரை அருந்த வயிறு உப்புசம் தணியும்.
கடுகு கீரையை கறி செய்து சாப்பிட்டால் வயிறு உப்புசம்
தீரும் அத்துடன் வயிற்று பொருமல் ,மந்தம் தீரும் .
பிரண்டையை கணு நீக்கி வதக்கி அத்துடன் உளுத்தம் பருப்பு .
,சிறிது வெந்தயம் ,மிளகாய் வற்றல் ,சிறிது உப்பு சேர்த்து
துவையல் அரைத்து உணவுடன் உண்ண வயிற்று உப்புசம் தீரும்.
மற்றும் வயிற்று வலி ,வயிற்று கடுப்பு ,வயிற்று தொல்லை ,
மூலக் கடுப்பு ,மலச்சிக்கல் யாவும் தீரும்.
அஜீரனத்துக்கு மருந்து
அரைத் தேக்கரண்டி ஓமத்தையும் ,கால் தேக்கரண்டி
உப்பையும்,அரைத்து தூளாக்கி வாயிலுட்டு வெந்நீர் அருந்த
அஜீரணம் நீங்கும். சிறிது நேரத்தில் நல்ல பசியெடுக்கும் .
ஜீரண சக்திக்கு பூண்டு குழம்பு :-20 பூண்டு பற்களை எண்ணையில்
வதக்கி ,சிறிதளவு மிளகு ,சீரகம் ,கறிவேப்பிலை ,கொத்துமல்லி ,
வெந்தயம் ,மஞ்சள்,பெருங்காயம் இவற்றை நன்றாக அரைத்து
குழம்பாக்கி தாளித்து மதியம் ,இரவு உணவுடன் சாப்பிட்டு வர
நல்ல பசியை தூண்டும் .நாவில் உள்ள கசப்பு சுவை மாறும் .
நல்ல பசியெடுக்க
இலந்தளிராக உள்ள கொய்யா இலைகளை கொண்டு வந்து ,
தண்ணீரில் கழுவிவிட்டு காலை வேளை மட்டும் ஐந்து
இலைகளை வாயில் போட்டு மென்று தின்று விட்டால் நல்ல
பசி உண்டாகும் .
மிளகு ,சீரகம் இரண்டையும் சம அளவு எடுத்து தூள் செய்து
ஒரு தேக்கரண்டி அளவு உண்டு வர பசி மந்தம் நீங்கும் .
இலந்தை வேரை கஷாயமாக்கி அருந்த நல்ல பசி உண்டாகும் .
அத்துடன் மலச்சிக்கல் ,கீழ் வாதம் தீரும் .
காரா கருணைக்கிழங்கு, அகத்திக் கீரை ,இஞ்சி ,செவ்வாழைப்
பழம் ,வெள்ளரிக்காய் ,பசு தயிர் ,பேரீச்சம் பழம் ,பெருங்காயம்
,பனை நுங்கு ,நாரத்தங்க்காய் ஊறுகாய் ,சுண்டைக் காய் வற்றல் ,வெள்ளாட்டுப் பால் ,ஆகியவை சாப்பிட நல்லபசி உண்டாகும் .
இஞ்சி சாரும் ,எலுமிச்சை சாரும் கலந்து சிறிது உப்பிட்டு
அருந்தினால் சகல வயிற்றுக் கோளாறும் தீரும் .
சீரகத்தை பொன் வருவலாக வறுத்து தூளாக்கி மூன்று விரலால்
எடுக்கும்அளவு எடுத்து வாயிலிட்டு வெந்நீர் பருக வேண்டும் .
இவாறு காலை மாலைசாப்பிட நன்கு பசி எடுக்கும்
இத்துடன் பூண்டு ,மிளகு சீரகம் சேர்த்து சீரக ரசம் வைத்து
உணவுடன் உண்ண பசி மந்தம் தீரும் ,ஜீரண சக்தி உண்டாகும் .
ஏப்பம் வருவதைத் தடுக்க
பாகல் இளைச்சாற்றை எடுத்து ,ஒரு கரண்டி மஞ்சள் தூளை
கலந்து அருந்த ஏப்பம் வருவது நிற்கும் .
வாயுத் தொல்லையும் தீரும் .
கொத்துமல்லியை வறுத்து ஒன்றிரண்டாக இடித்து கஷாயம்
செய்துசெய்து காலை மாலை அருந்த அஜீரணக்
கோளாறுகள் அகலும் .
