வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Saturday, August 13, 2011

சுவை அறிந்து சாப்பிடுகிறோமே சுவையிலே என்ன இருக்கு தெரியுமா

உணவே மருந்து 

வாய்க்கு ருசியா சாப்பிடுகிறோமே அந்த சுவை எத்தனை
வகை தெரியுமா 


ஆறு வகை ,சரி அந்த ஆறு சுவைகளிலும் என்னங்க இருக்கு



கல்யாண சமையல் சாதம் ,காய்கறிகளும் பிரமாதம் ,
இதுவே எனக்கு போதும்

ஹா  ஹஹா  ஹஹா  ஹா , ஹா  ஹஹா  ஹஹா  

நீங்க இந்த வார்த்தையை கேட்டு இருப்பீங்க அறு 
சுவையோட உனக்கு விருந்து படைக்கிறேன் என்று
 .
அறுசுவை என்றால் என்னன்ன சுவை அப்பிடின்னு தெரியுமா?

இனிப்பு

புளிப்பு

உவர்ப்பு (உப்பு)

கசப்பு

காரம்

துவர்ப்பு

இது தாங்க அந்த அறுசுவை என்பது 
.
இது எங்களுக்கு தெரியாதா ?

பெருசா சொல்ல வந்துட்ட அப்பிடீங்கிறீங்களா !!! 

சரிங்க

இந்த ஆறு சுவைகளின் தன்மை அதாவது குணம்
என்னன்னு தெரியுமாங்க .

இனிப்பு :

இனிப்பு சாப்பிட்டா என்ன ஆகும் தெரியுமா ?

உடலைப் பெருக்க வைக்கும் .

சதை, எலும்பு, இரத்தம், கொழுப்பு, சுக்கிலம் ஆகிய
உடல் தாதுக்களுக்கு ஊட்டம் அளிக்கும்.

வாத ,பித்த இடங்களில் தீய செயல்களைத் தடுத்து 
உடலுக்கு பாதுகாப்பளிக்கும்

இனிப்பால் பாதிப்பு இல்லையா ?

இருக்கே !

இனிப்பு அதிகமானால் :-

இனிப்பு அதிகம் சாப்பிட்டால் கொழுப்பும் ,கபமும்(சளி),
மிகுதியாகி சர்க்கரை நோய் தோன்றும் .

இனிப்பு குறைந்தால் :-

இனிப்பு குறைந்தால் மயக்கம் வரும் .

புளிப்பு :-

 உணவில் விருப்பத்தையும் ,சுவையுணர்வையும் 
ஏற்படுத்தும்

பசியைத் தூண்டும் ,

ஜீரணத்துக்கு உதவும்.

புளிப்பால் என்னென்ன பாதிப்புகள் :-

புளிப்பு அதிகமானால் :-

புளிப்பு சுவை அதிகப்பட்டால் உடல் உறுப்புகள் தளர்ச்சி
அடையும் .தலைசுற்றல் ,கண் இருட்டல், உடலில் அரிப்பு ,
வெளுப்பு அக்கி ,அம்மை தோன்றும் .

நீர் வேட்கை அதிகரிக்கும் .உடல் வீங்கும் .

புளிப்பு குறைந்தால் :-

புளிப்பு குறைந்தால் ஜீரணம் குறையும்
.

உவர்ப்பு ( உப்பு ) :-

உடல் உறுப்புகளுக்கு கசிவையும் ,இசிவையும் ஏற்படுத்தும் .

வியர்வையை வெளியேற்றும்
 .
உப்பால் பாதிப்பு:-

உப்பு அதிகமானால் :

உப்பை அதிகம் சேர்த்துக் கொண்டால் இளமையில்
நரை ,திரை ,மூப்பு ஏற்படுத்தும் ( இளமையில் முதுமை ) .

சிறு நீரகக் கோளாறு வரும் .கிட்னியில் கல் உருவாகும் .
நீரடைப்பு .நீர் எரிச்சல் உண்டாகும் .

உப்பு குறைந்தால் :-

உப்பு குறைந்தால் சோர்வு உண்டாகும் .

கசப்பு :-

உடலுக்கு உறுதுணையாகும் .பூச்சிகளை கொல்லும் .
விஷத்தை முறிக்கும் தோல் நோய்களை குணமாக்கும் .
எரிச்சல் ,குமட்டல் குணமாகும் .

