நண்பர்களே வணக்கம்
தலை வழியா ஒரு மாத்திரை விழுங்கு
கால் வழியா ஒரு மாத்திரை விழுங்கு
உடல் வழியா ஒரு மாத்திரை விழுங்கு
என்று எதற்கெடுத்தாலும் மாத்திரை எடுத்துக்
கொள்வதால் உடலுக்கு தான் கேடு நண்பர்களே
அப்போ வலியால அவஸ்தை பட சொல்றியா ?
என்று கேட்பது புரிகிறது நண்பர்களே .
நான் அப்பிடி சொல்வேனா .
நான் உங்கள் நண்பன் இல்லையா .
அதாவது வலி என்ற உடனே வலி நிவாரணியை
நாடாம நான் கீழே கொடுத்துள்ள வழிமுறைகளை
செய்து பாருங்கள் .
,அதற்கு நிவாரணம் கிடைக்க வில்லை எனில் தகுந்த
மருத்துவரை அணுகுங்கள்.
இந்த வழி முறைகளை கையாளும்போழுது வலி குறைய
வில்லை என்றாலோ அதிகமானாலோ உடனே மருத்துவரை
காணுங்கள் .
வலி இருக்கும் இடத்தில் பனிக்கட்டி ஒத்தடம் குடுக்கலாம் .
பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் உங்களால் எவ்வளவு
நேரம் வலி தாங்க முடிகிறதோ அவ்வளவு நேரம் குடுக்கவும்
.
பனிக்கட்டியை துணியில் சுற்றியோ ,குளிர்நீரை பையில்
நிரப்பியோ ,குளிர்ந்த பாட்டிலை கொண்டோ இந்த ஒத்தடம்
குடுக்கலாம் .
சிலருக்கு குளிர்ச்சி ஒத்துக் கொள்ளாது.அவர்களுக்கு
வெந்நீரால் ஒத்தடம்குடுப்பது நல்ல பலன் தரும் .
குளிர் ஒத்தடம் சிராய்ப்புகள் ,வீக்கங்கள் ,வலி
போன்றவைகளுக்கு நல்ல பலன் தரும் .
வெப்ப ஒத்தடம் தசைப்பிடிப்புகளுக்கு நல்ல பலன்
தரும் .வெந்நீர் ஒத்தடத்திற்கு வெந்நீரில் நனைத்த
துண்டையோ ,வெந்நீர் நிரப்பிய பாட்டிலையோ
பயன்படுத்தலாம் .
ஒத்தடம் குடுக்கும் பொழுது தூங்க கூடாது
.
வலி எடுப்பதற்கு காரணம் நாம் செய்து கொண்டிருக்கும்
காரியத்தில் அதிகப்படியான வேலையே ஆகும்
.
கணினி அதிக நேரம் பார்த்து கொண்டே இருந்தால்
தலைவலி ,உடல் சோர்வு வருவது போல் ,அதிகமான
ஆய்வுக்கு மூளையை உபயோகிக்கும் பொழுது
தலைவலி ,ஓயாது உழைக்கும் பொழுது உடல் உறுப்புகளின்
வலி வரும்
.
அந்த நேரத்தில் சிறிது ஓய்வெடுத்து கொண்டு ஃபிரஷ்
ஆகி விட்டு தொடரவும்.
உடல் திரும்ப புத்துணர்ச்சி கிடைக்கும் வரை ஒய்வு
எடுத்து விட்டு பின் பணியை தொடரவும் .
வலியை மறக்க நமது கவனத்தை வேறு எண்ணங்களில்
செலுத்தினால் கூடுமானவரை நமது வலியின் கொடுமை
சிறிது குறைந்தது போல் இருக்கும்
நல்ல விஷயங்களிலேயே கவனம் செலுத்த வேண்டும்
அதாவது சிந்திக்க வேண்டும் .