45 comments:
ஆரோக்கியத்திற்கு அருமையான பகிர்வு நன்றி சகோ
வாங்க மாய உலகம் ,வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ .
நல்ல இயற்கை வைத்தியம்.என்ன...மாத்திரையைச் சுலபமாகப் பாவிக்கப் பழகிவிட்டோம்.அவிக்க இடிக்க பக்கத்தில் பெரியவர்கள் இல்லையே !
நல்லாத்தான் சொல்றிங்க வைத்தியம்
வாங்க ஹேமா ,அவசரத்திற்கு அல்லோபதி
மத்த டைம்ல கூடுமான வரைக்கும் ஆங்கில மருத்துவம் வேண்டாமே ,
நான் ஒரு பாஃர்மசிஷ்டா இருந்து கொண்டு இப்பிடி சொல்ல கூடாது தான் .இருந்தாலும் உண்மை அது தானே (பக்க விளைவு )
சரி சகோதரி வருகைக்கு நன்றி
வாங்க பிரகாஷ் நண்பரே
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே
பயனுள்ள கைமருத்துவ குறிப்புகளுக்கு நன்றிங்க.
சகல கலா வல்லவராய் இருப்பீர்கள் போல் தெரிகிறதே
பயனுள்ள அடிக்கடி தேவைப்படுகிற
மருத்துவக் குறிப்புகள்
குறித்து வைத்துக்கொண்டேன்
நல்ல பயனுள்ள பதிவு
தொடர வாழ்த்துக்கள்
பலே பலே~~~~ஆரோக்கியத்துக்கு உகந்த தகவல்!!
வாங்க சகோதரி சித்ரா தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
வாங்க ரமணி நண்பரே தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
வாங்க சிவா வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே
அருமையான, இப்பத்திய மக்கள் மறந்துபோன, பக்கவிளைவுகள் இல்லாத இயற்கை வைத்தியம்.. ஜூப்பர் :-)
வாங்க அமைதிசாரல் தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ... தொடர்ந்து வாங்க .
பயனுள்ள பதிவு ரமேஷ்!
வீட்டில் இருந்தவாறே, வயிற்று நோய்களைக் குணமாக்க அருமையான டிப்ஸ்,.
வாங்க சிவகுமார்
வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி நண்பரே
வாங்க நிரூபன் தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே
நல்ல பதிவு...வாழ்த்துக்கள்...
Reverie
http://reverienreality.blogspot.com/
எளிய ,பயனுள்ள மருத்துவ தகவல்கள் ...அருமை !
ஏழாவது ஓட்டு போட்டாச்சி ...
பயனுள்ள தகவல்கள்! பகிர்வுக்கு நன்றிங்க!
பசி எடுக்கவும் மருந்தா? இது எனக்குத் தேவையாச்சே! :-)
அருமையான கைமருத்துவங்கள்.
நன்றி தோழரே.
வாங்க reverie
வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி சகோ
வாங்க பாலா
வருகைக்கும் ,வாழ்த்துக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே
வாங்க மகி வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி சகோ
வாங்க ஜீ ,தங்களுக்கு உபயோகப்பட்டால் சந்தோசமே நண்பரே .
வருகைக்கு நன்றி
வாங்க மகேந்திரன்
தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே
நல்ல பயனுள்ள தகவல்கள் பகிர்வுக்கு நன்றி என் தளம் வந்தமைக்கு நன்றி
பயனுள்ள பதிவுகளுக்கு நன்றி நண்பரே..
வாங்க சரவணன் ,
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே .
வாங்க கருன்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே
அவசியமான தகவல்கள்,நன்று
super tips
நல்ல பயனுள்ள பதிவு....
வாழ்த்துக்கள் பகிர்விற்கு சகோ//
எளிமையான பயனுள்ள குறிப்புக்களுக்குப் பாராட்டுக்கள்.
வாங்க ஷண்முகவேல்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
வாங்க திருப்பூர் வேலு தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ,
தொடர்ந்து வாருங்கள் .
நன்றி நண்பரே
வாங்க விடிவெள்ளி
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ
வாங்க ராஜேஸ்வரி மேடம்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மேடம்
வாக்களித்த ,வாக்களிக்க போகின்ற அன்பர்களுக்கு
மனமார்ந்த நன்றி
பயனுள்ள பதிவு!
சென்னை பித்தன் said...
வாங்க ஐய்யா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
என்றைக்கும் உடனடியாக தீர்வு காண இயற்கை வைத்தியம் சிறந்தது.
Post a Comment