கசப்பால் பாதிப்பு :-

கசப்பு அதிகமானால் :-

கசப்பு அதிகமானால் உடல் தாதுக்கள் குறையும் .வாத
நோய்கள் வரும் .

கசப்பு குறைந்தால்:-

கசப்பு குறைந்தால் இரத்தம் கெடும் .
வயிற்றில் புழுக்கள் தோன்றும் .



காரம் ( எரி):

உணவில் நாட்டம் ,செரிமானம் உண்டாகும் .உயிர்ச்சத்தை
உறிஞ்ச உதவும்.

தொண்டை நோய் ,உடல் துடிப்பு ,வீக்கம் ,குமட்டல் 
ஆகியவற்றை குறைக்கும் .

காரத்தால் பாதிப்பு:-

காரம் அதிகமானால் :-

காரம் அதிகமானால் தாகம் மிகும் .விந்து நீற்று போகும். 
உடல் ஆற்றல் குறையும் .உடல் நடுக்கம் ,வலிப்பு நோய் வரும் .

காரம் குறைந்தால் :-

காரம் குறைந்தால் ஜீரண சக்தி குறையும்

துவர்ப்பு :-

பித்தத்தையும் ,கபத்தையும் போக்கும் .இரத்தத்தை 
உற்பத்தியாக்கும் இரத்த சுத்தி உண்டாக்கும் .கொழுப்பை
வளரச் செய்யும் .புண்களை ஆற்றும் .தோலுக்கு 
வலுவையும் வனப்பையும் தரும் .மலத்தை கட்டும் .
உடலுக்கு குளிர்ச்சியை தரும் .

துவர்ப்பால் பாதிப்பு :-

துவர்ப்பு அதிகமானால்:-

துவர்ப்பு மிகுதியானால் வயிறு பொருமும் .செரிமானம் குறையும் .மலச்சிக்கல் ஏற்படும் .சிறுநீர் தடைபடும் .நீர் வேட்கை மிகும் .

துவர்ப்பு குறைந்தால் :

துவர்ப்பு குறைந்தால் மார்பு வலி ஏற்படும்.
ஆண்மை ,  பெண்மை குறையும் .

உறுப்புகளின் உந்தும் ஆற்றல் குறையும். இரத்தம் கெடும் .



நம்முடைய உடல்களை மூன்று வகையாக பிரித்துள்ளனர் .

வாத உடம்பு

பித்த உடம்பு

கப (சிலேத்தும )உடம்பு

அ ) வாத உடம்பை பெற்றவர்கள்  கசப்பு ,காரம் ,துவர்ப்பு 
ஆகியவற்றை குறைத்து இனிப்பு ,புளிப்பு ,உப்பு ஆகியவற்றை
கொஞ்சம் அதிகமாக்கிக் கொள்ளலாம் .

ஆ ) பித்த உடம்பினை பெற்றவர்கள் புளிப்பு,உப்பு ,காரம்
குறைத்து கசப்பு,துவர்ப்பு, இனிப்பை சற்று அதிகமாக உண்ணலாம் 
.
இ ) கப ( சிலேத்தும ) உடம்பினை பெற்றவர்கள் இனிப்பு ,
புளிப்பு,உப்பு குறைத்து கசப்பு ,காரம் ,துவர்ப்பு உணவுகளை 
சற்று அதிகமாக உண்ணலாம் .

குறிப்பு :

எல்லாரும் எல்லா காலத்திலும் அறுசுவை உணவுகளை 
அளவோடு உண்ணுதல் உடல் நலத்திற்கும் ,வளத்திற்கும் 
ஏற்றதாகும் .
     







zwani.com myspace graphic comments

என்னுடைய ரொட்டிய எங்கியாவது பாத்தீங்களா?
இங்க தான் வச்சிருந்தேன் சாப்பிட 
அதுக்குள்ளே காணலியே !!!

யாரு எடுத்துட்டு போயிருப்பா ?

32 comments:

athira said...

உபயோகமான பதிவு. பான்கேக்கை முயலார் சாப்பிடுவதுக்குள் ஓடிப்போய் எடுத்திடுங்க:).