மனதுக்கு பிடித்த இசையோ ,அல்லது மனதுக்கு பிடித்த
நபர்களையோ (மனைவி,குழந்தை ,அட நடிகையாககூட
இருக்கட்டும் ) மனதில் நினைத்தால் மன இறுக்கம்
குறையும் .வலியின் வீரியம் குறைந்தது போல் இருக்கும் .
வலி உள்ள இடங்களில் மித மான மசாஜ் செய்தால் வலி
குறைய எதுவாக இருக்கும்
.
தியானமும் செய்தால் மன இருக்கத்தால் வரும் வலிகள்
குறையும்
வலி ஏற்படும் பொழுது உடலை நமது கட்டுப் பாட்டில்
வைத்திருக்க முயற்சி செய்ய வேண்டும் .
மூச்சை நிதானமாக உள்ளிழுக்க வேண்டும் .வாய் வழியே
மூச்சை உள்ளிழுத்து மூக்கின் வழியே நிதானமாக வெளியே
விட வேண்டும்
உங்கள் கை முட்டியை மெல்ல மெல்ல இருக்குங்கள் ,பின்னர்
தளர்ச்சியாக விடுங்கள் இதைத் திரும்ப திரும்ப செய்யுங்கள் .
முதலயொல் இறுக்கமாகவும் பின்னர் இலகுவாகவும் உணர்வீர்கள் .
இந்த உணர்வு உங்கள் உடல் முழுதும் பரவுவதை உணரலாம் .
இறுக்கம் உடல் வலியை அதிகப் படுத்தும் .அதனால் தான்
உடலை தளர்ச்சியாக வைத்திருக்க சொல்கிறேன் .
நண்பர்களே வாக்களித்து இதனை மற்றவர்களும் படிக்க
வழிவகை செய்யுங்கள் .
32 comments:
nalla yosanai....vaalththukkal
வாங்க சரவணன்
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே
தொடர்ந்து வாருங்கள் நண்பரே
செய்து பார்த்து சொல்கிறேன்...
இப்ப அவசரமா எப்படி தலைவலி உண்டாக்கிறது...ரமேஷ்...
ஆஹா ஆரோக்கிய பதிவு பயிற்சி செய்து பார்க்கிறேன்..நன்றி
வாங்க reverie
வருகைக்கு நன்றி சகோ
அது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல அந்த பக்கம் இந்த பக்கம் பாக்காம ரொம்ப நேரம் கணினியே பாத்துகிட்டு இருங்க
தலைவலி வந்துடும் கண்ணு வலியோட.
வாங்க மாய உலகம்
தங்கள் வருகைக்கு நன்றி
பயிற்சி செய்து பாருங்கள் பலன் பெறுங்கள்
கேட்கணும்னு நினைச்சேன்..நீங்களே சொல்லிட்டீங்க..நடிகை ஓகே!
எதுக்கு ரைட் க்ளிக்கை எடுத்து விட்டிருக்கீங்க ரமேஷ்?
// எதற்கெடுத்தாலும் மாத்திரை எடுத்துக்
கொள்வதால் உடலுக்கு தான் கேடு நண்பர்களே //
நிறையப்பேர் அப்படித் தான் செய்கிறார்கள் ரமேஷ்..
//வலி இருக்கும் இடத்தில் பனிக்கட்டி ஒத்தடம் குடுக்கலாம் .
பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் உங்களால் எவ்வளவு
நேரம் வலி தாங்க முடிகிறதோ அவ்வளவு நேரம் குடுக்கவும் //
இதை நான் செய்திருக்கிறேன்..நல்லா இருக்கும்!
//ஒத்தடம் குடுக்கும் பொழுது தூங்க கூடாது//
யாரு, ஒத்தடம் கொடுக்கிறவரா?..ஆமாமா!
வாங்க செங்கோவி ,
பரவாயில்லையே பனிக்கட்டி ஒத்தட அனுபவம் உள்ளதே
எனக்கும் அதுதான் பிடிக்கும் நண்பரே
ரெவரி..மாயா..எம்.ஆர்-னு இங்க ஒரு யூத் டீம் செட் ஆயிருக்கு போலிருக்கே..நடக்கட்டும் நடக்கட்டும்.