M.R said...

வாங்க ஆதிரா தங்கள் வருகைக்கும்
வாழ்த்துக்கும் நன்றி சகோ .

அந்த கேக்கை தேடுவதே எலியார் தான் சகோ..

Chitra said...

அறுசுவை புரிஞ்சுதோ இல்லையோ.... அந்த முயல் படம் நல்லா புரிஞ்சுது. ஹா, ஹா,ஹா,ஹா,ஹா....

தமிழ்வாசி பிரகாஷ் said...

அறுசுவை... அருஞ்சுவை

செங்கோவி said...

அறுசுவைப் பதிவா..ம்ம்!

செங்கோவி said...

உப்பு, உறைப்பு, புளிப்பு மூணையும் குறைச்சாலே ஆரோக்கியம் தான்..

செங்கோவி said...

கடை ஓனரே தூங்கப் போயிட்டாரு போல...நாமளும் கிளம்புவோம்.

மாய உலகம் said...

ஆஹா எதுவுமே சரியான அளவுடன் உட்கொள்வது நல்லது எனக்கூறியுள்ளீர்கள்..நன்றிகள்

பத்மநாபன் said...

பயனுள்ள பதிவு ... ஆறு சுவைகளின் நன்மை தீமைகளை விவரித்து அறுசுவை பதிவாக்கிவிட்டீர்கள் ...நன்றி ...

கோவை நேரம் said...

இனி எல்லாம் அளவாதான் சாப்பிடனுமா ..? அடடா ....

சக்தி கல்வி மையம் said...

பயனுள்ள தகவல்களுக்கு நன்றி சகோ..

கூடல் பாலா said...

அறுசுவை பற்றி பயனுள்ள தகவல்கள் !

Unknown said...

நன்றி நண்பா ...இந்த பதிவை காபி பேஸ்ட் பண்ணி அடுப்படியில் ஓட்டனும் ,,, நன்றி நன்றி நன்றி

Unknown said...

அறுசுவை விருந்துக்கு ஆறாவது ஒட்டு

M.R said...

வாங்க சகோதரி சித்ரா

தங்கள் வருகைக்கு நன்றி

M.R said...

வாங்க பிரகாஷ்

வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

M.R said...

வாங்க செங்கோவி

தங்கள் கருத்து உண்மை நண்பரே

M.R said...

வாங்க மாய உலகம்

மிகினும் குறையினும் தீதே

M.R said...

வாங்க பத்மநாபன் நண்பரே

தங்களின் அன்பான பாராட்டுக்கு நன்றி நண்பரே

M.R said...

வாங்க கோவை நேரம்

அளவா சாப்பிட்டா நல்லது தானே நண்பரே

M.R said...

வாங்க கருன் நண்பரே

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

M.R said...

வாங்க பாலா

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

M.R said...

வாங்க ரியாஸ் அஹமது

தங்கள் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் நன்றி நண்பரே

rajamelaiyur said...

Very tasty post . . . ThanksVery tasty post . . . Thanks

சென்னை பித்தன் said...

TM 7!

சென்னை பித்தன் said...

அளவான அறுசுவை உணவு போல் இருக்கிறது!

இராஜராஜேஸ்வரி said...

பயனுள்ள அறுசுவைப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

M.R said...

வாங்க ராஜா

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

M.R said...

வாங்க சென்னை பித்தன் ஐய்யா

தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி

Karthikeyan Rajendran said...

ஆறு சுவையையும் பிரிச்சு மேஞ்சுட்டீங்க சார்,நல்ல புரிஞ்சுது, இனிமே உங்க ரூட்டுலேயே சாப்பாடு ஒகேவா

இந்த பக்கத்தையும் கொஞ்சம் பாருங்க
http://sparkkarthikovai.blogspot.com/p/own-details.html

மகேந்திரன் said...

முதல் ல படத்தைப் பார்த்ததும் ஒரு கட்டு கட்டனும் போல இருந்துச்சு
நல்ல ஆரோக்கியமான ஆரோக்கியம் தரும் பதிவு நண்பரே.

அம்பலத்தார் said...

வணக்கம், சுவைகளைப் பற்றிய சுவையான தகவல்கள். பதிவுக்கு நன்றி பாஸ்

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out