செங்கோவி
//ஒத்தடம் குடுக்கும் பொழுது தூங்க கூடாது//
யாரு, ஒத்தடம் கொடுக்கிறவரா?..ஆமாமா!
ஹலோ ஒத்தடம் வாங்குபவர்
சொகத்துல அப்பிடியே தூங்கிட கூடாது
சில வலிகளின் காரணம் வேறாக இருக்கலாம் .
செங்கோவி
ரெவரி..மாயா..எம்.ஆர்-னு இங்க ஒரு யூத் டீம் செட் ஆயிருக்கு போலிருக்கே..நடக்கட்டும் நடக்கட்டும்.
நீங்களும் யூத்து தான் நண்பரே .
ஓஹோ..ஒத்தடம் வாங்குபவரா? ரைட்டு.
செங்கோவி
// எதற்கெடுத்தாலும் மாத்திரை எடுத்துக்
கொள்வதால் உடலுக்கு தான் கேடு நண்பர்களே //
நிறையப்பேர் அப்படித் தான் செய்கிறார்கள் ரமேஷ்..
அதான் வேதனையா இருக்கு நண்பரே
அநியாயமா பேசாதீங்க..நான் யூத் இல்லேன்னு எப்போச் சொன்னேன்?..
ஓஹோ..ஒத்தடம் வாங்குபவரா? ரைட்டு
புரிஞ்சிக்கிட்டா சரி நண்பரே
செங்கோவி
அநியாயமா பேசாதீங்க..நான் யூத் இல்லேன்னு எப்போச் சொன்னேன்?..
ஹா ஹா ஹா
நானும் அதையே தான் சொல்றேன் .
அந்த சிரிச்ச முகத்த பாருங்க .
பாவனாவை பார்த்தா வலிக்காம இருக்குமா?
தமிழ்வாசி -
பாவனாவை பார்த்தா வலிக்காம இருக்குமா?
அதுக்காக பாவனா வந்து ஐஸ் ஒத்தடம் தரமாட்டாங்க
ஹா ஹா
நல்ல பதிவு....நன்றிங்க மாப்ள!
ஓட்டுப்போட்டேன்.
பிரச்சனைகளுக்கு பக்கவிளைவு இல்லாத இயற்கையான தீர்வு சொல்லியிருக்கிறீர்கள். நல்லம் நானும் கை கொள்கிறேன்.
நல்ல பயிற்சிகள்தான் ....
பாவனா இப்படித்தான் பண்றாங்களா !
ok ok
இலகுவான பயிற்சிகள்.
இப்படிப்பட்ட செய்திகள்
நிச்சயம் இந்த அவசர உலகத்துக்கு தேவை நண்பரே.
பகிர்வுக்கு நன்றி.
ஐடியா எல்லாம் நல்லாத்தான் இருக்கு..
வாங்க விக்கி
தொடர்ந்து வாங்க
வாழ்த்துக்கு நன்றி நண்பா
--------------------------------
வாங்க கார்த்தி
தங்களை வரவேற்கிறேன்
தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி நண்பரே
தொடர்ந்து வாருங்கள்
-----------------------------------------
வாங்க பாலா
வருகைக்குக் நன்றி நண்பரே
பாலா said....
பாவனா இப்பிடித்தான் பண்றாங்களா
M.R said...
அப்பிடித்தான் நினைக்கிறேன்
----------------------------------------------
வாங்க ரியாஸ்
வருகைக்கு நன்றி
-----------------------------------------
வாங்க மகேந்திரன்
தங்கள் கருத்து உண்மை நண்பரே
வருகைக்கு நன்றி
---------------------------------------------
வாங்க கருன்
வருகைக்கும் ,தங்கள் கருத்துக்கும் நன்றி நண்பரே
----------------------------------------
நல்லது..
நல்ல ஆலோசனைகள்!
Post a Comment